நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :4, நவம்பர் 2011(10:12 IST)
மாற்றம் செய்த நாள் :4, நவம்பர் 2011(10:12 IST)

செங்கல் சூளைக்கு வெட்டப்படும் பனை மரங்கள்: அழிந்து வரும் தமிழரின் அடையாளத்தை காப்பாற்ற அரசுக்கு கோரிக்கை  உலகின் மூத்த மொழி தமிழ்.  தமிழின் எழுத்துக்கள் முதலில் பதியப்பட்டது பனைஓலையில்தான்.  இத்தையை முக்கியத்துவம் வாய்ந்த பனைமரத்தின் உயிருக்கு இன்று ஆபத்து நேர்ந்திருக்கிறது.

 

   

பனைமரம் தமிழர்களின் அடையாளம், தமிழர் வாழும் பகுதிகளில் மட்டுமே பனைமரங்களும் வாழுகிறது அல்லது தமிழர்களின் மூதாதையர்கள் வாழும் பகுதியில் மட்டுமே பனைமரங்களும் இருக்கின்றது.


தமிழகத்தில், மலேசியாவில், ஈழத்தில், மோரீசியஸ் தீவில், தென்னாப்பிரிக்காவில் என்று தமிழர்கள் வாழும் இடங்களில் மட்டுமே பனைமரமும் வளருகிறது.


இலங்கையில் பனை வளர்ச்சித்துறை என்று ஒரு துறையும் அதற்கு தனி ஒரு அமைச்சரையே நியமனம் செய்து பனை மரத்தின் பயனை மக்களுக்கு கொடுக்கிறது இலங்கை அரசு.


மலேசியாவில், பனை மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணை இன்று உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் உணவு எண்ணையாக பயன்படுகிறது. பாம்ஆயில் என்று சொல்லப்படும் இந்த எண்ணை தான் நம் ஊரில் கிடைக்கும் அனைத்து என்னையிலும் கலந்துள்ளது.


சங்க காலம் முதல், தமிழரின் வாழ்வில் பனைமரம் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. பனங்கருக்கு என்று சொல்லப்படும், சிறு மரங்களை உடைக்கும் போது அதில் கிடைக்கும் பச்சை குருத்து உண்பதற்கு சுவையாகவும் சத்தானதாகவும் இருக்கும்.


கொஞ்சம் வளர்ந்து பனை மரமானதும் அதில் கிடைக்கும் பனை ஓலை, வீடுகள் மேயவும், படுப்பதற்கும், உட்காருவதற்கும், பண்டங்கள் கட்டுவதற்கும் தேவையான பாய்கள் செய்ய பயன்பட்டது. கடுமையான வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக இந்த பனை ஒலைகள் கொடுக்கப்பட்டு வந்தது. இப்போதும் கூட பனை ஓலையில் செய்யப்பட்ட விசிறிகளில் வீசும் போது குளுமையான காற்று கிடைக்கும்.


பனைமரம் பாலை விட்டு காய்க்க தொடங்கினால், அந்த பாலையிளிருந்து பதநீர் எனும் தெலுவு கிடைக்கும், அதே தெலுவில் சுண்ணாம்பு அடிக்காமல் விட்டால் அது சுவையானதாகவும், அதே நேரம் கொஞ்சம் போதையுடன் கூடிய இயற்கையான கள் என்ற பானம் கிடைக்கும்.


கொஞ்சநாள் கள்ளு இறக்கிய பின்னர் வளரும் பாளையில், பனங்காய் காய்க்கும், இந்த காய்களில் தான் குறிப்பிட்ட பருவத்தில் நொங்கு கிடைக்கும்.


அதற்கு அடுத்த கட்டமாக, காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும் முற்றிய பணங்காயிலிருந்து சதை பகுதியை கத்தியால் சீவி எடுத்து வேகவைத்து உண்ணலாம். 


