நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :30, டிசம்பர் 2010(13:29 IST)
மாற்றம் செய்த நாள் :30, டிசம்பர் 2010(13:29 IST)ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? 
 
- எழுத்தாளர் தேவபாரதி“பிறர் துன்பம் காணும் போது தனது துன்பம் போல் எண்ணி வருந்தும் இயல்புடைய ஒருவனும், பிறர் துன்பத்தைக் கருதாத ஒருவனும் யாப்பிலக்கணம் படித்துக் கவிதை செய்யப் பழகுவாராயின், முந்தியவன் உண்மையான கவிதை எழுதுவான்; பிந்தியவன் பதங்களைப் பின்னுவான்,” என்னும் பாரதியின் இந்த மேற்கோள் கவிதைகளுக்கு மட்டுமல்ல கதைகளுக்கும் பொருந்தும். ஏன் எழுதும் யாவற்றுக்குமே பொருந்தும். அத்தகு உன்னத நோக்கங்களினாலே வியாசர் முதல் பாரதி வரை எழுதினார்கள். அதனாலேயே அவர்களது எழுத்தும் தெய்வம்; எழுதுகோலும் தெய்வமாயிற்று.  

இத்தகு சூழலில் மக்களின் மீது அன்பும், பரிவும், உண்மையில் நாட்டமும் கொண்டு எழுதுவோன் தமிழ் மொழிக்கும், மனித குலத்திற்கும் சேவை புரிந்தவனாகின்றான்... இவ்வாறு தனது சிறுகதைத் தொகுப்பிற்கான முன்னுரையில் எழுத்தாளர் தேவபாரதி குறிப்பிட்டுள்ளார்.அந்த வகையில்  அமைந்த அவரது சிறுகதைகள் ‘தேவபாரதியின் கதைகள்’, மற்றும் திரைக்கதை வடிவங்களான ‘சுபயாத்திரை’, ‘அப்துல்லா’ ஆகிய 3 நூல்களின் வெளியீட்டு விழா 19.12.10 அன்று சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெற்றது. 

தேவபாரதி, 1960 ஆம் ஆண்டில் எழுதிய முதல் சிறுகதையான “கரிப்பு”  தொடங்கி 2006 ஆம் ஆண்டில் ஓம் சக்தியில் வெளியான “கடைசி விருந்து” வரையிலான 41 சிறுகதைகளின் தொகுப்பாக   “தேவபாரதி சிறுகதைகள்” வெளியாகியுள்ளது. ஆனந்த விகடன், அமுதசுரபி, சுதேசமித்திரன்,  தினமணிக்கதிர், தமிழமுது, கண்ணதாசன், அலிபாபா, ஓம் சக்தி போன்ற பல்வேறு இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு இது. இந்தத் தொகுப்பை தேவபாரதியின் மருமகனும் எழுத்தாளருமான எழில் முத்து தொகுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(தேவபாரதியின் கதைகள் இந்தி, ரஷ்ய மொழி போன்ற பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருப்பதும், ‘இனி ஒரு ஜன்மந்தரு’ என்னும் மலையாள திரைப்படமாக வெளிவந்திருப்பதும் தேவபாரதியின் புகழுக்கு கட்டியம் கூறுவனவாம்.) 

கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமை தாங்கிய இவ்விழாவில், ‘தேவபாரதியின் கதைகள்’ என்னும் நூலை மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி வெளியிட, அதை இருபரிமாணங்கள் உரிமையாளர் எஸ்.செல்வராஜ் பெற்றுக்கொண்டார்.‘சுபயாத்திரை’ என்னும் திரைக்கதை வடிவ நூலை திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட, அதை இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பெற்றுக்கொண்டார். அதேபோல், ‘அப்துல்லா’ என்னும் நூலை இயக்குனரும் எடிட்டருமான பீ.லெனின் வெளியிட, கவிஞர் ஜீவ பாரதி பெற்றுக்கொண்டார். 

