நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :1, பிப்ரவரி 2011(12:25 IST)
மாற்றம் செய்த நாள் :1, பிப்ரவரி 2011(12:25 IST)மேலை நாட்டுக் கானல் நீர் 
 ...!ள்ளளவு தமிழ் -
கொள்ளையளவு ஆங்கிலம் - அதுவே
தங்கிலீஷ் எனும் தமிங்கிலம் ; 
காட்சி ஊடக கடல்களில் 
அதிகம் ஆளும் இந்தத் திமிங்கிலம்...!

மொழியின் நலிவு -
மொழிக் கலப்பில் துவக்கம் ; - ஓர்
இனத்தின் அழிவு -
மொழியின் நலிவினில் துவக்கம்...!

மொழியில் மட்டுமா கலப்பு - இன்று 
அனைத்திலும் மேலை நாட்டுக் கலப்பு ;
உணவில் கலப்பு - 
நோயின் பிறப்பு ;
பண்பாட்டில் கலப்பு - சமூக
சீரழிவின் தொகுப்பு ; - இவையே 
இன்றைய தீரா அருவருப்பு...!

பிறமொழிகளின் ஆளுமைக்கு காரணம் - அவை
வருமானம் தரும் மொழிகளாம் ; 
வருமானம் தரும் - ஆனால்
அவை தன்மானம் தருமா...? 
அதைப் பற்றி - இங்கு 
யாருக்கு கவலை...!?

வருமானம் தரும்
மொழி... -  அது 
ஒரு புறம் இருக்கட்டும் ; 

ஆயினும் - இந்த
நாறிய மேலை நாட்டு - 
நாகரிகம் என்ன தரும்...?! நடையில், உடையில்
பழகும் பண்பில், பாசத்தில் -
சிறந்த நட்பில் -
அழகிய காதலில் - இனிய 
உறவில் - அட 
அன்பில் கூட - நாம்
அன்னியப்பட்டுப் போனோம் - நம் 
பழம்பெரும் உயர் பண்பாடு மறந்து ! 

கவின்மிகு - நம் 
பண்பாட்டுச் சோலை ;
ஏன்...? - இந்த
மேலைக் கானல் நீர் - 
பாய்ச்சும் வேலை...!

பாரதி போல்... தேவநேய பாவாணர் போல்...
பன்மொழிப் புலமை வேண்டும் - 
பன்னாட்டுக் கலைகள் யாவும் -
பழகிடல் வேண்டும் - அவை
நம் மொழியின் , நம் பண்பாட்டின் புகழினை 
எந்நாட்டிலும் பேசிடுவதற்கே...!

நம் - அண்டை 
கன்னடத்தில் ஓர் அரும் நிகழ்வு...

கோடிக்கணக்கான மதிப்பில் -
வேளாண் துறை திட்டம் - அதன் 
கருத்துரு ஆங்கிலத்தில் எழுதியவர்களுக்கு -
1000 ரூபாய் தண்டம் விதித்தது -
உத்தர கன்னட மாவட்ட நிர்வாகம் ;
கன்னட மொழி புறக்கணிக்கப்பட்டதால்...!

இங்கும் ஒரு நிகழ்வு அதே நேரத்தில்...

ஓசூருக்கு அருகில்,
ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவன் - தம்
தாய் மொழித் தமிழில் பேசியதற்கு -
தண்டம் விதித்தது கல்லூரி நிர்வாகம் ;
இது போல் - இங்கு
நாள்தோறும் நிகழ்வுகள் ஆயிரம்...!

மனவேதனையுடன்...
கடுந்தவம் தானிருந்து 
கடவுளிடம் வரம் கேட்டேன் !
தனித் தமிழுக்கு ‘பாதுகாப்பு’ 
தா என்று...! 

என்ன...
தனித் தமிழுக்கு 'பாதுகாப்பா...?’
இவ்வரம் தர எம்மால் இயலாது -
வேறு வரம் கேள் என்றே - புன்னகைத்து
சென்று விட்டான் - எம்
செந்தமிழ்க் கடவுள்...!

