நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :20, ஜனவரி 2011(11:10 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஜனவரி 2011(11:10 IST)சத்தமாக பேசப்படும் மௌனங்கள்யுகமாயினி - நிவேதிதா புத்தகப் பூங்கா இணைந்து, எழுத்தாளர் எஸ்ஸார்சி எழுதிய ‘வேத வனம்’,‘பாரதம் போற்றும் பைந்தமிழ் கவிஞர்கள்’ என்னும் இரு நூல்கள் மற்றும் கேரளத்தை பூர்வீகமாக கொண்டு சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் கமலா தேவி அரவிந்தன் எழுதிய ‘நுவல்’ சிறுகதை தொகுப்பு, எஸ். வைதீஸ்வரன் எழுதிய ‘திசைகாட்டி’ ஆகிய நான்கு நூல்களை வெளியிட்டது. இவ்விழா கே.கே. நகர் முனுசாமி சாலையில் அமைந்துள்ள மகாவீர் காம்ளக்ஸில் உள்ள டிஸ்கவரி புத்தக பேலஸில் நடைபெற்றது. 

வேத உபனிஷத்துக்களிலிருந்து சில பகுதிகளின் தமிழாக்கம் புதுக்கவிதை வடிவில் எஸ்ஸார்சி எழுதியிருக்கும் வேதவனம் நூலை அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் வெளியிட நரசய்யா பெற்றுக்கொண்டார்.

பாரதி, பாரதிதாசன், ராமலிங்கம் பிள்ளை, கண்ணதாசன் ஆகியோரின் பெருமைச் சிறப்புகள் குறித்து எழுத்தாளர் எஸ்ஸார்சி எழுதியிருக்கும் ‘பாரதம் போற்றும் பைந்தமிழ் கவிஞர்கள்’ எனும் நூலை மு.மேத்தா வெளியிட ராஜ்ஜா பெற்றார். 

எஸ்.வைதீஸ்வரனின் ‘திசைகாட்டி’ நூலை பேராசிரியர் சே.ராமனுஜம் வெளியிட சிராஜுல் ஹஸன் (சமரசம் ஆசிரியர்)பெற்றுக்கொண்டார். கமலாதேவி அரவிந்தனின் நுவல் சிறுகதைத் தொகுப்பை ந.முத்துசாமி வெளியிட தமிழச்சி தங்கபாண்டியன் பெற்றார். 

சத்தமாக பேசப்படும் மௌனங்கள் - எஸ். ஷங்கர நாராயணன்

இவ்விழாவில் தலைமை ஏற்ற எழுத்தாளர் எஸ்.ஷங்கரநாராயணன் பேசியதாவது... 

இது போன்ற கூட்டம் என்பதை ஒரு பேருந்து பயணம் என்று உருவகித்தால் பேருந்தில் பயணிகளை கூட்டிப்போக பேச்சாளர் பெருமக்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஓட்டுனர் என்றால் நான் ஒருவேளை நடத்துனர் என என்னைச் சொல்லிக்கொள்ளலாம். 

இப்போது காம்பியரிங் என்கிற ஒரு பாணி கூட்டங்களில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அழகான 
யாராவது இளவயசுப் பெண்ணை மேடையேற்றி நட்சத்திர அந்தஸ்து தந்துவிடுவார்கள். தமிழை ‘தமில்’ என அவள் கிளிபேச்சு பேசுகிறாள். என் நகையைப் பார், என் உடையைப் பார் என அவள் காதுக்கு அல்ல கண்ணுக்கு விருந்தளிக்கிறாள். சில திரைப்படங்களில் படத்தை விட இடைவேளை பயனுள்ளதாக அமைந்துவிடுவதைப் போல, தொகுப்பாளினி ஒரு ஆசுவாசம் தருவதாகக் கூட சில கூட்டங்கள் அமைவது உண்டு. சுதந்திர தினம் என்றால் அநேகம் பேருக்கு மிட்டாய் தினம் என்றே தெரியும். அதைப்போல...

இலக்கியக்கூட்டம் என்பதற்கு சில அடையாளங்கள் உண்டு. எழுத்தாளர்களே பேச்சாளர்களாக அமைவார்கள். பெரும்பாலும் அவர்களே துட்டுப்போட்டு நடத்தும் கூட்டம். நூல் வெளியீடு. அந்த நூலும் அவர்களே துட்டுப்போட்டு வெளியிட்டதாக இருக்கலாம். இந்நிலையில் கூட்டத்துக்கு வேறாளைப் பேச அழைத்து, சில சந்தர்ப்பங்களில் அவர் ஏடாகூடமாய் ஏதாவது பேசிவிட்டு போய்விடுவாரோ என்ற பயம் எழுத்தாளனுக்கு உண்டு. பேசாமல் பாராட்டி விட்டு போனால் நல்ல பேச்சாளன்.