அதற்கு பின்னர், பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும், பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும், கொஞ்ச நாட்கள் போனால் கொட்டைக்குள் உருவாகும் சீப்பை கிடைக்கும், இந்த சீப்பை குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும்.


அதை இன்னும் கொஞ்சநாள் விட்டால் பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இப்படி மனித வாழ்வில் உணவுத் தேவைக்கு மட்டுமில்லாமல், வீடுகள் கட்ட வெட்டுக்கை, விட்டம், ஓடுகள் பாதிக்கும், பனை வாரைகள் கொடுத்தது பனைமரம்.


பனை மரத்திலிருந்து அறுத்து எடுக்கப்படும் பனம்பட்டையை வெய்யலில் கொஞ்சம் வாடிய பின்னர் உரித்து எடுக்கப்படும் நார் முன்பு கட்டுகள் கட்டவும், கால்நடை தீவனங்கள் கட்டி அடுக்கிவைப்பதர்க்கும், ஓலை வீடுகளை அமைக்கவும், பண்டங்கள் கட்டுப்போட்டவும் நார் பயன்பட்டது.


நம் வீட்டு பெண்கள் விறகு அடுப்பில் சமையல் செய்த காலங்களில், அடுப்பில் நெருப்பு பத்தவைக்க பெண்களுக்கு பனை மரத்தின் பன்னாடையும், வரண்டு போன ஓலைகளும் அவசியம் இருக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. காய்ந்து போன பனம்பட்டைகள், காய்ந்து போன நொங்கு காய்களும் அடுப்பு எரிக்க சிறந்த விறகாகப் பயண்பட்டது.

இப்படி மனித வாழ்கையின் ஒரு அங்கமாக இருந்த பனைமரம்... சமீபகாலத்தில் உருவாகிய இரும்பு, சனல், நைலான், எரிவாயு போன்ற நவீன சாதனங்கள் தோன்றியதால்... இக்கால மனிதர்களுக்கு பனைமரத்தின் அவசியமே இல்லாமல் போய்விட்டது.


எத்தனை வருடமானாலும் தண்ணீர் இல்லாமலேயே வளரும் தனமையுடைய பனைமரம், காடு, தோட்டம் என வித்தியாசம் இல்லாமல் வயல் ஓரங்களிலும், வேலி ஓரங்களிலும் விவசாயிகள் வைத்து வளர்த்தார்கள்.


சமீப காலமாக இதன் பயன்பாடு இல்லாமல் போனதாலும், வருடம் ஒருமுறை பனைமரத்தில் வளர்ந்துள்ள ஓலைகளை வெட்டி, பட்டையை அறுத்து சுத்தம் செய்து சிரை எடுத்து விடுவதற்கு மட்டும் ஒரு மரத்திற்கு ஐம்பது ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது.


அப்படி சிரை எடுக்காவிட்டால், மரத்தில் உள்ள பட்டைகள் எல்லாம் வரண்டு காய்ந்து இலை தலைகள் விழுந்து பனைமரத்திலேயே தொங்குவதால், பாம்புகள் கூட குடியிருக்க தொடங்கிவிடும் ஆபத்து உள்ளது. பெரும்பாலும் அணில், எலி போன்றவைகள் கூடு கட்டிவிட்டால் அதில் இருந்து கொண்டு நிலத்தில் விளையும் தானியக் கதிர்களை வெட்டிக் கொண்டுபோய் விடும் என்பதால் பனைமரத்தில் ஓலையை வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.


இப்படிப்பட்ட சூழலில் பனைமரங்களை வளர்க்கும், எந்த ஒரு விவசாயிக்கும் பனைமரத்தால் எந்தவித பயனும் கிடையாது, ஆனால் வருடத்திற்கு ஒரு மரத்திற்கு குறைந்தது ஐம்பது ரூபாயாவது செலவு செய்தால் தான், பனைமரத்தை சுத்தமாக வைத்திருக்க முடியும் என்ற நிலை உள்ளது.


