நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :11, ஜனவரி 2011(16:45 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2011(16:45 IST)
வெட்டிய இடத்தில் வெயிலுக்கு ஒரு மரம் ...!

 - நக்கீரன் ஆசிரியர்மிழச்சி தங்கபாண்டியனின் கவிதைகள், கட்டுரைகள், பிற படைப்பாளிகளின் படைப்புகள் குறித்து அவர் எழுதிய விமர்சனங்கள், அவரது படைப்புகள் குறித்து பலரும் எழுதிய கடிதங்கள் போன்றவற்றின் தொகுப்புகள் - ‘காற்று கொணர்ந்த கடிதங்கள்’, ‘காலமும் கவிதையும்’, ‘பாம்படம்’, ‘சொல் தொடும் தூரம்’ ஆகிய நான்கு தலைப்புகளில் நான்கு நூல்களாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு நூல்களும் உயிர்மை பதிப்பகம் சார்பில் 2.1.11 அன்று மாலைப்பொழுதில் வெளியிடப்பட்டன. இந்த வெளியீட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டி நாடு வித்தியாஸ்ரமம் பள்ளியில் அமைந்துள்ள குமார ராஜா முத்தையா அரங்கில் நடைபெற்றது.

கவிஞர். சிற்பி பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், புது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக கலை மற்றும் அழகியல் துறையின் தலைவரும் கன்னட மொழிக் கவிஞருமான ஹெச்.எஸ்.சிவப்பிரகாஷ் நூல்களை வெளியிட -  எழுத்தாளர் இமையம், பேராசிரியர் அ.நிர்மலா கணேசன், கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் புதல்வியர் இமையா மற்றும் இதயா,  தமிழச்சி தங்கபாண்டியன் - சந்திர சேகர் தம்பதியரின் புதல்வி நிர்மலா ஆகியோர் நூல்களை பெற்றுக்கொண்டனர்.  

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் வெ.இறையன்பு, நக்கீரன் ஆசிரியர் கோபால், கவிஞரும் உயிர்மை இதழாசிரியருமான மனுஷ்ய புத்திரன், நடிகர் ரா.பார்த்திபன், இயக்குனர் அமீர், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் பல்வேறு கருத்துரையாற்றி விழாவை சிறப்பித்தனர். இதுதவிர தமிழச்சி தங்கப்பாண்டியனின் இரண்டு கவிதைகள் கானாப்பாடலாகவும், தெம்மாங்கு பாடலாகவும் மற்றும் அவரின் ‘எட்டு ரூபா செப்புக்குடம்’ என்னும் கட்டுரை,  நாடகம் வடிவில் காட்சியாக்கப்பட்டது என்பது இவ்விழாவின் கூடுதல் சிறப்பம்சம்.
 
விழாவில் பேசிய அனைவரும் குறிப்பிட்ட ஒன்று, “இன்று சென்னையில் பல்வேறு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், மழையும் கொட்டோ கொட்டென பெய்து கொண்டிருக்கும் பொழுதிலும் இவ்விழா அரங்கினை மக்கள் வெள்ளம் நிறைத்துள்ளது. அதற்கு காரணம் தமிழச்சி தங்கபாண்டியனின் அன்பு மழைதான்,” என்றனர். அத்தகு அன்புமழை நிரம்பிய நிகழ்ச்சியின் சாரல் நமது நந்தவனத்திலும் பொழிகிறது மண்வாசத்துடன்...

நகரத்து அடுக்கக வீடுகளின் அவலம் - வெ.இறையன்பு

ஒரு பேச்சாளர், தான் பேசும்போது நான்கு விஷயங்களை முக்கியமாக கவனிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவை,  1) பேசுவதற்கு முன்னால் என்னென்ன பேசவேண்டும் என்று தாம் எடுத்துக்கொண்ட குறிப்புகள், 2) பேசும் போது என்னென்ன பேசினோம் என்பன, 3) வீட்டுக்கு போகும் போது, எதையெல்லாம் பேசாமல் விட்டோம் என்றும், இதை பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் சிந்திப்பது, 4) மறு நாள் பத்திரிகைகளில், தான் பேசியது குறித்து என்ன வந்தன என்பது, ஆகிய நான்கினையும் பேசும்போதெல்லாம் கவனிப்பதாக கூறுகிறார். அதையே நானும் கடைபிடிக்கிறேன். 
 
