நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்
  நேர்காணல்
   
கணினி பயன்பாட்டுக்கு வந்த போது தமிழுக்கான எழுத்துரு சரிவர உருவாக்கப்படவில்லை. கணினிப் பொறிஞர் ஒவ்வொருவரும் விருப்பப்படி வெவ்வேறு வகையில் உருவாக்கினர். ஒருநிறுவனம் அல்லது அச்சகம் அல்லது கணினி நிறுவனம் உருவாகிய எழுத்துரு வேறு கணினியில் அச்சில் வெறும் கட்டங்களாக அல்லது க
கவிதை
  கவிதை
   
மாண்புமிகு மண்ணின் மைந்தர் மண்ணைக்காக்கும் நெடும்போரில் கடைசியில் மண்ணில் கலந்து விட்டார்..
பத்தி
  பத்தி
   
சென்னை புத்தகச் சங்கமத்தில் பு(து) த்தகங்கள் வெளியீடு! இறுதிக்காலங்களில் அவரைப்பற்றி சில விமரிசனங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்து ஆளுமை என்பது, தமிழ் எழுத்துலகில் வாசிப்பின் தரத்தையும், வாசகர்களின் தரத்தையும் மேம்படுத்திக் கொடுத்திருப்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அவர் பல மரபுகளை அலட்சியமாக உடைத்தவர். விமரிசனங்களை துச்சமாக மதித்தவர். பழமைகளை காலில் போட்டு மிதித்தவர். எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் கம்பீரமாக வாழ்ந்து மறைந்தவர். அதை அங்கீகரித்தே பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் மற்றும் நேசனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா இரண்டும் இணைந்து நடத்திய சென்னை புத்தக சங்கமம் மிப்பொருத்தமாக எழுத்தாளர் ஜெயகாந்தனின் நினைவாக, புத்தகம் வெளியிடுவதற்கென்றே, ஓர் அரங்கம் அமைத்து அவரைப் பெறுமைப்படுத்தி, தானும் பெறுமைப்பட்டுக்கொண்டது. அந்த அரங்கத்தில், 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு பதிப்பகங்களின் சார்பில் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. ஒன்று காலையில் 11 மணிக்கு நடைபெற்ற, முத்து காமிக்ஸ் வெளிட்ட மின்னும் மரணம் எனும் புத்தகம். காமிக்ஸ் வரலாற்றிலேயே ஒரு புரட்சி என்றும், A4 அளவில் இருந்த அது, ஏற்கனவே வெளியிடப்பட்ட புத்தகங்களின் தொகுப்பு என்றும், இதே புத்தகத்தை அமெரிக்காவிலிருந்து இரண்டு பாகங்களாக தூதஞ்சலில் பெற வேண்டுமானால் சுமார் 8,000 ரூபாய் ஆகும் என்றும், தமிழில் 548 பக்கங்களும் வளுவளுப்பான தாளில் பலவண்ணப்பதிப்பில் உலக அளவில் தமிழில் முதல் முயற்சி என்றும் வெளியீட்டாளர் சௌந்திரபாண்டியன் குறிப்பிட்டார். அதன் விலையும் ஆச்சரியம்தான். ரூ. 1000/- ஒரு புத்தகத்திற்கு இவ்வளவு மதிப்பும் மரியாதையும் இருப்பதைக் கண்டு ஆச்சரியமாகத்தான் இருந்தது. இந்தப்புத்தகத்தை முன்பதிவு மூலமாகவே 700 பேர் பெற்றுக்கொண்டிருக்கின்றனர் என்பது இன்னொரு ஆச்சரியம். இதை முத்துக்காமிக்ஸ் வெளியீட்டாளர் சௌந்திரபாண்டியன், எஸ். விஜயன் ஆகியோர் வெளியிட்டுப் பேசினர். காமிக்ஸ் உலகில் இது ஒரு மைல்கல் என்றே இதை விளம்பரம் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை காமிக்ஸ் கதைகளின் வாசகரும், பகுத்தறிவாளருமான கோபாலகிருஷ்ணன் இணைப்புரை வழங்கிச் சிறப்பித்திருந்தார். மற்றொன்று, பிற்பகலில் நடைபெற்ற தமிழிசை பதிப்பகம் வெளிட்ட மூன்று புத்தகங்கள். ஒன்று விடியலும் வெளிச்சமும் என்ற சிறுகதைத் தொகுப்பு. இதை இதழாளர் கோவி லெனின் வெளியிட்டுப் பேசினார். மற்றொன்று சலனம் என்ற புதினம். இப்புத்தகத்தை பகுத்தறிவாளரும், எமரால்டு பதிப்பகத்தின் உரிமையாளருமான ஒளிவண்ணன் வெளியிட்டுப் பேசினார். மூன்றாவது தளிர்நலம் என்ற குழந்தைகளுக்கான கவிதைத் தொகுப்பு. கவிஞர் லதா பாரதி இந்தப்புத்தகத்தை வெளியிட்டுப் பேசினார். ஊடகவியலாளர் பிரின்சு என்னாரெசுப் பெரியார் இணைப்புரை வழங்கிச் சிறப்பித்தார். இந்த மூன்று புத்தகங்களையும் எழுதிய கவிஞர் மா. மதிமாறன் அவர்கள் தன் ஏற்புரையை நன்றியுரையாக்கிக் கொண்டார். இறுதியாக கலை அறப்பேரவை பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் சிறப்புரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். வெளியிட்டுப்பேசிய அனைவருமே வாசிப்புப் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்று பெற்றோர்களுக்குக் கோரிக்கை வைத்தனர். காலையிலும் பிற்பகலிலும் நடைபெற்ற இரண்டுமே, வெவ்வேறு வாசிப்பு தளங்களைக் கொண்டது. இந்த இரண்டு வெளியீடுகளுமே நமக்கு பல்வேறு சிந்தனைகளைத் தூண்டிவிட்டது. பொதுவாக வாசிப்பு என்பது இன்றைய குழந்தைகளுக்கு கார்ட்டூன் போலவே, அன்றைய குழந்தைகளுக்கு படக்கதையிலிருந்துதான் தொடங்கியிருக்கிறது. என்றைக்குமே கேட்பதைக்காட்டிலும், படிப்பதைக்காட்டிலும் பார்ப்பதுதான் சிறப்பாகவே மூளையில் பதிந்து வந்திருக்கிறது. தேடல் எப்போதுமே சிறந்ததைத் தேடுவதில்தான் நிறைவடைகிறது. அந்த நிறைவும், நிறைவடையாமல் இருப்பதுதான் சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக மாறுகிறது. அப்படி சிறந்ததைத் தேடியவர்கள் சிலர்தான் புத்தர், வள்ளுவர், பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ் போன்றவர்களில் நிறைவடைகின்றனர். அப்படி நிறைவடைகிறவர்களில் சிலர் தன்னோடு நின்றுவிடுகிறார்கள். அதிலும் சிறந்ததைத் தேடுகிறவர்கள், தான் கற்றுக்கொண்ட அறிவுச்செல்வத்தை மக்களுக்கு கற்பிக்க வீதியில் இறங்குகின்றனர். மாற்றங்களை உருவாக்குகின்றனர். மடமைகளை மாய்க்கின்றனர். இதனால் சமூகம், பிற்போக்குத்தனம் உருவாக்கி வைத்திருக்கின்ற தடைகளைத்தாண்டி, கம்பீரமாக முன்னோக்கிச் செல்கிறது. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்தான். ஆனால், கேட்பதைக் காட்டிலும் பார்த்து படிக்கும் புத்தகங்கள் இன்னும் சிறப்பல்லவா? பழையன கழிதலும் புதியன புகுதலும் இதுவும் வள்ளுவம்தானே! ஆக வாசிப்பதற்கான விதை பெரும்பாலும் கார்ட்டூனிலும், படக்கதையிலும்தான் தொடங்குகிறது. இந்த தொடக்கத்திற்கு பிறகு இதை சரியான வழியில் கொண்டு செலுத்துவது யார்? சந்தேகமென்ன? பெற்றோர்கள்தான். ஒரு நல்ல எதிர்வினையை மற்றொரு நல்ல வினைதான் உருவாக்கும். ஆனால், ரூ. 1,000/- செலுத்தி, மின்னும் மரணம் காமிக்ஸ் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டவர்கள், தங்களை ஒரு குழந்தையாக உணர்வதைக் குறிப்பிட்டார்கள். அது ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். அது தேவையும்கூட. சிலர் இது தங்களுடைய கற்பனைத்திறனை வளர்க்கிறது. ஒரு தேர்ந்த திரைப்படத்திற்கான திரைக்கதையைப் போன்று நேர்த்தியாக இருக்கிறது. இதைப்பார்த்தேகூட திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றெல்லாம் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். ஓவியம் வரைவதற்கான ஆர்வத்தையும் இது தூண்டியிருக்கிறது என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். ஆனால், ஒருவர் படக்கதையைப் படித்துவிட்டு வீட்டின் மேலேறி தாண்டித் தாண்டி குதித்து தலையில் அடிபட்டுக்கொண்டதாக சொல்லக் கேட்டபோது, சக்திமானுக்கும் இதற்கும் பெரிய வேறுபாடில்லை என்று தோன்றியது. அதுவும் அடிபட்டுக்கொண்டது 30 வயது இளைஞர் எனும் போது, அவர்களுடைய முடிவுகளை அப்படியே ஏற்றுக்கொள்வதில் சிக்கல் வருகிறது. இந்தப் படக்கதைக்காக Moebius என்ற பிரெஞ்சு ஓவியர் கதை நிகழும் இடங்களுக்கு விமானம் மூலம் நேரில் சென்று ஒளிப்படங்கள் எடுத்து அதை வைத்துக்கொண்டு கைகளால் வரைகிறார் என்றெல்லாம் பரவசத்துடன் பேசும்போது தொழில் நேர்த்திக்காக பாராட்ட முடிந்ததே தவிர, படக்கதையோடு எனது எல்லை நின்றுவிட்டது என்று சொல்வதை ஏற்கத்தான் முடியவில்லை. இதிலும் பொதுவான விதிக்குள் எல்லாவற்றையும் அடக்கிவிட முடியாது. சிறுவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோரையும் வசீகரித்திருக்கக்கூடிய இந்த புத்தகங்களை வாசித்துக்கொண்டே அடுத்தடுத்த தளங்களுக்குச் சென்றவர்களும் அதில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிற்பகலில் நடைபெற்ற கவிஞர் மா. மதிமாறனின் புத்தகங்கள் இதற்கு நேர் மாறானவை, முற்போக்கு சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டவை, குழந்தைகளுக்கான கவிதைகளை, பெண்ணுரிமையைப் பேணுகின்ற புதினத்தை, பகுத்தறிவு சிந்தனைகளை வெளிப்படுத்துகின்ற சிறு குறுங்கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. முன்னதாக நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அதன் வாசகர்கள் மட்டும் கலந்துகொண்டனர். பின்னதில் பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். குழந்தைமை விரும்பக்கூடியதுதான். அது சமூகத்தோடு ஒட்ட ஒழுகல் என்ற அளவில்தான் இருக்கும். அது சமூகத்தை வழிநடத்தாது. சமூகத்தை நல்ல வழியில் நடத்தக்கூடியதுதான் இன்றைக்கு நமக்குத் தேவை. அதற்கு நல்ல தொடக்கம் தேவைதான். அவை இன்றைக்கும் படக்கதைகளாகவும், கார்ட்டூன்களாகவும்தான் இருக்கின்றன. படக்கதைகளை மட்டும் படிக்கிறவர்களை குறைவாக எண்ணுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிலருக்கு லேசான கோபம்கூட வந்தது. குறைவாக எண்ணுவதல்ல அது. தேங்கி நிற்பது வேண்டாம் என்கிற அக்கரைதான். இது போன்ற புத்தகச் சங்கமங்களை நடத்துவது என்பது இந்த சமூகம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் என்று பேராசிரியர் நன்னன் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. அதை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் மிகச்சரியாக செய்துகொண்டிருக்கிறது. ஒர் அறிவு இயக்கத்தின் கடமையும் அதுதானே? தொடக்கம் எதுவாக வேண்டுமானலும் இருக்கட்டும், வாசிப்பின் பரிணாம வளர்ச்சி என்பது கடசறக் கற்பவை என்பதுதானே? அதற்கான வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய இதுபோன்ற புத்தகச் சங்கமங்கள் பெருக வேண்டும், முரண்பாடுகள் முட்டிமோத வேண்டும், அதை நாம் ஆனந்தமாக வரவேற்கிறோம். ஏனென்றால், அதிலிருந்துதான் நாம் சில தெளிவுகளைப் பெறமுடியும். அந்தவகையில் இந்த வெவ்வேறு வாசிப்புத் தளங்களுக்கான வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்த சென்னை புத்தகச் சங்கமம் ஓசையில்லாமல் சமூக மாற்றத்திற்கான வரலாற்றை படைத்துக் கொண்டிருக்கிறது. அதைத்தான் இந்த இரண்டு வெவ்வேறு வாசிப்புத்தளத்திற்கான புத்தக வெளியீடு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. - உடுமலைவடிவேல்
படித்ததும் பிடித்ததும்
  படித்ததும் பிடித்ததும்
   