சிவன் கோவில் கவியரங்கம் 
கீழே அறுபத்திருவர் -
என நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். இதெல்லாம் எழுத்தாளனுக்கு வேண்டியிருக்கிறது. கூரைமேல் ஏறி சேவல் விடியலை அறிவிக்க முயல்வதைப் போல. மனிதனுக்கு சில அடையாளங்கள் வேண்டியிருக்கிறது. அதாவது மேல்சட்டை போட்டால் பத்தாது. அதன் மேல் ஒரு துண்டு, அல்லது அங்கவஸ்திரம். எழுத்தாளன் சமுதாயத்தில் தனக்கு ஒரு அந்தஸ்து இருப்பதாக நம்புகிறான். அதற்காக உள்ளூற ஏங்குகிறான். ஆனால் அவன் மேடைபோட்டு “நான் விலைபோக மாட்டேன், நான் அவதார புருஷன், லட்சிய வீரன்” என்றெல்லாம் அறைகூவ விரும்புகிறான். அல்லது ஆள்வைத்து தன்னைப்பற்றி இப்படிப் பேசச்சொல்லி காதாரக் கேட்கிறான். ஊரறிய கல்யாணம் பண்ணிக்கொள்கிற ஒரு சந்தோஷம் இதில் இல்லையா?. இருக்கத்தான் செய்கிறது.எப்படியும் மிகைப்பட வாழ்தல் மனிதனின் இயல்பாகிவிட்டது. தங்கப்பல் கட்டிக்கிட்டவள் பக்கத்து வீட்டுக்குப் போய் “இஞ்சி இருக்கா இஞ்சி” என்று கேட்டாளாம். இதில் எழுத்தாளனை, பாவம் அப்பாவி அவனை விட்டுவிடலாம் போலிருக்கிறது.  

எழுத்து என்பது கட்டிக்கொடுத்த சோறு. அது எத்தனை காலம் கெடாமல் இருக்கும் என்று தெரியவில்லை. காலாவட்டத்தில் உணவுப் பண்டங்கள் சாப்பிடும் முறை மாறிவிடுகின்றன. மோரும் கூழும், தேனும் தினைமாவும் தின்று வளர்ந்த சமூகம்... இப்போது பெப்சி, பிசா, ஹார்லிக்ஸ் என்கிறார்கள். என்றாலும் எழுத்தாளனுக்கு நம்ம எழுத்து நின்று நிலைக்கும், இந்த சமூகத்தைத் தட்டி எழுப்பும், புரட்டிப்போடும் என்றெல்லாம் தளராத தன்னம்பிக்கை. அவன் நம்பிக்கை வாழ்க. ஒரு எழுத்தாளனின் எழுத்து இந்த சமூகத்தை அலாக்காகத் தூக்கி வேறிடத்தில் நட்டு விடும் என்றால், இதுவரை இத்தனை எழுத்தாளன் பிறந்திருப்பானா என்றே தெரியவில்லை. ஒருத்தனே போதும் அல்லவா? அடுத்து ஒருவனுக்கு வேலை இல்லை அல்லவா?.

மாயவித்தைக்காரர்களா எழுத்தாளர்கள்? சாமனியன் கண்ணைக் மூடிக்கொண்டு கனவு கண்டால், எழுத்தாளன் கண்ணைத் திறந்தபின் எழுதுகிறான். அவனும் கனவுதான் காண்கிறான். கனவு வேண்டியிருக்கிறது. மாற்றம் வேண்டியிருக்கிறது. அதன் விளைவே கலைகளாக உருவெடுக்கிறது. எழுத்து, பேச்சு, சித்திரம், நிழற்படம், சிற்பம், இசை என அவன் கனவின் எல்லையை விரித்து வலையாகப் பரத்துகிறான். வாழ்க்கை அதில் சிக்குமா என்று காத்திருக்கிறான். ஆனால் அது வாழ்க்கை அல்ல. வாழ்க்கையின் கனவு. வாழ்க்கை வெளியே இருக்கிறது. அதுவும் அவனருகே அமர்ந்து வலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