ஒரு அறிஞர் சொன்னார், “படித்தது எல்லாம் மறந்துவிட்டாலும், எது மனதில் தங்குகிறதோ அதுதான் கல்வி என்று. அதேபோல் அனுபவங்கள் எல்லாம் மறந்த பின்பும் எது ஞாபகத்தில் இருக்கிறதோ அதுதான் சிறந்த படைப்பு. தமிழச்சி தங்கபாண்டியனின் படைப்புகளில் பாசாங்கோ, போலி அரிதாரப் பூச்சுக்களோ இல்லை. இவர் தெளிவான சிந்தனையுடையவர் எனபதையும், இவர் பாமர மக்களோடும் தோழமையுடன் பழக்கூடியவர் எனபதையும் அவரின் தலைப்புகள் கூட தெளிவுபடுத்துகின்றன. இது போன்று எழுதுவதற்கு மக்களோடு அதிகமாக பழகிய அனுபவம் வேண்டும். இவரது படைப்புகளில் ‘தான்’ என்ற கருத்து பல்லைத் துருத்திக் கொண்டிருக்கவில்லை. ஆனால், பாயாசத்தில் கிடக்கும் முந்திரி போல் தென்படுகிறது.

கருவேலம் மரத்தில் கொக்கு வந்து அமர்ந்திருப்பதை, ‘வெற்றிலையில் சுண்ணாம்பு சேர்த்தது போல்’ என்று உவமைப்படுத்தி கூறியிருப்பது சிறப்பானது. முத்தம் என்பது எப்படி உருவானது என்றால்... மாமிசத்தை மென்று தன் குழந்தைக்கு வாய்வழியாக ஊட்டிவிட்ட பழக்கதின்மூலம் முத்தம் கொடுப்பது உருவானது.

ஜென் தத்துவம் ஒன்றில் வில்லாளன் பற்றி இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
 
துள்ளியமாக இலக்கை குறிவைத்து தாக்கக் கூடிய மிகச்சிறந்த வில்லாளன் ஒருவனிடம், “இன்னும் நீ வில்வித்தையில் தேர்ச்சி பெறவில்லை,” என்கிறார் குரு. அதற்கு அவன், “வைத்தக்குறி தவறாமல்தானே வில் எய்கிறேன். பிறகு ஏன்? இன்னும் எனக்கு பயிற்சி தேவை என்கிறீர்கள்,” என்கிறான். அதற்கு குரு, “எப்போது வில் தொடுக்கும் போது, உன்னுடைய முயற்சியின்றியே அம்பு இலக்கு நோக்கி செல்கின்றதோ அப்போது தான் நீ சிறந்த வில்லாளன்” என்று கூறுகிறார்.   

நகரத்து அடுக்கக வீடுகளின் அவலம் பற்றி ஒரு கவிதை, 

“இப்படி ஒருவர் இருந்தார் என்பதை - அவர் 
இறந்த பிறகுதான் தெரிந்தது...” என்று குறிப்பிடுகிறது. இதே மாதிரியான நகரத்து அடுக்கக வீடுகளின் அவலங்கள் பற்றி தமிழச்சியும் குறிப்பிட்டுள்ளார்.

