நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :15, நவம்பர் 2010(17:12 IST)
மாற்றம் செய்த நாள் :15, நவம்பர் 2010(17:12 IST)
                             றுப்பு சூரியன் என கல்லூரி கால நண்பர்களால் இன்றும் பாசத்துடன் அழைக்கப்படும் எழுத்தாளர் பவா.செல்லத்துரை... அரசு ஊழியராகயிருந்தாலும் விவசாயத்தின் மீது அவருக்கு அவ்வளவு காதல்!

மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர்  கே.வி.ஷைலஜா உடல் போல் நேசித்த ஆசிரியர் பணியை விட்டு விட்டு ஒரு முழு நேர பதிப்பாளராகியுள்ளார்... எழுத்தாளர் ஜெயஸ்ரீக்கு ஆசிரியர் என்கிற அதட்டல் அதிகார முகம் வெளியே தெரிந்தாலும், குழந்தை போன்ற வெகுளி!

எழுத்தாளர் உத்திரகுமார் அளந்து பேசும் அரசியல் விமர்சகர்! முதலாளி ஆக நினைத்தாலும் தொழிலாளி என்ற அடக்க பிம்பம் போதும் என வாழும் ஜீவன்... புத்தகம் சுமக்கும் வயதில் வாழ்க்கைக்கு வழிகாட்டும் புத்தகத்தை மொழி பெயர்த்து இளம் எழுத்தாளராக உருவாகியுள்ள சுகானா இன்றைய இளையோர்களைப் போலவே இசைப்பிரியை! ஓவியராகத் தன்னை உருவாக்கிக் கொள்ளும் வாண்டு வம்சி.. சிரிப்பு இளவரன்!.


இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்ட இவர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டும் விமர்சனம் செய்துக் கொண்டும் இருந்தாலும் இவர்களுக்குள் பிரிவு என்பது கிடையாது. காரணம் உறவுகள் என்ற பூங்கொத்து இவர்களைப் பிண்ணிப் பிணைத்து வைத்துள்ளது.
 
தமுஎச விழாக்கள் நடத்தும் போது நாம் இங்கே ஒரேகுடும்பமாக குவிந்துள்ளோம் என சொல்லி மகிழ்வோடு பேச ஆரம்பிப்பார்கள். மேடையில் பேசுவதை நிஜமாக்கியுள்ளார்கள் இவர்கள்.
 
இவர்களை இணைத்தது இலக்கியம் என சொன்னால் அது சாலப் பொருந்தும்.

தமுஎச செயற்குழு உறுப்பினராகவுள்ள பவா செல்லத்துரையின் மனைவி கே.வி.ஷைலஜா, ஷைலஜாவின் சகோதரி ஜெயஸ்ரீ, பவா செல்லத்துரையின் நண்பரான உத்திரகுமாரின் மனைவி! ஜெயஸ்ரீ உத்தராவின் அன்பு மகள் சுகானா, பவா ஷைலஜாவின் குறும்புமகன் வம்சி.
 
இலக்கணமாக வாழும் இவர்களைக் காண அவர்களின் இல்லம் செல்பவர்கள் யாராகயிருந்தாலும் இங்கேயே நிரந்தரமாக தங்கவிடலாம் என்கிற அளவில் பாசத்தை பொழிந்து விடுகிறார்கள் என்பது அந்த இல்லத்துக்கு சென்று வந்தவர்களின் வாக்குமூலம்.
 
அந்தளவுக்கு வற்றாத கடல் போல் அன்பு.. பாசத்தைக் கொண்டிருக்கும் இந்த இலக்கிய குடும்பத்தை நமது நக்கீரன் நந்தவனம் பகுதிக்காக சந்தித்தபோது, இவர்களிள் உலகம் என்ன என்பது நமக்கு புரிந்தது.அவர்களின் மன ஆழத்தை தெரிந்துகொள்ள முடிந்தது. இவர்களின் ஆசைகள் என்ன என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

கேள்வி: உங்களது இளமைக் காலம், இலக்கிய ஆர்வம் பற்றி சொல்லுங்க?