அரைத்து வைத்த தோசை மாவு மறுநாள் பொங்குவது போல் எழுத்து அதிதம். மிகை. எழுதுதல் தாண்டிபதிப்பித்தல் அல்லது அச்சுவடிவம் காட்டுதல். அதை நூலாக்கி அழகு பார்த்தல். அழகான அட்டைப்படம் அதற்கு வேண்டியிருக்கிறது. கூந்தல் உண்மையானது. என்றாலும் அதை பின்னிவிடலாம், கொண்டை போடலாம், திருப்பதி காணிக்கையாக்கலாம். புத்தகம் தாண்டி அதன் கட்டுமானம் தாண்டி... ஆ அதற்கு ஒரு தலைப்பு. அழகான அட்டைப்படம் என்று ஒரு ஓவியம். கனவுகள் அடுக்கப்படுகின்றன. அதன் உச்சம் எது? அதற்கு ஒரு வெளியீட்டு விழா.

மௌனத்தில், கனவில் உள்ளே ஊறிய விஷயம். அதை மௌனமாய் பகிர்ந்து கொள்வது இதைவிடச் சிறப்பாய் அமையக்கூடும். எழுதப்பட்ட விஷயம் வாசிக்கப் படுவதற்காக, அதை மேடையேற்றி சத்தமாய் இடம் சுட்டிப் பொருள் விளக்குதல் சரியா? ஆனால் வேண்டிதான் இருக்கிறது. அகோ வரும் பிள்ளாய் வந்து மைக்கைப் பிடித்து மௌனத்தைப் பற்றி பேசுக.

மிகைகள் வாழ்வில் தவிர்க்க முடியாமல் கலந்துவிட்டன. அதுவும் நுகர்வுக் கலாச்சாரம் சார்ந்த இந்தக் காலத்தில் எதிலும் ஒரு மிகை. விளம்பரம். அலட்டல் வந்து சேர்ந்துவிடுகிறது. தியானம் பற்றி தொலைக்காட்சி அலைவரிசைகள் தவறாமல் ஒளிபரப்புகின்றன. சாமியார்கள் ஆசி வழங்குகிறார்கள். மௌனமே முன்வந்து பேச ஆரபித்த காலமாய் இருக்கிறது.

ஒரு பாரசிகக் கவிஞன் சொன்னான்.

ரோஜாக்களை 
கூவி விற்கிற வியாபாரியே
ரோஜாக்களை விற்று 
இதைவிட உயர்ந்த எதை 
வாங்கப் போகிறாய்?

(ரோஜாவை விற்று ஒருவேளை வீட்டுக்கு மீன் வாங்கிப் போவானாய் இருக்கும்.)

இப்போது பகிர இரண்டு சேதிகள் ஞாபகம் வருகின்றன. ஒண்ணு, நமது தொன்மையான தமிழ்மொழியின் சிறப்பு. தமிழில் நிறுத்தற் குறிகளே கிடையாது. அநேக ஓலைச்சுவடிகளில் நுறுத்தற் குறிகள் இராது. காற்புள்ளி, அறைப்புள்ளி, முற்றுப்புள்ளி கேள்விக்குறி ஆச்சரியக்குறி எதுவுமே இல்லை. எல்லாம் மேலை நாட்டில் இருந்து இறக்குமதியான சரக்குதான். இது சொல்லின் மிகை என்று சொல்ல வருக்கிறேன். 

தமிழ் இலக்கணம் கச்சிதமானது. வினைமுற்று மொழியின் இறுதியில் அமையும். அத்தேடு அந்த வாக்கியம் முற்றுப்பெற்றதை வினைமுற்றே அறிவித்துவிடும். வாசிக்கும்போது தானே முற்றுப் புள்ளியை நாம் உணர்ந்துவிடலாம். கண்ணன் வந்தான்... என்று சொன்னால் வந்தானோடு வாசிப்பு முற்றுப்புள்ளி அளவில் தானே நின்றுவிடுவதை அறியலாம். ஆகாரம் ஓகாரம் சேர, தானே கேள்விதொனி கிடைத்து விடுகிறது. தனியே கேள்விக்குறி தேவையே இல்லை. அதேபோல கமா. நான் அவன் வீட்டுக்குப் போனபோது அவன் தூங்கிக் கொண்டிருந்தான்... என்று சொன்னால் போனபோது என வருகையிலேயே மனம் அந்த கமாவைக் குறித்துக் கொண்டுவிடுகிறது. 