தான் குடி இருக்கும் வீட்டுக்கு எதிர்வீட்டில் குடியிருப்பவர்கள் கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்றுவிட்டபோது அவர்கள் வீட்டு பால்கணியில் வளரும் செடிகள் தண்ணீர் ஊற்ற ஆளின்றி வாடுவதை பற்றி குறிப்பிடும் தமிழச்சி, “ எதிர் வீட்டுக்கரர்களிடம் கொஞ்சம் பழகி இருக்கலாமோ, கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்லும் போது, செடிக்கு தண்ணீர் ஊற்றட்டுமா என்று கேட்பதற்காகவாச்சும் கொஞ்சம் பழகி இருக்கலாமோ! எதிர் விட்டு பால்கணியில் செடிகள் வாடுவதைப் பார்த்துக்கொண்டே தண்ணீர் குடிப்பது எவ்வளவு வேதனையானது” என்கிறார். வாடும் செடிகளைப் பார்க்கும் போது வாடி இருக்கிறது இவரின் மனமும்.

மரங்களைப் பார்க்கும் போதெல்லாம்...  மரங்களில் ஏறி விளையாடிவர்களுக்கு, அவர்களது சிறுவயது ஞாபகம் வரும். அதுபோல், தனது ஞாபகங்களை எல்லாம், அனுபவங்களை எல்லாம் தமிழச்சி தனது எழுத்தில் பதிவு செய்திருக்கிறார்.   

வெட்டிய இடத்தில் வெயிலுக்கு ஒரு மரம் - நக்கீரன் ஆசிரியர்

இறையன்பு அடுக்கக வீட்டில் வாழ்வது பற்றி குறிப்பிட்டார். நகரத்தில் வாழ்வதால்தான் நமது வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. என்றாலும், நாம் பிறந்த கிராமத்தையும் மறக்கமுடியாது. 

நகரத்தின் அடுக்கக வீடு ஒன்றில் திருட வந்த திருடன், கணவன் - மனைவி இருவரையும் வாயைப் பொத்தி, கட்டிப்போட்டுவிட்டு திருடுகிறான். அப்போது கணவன், மனைவி இருவரும் ஏதோ சொல்வதற்காக ரொம்ப நேரமா முயற்சிக்கிறாங்க. அப்போது, திருடன் அவங்க வாயில் வைத்திருந்த துணியை எடுத்துவிட்டு என்ன சொல்ல வேணும்ன்னு நினைக்கிறீங்கன்னு கேட்கிறான். அதற்கு அவுங்க, எங்களுக்கு நீ ஒரு உதவி செய்யணும், போகும் போது எதிர் வீட்டுலேயும் திருடிவிட்டு போ. அப்படி நீ செய்யலைன்னா, என்ன ஆச்சு? ஏதாச்சு?, என்னென்ன திருடு போச்சுன்னு? கேள்விமேல கேள்வி கேட்டே கொன்றெடுத்துடுவானுங்க என்று சொல்றாங்க. அதற்கு திருடன் ரெண்டு பேரின் கண்ணத்திலேயும் பளாருன்னு அறைஞ்சுட்டு , “நான் வந்ததே அந்த வீட்டுல திருடத்தான். ஆனால் அவனுங்கதான் உங்க வீட்டுலையும் திருடிவிட்டு போகச் சொன்னானுங்க” என்று சொல்றான். 

எங்க ஊரான அருப்புக்கோட்டைக்கும், தமிழச்சி தங்கபாண்டியனின் ஊரான மல்லாங்கிணறுக்கும் 10 கிலோ மீட்டருதான் இருக்கும். தமிழச்சியின் ‘பாம்படம்’ படிக்கும் போது, எங்கம்மா என்னை கையைப் புடிச்சு வயல்காட்டு வரப்பு வழியாக கூட்டிக்கிட்டு போறது மதிரி தமிழச்சியின் பாம்படம் புத்தகம் என்னை கையைப் புடிச்சு என் கிராமத்துக்கு கூட்டிக்கிட்டு போனது.  

   எனக்கு, தமிழச்சி தங்கபாண்டியனையும், அமைச்சர் தங்கம் தென்னரசுவையும் பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். பாசமலர் படதில் வர அண்ணன் தங்கச்சியை விட அதிக பாசத்தோட இருப்பாங்க. 