பவா: எங்களுக்கு பூர்வீகம் திருவண்ணாமலை பக்கத்திலிருக்கற வேட்டவலம்ன்னு சொன்னாலும் நான் பொறந்தது வளர்ந்தது எல்லாம் திருவண்ணாமலையில தான். எங்கப்பா மலேசியாவிலிருந்து வந்தவர். காங்கிரஸ் அனுதாபி.

ஆசிரியரா வேலைபார்க்கும்போது ஊர் ஊரா டிரான்ஸ்பர் போடுவாங்க. அப்ப என்னையும் அவர் கூடவே அழைச்சிக்கிட்டு போவாரு. சாரோன், டேனிஷ், நாயுடுமங்களம்ன்னு மாறி மாறிபடிச்சேன். இந்த சுற்றல் தான் என்னை ஊர் ஊரா சுற்றுவதற்கான ஈர்ப்பை ஏற்படுத்தியது.

முதன் முதலா ஜெயகாந்தனோட ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும்ங்கற நாவலைத்தான் படிச்சேன். அந்தக் தாக்கம் என்னை ஒரு நாவல் எழுத வச்சது. பத்தாவது எக்ஸாம் லீவுல, ”உறவுகள் பேசுகிறது” என்கிற தலைப்புல நான் ஒரு நாவல் எழுதி முடிச்சிட்டேன்.

இத எப்படிப் பிரிண்டா கொண்டு வர்றதுன்னு யோசிச்சிக்கிட்டுருக்கும் போது திருவண்ணாமலையில தீபஜோதின்னு ஒரு இதழ் வந்துக்கிட்டுக்கிருந்தது. அங்க கொண்டும் போய் தந்தேன். அதோட ஆசிரியர் படிச்சிட்டு சொல்றேன்னு அனுப்பிட்டார்.
 
1 வாரம் கழிச்சி போனேன். அந்த கதையப் பிரிண்ட்க்கு அனுப்பியிருக்கேன்னு சொன்னாரு. எந்த பிரிண்டிங்கன்னு கேட்டன். கருவாட்டுக்கடை சந்துலயிருக்கற பிரிண்டிங் பிரஸ்ன்னு சொன்னாங்க. அதுக்கப்பறம் அந்த பிரிண்டிங் பிரஸ்சே கதின்னு கிடந்தேன்.

அந்த மாத தீபஜோதி வெளியில வரும்போது டேனிஷ் மிஷன் ஸ்கூல்ல 11 வதுசேர்ந்தேன். அப்ப திருவண்ணாமலை முழுக்க பெரிய பெரிய எழுத்துக்கள்ள இந்தவாரம் இளம் எழுத்தாளர் பவாசெல்லத்துரை எழுதிய உறவுகள் பேசுகிறது படித்தீர்களாங்கற விளம்பர போஸ்டர் ஒட்டியிருந்தாங்க.

அந்த வயசுல விளம்பரத்த பார்த்ததும் மனசுல குஷி... குஷிங்கறதவிட மிதப்பு. இந்த நாவல், விளம்பரம் எல்லாம் என்னை, உடன் படிக்கற பசங்ககிட்டயிருந்து ஒருபடி உயர்த்திடுச்சி. அப்ப எனக்கு ஜெயகாந்தன், வண்ணதாசன், வண்ணநிலவன், யார்ன்னே தெரியாது.
 
அப்படிப்பட்ட நான் ஒரு நாவல் எழுதிபிரசுரமாயிருக்குதுன்னா யார் தான் நம்புவா? நம்புனவங்க ஆச்சர்யப்பட்டாங்க.என் பள்ளிக் காலம் நான் திமிரா சுத்திக்கிட்டுயிருந்த காலம்! அந்தக் காலம்  என் சந்தோஷத்த பறிகொடுத்த காலங்கள்ன்னும் சொல்லலாம்.

பள்ளிக் காலத்தல என்னோட படிச்ச என் நண்பன் சரவணனோட சேர்ந்து கையெழுத்துப்பிரதி நடத்தனேன். என்னோட முதல் கையெழுத்துப்பிரதி வசந்தம்! நான் அத எழுதி மாவட்ட அரசு நூலகத்தில் வச்சிருந்தேன். அப்ப லைப்ரரி டேனிஷ் பள்ளி எதிர்லதான் இருந்தது. ஸ்கூல் இன்டர்வல், லஞ்ச் டைம் விடும்போதெல்லாம் ஓடிவந்து என் புத்தகத்த யாராவது படிக்கறாங்களான்னு பார்ப்பேன். சில நேரம் வகுப்ப கட்டடிச்சி வந்து வாசல்ல நின்று பார்ப்பேன்.
 