இவ்வளவு செலவு செய்தாலும், ஐம்பது அறுபது வருடம் வளர்ந்த ஒரு பனைமரத்தை வியாபாரியிடம் விற்றால் இருநூறு ரூபாய் முதல் முன்னூறு ரூபாய் வறை மட்டுமே காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு பனை மரத்துக்கும் விவசாயி செய்துள்ள செலவை கணக்கிட்டால் இந்த காசு எதற்கும் உதவாது என்பதால், எல்லா இடங்களிலும் உள்ள பனைமரங்களை விவசாயிகள் வெட்டி செங்கல் சூளைக்கு அனுப்பி வருகிறார்கள்.

நகரங்களில், ஒரு பக்கம் மரம் வைக்கவும், அவற்றை வளர்க்கவும் அரசு பல கோடி ரூபாய்களை செலவு செய்கிறது. ஆனால், மறுபக்கம் கிராமங்களில் உள்ள விவசாயிகள், தாங்கள் நிலங்களில் உள்ள கெட்டுப்போன கரியமிலவாயு போன்ற காற்றை சுத்தமான  தூய பிரானவாயுவாக மாற்றிக்கொண்டிருக்கும் கற்பகவிருச்சமான பனை மரங்களை கட்டுபடியாகாத விலைக்கு வெட்டி விற்பனை செய்கிறார்கள்.


இந்த முரண்பாட்டின் காரணம் என்ன...? இயற்கை ஆர்வலரும், மரங்கள் பற்றிய ஆய்வாளரும், கீழ் பவாணி பாசன விவசாயிகள் சங்க தலைவருமான நல்லசாமி அவர்களிடம் கேட்டோம்.


முதலில் ஒரு மரம் என்று இருந்தால், அதில் எதாவது உபயோகம் இருக்கவேண்டும்..., பனை மரத்தால் இன்றைய காலகட்டத்தில் உழவர்களுக்கு எந்த நேரடியான பயனும் கிடையாது, தவிர அவர்களுக்கு செலவுகள் தான் வருகிறது. அதனால் பனைமரங்களை வெட்டி விற்கிறார்கள்.


அதை எப்படி தடுப்பது...? அந்த மரத்தில் எதாவது லாபம் கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும், அதற்கு ஒரே வழி... கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.


இதனால், பனைமரமும் வளரும், பனைமரம் வளர்க்கும் விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும், எந்த விதமான இரசாயன கலப்பும் இல்லாத, அருந்தும் மனிதனின் குடலையும், வயிற்றையும் வேகவைக்காத...  மிகவும் குறைவான போதையை கொடுக்கும், சத்தான கள்ளும் கிடைக்கும், கள் என்பது போதை பொருள் அல்ல... அது ஒரு வகை உணவுப்பொருள் தான்... அதை மது என்ற சொல்லுவதே தவறு...


இன்றைக்கு, இயற்கையான முறையில் உரம், யூரியா போடாத வயலில் விளைந்த நெல் என்றும் காய்கறி என்றும் சொன்னால் அதைத்தான் மக்கள் ஓடிப்போய் வரிசையில் நின்று வாங்குகிறார்கள். மக்களுக்கு இயற்கையின் மீது நம்பிக்கையும், செயற்கையின் மீது பயமும் வந்து விட்டது. இதற்க்கு காரணம் மனிதருக்கு வரும் புதிய புதிய நோய் தான்.


நோயுக்கு பயந்து இயற்கையின் பக்கம் போகும் மக்களுக்கு ஓன்று சொல்லுகிறேன், ஒரு துளி கூட பூச்சி மருந்து அடிக்காமல், உரம் போடாமல் சொல்லப்போனால் தண்ணீர் கூட விடாமல், சத்தான எருவும் போடாமல் இயற்கையில் தானாக விளையும் ஒரு காமதேனு பனை மரத்தில் உற்பத்தியாகும் பணம் பால் தான். அதை நம்முடைய மக்கள் குடிக விடாமல் பன்னாட்டு நிறுவனங்கள், நம்மூர் அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் தரகர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் கையூட்டு கொடுத்து நம் நாட்டிலேயே நம்முடைய மரத்தில் விளையும் பணம்பாலுக்கு தடை வாங்கி கொடுத்துள்ளார்கள்.