இவ்விழாவில், கவிஞர் முத்துலிங்கம், அமுத சுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், எழுத்தாளர் சா.கந்தசாமி, நடிகர் பாரதி மணி, குறும்பட இயக்குனர் ரவி சுப்பிரமணியம், பாம்பன் சுவாமிகள்-ஆசிரியர் கலைச்செல்வன் என்று பலர் வாழ்த்துரை, கருத்துரை, நூல் ஆய்வுரை என்று பல்வேறான கருத்துக்களை வழங்கி விழாவை சிறப்பித்தனர்.  நமது நந்தவனத்தையும் சிறப்பிக்க இதோ அவர்களின் சிறப்புரைகள்...   

வழக்கறிஞர் இரா.காந்தி நூல்வெளியீட்டுரையாற்றி பேசுகையில்,“ தமிழக அரசு, தற்பொழுது நூல்களுக்கு வைத்திருக்கும் விலைமதிப்பு விழுக்காட்டினை உயர்த்தி, அதிக விழுக்காடுகள் விலை மதிப்பில், அதிக அளவு நூல்களை வாங்கி எழுத்தாளர்களை ஊக்குவிக்கவேண்டும். அதுதான் தேவபாரதி போன்றவர்களின் வழியில் சிறந்த எழுத்தாளர்கள் புதிதாக உருவாக வழிவகுக்கும்” என்றார்.பண்பாடு காக்கும் எழுத்தாளர் தேவபாரதி -  திருப்பூர் கிருஷ்ணன் 

தேவபாரதியின் கதைகள் ஜெயகாந்தனின் சாயல் அல்ல. ஜெயகாந்தனின் பாணியில், அவரது சமூக நோக்கில், மானுட அக்கறையில் தேவபாரதியின் கதைகள் அமைந்திருக்கின்றன. இதையே ஜெயகாந்தனும் இந்நூலுக்கு எழுதியிருக்கும் அணிந்துரையில், “இவற்றை எழுதியவருக்கும், எனக்கும் இருக்கும் நட்பு மாதிரி இந்தக் கதைகளுக்கும் எனது கதைகளுக்கும் நட்பு ஏதேனும் இருக்குமெனில் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. ஏனெனில் அப்படிப்பட்ட நோக்கங்கள் ஏதும் எங்களுக்கில்லை,” என்று குறிப்பிடுகிறார்.   

சிறுகதை பற்றி புதுமைப்பித்தன், “வீட்டுக்குள்ளே இருந்து ஒரு சாளரத்தின் வழியே வெளி உலகத்தைப் பார்ப்பது போன்றது சிறுகதை. 
நாவல் என்பதோ வீட்டை விட்டு வெளியே வந்து உலகத்தைப் பார்ப்பதற்கு ஒப்பாகும். சிறுகதை - வாழ்க்கையின் ஒரு சிறு நிகழ்ச்சியை, ஒரு கருத்தைச் சித்தரிப்பதாகும். நாவல் - முழு வாழ்க்கையை விவரிப்பதாகும்,” என்று குறிப்பிட்டதை தேவபாரதியும் தனது முன்னுரையில் சுட்டிக் காட்டியுள்ளார்.ஆனால்,  உண்மையில் தேவபாரதியின் கதைகள் சாளரத்தின் வழியே உலகத்தை வீட்டுக்குள் கொண்டு வருவது போன்றது என்று குறிப்பிடலாம். நாவல் வடிவம் அல்லாத வடிவம். சிறுகதை பளிங்குபோல் அளவாக அமைந்த சிறிய வடிவம். ஜெயகாந்தன், சிறுகதைகளை உரைநடையால் எழுதப்பட்ட கவிதை என்கிறார். தேவபாரதியின் கதைகளும் அப்படியே. 

புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ என்னும் கதையில் விபத்துக்கு உள்ளான கணவனை காப்பாற்றுவதற்காக ‘அம்மாளு’ என்ற பெண்மணி ஒருவனது இச்சைக்கு உட்பட்டு விபச்சாரத்துக்கு ஆளாகிறாள். ஆனால், பிச்சைக்காரி ஒருத்தி காசுக்காக தனது கற்பை விற்றுவிடாத பண்புடன் இருப்பதாக “தத்துவ தரிசனம்” என்ற கதையை வடிவமைத்திருக்கிறார் தேவபாரதி. பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்கும் ஒருத்தியிடம் காசு கொடுத்து அவளைக் கெடுக்க முயற்சிக்கும் ஒருவன் முகத்திலேயே அந்தக் காசை தூக்கி எறிந்து வீசுகிறாள். ‘த்தூ... பிச்சைக்காரின்னா அவிசாரின்னு நினைச்சிச்கிறான்’ என்று அவள் திட்டுவதாக அக்கதை முடிகிறது.  

ஏழையாக இருப்பதால் மட்டுமே ஒருத்தி விபச்சாரத்தில் ஈடுபட்டு விடுவாளா என்ன? ஏழ்மையிலும் பண்பாட்டைக் காப்பாற்றப் போராடும் பெண்ணாக தனது கதையின் பிச்சைக்காரிப் கதாபாத்திரத்தை படைத்து பண்பாட்டை நிலைநாட்டி இருக்கிறார்.  இது போன்றே, ரெயில் இன்ஜினுக்கு போடும் நிலக்கரியைத் திருடும் போது, விபத்துக்குள்ளாகும் ஏழைப்பெண் பற்றி பேசும் ‘பத்மாவதி சரித்திரம்’ என்னும் கதை, மற்றும் பெண்ணே சாக்கிரதை, அடிமையின் கோபம் என அத்தனைச் சிறுகதைகளும் சமூக அக்கறையுடனும், சமூக அவலங்களை தெளிவுபடுத்தும் விதமாகவும், மனித வாழ்வின் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அமைந்துள்ளன.

வாழ்த்துரை - இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் 

இது போன்ற மேடைகளில் பேசுபவர்கள் இந்தக் கதையை நான் படமாக எடுப்பேன் என்று சொல்லிவிட்டு மேடையைவிட்டு கீழிறங்கியவுடன் சொன்னதை காற்றில் பறக்கவிட்டு மறந்துவிடுவார்கள். ஆனால், தேவபாரதியின் சுபயாத்திரை ஏற்கனவே படமாக எடுக்கப்பட்டு சில காரணங்களால் பாதியிலேயே நிறுத்துப்பட்டுவிட்டது. தேவபாரதியின் ‘பயங்கர மிருகம்’ என்னும் சிறுகதையில் ஹாரிப்பாட்டர், ஸுராசிக் பார்க் போன்ற படங்களை எடுக்கக்கூடிய தன்மையில் கதையமைப்பு இருக்கும். 

 திரைப்படமாக எடுக்கப்படவேண்டிய கதைகள் - எடிட்டர் லெனின் 

சுபயாத்திரை, அப்துல்லா இரண்டுமே பேசிக்கொண்டிருக்கும் போது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்று போகிற போக்கில் எழுதிய திரை வடிவக் கதைகள். சந்திரபாபு நடித்த பாவமன்னிப்பு படத்திற்கு முதலில் அப்துல்லா என்றுதான் பெயர் வைக்கப்பட்டது. அதன் பிறகுதான் பாவமன்னிப்பு என்று மாற்றப்பட்டது.

அப்துல்லா முதலில் சிற்பியின் கனவு என்று தான் இருந்தது. அதன் பிறகே மாற்றப்பட்டது. எழுத்தாளர்கள் எல்லாம் சோம்பேறிகள். கேட்டவுடன் மொத்தமாக எழுதிவிடுவார்கள். அதை மறுபடியும் திரும்பி படிப்பதில்லை. எழுத்து பிழைகளும், வந்த சொற்களே, வார்த்தைகளே மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கும். அதை மாற்ற நினைத்து திரும்பவும் படித்துப் பார்ப்பதில்லை.