நான் பார்த்த ஒவ்வொரு நாளும் யாராவது ஒருத்தர் அந்தப் புக்க கைல வச்சிப் படிச்சிக்கிட்டேயிருப்பாங்க. யாராவது கீழ வச்சா யார் என்ன கருத்து எழுதியிருக்காங்கன்னு பாக்கலாம்ன்னு தினமும் போவேன். ஆனா யாராவது படிச்சிக்கிட்டேயிருப்பாங்க.

ஒருசில முறை பாக்கற வாய்ப்பு கிடைச்சது. முத்து முத்தான கையெழுத்துல தொடர்ந்து கருத்து எழுதியிருந்தது. அத யார் எழுதறாங்கன்னு பாக்கணும்கிற ஆசை மனசுல அதிகமாச்சி. ஒரு நாள் எழுதும் போதே பாத்துட்டேன். கறுப்புச் சட்டை அணிந்த அப்போ திருவண்ணாமலையில பிரபலமான தி.க.தோழர் சகோ.மணி தான் எழுதிக்கிட்டுயிருந்தார்.
 
அவர் முன்னாடிப் போய்நின்னேன். எழுதி முடிச்சிட்டு என்னைப் பாத்தாரு. நான் எழுதினதுன்னு சொன்னேன். படிக்கற புள்ளையாச்சேன்னு ஆச்சர்யமா கேட்டுட்டு பாராட்டனார்.அதுதான் முதல் பாராட்டு.

கேள்வி: உங்க சுதந்திரத்த பறிச்ச இலக்கியத்தின் மீது தீராக் காதல் வந்தது எப்படி ?

பவா: கதை, கவிதைன்னு  நான் எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் வேளானந்தன் கிராம இரயில்வே ஸ்டேஷன்க்கு உதவி ஸ்டே
ஷன் மாஸ்டரா உதயசங்கர் வந்தார். அவர் அப்பவே தமுஎச செயற்குழுவில் இருந்தார்.
 
அவரைப் பார்க்க காட்டு வழியா சைக்கிள்ள போவேன். அவர் தான் எனக்கு புதுமைப்பித்தன், வண்ணதாசன், ஜெயகாந்தனோட நவீன இலக்கியத்த எல்லாம் அறிமுகப்படுத்தனார். அவனோட நட்பு தான் இலக்கியத்தில் என்னை இன்னொரு கட்டத்துக்கு கொண்டுபோய் அதன் மீதான ஈர்ப்பை அதிகமாக்கியது.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் நான் திருவண்ணாமலையில் படிச்சாகெட்டுப் போயிடுவேன் என்று நினைத்த எங்கப்பா என்னை திண்டிவனம் அரசு கல்லூரியில் பி.காம் சேர்த்தார். அதுதான் அவர் செய்த பெரிய தப்பு.

நான் படிக்கறப்ப கல்யாணி, தீரன், கோச்சடையெல்லாம் அங்க தான் பேராசிரியர்களா பணிபுரிஞ்சாங்க. நான் முதலாமாண்டு படிக்கும் போது ஒரு நாள் என்னோட ஹாஸ்டல் ரூம்க்கு கல்யாணி, தீரன், கோச்சடை வந்தாங்க.
 
முதலாமாண்டு மாணவனான என்னைத்தேடி பேராசிரியர்கள் வந்தது எனக்கு ஆச்சர்யம்.
 
வந்தவங்க என்னைப் போய் மீன்வாங்கிட்டு வரச்சொன்னாங்க. நானும் வாங்கி வந்து தந்தேன். அத என்னோட ரூம்ல வச்சி அவுங்களே சுத்தம் செய்து சமைச்சிக்கிட்டே என்னைப்பத்தி விசாரிச்சாங்க. மக்களுக்காக போராடனும்னு எனக்கு கத்துத் தந்தாங்க.