எழுவாய் மொழிமுதல் அமையும்.கந்தன் வந்தான்... என்பதே சரி. வந்தான் கந்தன் என எழுதுதல் தகாது. இலக்கண மீறலாக சீதையைக் கண்டேன், என்பதை ராமனுக்கு அனுமன், கண்டேன் சீதையை என்று சொல்வதை கலை நுட்பமாக நாம் காண்கிறோம்.

அடுத்த சேதி பூமணி சொன்னது. கதைகள் வாழ்க்கையின் நேர்மையான தீற்றல்களாக, குறைந்த அளவு கற்பனைச் சாயலுடன் வடிவமைப்பு பெறவேண்டும் என்பார் அவர். வார்த்தை அதிதம் தகாது. என்பது அவர் கருத்து. அவர் சொன்னார், கதை என்றால் தலைப்பு எதற்கு? அதுவே முகத்தில் துறுத்திய மூக்குதான். ஷங்கரநாராயணன் எழுதிய கதை என்பதே போதும். தனியே அதற்கு மிகையாக தலைப்பு ஒட்ட வைக்கப்பட்டு நாமும் பழகிவிட்டோம் என்கிறார் பூமணி. சரி என்றுதான் படுகிறது.கமலாதேவி அரவிந்தனின் ‘நுவல்’ நூல் குறித்த ஆய்வுரையினை குகை மா. புகழேந்தியும், எஸ்.வைதீஸ்வரனின் ‘திசைகாட்டி’ நூலின் ஆய்வுரையினை இந்திரனும், எஸ்ஸார்சியின் ‘வேதவனம்’ பற்றிய ஆய்வுரையினை ருத்ரதுளசிதாஸும், அவரின் மற்றொரு நூலான ‘பாரதம் போற்றும் பைந்தமிழ் கவிஞர்கள்’ நூலின் ஆய்வுரையினை இரா.எட்வினும் வழங்கினர்.  
பாரதியை பாரதியாக பார்க்க வேண்டும் - இரா. எட்வின்

ஷெல்லியின் உடல் கடல்வழியாக கொண்டுவரப்படும் வேளையில், கரையில் பைரன் காத்திருக்கிறார். பைரனுடன் 
சில பாதிரியார்கள் இருந்தனர். அப்போது அவர்கள் பைரனிடம் ஒரு பைபிளை கொடுத்து இதை எப்படியாவது ஷெல்லியின் சட்டைப் பையில் வைத்துவிடுங்கள் என்றுள்ளனர். ஏன் என்று பைரன் கேட்க, இந்தப் பைபிள் புத்தகத்தை மட்டும் நீங்கள் வைத்துவிடுங்கள். அதன் பிறகு ஷெல்லி வாழ்ந்த காலத்தில் கடவுள் பற்றி பேசாதவராக, கடவுளை மறுப்பவராக இருந்தாலும், யாரும் அறியாத வகையில் தனிமையில் இருக்கும் போது அவர் பைபிளை விரும்பி படிக்க கூடியவர் என்ற கருத்தை நாங்கள் உலகமெங்கும் பரப்பி விடுகிறோம் என்றார்களாம் அந்தப் பாதிரியார்கள். 

கோபம் கொண்ட பைரன், ‘ஷெல்லியை ஷெல்லியாக மட்டும் பாருங்கள்’ என்று அவர்களைக் கடிந்து கொண்டார். அதே போல், பாரதியை பாரதியாக பார்க்க வேண்டும். பாரதி, பாரதிதாசன், ராமலிங்கம் பிள்ளை, கண்ணதாசன் போன்ற பாரதம் போற்றும் பைந்தமிழ் கவிஞர்கள் குறித்து எழுதப்பட்டிருக்கும் இந்த நூலில் அவர்களை அவர்களாகவே பார்த்திருக்கிறார் எஸ்ஸார்சி.

‘மகாகவி என்று அழைக்கப்படுபவர் பாரதியார்’ என்ற வரியினை மனப்பாடம் செய்து கொண்டிருந்த எனது மகளிடம், ஏன் பாரதியை மகாகவி என்று அழைக்கிறோம் என கேட்டேன். அதற்கு என் மகள், மிஸ்தான் மகாகவி என்றால் பாரதி என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்றாள். அவளின், ஆசிரியையிடன் இதைப்பற்றி கேட்டால், கோனார் நோட்சில் அப்படித்தான் போட்டிருக்கு என்கிறார்.