ஏதும் விளங்காமல் வீடுவந்தேன் ;
கேட்ட வரமே பிழை என்று -
பிறகே உணர்ந்தேன்...!

‘பாது’ என்பதே -
‘காப்பு’ எனும் பொருள் தரும் -
வடமொழிச் சொல்லே !

தமிழ் மொழியின் ஊடே இருந்து -
குழி பறிக்கும் - இம்
மொழிக் கலப்பினை - நலமில்லா
நாறிய மேலை நாகரிகக் கலப்பினை -
அடியோடு களையெடுக்க ;  -மீண்டும் 
தவம் இருக்கிறேன் -
பிழையில்லா வரம் கேட்க...!

:~  நா. இதயா ஏனாதி ...

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [28]
Name : meenachi suntharam Date :8/9/2015 7:13:13 PM
மிகவும் அருமை... மிகவும் துள்ளியமாக தமிழின் பெருமை பேசும் கவிதை வரிகள்..
Name : muthamizhventhan Date :4/11/2014 2:02:20 AM
அருமை. தமிழின் பெருமை பேசி, தமிழனின் இன்றைய நிலையைச் சாடியுள்ள கவிதை. பாராட்டு நக்கீரனுக்கும் கவிஞருக்கும்.
Name : nkulandhaisamy Date :2/22/2013 4:47:02 PM
வந்தேறிகலேல்லாம் தமது எச்சங்களை நம்மில் கலந்து சென்று விட்டார்கள்.அதனை களைவது என்பது சிரமமான பணிதான் எனினும் செய்தே ஆகவேண்டும்!
Name : karthi Date :8/26/2012 9:25:55 PM
மிகவும் அருமையான கவிதை.. வாழ்க தமிழ் .. வளர்க அதன் புகழ் ..
Name : Dhasaratharaman Date :8/10/2012 4:15:27 PM
வாழ்க தமிழ்........
Name : abdullah aroosi Date :8/7/2012 10:15:24 AM
வாழ்க தமிழ்
Name : subramani Date :7/26/2012 5:10:49 PM
''மொழியில் மட்டுமா கலப்பு ,உணவில் கலப்பு நோயின் பிறப்பு ,பண்பாட்டில் கலப்பு - சமூக சீரழிவின் தொகுப்பு இவையே இன்றைய தீரா அருவருப்பு,ஆயினும் - இந்த நாறிய மேலை நாட்டு நாகரிகம் என்ன தரும்'' என்ற கவிதை வரிகள் உண்மையான ,நேர்மையான ,ஒவ்வொரு தமிழனின் உள்ளத்தில் உள்ள வரிகள். நா.இதயா ஏனாதி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
Name : franciskirubaaharan Date :6/25/2012 3:08:53 PM
அழகு தமிழ் கவி தந்தாய் அதில் தேனமுது சுவை கண்டேன் ஆங்கிலம் புகுந்ததால் தமிழன் எனக்கு புரிந்தது உன் மனக்கலக்கம் (பிரான்சிஸ் கிருபாகரன் இலங்கை )
Name : mahboobali Date :4/10/2012 1:57:54 PM
nandru
Name : sivaraj Date :3/15/2012 10:32:49 AM
படிப்பு என்பது பணம் ஈட்டுவதற்கு என்று ஆனபின் த்ன் அடையாளத்தையும் அடகு வைக்கும் கூட்டம் அதிகமாகி விட்டது இவர்கள் நவீன பிச்சை காரர்கள்
Name : kavitha Date :3/7/2012 1:31:03 PM
தமிழ் வாழ்க! உண்மை தமிழர்கள் வாழ்க...........!
Name : sathikbatcha56 Date :3/6/2012 8:21:05 PM
வாழ்த்துக்கள்.என்மொழி அழியாது உம்மைப்போல் இவஊலகம் இருக்கும்வரை பல மொழிப்பற்றலன் பிறக்க வேண்டுகிறேன் .
Name : c. Arivukkodi Date :2/10/2012 9:44:08 PM
நன்று.... சிந்திக்கவைக்கும் கவிதை.... தொடரட்டும் உங்கள் சேவை.... வீசட்டும் தமிழ் மணம்.... தொடர்ந்து....