அந்த நேரம் ஈழப் பிரச்சனை தமிழகத்தில் உச்சத்தில் இருந்தது. மாணவர்களைத் திரட்டி போராட்டம் பண்ணுவோம். மாணவர்களுக்கு தலைமைன்னா அது நான், பேரா.தீரனோட அண்ணன் மகன் ஆனந்தன் தானிருப்போம். திண்டிவனம் மெயின் ரோட்ல உக்காந்துட்டோம்னா தென் தமிழகத்துக்கு போக்குவரத்து நின்னுபோய் தமிழகமே ஸ்தம்பிச்சிடும்.
 
சாலை மறியல் நடக்கும் போது திருவண்ணாமலை பஸ்கள் நிற்கும். அதில் இருக்கும் ஊர்க்காரங்க என்னைப் பாத்துட்டு... எங்கப்பாக்கிட்ட சொல்லிடுவாங்க. நான் சனி,  ஞாயிறு ஊருக்கு போகும்போதெல்லாம் திட்டுவாரு.

மூன்றாமாண்டு படிக்கும்போது எங்கப்பா அவரோட நண்பர் செங்கம் எம்.எல்.ஏ. ஆறுமுகம் பாத்து,  அவனைத் திருவண்ணாமலை காலேஜ்க்கு மாத்தித் தாங்கன்னு கேட்டாரு. சீனுவாசன் அப்ப பல்கலைக்கழக செனட் மெம்பர்.
 
அந்தப் பவர வச்சி பல்கலைக் கழக துணை வேந்தர்க்கிட்ட லெட்டர் வாங்கித் தந்தாரு. அந்த லெட்டரோட திண்டிவனம் காலேஜ் முதல்வர சந்திச்சி என் பையன் டீசிய தாங்கன்னு கேட்கறாரு. ஆனால், நல்லப் பையனை அனுப்ப மாட்டன்கிறாரு பிரின்சிபால்.
 
2வருஷத்தல 8 அரியர்... இவன போய் நல்லவன்னு சொல்றீங்கன்னு சண்டைப் போட்டு டீசி வாங்கி வந்து திருவண்ணாமலையில சேர்த்தாரு. நான் காலேஜ் போய் வந்த பத்தாவது நாளே இவன் திருந்த மாட்டான்னு முடிவு பண்ணிட்டாரு. அந்தளவுக்கு சேட்டைங்க பண்ணேன்.

திருவண்ணாமலை காலேஜ்ல சேர்ந்தப்ப தான் திருவண்ணாமலை தமுஎச அமைப்புலயிருந்த கவிஞர் வெண்மணி (ஜெயபால்பாண்டியன்) அறிமுகம் எனக்கு கிடைச்சது. அவரோடச் சேர்ந்து சுத்த ஆரம்பிச்சன். தமுஎசவுல சேர சொல்லி அடிக்கடி நச்சரிப்பாரு.நான் அமைப்புகளுக்குள்ள வந்து மாட்டிக்க விரும்பலன்னு சொல்லுவேன். காலேஜ்ல ஆர்ப்பாட்டம், போராட்டம், பண்ணிக்கிட்டுயிருந்தேன்.
 
காலேஜ்ல நண்பன் கருணாவ தேர்தல்ல நிக்க வைத்தோம். என்னைப் பாத்தா கவிதை, நாவல் எழுதறவன்னு நம்ப மாட்டாங்க... அப்படியிருந்தேன்.
 
ஆனா அந்த வயதுக்கே உரிய காதல் கவிதைகளை எழுதிக்கிட்டுயிருந்தேன்.  ஒருமுறை நண்பன் உதயசங்கர் வண்ணநிலவன் எழுதிய எஸ்தர், பாம்பின் பீடாரம் நூலைத் தந்து படிக்கச் சொன்னார். அதப் படிக்கப்படிக்க நாம எழுதறதெல்லாம் எழுத்தேயில்லன்னு முடிவெடுக்க வச்சது. அந்தப் புத்தகங்கள் என்னை வேறவேற புத்தகங்களத் தேடித்தேடி படிக்க வச்சது.  ஒருபுத்தகம் இன்னொரு புத்தகத்தை கொண்டு வந்து சேர்த்தது.