தமிழச்சி எழுதிய இந்தப் பாம்படத்தில் வரும் ‘வெயில் மரம்’ கட்டுரைப் பற்றி கவிஞர் சிற்பி சுப்பிரமணியன் 
குறிப்பிட்டதுபோல, வெயிலுக்கு வேர், கிளைகள், இலைகள் எல்லாம் முளைத்து மரம்போல் இருப்பதாக வர்ணித்து வெயிலையே மரமாக்கி இருக்காங்க தமிழச்சி.

அதில் வரும் பாத்திரமான, மேலத்தெரு பாண்டியம்மாளிடம் தமிழச்சி, ‘வெயில் உனக்கு ரொம்ப பிடிக்குமா’ என கேட்கிறாங்க. அதற்கு மேலத்தெரு பாண்டியம்மாள், வெயில பிடிக்காம போக, அது என்ன என் வீட்டுக்காரரா. அவர் அடிச்சா வலிக்கும். ஆனால், வெயில் அடிச்சா வலிக்காதே” என்று கூறுகிறாராம்.

கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கெல்லாம் ஹீரோ மாதிரி மாப்பிள்ளை கிடைப்பதில்லை. பெரும்பாலும், வில்லன்கள்தான் மாப்பிள்ளையாக வருவானுங்க. அவனுங்க குடிச்சுட்டு வந்து அடிச்சாலும், மிதிச்சாலும் அவனுங்க கூடவே கடைசிவரைக்கும் வாழ்ந்திடுவாங்க. இதே மாதிரிதான் எங்க ஊருல ஒரு குடும்பம். அந்தக் குடும்பத்து குடிகாரக் கணவன் தினமும் குடிச்சுட்டு வந்து அடிஅடின்னு அடிப்பான். தினமும் அடி மிதி வாங்கினாலும் சத்தம்கூட போட மாட்டாங்க அந்த அம்மா. இது பற்றி அந்த ஊருக்கே தெரிஞ்சிருந்தாலும், அந்த அம்மா, அதைப்பற்றி யாரிடமும் சொல்வதே இல்லை. 

இப்படியே குடிகாரக் கணவனின் அடி, உதையை தாங்கிக்கிட்டே 15 வருஷத்தை கழிச்சுட்டாங்க அந்த அம்மா. 15 வருஷத்துக்கு அப்புறமா ஒரு நாள், குடிச்சுட்டு வந்து அந்தக் கணவன் அடிக்கும்போது ‘அய்யோ அம்மா’ என்று அந்த அம்மா சத்தம்போட்டு கத்துறாங்க.  ஊருல இருக்கிறவுங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சர்யம். என்னடா இது, எப்பவும் இல்லாமல் இப்போ சத்தம் போடுதே இந்தப் பொம்பளை என்று, எல்லோரும் வந்து அந்த அம்மாவிடம் என்னாச்சுன்னு? கேட்கிறாங்க.

அதற்கு அந்த அம்மா, “நான் அவரு அடிச்சதுக்காக சத்தம் போடல. முன்னெல்லாம் அவரு அடிச்சா பொல்லா வலி வலிக்கும். இப்போ அவரு அடிக்குறது வலிக்கவே மாட்டேங்குது. பாவம் அவரு குடிச்சு குடிச்சு உடம்பை கெடுத்துக்கிட்டாரு. முன்ன மாதிரி அவரு உடம்பில் தெம்பு இல்லை. அந்தக் கவலையிலதான் சத்தம் போட்டு அழுதேன்”,  என்று அந்த அம்மா சொன்னாங்கலாம்.

இந்தப் ‘பாம்படம்’ நூல் முழுவதும், கட்டடத்து வேலை பார்க்கிற, வயலில் கூலிவேலை பார்க்கிற என்று கிராமத்து பாமர மக்களோட வாழ்க்கையைப் பற்றிதான் இருக்கு.    

பாம்படத்தில் வரும் ‘புறவழிச்சாலை’ என்ற ஒரு கட்டுரையை எனது மனைவியிடம் படிக்கக் கொடுத்தேன். படிச்சுட்டு கண்கலங்கிட்டாங்க. 