தேவபாரதியும் அப்படித்தான். எங்கள் படத்திற்கு தேவையானதை மொத்தமாக எழுதிக்கொடுத்துவிடுவார். என்னோட வேலையே எடிட்டிங் என்பதால், எழுத்தாளரின் எழுத்திலும் நம்ம வேலையை காட்டுவதுண்டு. ஏதாவதுகூறி,  அவர் எழுதியதில் மறுபடியும் வெட்டி ஒட்டச் செய்வதுண்டு. இதனாலேயே தேவபாரதிகூட என்னிடம், “நீயும், உன் இயனக்குனரும் எப்படியாவது மறுபடியும் எழுத வைத்துவிடுவீர்கள்” என்று சொல்லுவார். 

தேவபாரதியின் கதைகள் நிச்சயமாக படமாக எடுக்கப்பட வேண்டியவை. ஜனநாதன் கூறியது போல் மேடைப்பேச்சாக மட்டும் இருந்துவிடாமல், தேவபாரதியின் சுபயாத்திரை, அப்துல்லா இரண்டையும் எமது ‘புத்தா கிரியேசனே’ படமாக எடுக்கும் என்பதை கூறிக்கொள்கிறேன்.

வாழ்த்துரை - கவிஞர் முத்துலிங்கம் 
  
புதுமைப்பித்தன், தமிழ் ஒளி, மௌனி, ஜெயகாந்தன் வரிசையில் சிறப்பு மிக்க எழுத்தாளர் தேவபாரதி. ஜெயகாந்தன் போன்றே முத்திரைக் கதைகளில் முத்திரை பதித்திருக்கிறார். 

நீரை விட நுட்பமானது நெருப்பு. நெருப்பை விட நுட்பமானது புகை. புகையைவிட நுட்பமானது காற்று என்பர். காற்றைவிட நுட்பமானது தேவபாரதியின் கதைகள் என்பேன். பொழுதுபோக்காக எழுதினாலும், அந்த எழுத்து பழுது போக்குவதாகவும் அமையவேண்டும்.அதுதான் சிறந்த எழுத்து. தேவபாரதியின் எழுத்துக்களும் அத்தகையதே.

எழுத்தாளர்களை வாழும் காலத்தே கொண்டாடுவோம் - கவிஞர் ஜீவபாரதி பாரதி நினைவு இல்லத்தில், தேவபாரதியின் நூலைப்பற்றி ஜீவபாரதியாகிய நான் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். 

‘அப்துல்லா’ சரியான காலத்தில் வெளிவந்திருந்தாலும்,  அது வெளிவந்திருக்கும் காலம் சரியில்லை. காந்திஜி, நேருஜி, நேதாஜி போன்றவர்களின் பெருமையை பேசியது அந்தக் காலம் என்றால்,  2ஜியின் புகழ் பேசப்படுவது இந்தக் காலம். மத, இன பிரிவினைகள் நிறைந்திருக்கும் இந்த காலத்தில் மத நல்லிணக்கத்தை போதிக்கும் நூலாக அப்துல்லா வெளிவந்திருக்கிறது.

அப்துல்லா கதையில் வரும் ஆனந்த் சர்மா என்னும் சிற்பி,
அனைவரும் வணக்கங்கக் கூடிய வகையில் அழகிய அம்மன் சிலையை வடிப்பதே 
லட்சியமாக கொண்டு வாழ்கிறான்.சிற்பியின் கையாலேயே ஒருகல் விக்கிரகமாகிறது. ஒருகல் படிக்கட்டாகிறது. விக்கிரகமாகிய கல் மதிக்கப்படுகிறது. படிக்கட்டாகிய மற்றொரு கல் மிதிக்கப்படுகிறது. இவ்வாறு சிற்பி ஆனந்த் சர்மா கதாபாத்திரம் சிந்திப்பது போன்ற ஒரு காட்சி இக்கதையில் இடம் பெற்றிருக்கும். அதைப் படிக்கும் போது எனக்கு நினைவுக்கு வந்த ஒரு நிகழ்வு...  