என்னோட இளமைக் காலத்தில் கவிஞர்கள் மீரா, மேத்தா, வைரமுத்து ஃபேமஸாயிருந்தாங்க. அதில் எனக்கு மீராவ ரொம்ப பிடிக்கும். அவரோட காதல்கவிதைகள படிச்சிட்டு எழுத ஆரம்பிச்சேன். நான் எழுதினதை, மேடைகள்ல வாசிச்ச கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமா போடலாம்ன்னு முடிவு பண்ணி என்னோட 100கவிதைகளை எடுத்து வச்சி வாசிச்சப்ப ஒன்று கூட உருப்படியாயில்ல.
 
அடிச்சி அடிச்சி பார்த்தப்ப எனக்குப் புரிஞ்சது... மேடைக்கு எதிர்ல இருக்கற பார்வையாளர்களுக்காக எழுதினோமே தவிர எதுவும் நிலைக்குற மாதிரி எழுதலைன்னு புரியவச்சது. அப்படியும் தொகுத்த கவிதைகளை எடுத்துக்கிட்டு சென்னையிலிருந்த டாக்டர்.அரசுமங்கை வீட்ல போய் தங்கி... அரசுக்கிட்ட புத்தகம் போடலாம்னு சொன்னேன்.
 
அவர் என்னை ஓவியர் டிராட்ஸ்கி மருது வீட்ல கொண்டுப்போய் நிறுத்தினார். மருது என் கவிதைத் தொகுப்ப படிச்சிட்டு 10 படம்போட்டு தந்தாரு. அந்தப் படங்கள் என்னோட கவிதைகளை விட சிறப்பாயிருந்தது. தொகுப்புக்கு கந்தர்வன் முன்னுரை எழுதித் தந்தாரு.

எனக்கு வண்ணநிலவன், கி.ராஜநாராயணன், தி.க.சீனுனு பிரபலமானவங்க கடிதம் எழுதிப் பாராட்டினாங்க. அந்த ஊக்கம் கல்கியில் முகம்ங்கற தலைப்புல கதை எழுத வைத்தது. அந்தக் கதை அந்த மாதத்திற்கான இலக்கிய சிந்தனை விருது வாங்கித் தந்தது. அதே கதை மனோன்மணியம் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் இடம் பிடிச்சது. அப்பறம் ’’வேறுவேறு மனிதர்கள்’’ கதை எழுதினேன். அது தியாகராஜர் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்துல இடம் பிடிச்சது.

கேள்வி: உங்கள் காதல் வாழ்க்கையப் பற்றி சொல்லுங்க?

பவா: 1992ல் தமுஎசவின் மாவட்ட கூட்டம் திருவண்ணாமலையில மூன்று நாளட்கள் நடந்தது. அதுக்காக தெருத் தெருவா நோட்டீஸ் தந்துக்கிட்டுருந்தோம். அப்போ இலக்கிய ஈடுபாடு காட்டின எங்கக் கல்லூரி தமிழ்த்துறை மாணவி ஜெயஸ்ரீக்கும் அழைப்பு தந்தோம். அப்ப தான்
ஷைலஜாவைப் பார்த்தேன். அந்த மாநாட்டுக்குப் பிறகு நடந்த பொது விழாவில் ஒரு ஜோல்னா பையும், நியு இயர் கிரீட்டிங்ஸூம் தந்தாங்க. அதான் எங்களுக்குள்ள ஒரு ஈர்ப்பை உருவாக்கிடுச்சு. அந்த ஈர்ப்பு காதலாகி  திருமணம் வரை வந்தது.

கேள்வி: தமுஎசவின் மாநாட்டில் தான் உங்கள் மீது காதல் வந்ததா பவா சொல்கிறார்? உங்களுக்கு இலக்கிய காதல் வந்தது எப்போது?

ஷைலஜா: எங்கம்மாவிடமிருந்தும், அக்கா ஜெயஸ்ரீயிடமிருந்தும் தான் இலக்கியம் மீதான ஆர்வம் வந்தது. எங்க பூர்வீகம் கேரளா.  தமிழ்நாட்டுக்கு வந்தோம்.

எங்களோட மாமா பாதுகாப்புல தான் வளர்ந்தோம். அக்கா படிச்சிட்டுத்தர்ற ஒவ்வொரு புத்தகத்தையும் நான் படிக்க ஆரம்பிச்சேன். புத்தகத்தில் இதைத் தான் படிக்கணும், அதைத் தான் படிக்கணும்கிற அளவுகோள் எல்லாம் எங்களுக்கு கிடையாது.