தமிழச்சி, புறவழிச்சாலை வழியாக காரில் தனது ஊருக்கு போகும்போது, வழியில் இளநீர், நுங்கு விற்கிற அம்மையாரைப் பார்த்ததும், காரை நிறுத்தி ஒரு இளநீர் வாங்கிக் குடிக்கிறங்க. அப்போது அந்த அம்மாக்கிட்ட பேச்சு கொடுத்துட்டே அந்த அம்மையாரைப்பற்றியும், அவுங்க இளநீர் விற்கிற தொழில் பற்றியும் கேட்கிறாங்க. 

அப்போது அந்த அம்மா, “ரோட்டோரத்துல இருந்த மரங்களை எல்லாம் வெட்டிப்புட்டாங்க. மழை வெயிலுக்கு ஒதுங்கக்கூட ஒரு மரம் இல்லை. அதைவிட பொம்பளைங்க அவசரத்துக்கு ஒதுங்கவும் வழியில்ல. இதனாலேயே, தாகம் எடுத்தாலும் நானே இளநீர் குடிக்கிறதில்ல. எச்சியை முழுங்கிக்கிட்டே இறங்கு வெயில் நேரம் வரை தாக்குபிட்டிச்சுக்குவேன்.

இதைவிட அந்த மூணு நாளில் செத்துடலாம் போல இருக்கும். ஆனால், அதுக்கும் தூக்கு போட்டு தொங்கக்கூட ஒரு மரமில்லையே,” என்று சொல்லிக் கவலைப்படுறாங்க. இதைக்கேட்டவுடனே, தமிழச்சிக்கு குடித்த இளநீர் குடலில் உப்புக் கரிக்கிறதாம், நுங்கு திண்ண மனசே வரலையாம். 

அதன்பிறகு காரில் ஏறிப்புறப்பிட்டு போகும்போதே, “இதுபோன்ற பாமர மக்களின் கஷ்டம் உணராத மேல்தட்டுவர்க்க மக்களையும், மேல்தட்டு மக்களின் வசதிக்காக மட்டுமே செயல்படுகிறவர்களையும்தான் இதுபோன்ற பாமர மக்களின் வேதனைகளுக்கு காரணமாக கருதி குற்றவாளிக் கூண்டில் ஏற்றனும்,” என்று நினைத்ததாக தமிழச்சி குறிப்பிட்டிருக்கிறார். 

இங்கு வனத்துறை செயலர் இறையன்பு ஐ.ஏ.எஸ் இருக்கிறாங்க. இந்த நேரத்தில் நான் சொல்லிகொள்ள விரும்புவது... சேர, சோழ, பாண்டியர் காலத்திலேயோ, நமது பாட்டன் முப்பாட்டன் காலத்திலேயோ நடப்பட்ட மரங்களை எல்லாம், இன்றைய  போக்குவரத்து வசதிக்காக சர்வசாதாரணமாக வெட்டிவிட்டார்கள். அப்படி அந்த மரங்களை எல்லாம் வெட்டியபோதே, அதனருகில் மீண்டும் புதிய மரக்கன்றுகளையும் நட்டிருக்கலாம் என்பதுதான். 

பெண்கொடுமைகளை கொழுத்தும் சொக்கப்பனை - ரா.பார்த்திபன்

ஃபர்ஸ்ட் நைட்டுதான் இனிமையானது என்று சொல்லுவாங்க. ஆனால் இந்த செகெண்ட் நைட்டும்கூட இனிமையாகத்தான் இருக்கு. நான் சொல்கிற ஃபர்ஸ்ட் நைட் என்பது, நேற்றைய நியூ இயர் நைட். நேற்று புத்தாண்டு இரவு எப்படி சந்தோஷமாக இருந்ததோ, அதே மாதிரியான சந்தோஷத்தை இந்தப் புத்தக வெளியீடு நடக்கும் இன்றைய இரண்டாம் நாள் இரவும் கொடுக்கிறது. 