மதுரையில், திருமங்கலத்தில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த மாணவன், முருகன் மீது கொண்ட பக்தியினால் திருப்பரங்குன்றத்து முருகனை தினமும் சென்று வழிபடுவது வழக்கமாக கொண்டிருந்தான். அப்படி திருப்பரங்குன்றத்தில் முருகனை தரிசனம் செய்துவிட்டு வரும் வழியில், ஒரு பாதிரியார் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர்,  “ இதோ நான் நிற்கும் இதுவும் கல்தான், சாமி என்று நீங்கள் வணங்குவதும் கல்தான்.  பிறகு ஏன் சாமி சிலையாக செதுக்கப்பட்ட அந்தக் கல்லை மட்டும் குப்பிடுகிறீர்கள். இதோ நான் ஏறி நிற்கும் கல்லையும், ஏன் பாதையில் இருக்கும் எல்லா கல்லையும் கும்பிடவேண்டியது தானே” என்று பேசிக் கொண்டிருந்தார். அதைக் கேட்ட அந்தச் சிறுவனக்கு கோபம் வந்து விட்டது. 

பாதிரியாரிடம் அந்தச் சிறுவன், “ உங்கள் அம்மா,  சகோதரியர்,  மனைவி, மகள் ஆகிய அனைவரும் பெண்தானே என்று கேட்கிறான்.  அதற்கு அந்தப் பாதிரியார் ஆமாம் அனைவரும் பெண்கள்தான் என்கிறார்.  அப்படி அனைவரும் பெண் என்றால்,   தாய், சகோதரி, மகள் என்று பேதமின்றி அனைவரிடமும் மனைவியிடம் நடந்துக் கொள்வது போல் நடந்துக் கொள்ள முடியுமா என்று கோபமாக கேட்கிறான். அதற்கு அந்தப் பாதிரியார் பதில் ஏதும் கூறமுடியாமல் வாயடைத்துப் போகிறார். அந்தச் சிறுவன்தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

ஆனந்த் சர்மா தனது லட்சியமாகிய அம்மன் சிலையை வடித்து விடுகிறான். அந்தச் சிலைக்கு கண் திறக்கும் நேரத்தில் அவனது கண் பறிபோகிறது. அப்போது அவனது உதவியாளனான அப்துல்லாவை வைத்து அம்மன் சிலைக்கு கண் திறக்க ஏற்பாடு செய்கிறான். ஆனால் அதற்கு, “ஒரு முஸ்லிம் இளைஞன் வந்து, அம்மன் சிலைக்கு கண் திறப்பதா ? ” என்று மதவாதிகள் பிரச்சனை செய்கிறார்கள். அந்தப் பிரச்சனைகளை தாண்டி அப்துல்லா எப்படி சிலைக்கு கண் திறக்கிறான் என்பதுதான் கதையின் முடிவு. அப்துல்லா கதையில் வரும் சிற்பி ஆனந்த் சர்மா, அப்துல்லா, அவனின் காதலி சர்மிளா என்று அற்புதமான கதாபாத்திரங்களை படைத்திருப்பார் தேவபாரதி.

நாடறிந்த எழுத்தாளர்கள் யாருமே அவர்கள் உயிரோடிருக்கும் போதே உலகத்தால் கொண்டாடப்படுவதில்லை. பாரதியார், வாழ்ந்த காலத்தில் படாதபாடு இல்லை. (அவர் பாடாத பாடலும் இல்லை). அவரை யாரும் கண்டுகொண்டதுமில்லை.  ஆனால் இன்று பாரதியை போற்றாதவர்கள் யாருமே இல்லை. தேவபாரதியும், அவரது எழுத்தும் தமிழுக்கு கிடைத்த செல்வம். தேவபாரதியை அவர் வாழும் காலத்தே நாம் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடும் விதமான ஒரு விழாவாகவே இந்த நூல்வெளியீட்டு விழா அமைந்துள்ளதில் மகிழ்ச்சி.தலைமை உரை - கவிஞர் ஈரோடு தமிழன்பன் 