Name : ilayaraja Date :1/9/2012 9:20:49 PM
என் தமிழ் வாழ்க.
Name : ilakkian Date :11/1/2011 3:36:46 AM
முன்னேற்றம் தேவை .. தமிழனுக்குள் ஒற்றுமைத் தேவை .. போதித்த கவிதை .. வாசிக்கையில் இனித்தது அருமை ... தமிழன் என்ற பெருமையை .தமிழை மறந்து தமிழன் என்பதி துறந்து செயல்படுவோர்க்கு உமிழும்எழுத்துக்கள் .நெகிழும் கவிதை வளர்ச்சிக்கு ஆகுமோர் விதை /
Name : santhosh Date :10/19/2011 12:13:45 PM
தமிழனுக்கு தமிழனின் பாராட்டுகள்
Name : Mani Date :9/22/2011 3:02:30 AM
கவிதை மிக மிக அருமை. தமிழ் உணர்வுமிக்க ஒரு கவிதையை தந்த நக்கீரனுக்கு பாரட்டுக்கள். இது போன்ற கவிதைகள் இன்னும் பல இடம்பெற வாழ்த்துகள்
Name : jenifer Date :8/24/2011 7:40:07 PM
Nice. go ahead.
Name : jenifer Date :8/24/2011 7:40:04 PM
Nice. go ahead.
Name : k.karuna azhagarsamy Date :8/6/2011 2:58:52 PM
super.continue your job.
Name : jeeva Date :7/29/2011 4:17:17 PM
super
Name : Selva Periannan Date :7/25/2011 6:51:52 AM
தமிழனை ஒரு தமிழன் ஆட்சி செய்ய வழியில்லை. நாம் இன்னும் அடிமைகளாய் இருக்கிறோம்,ஏன்? ஆரியன் அடிமைபடுத்தினான். அந்நியன் அடிமைபடுத்தினான். இப்பொழுது இந்தியன்னே அடிமைபடுத்தப்பட்டுள்ளோம். இந்த அடிமையின் துர் நாற்றம் நமக்கு பிடித்துவிட்டது. எங்கே தமிழ், தமிழன்? சினமாவில், பிரமாநிலத்தவர்களே அதிகமாக ஆக்கிரமித்துள்ளார்கள்? வியாபாரத்தில், வட நாட்டினரே மூளை முடுக்கெல்லாம் முளைத்துவிட்டார்கள்? அரசியல் ஆட்சி பீடத்தில் அன்னியச்சி ஆச்சி பீடத்தில் அமர்வு? இப்படி தமிழன் இன்னும் தலைகுனிந்து இருக்கிறான். இதனால், மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு பாதிக்கப்பட்டு தமிழன் அச்த்தமனமாகிக் கொண்டிருக்கிறான்.
Name : A.R.Manohar Date :4/1/2011 3:41:42 PM
தமிழ் கவிதைள் தரமானதாக இருக்கவேண்டும்.அப்போதுதான் அடுத்த மொழியை குறை சொல்லமுடியும் ..தனித் தமிழில் ezhuதுங்கள்
Name : sankili Date :2/22/2011 5:51:54 PM
தமிழ் உணர்வு வாழ்க
Name : anburaja Date :2/10/2011 3:07:53 PM
நல்ல தமிழ் நானும் கேட்டு நாளும்தான் ஆகிப்போச்சு சொல்லடி பைந்தமிழய் சோர்வில்லாமல்(சோறில்லாமல்) நானும் கேட்க
Name : selva Date :2/4/2011 6:25:16 PM
எச்செல்லேன்ட் .........
Name : neethi Date :2/4/2011 3:45:16 PM
கவிதை நீண்ட நெடியதாக இருக்கிறது. ஆனாலும் அர்த்தமுள்ள, தமிழ் உணர்வுமிக்க கவிதை. நன்றி நக்கீரன்.
Name : பாஸ்கர் Date :2/1/2011 6:43:29 PM
தமிழ் மொழியின் ஊடே இருந்து குழி பறிக்கும் பிறமொழிக் கலப்பு நிச்சயம் அகற்றப்பட வேண்டும். அருமையான கவிதை.