கள் குடிப்பதால் உடலுக்கு தீமை என்று யார் நிரூபித்தாலும் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக குடுக்க கள் இயக்கம் தயாராக உள்ளது. தமிழகத்தில் கள் இறக்கி விற்கவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல..., தமிழகத்தில் இறக்கப்படும் கள்ளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவாவது அரசு முன்வரவேண்டும்.பனை மரத்தின் அவசியத்தை வலியுறுத்தி வரும் ஜனவரியில் கன்னியாகுமரி முதல் சென்னை வறை ஒரு பிரசார இயக்கம் தொடங்கி நடை பயணம் செல்ல ஏற்பாடு செயப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், பனைத் தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பனை மரத்தின் அவசியம் பற்றி மக்களுக்கு சொல்ல இருக்கிறார்கள்.


இந்தியாவில் எட்டுக்கோடி பனைமரங்கள் இருப்பதாக கணக்கிடபட்டுள்ளது, அதில் ஐந்து கோடி பனைமரங்கள் தமிழகத்தில் தான் உள்ளன.... தமிழ நாட்டில், எதை இழந்தாலும் பனை மரத்த காப்பாற்றியாக வேண்டும் என்றார் நல்லசாமி.


சரிதான் அது. பனை என்பது வெறும் மரம் மட்டுமல்ல.... தமிழரின் அடையாளம்.


பெ.சிவசுப்ரமணியம்.

 