தேவபாரதியின் மூன்று வகையான அற்புத நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது பெருமைக்குரியதாகும். சிறுகதை மட்டுமின்றி திரைக்கதை வடிவ நூல்களும் எழுதியிருக்கிறார் தேவபாரதி. இன்று திறந்த வெளியில் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை மோப்பம் பிடிக்கும் காதல் திரைப்படங்களில் காட்டப்படுகிறது.  அப்படி மோப்பம் பிடிப்பதற்கு விருதுகள் வேறு கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் பார்க்கையில், எதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘சுபயாத்திரை’, மத நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையில் அமைந்த ‘அப்துல்லா’ கதைகள் மிகவும் போற்றப்படக்கூடியவை. தேவபாரதியின் சிறுகதை தொகுப்பில் கடைசியாக இடம்பெற்றுள்ள ‘கடைசி விருந்து’ கதை பாலுமகேந்திராவின் ‘வீடு’ திரைப்படத்தை நினைவு படுத்தியது. சொந்தவீடு என்பது ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் சொந்தவீடு கட்டிவிட்டால் ஒருவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சியையும் கடைசி விருந்து கதை அழகாக பிரதிபலிக்கிறது. 

எனது இத்தனை ஆண்டுகால வாழ்வில் சமீபத்தில் தான் என் மகன் கட்டிய சொந்தவீட்டில் வாழும் பாக்கியம் எனது கடைசி கால விருந்தாக வாய்த்துள்ளது. திரைத்துறையினருக்கு இருக்கும் ‘ஒளிவட்டம்’ இல்லை என்றாலும், தேவபாரதிக்கு எழுத்துலகின் ‘வெளிவட்டம்’ இருக்கிறது.  இவ்வளவு பெரிய அளவில் கற்றறிந்த தமிழ்ச் சான்றோர்கள் கூடியிருக்கும் இந்த விழாமேடையே அதற்குச் சான்றாகும்.  

ஏன் இந்தக் காகிதம் செய்தோம் - தேவபாரதி

 நான், சுதந்திரத்திற்கு முன்பு பிறந்தவன். சுதந்திரம் பெற்றதையும் கண்டவன். இன்று சுதந்திரம் எந்த அளவில் இருக்கிறது என்பதையும்,இன்றைய நாட்டின் அவலங்களையும் கண்டுக்கொண்டிருக்கிறேன். பாரதி, “ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்” என்றான். அன்று காதிதத்தையே ஆயுதமாக்கி சுதந்திர உணர்வை வளர்த்தனர். ஆனால் இன்று... ஏன் இந்தக் காகிதத்தை செய்தோம்? என்றிருக்கிறது. பொய்யும், புரட்டும், வதந்தியும் பரப்பும் ஆயுதமாகதான் இன்று காகிதம் திகழ்கிறது.

சாதியை ஒழிப்போம் என்று அரசியல் வாதிகள் முழக்கமிடுகிறார்கள். ஆனால் சாதிக்கொரு கட்சியினையும் வைத்துள்ளார்கள். சாதிக்கொரு கட்சி இருக்கும் வரை, சாதியை எப்படி ஒழிக்கமுடியும். எனது அப்துல்லா கதை, சாதி ஒழிப்பையும், மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்துவதாய் அமைந்துள்ளது.

எனது கதைகள் பொறுப்பற்ற முறையில் எழுதப்பட்டவையல்ல. பொழுது போக்காக எழுதப்பட்டதல்ல. பண நெருக்கடியைத் தீர்க்க எழுதப்பட்டதல்ல. நான் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து எனது கதைகள் தொடந்து பரவலாக வாசிக்கப்பட்டு வருகின்றன. மௌனிக்கு அடுத்தப்படியாகக் குறைவாகவும் நேர்த்தியாகவும் எழுதிய எழுத்தாளன் நானாகத்தான் இருக்க முடியும். நான் ஆற்றிய காரியத்திற்கு மேலாகவே நான் மதிக்கப்பட்டிருக்கிறேன்.

தொகுப்பு :- நா . இதயா , ஏனாதி ... 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]
Name : subramani Date :7/31/2012 12:00:46 PM
''சாதியை ஒழிப்போம் என்று அரசியல் வாதிகள் முழக்கமிடுகிறார்கள். ஆனால் சாதிக்கொரு கட்சியினையும் வைத்துள்ளார்கள். சாதியை எப்படி ஒழிக்கமுடியும்? '' என்று தேவபாரதி நெத்தியடியாக கேட்டுள்ளார்.பாராட்டுகிறோம் .