எல்லா புத்தகத்தையும் படிப்போம். சோவியத் யூனியன் புத்தகம் எங்க வீட்டுக்கு வரும். யார் அனுப்புவாங்கன்னு தெரியாது... ஆனால் வரும். அதையும் படிச்சோம். எங்க மாமா பொண்ணுக்கு என்னோட வயது. அவ மாமா பொண்ணாயில்லாம என்னோட தோழியாயிருந்தா. அவளுடைய திடீர் மரணத்தின் போதுதான் எழுதனும்னு தோணுச்சி. எழுதினேன்.

எங்க குடும்ப வறுமை தொடர்ந்து எழுதவைத்தது. முதலில் அது கவிதையாக வெளிப்பட்டது.

என்னோட கவிதைகள் வறுமை, இயற்கையை சார்ந்திருந்தது. அதன் பிறகு கதை எழுத ஆரம்பிச்சேன். ஒருமுறை எங்க சித்தி வீட்டுக்கு போயிருந்தோம். அவ்வளவு பெரிய வீடு... அவ்வளவு நேர்த்தி,  அவ்வளவு அழகு! அந்த மாதிரியான வீட்டை அதுக்கப்பறம் இப்ப வரை நான் பாக்கலை. அந்த வீட்ல தான் சில நேரங்களில் சிலமனிதர்கள் கதையைப் படிச்சேன்.

அப்பவும் என் ரசனை மாறல. நான் படிச்சது அதிகமா ராணிமுத்து, ராஜேஷ்குமார் நாவல்கள் தான். திருவண்ணாமலை அரசு கல்லூரியில் சேரும் போது கோ எஜிகேஷன்ல படிச்சேன். பொண்ணுங்க எங்கிட்ட கவிதை எழுதி தான்னு கேட்பாங்க.... எழுதி தருவேன். கல்லூரி ஆண்டு மலரில் கதை,கவிதை நிறைய எழுதியிருக்கேன். அது மாணவிகள் மத்தியில எனக்கு மரியாதையை ஏற்படுத்தி த் தந்தது.

பி.ஜீ கோர்ஸ்க்காக அண்ணாமலை பல்கலைக்கழக்கத்தில் சேர்ந்தேன். அங்கிருக்கும் லைப்ரரி தான் எனக்கு விசாலமான வெளியுலகக் கதவுகளைத் திறந்துவிட்டது. அங்க தான் நிறைய கத்துக்கிட்டேன். ஊருக்கு வந்து ஆசிரியரா பணியாற்றியபோது பவா அறிமுகம் கிடைச்சது.
 
அம்பை வாசிச் சிருக்கீங்களான்னு கேட்பாரு. எனக்கு அதெல்லாம் புரியாது. திருவண்ணாமலையில் மாநாடு நடக்கும்போது போயிருந்தேன். அங்க எழுத்தாளர்கள் பாலினப் பேதம் பார்க்காம பழகறதை தெரிஞ்சிக்கிட்டேன். அங்க பவா நூல்களைப் படிச்சேன். அவர் மீதான ஒரு ஈர்ப்பு மாநாட்டின் போது தான் உருவானது. அவர் வீட்டுக்குப் போவேன்.
 
நிறைய புத்தகங்களை, எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தனாரு. இந்தப் புத்தகங்கள் தான் எங்களைக் காதலிக்க வைத்தது... திருமணம் செய்துக்க வைத்தது.

தொடர்ந்து பேசுவார்கள்.……..

நேர்காணல்: ராஜ்ப்ரியன்

படங்கள்: எம்.ஆர். விவேகானந்தன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [4]
Name : Deandre Date :7/10/2011 1:20:25 PM
Wow, this is in every respect what I nedeed to know.
Name : Mu Kandan Date :5/30/2010 7:54:48 AM
"வைகறையை" மறந்தது ஏனோ ? வாழ்த்துக்களுடன் -மு கந்தன்
Name : thirumoorthi Date :3/28/2010 8:07:31 AM
இருவரும் சிறந்த எழுதலர்க்கான விருதை பெற வாழ்த்துகிறேன் திருமூர்த்தி ஸ்ரீவில்லிபுத்தூர்
Name : pavi Date :3/26/2010 3:46:20 PM
இது ஒரு நல்ல நட்ர்காணல்