ஏன் பாரதியை மகாகவி என்று அழைக்கிறோம் என்றே தெரியாமலேயே சொல்லிக்கொடுக்கும், அதை மனப்பாடம் 
செய்யும் நிலைதான் இன்று இருக்கிறது. 

பாரதி ஏன் மகாகவி என அழைக்கப்படுகிறார்?...   காதலின் ஆழமான அன்பினால், பிரிவு தாங்காமல் பசலை நோயால் பெண்கள் உடல் மெலிதல் பற்றி வள்ளுவம் முதல் பல தமிழ் இலக்கிய நூல்கள் குறிப்பிடுகின்றன. பெண்களின் காதல் வலியினை பற்றி மட்டுமே பாடி வந்த தமிழில் முதன்முதலாக ஆண்களின் காதல் வலியை பாடியவன் பாரதி. 

தீர்த்தக் கரையினிலே – தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,

பார்ந்திருந்தால் வருவேன் – வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்.

வார்த்தை தவறிவிட்டாய் – அடி கண்ணம்மா!
மார்பு துடிக்குதடி!

பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே
பாவை தெரியுதடி!

மேனி கொதிக்குதுதடி – தலை சுற்றியே
வேதனை செய்குதடி!

வானிலிடத்தையெல்லாம் – இந்த வெண்ணிலா
வந்து தழுவது பார்!

மோனத்திருக்குதடி! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே.

நானொருவன் மட்டிலும் – பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ?

என்று ஆணின் காதல் பிரிவை பாடுகின்றான். பசலையால் பெண்கள் உடல் மெலிதல் போல், தன் காதலி வார்த்தை தவறிவிட்டதால் அந்த வேதனையில் ஆணுக்கு மார்பு துடிப்பதாக குறிப்பிடுகிறான். மேனி கொதிப்பதாகவும், தலை சுற்றியே வேதனை செய்வதாகவும், பிரிவென்பது நரகத்தில் உழலுவது போன்றதென்றும் குறிப்பிடுகிறான். இப்படி ஆணின் காதல் வலியை பாடும் இடத்தில் எனக்கு அவன் மகாகவியாக தெரிகிறான்.

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நட்டல்,
அன்னயாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 

இப்படி எல்லாப் புண்ணியத்திலும் சிறந்த புண்ணியம் எழுத்தறிவித்தல் என்று பாடுகையில் பாரதி கூறுகிறான். 
எழுத்தறிவிப்பது எப்போது சிறந்த புண்ணியமாக கொள்ளப்படும் என்றால் ஒரு ஏழைக்கு எழுத்தறிவிக்கும் போது என்கிறான். பணக்காரனுக்கு கல்வி தரத்தேவையில்லை. அவர்கள் தாங்களாகவே படித்து விடுவார்கள். அதனால் ஏழைக்குத்தான் கல்வி வழங்க வேண்டும் என்கிறான் பாரதி. ஆனால் இன்று பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் படிப்பு என்றாகிவிட்டது. 

தேசியம், பெண்ணியம், காதல், பக்தி என்று எல்லாவற்றையும் பாடும் போது பார்த்து பார்த்து, அளந்து அளந்து நுட்பமாக வார்த்தையை கையாள்கிறான். அதனால்தான் அவன் மகாகவி எனப்படுகிறான். விடுதலைப் பெறுவதற்கு முன்பே விடுதலையை தனது கவியில் பாடி கொண்டாடிய தீர்க்கதரிசி பாரதி.

வைரமுத்து சொல்லுவார், ஒரு கவிஞன் தாயைப்பற்றி பாடும் போது, அவனே அந்தத் தாயாக மாறிவிட வேண்டும்.அவன் மார்பில் பால் சுரக்கவேண்டும் என்று. அதேபோல், பாரதி குயிலைப் பாடிய போது குயிலாகவே மாறிப்போனவன். 

தொகுப்பு :-  நா . இதயா

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [3]
Name : srinivasan Date :6/18/2011 11:52:10 AM
ரோஜா கவிதை மிகவும் அருமை
Name : Suba Date :3/14/2011 11:21:12 AM
கட்டுரை மிகவும் நல்லா இருக்கிறது
Name : BASKAR Date :2/4/2011 4:15:51 PM
பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே பாவை தெரியுதடி! எனக்கு மிகவும் பிடித்த வரி. வாழ்க பாரதி. கட்டுரை மிகவும் நல்லா இருக்கிறது.