 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [28]
Name : Sankar Date :8/10/2017 10:12:36 AM
அருமையான தகவல்.
Name : ARUL MANI Date :3/31/2017 8:22:35 AM
வெரி வெரி wonderful
Name : சி.கி.செல்வரத்னம் Date :2/13/2017 12:39:28 PM
நிச்சயமாக... ஒவ்வொரு தமிழனும் நேசிக்கும் மரமாக உள்ளது பனை மரம். அதனை நாமும் அரசும் சேர்ந்து காப்பாற்ற முயற்சி எடுக்க வேண்டும்.
Name : Panneerselvam Date :10/24/2016 6:07:38 PM
நல்ல முயற்சி இனி வரும் காலங்களில் கட்டாயம் பனை வளர்க்க மக்களுக்கு எடுத்துரைக்கப்போம் நாங்களும் நடுவோம்
Name : m.prabu Date :10/11/2016 8:05:34 PM
ஏன் என்று தெரியவில்லை எங்கிருந்தோ வந்த வெளிநாட்டு பானத்திற்ககு வழிவிடும் நம் அரசு ஏன் நம் பாரம்பரிய பனம் கள்ளுக்கு வழிவிடவில்லை
Name : Alex Date :2/20/2015 9:58:11 PM
மத்திய மாநில அரசுக்கு பனை மரத்தின் பயனை எடுத்துரைக்க வேண்டும்
Name : காளிஸ்வரன் .ச Date :1/29/2013 12:42:08 PM
அருமை பனைமரம் சார்ந்த பனைத்தொழில் அனைத்துக்கும் உதவிக்கு 9042528877 9942043171
Name : Ravi-Swiss Date :10/14/2012 2:32:44 PM
அராபியர்களுக்கு எப்படி எண்ணெய் பேரிச்சமரமோ' அதனைப்போல் தமிழர்களுக்கு பனை ஓர் கற்பகவிருட்சம்' இதனைப் பாதுகாத்தல் ஒவ்வொரு தமிழர்களுக்குள்ள மிக முக்கிய கடமை'
Name : Ravi-Swiss Date :10/13/2012 11:42:08 AM
வந்தேண்டா பாய்காரன் தமிழா' நான் பனைஜை பற்றி எழுதப் போறன்' பனை மட்டை வைத்து அடைக்கப் போறன்' பனை வளர்த்தால் கள்ளுக் (நொங்கு) கொடுக்கும் உன்னாலே முடியாது தம்பி' இப்படிப்பட்ட பாடல்களை எமது நண்பர்கள் சேர்ந்து எழுதி' ஓர் காலத்தில் சுவிசில் மேடைகளில் படித்தது உண்டு' அப்படிப்பட்ட எமது வளங்கள் அளிக்கப்படுவதை' தமிழர்கள் வேடிக்கை பார்க்கக் கூடாது' அதுசரி தமிழர்களுக்கு இப்போ' சினிமா டாஸ்மார்க் கண்ட டிவிக்களில் போகும்' கேவலமான பொழுது போக்குகளை பார்க்கவே நேரம் இல்லை' இதில் பனை வளர்க்கவா நேரம் இருக்கு''?
Name : kalamegam Date :3/27/2012 4:41:56 PM
thagavalukku nantri
Name : VTN.PRABHAKARAN Date :3/18/2012 7:58:59 PM
எங்கள் தோட்டத்தில் 200 பனை மரங்கள் இருந்தது . நுங்கும் ,பணம் பழமும் சுவையாக இருக்கும், ஆனால் குத்தகைக்கு விட்டால் , குத்தகை எடுப்பதற்கு யாரும் இல்லை . மரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டோம் மிகவும் குறைந்த விலைக்கு. இது மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமத்தில் உள்ள நிலைமை .
Name : kulandhaisamy Date :3/3/2012 6:59:07 PM
முட்றிலும் உண்மை. பனை ஒரு கற்பகதரு.
Name : karikalan Date :1/27/2012 4:54:39 AM
ஆமாம்,பனை ஒரு கற்பகதரு. அதன் கள்ளை உற்பத்தி செய்ய அரசு தடை போட்டாலும் வெளி நாடு தமிழர் நாம் ஏற்றுமதியாவது செய்தால் குடித்து பயன் பெறுவோம்.சைடு டிஷ் ஆக ஊறுகாய்,பொறித்த இறைச்சி சாப்பிட அமிர்தம் தான்.வாய் இன்றும் ஊறுது.
Name : கே.சிவசஞ்சீவிகுமார் Date :1/20/2012 4:38:00 PM
கட்டுரை அருமை
Name : mugilan Date :11/28/2011 8:26:15 AM
மலேசியாவில் பனை மரத்தில் என்னை தயாரிக்கவில்லை அது செம்பண்ணை ,இதை யாரும் அழிக்க முடியாது இது வேண்டுமானால் மண்ணில் மனிதர்களை அழித்துவிடும் .
Name : arunasalam Date :11/28/2011 8:10:07 AM