ஒரு நிழ்வில், ஹனீபா பாடிக் கொண்டிருக்க இடையிலேயே, கலைஞரும், பிற பொறுப்பாளர்களும் நிகழ்ச்சிக்கு வருகை தந்துவிட, அவைகளைப் பொருட்படுத்தாது தொடர்ந்து பாடியிருக்கிறார் ஹனீபா. ஹனீபா பாடி முடிக்கும்வரை கலைஞர் கீழே அமர்ந்து காத்திருந்துவிட்டுத்தான் மேடை ஏறியிருக்கிறார். இந்த முக்கியத்துவம் ஹனீபாவிற்கு எப்போதும் அங்கு குறைந்ததில்லை.
நிகழ்வுகள்
  நிகழ்வுகள்
   
“ஒரு மனிதனின் சவப்பெட்டி மீது ஆணி அடிக்கப்படும்வரை அவனைப் பற்றிய இறுதி முடிவுக்கு வராதீர்கள். சவப்பெட்டி மூடப்பட்ட பிறகு முடிவு செய்யுங்கள். அதன் பின் அந்த மனிதனை மதிப்பீடு செய்யுங்கள். என்னுடைய சவப்பெட்டி மூடப்படுவதற்கு முன்னால் நான்கூட ஏதேனும் முட்டாள்த்தனமான காரியத்தை செய்யக்கூடும்” – லீ குவான் யூ.