தமிழச்சியின் ‘காற்றுக்கொணர்ந்த கடிதங்கள்’ நூலில், அவரின் படைப்புகள் குறித்த பாராட்டுக் கடிதங்கள் மட்டுமல்லாமல், அவரின் படைப்புகள் பற்றி குறை சொல்லி, கோவில்பட்டி சோ.தர்மன் எழுதிய கடிதத்தையும்கூட சேர்த்திருக்கிறார். 

எனக்கு தெரிந்த ஒரே கிராமம் சென்னையிலேயே இருக்கிற சாலிக்கிராமம்தான். ஆனால், நக்கீரன் கோபால் சொன்ன மாதிரியே, என்னை தமிழச்சியின் ஊரான மல்லாங்கிணற்றுக்கே கூட்டிக்கொண்டு போகிறது இந்தப் பாம்படம் . இந்த நூல் முழுவதுமே கிராம மக்களின் வாழ்க்கை நிரம்பி இருக்கிறது. 

இவரின் ‘சொக்கப்பனை’ கட்டுரையில்... மணமான புதுப்பெண் ஒருத்தி சொக்கப்பனை கொழுத்தும் கார்த்திகை நாளினை கொண்டாட அவள் பிறந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள். அப்போது, அவளைப் பார்த்து அந்த ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர், “ஏன் உன்னோட மாமியார் வீட்டிலேயே சொக்கப்பனை கொழுத்த வேண்டியதுதானே.  ஏன் இங்க வந்திருக்க,” என கேட்கிறார். அதற்கு அந்தப் பெண், “அங்க, அதை கொழுத்தாதே, இதைக் கொழுத்தாதே என்பார்கள். அங்க நாம நினைத்ததை எல்லாவற்றையும் கொழுத்த முடியாதே” என்கிறார்.  

இதன்மூலம், தனது புகுந்த வீட்டில் ஆணாதிக்கம், மாமியார் கொடுமை என்று தீயிட்டு கொழுத்தக்கூடியவை அதிகமாக இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறார். அந்தப் பெண்கள் இருவரும் பிரிந்து செல்லும் போது அவர்களுக்கிடையே சொக்கப்பனை கொழுந்து விட்டு எரிவதாக எழுதியிருக்கிறார் தமிழச்சி. இது திரைப்படத்திற்கு தேவையான காட்சியுருவாக இயக்குனர் என்ற பார்வையில் எனக்கு தெரிகிறது.

தமிழச்சியின் பெயரான சுமதி என்பதை, அவரது ஊரில் ‘செமதி’, ‘செமதி’ என்று பேச்சுவாக்கில் கூப்பிடுவதாக குறிப்பிட்டிருக்கிறார். இவரின் படைப்புகளை எல்லாம் பார்க்கும்போது இவரை செமதி என்று கூறுவதைவிட ‘செம தீ’ என்றே அழைக்கலாம்.

தொகுப்பு :-  நா . இதயா

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [4]
Name : WeiQi Date :3/26/2012 11:39:34 PM
All of these artilecs have saved me a lot of headaches.
Name : ktssenthil Date :1/9/2011 10:29:28 AM
குட் வொர்க் ! தமிழச்சிக்கு வாழ்த்துக்கள். வாழ்த்தியோர் அத்துனைபேரும் பொருத்தமானவர்கள் மட்டுமல்ல சிறந்தவர்கள். குறிப்பாக நக்கீரன் கோபால் என்னை கவர்ந்தவர்களுள் ஒருவர்.
Name : kanda Date :1/8/2011 6:42:48 PM
good
Name : Karthiinlondon@yahoo.co.uk Date :1/8/2011 12:35:04 PM
வெட்டிய இடத்தில் வெயிலுக்கு ஒரு மரம் , படிக்கும் பொழுது ,என் கால்களில் செருப்பு போடாமல் நடந்து வந்த feeling இருந்தது !