பனை மரம் வேறு செம்பனை மரம் வேறு .
Name : arunasalam Date :11/28/2011 8:10:02 AM
பனை மரம் வேறு செம்பனை மரம் வேறு .
Name : rajesh Date :11/25/2011 4:48:45 PM
please save our panai trees. and close all TASMAC in tamilnadu.
Name : maariyappaa Date :11/21/2011 3:08:58 PM
என்னப்பா பியர் ,விஸ்கி,வைன் கள்ளுக்கு முன் எதுவும் நிக்காது எனக்கு கள்ளு குடிக்க ஆசையாக உள்ளது என்ன செய்யலாம்- கள்ளை ஏற்றுமதி செய்யுங்கோ ஐரோப்பாவுக்கு.
Name : nishanthan Date :11/19/2011 2:31:14 PM
அற்புதமான கட்டுரை ,,பனை ஓலையில் தான் தமிழ் எழுத்துக்கள் ஆரம்பத்தில் எழுதப்பட்டது என்பது உபயோகமான தகவல் ,,
Name : samu Date :11/19/2011 12:52:00 AM
கள்ளை இறக்க அனுமதிக்கட்டும், தமிழ்நாடே பணமரமாக தான் காட்சி அளிக்கும், அரசால்பவர்களுக்கு இது போன்ற பொது அறிவு இருந்தால் கண்டிப்பாக இதை எல்லாம் காப்பாற்றிவிடலாம்.
Name : angel Date :11/17/2011 12:39:04 AM
பனங்கட்டியை சொல்ல மறந்து விட்டீர்ர்களே ! பனை மரத்தை ஈழத்தில் கற்பக தரு என்று சொல்லுவார்கள்.
Name : giri Date :11/8/2011 2:26:27 AM
நல்ல தகவள்
Name : Ravi-Swiss Date :11/7/2011 1:01:32 PM
நல்ல கட்டுரை' உண்மையில் பனை கள்ளை நினைத்தால் வாயில் எச்சில் வருகின்றது' சுவிசுக்கு நான் வந்து இருபத்து இரண்டு வருடம் ஆகின்றது' நம்ம ஊரில் (ஈழம் புங்குடுதீவு) எழுபது ஆஜிரட்டுக்கு மேல் பனை மரம் உண்டு' இலங்கையில் பல வெளிநாட்டு குடிவகைகள் இருந்தாலும்' பனம் கள்ளுக்கு தடை இல்லை' அதனால் அங்கு தாராளமாக கள்ளுக் குடிக்கலாம்' நம்ம ஊரு கள்ளும் மிக சுவையும் கிக்கும் உண்டு (போதை) என்ன பண்ண தமிழனின் தலை விதி' இந்துத்வாக் குழுக்களின் கொடும் அடிமைப் பிடியில் இருக்கும் அவனுக்கு எதனை சொன்னாலும் புரியாது' இந்திய வடநாட்டான் எப்படி தமிழனுக்கு துன்பம் கொடுத்தாலும்' அதனை உடன் மறந்து இந்திய விசுவாசி ஆகி விடுகின்றான்' இதன் விளைவுகள் அவன் மரண பாதாளம் மட்டும் செல்கின்றான்' அவனுக்குப் புரிவதில்லை' என்பதே கொடுமை' பனை மரத்தின் அழகே தனி அழகு' படத்தைப் பார்த்தவுடன் உடன் இக்கட்டுரைக்கு வந்து விட்டேன்' எதுஎப்படியோ' இப்போ தமிழனுக்கு இழக்க அவனுக்கு ஒன்றும் இல்லை' அதனால் அவன் பனை மரத்தை ஆகிலும் பாதுகாக்க தன்னால் முடிந்தளவு முஜட்சி பண்ண வேண்டும்' என்று நக்கீரன் இணை முலம் தமிழர்களிடம் மன்றாடி வேண்டிக் கொள்கின்றேன்' நன்றி'
Name : SANKAR Date :11/5/2011 11:22:50 AM
நான் தமிழன் .அதனால் இந்த முயற்சி வெற்றி பெற விரும்புகிறேன் . தமிழன் எங்கு சென்றாலும் வெற்றி பெறுவான் . ஆனால் தமிழ் நாட்டில் அடிமையாஹா உள்ளான்
Name : sasi Date :11/4/2011 4:09:33 AM
பனைமரம் தமிழரின் அடையாளம் மட்டும் இல்லை ஆயுதம் அதுக்கு பல அத்புதசக்திகள் உண்டு
Name : saravanan Date :11/4/2011 12:10:12 AM
all indians must support to siva subramaniyam. thanks.
Name : Seralaathan Date :11/3/2011 4:04:16 PM
ஒரு சின்ன திருத்தம், மலேசியாவில் உள்ள பனை வேறு, நீங்கள் குறிப்பிடும் தமிழக பனை வேறு. அங்கு உள்ளது செம்பனை அது அம்மரத்தில் விளையும் பழத்தின் நிறத்தை குறிக்கும், மேலும் மலேசியாவில் அது லட்ச கணக்கான ஏக்கரில் தோட்டமாக பயிரிட பட்டுள்ளது வியாபார நோக்கத்திற்காக....மன்னிக்கவும்