நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :6, ஜனவரி 2012(18:5 IST)
மாற்றம் செய்த நாள் :6, ஜனவரி 2012(18:5 IST)

 சாகித்ய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
             காவல் கோட்டம் நாவலுக்காக இந்திய அரசின் “சாகித்ய அகாதமி” விருது பெற்றிருக்கிறார் சு.வெங்கடேசன்.

    காவல் கோட்டம் நாவலுக்காக ஏற்கனவே கனடா தமிழ்ச் சங்க விருதினையும் பெற்ற சு.வெங்கடேசனின் வய்து 40. இதுவரை சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கும் தமிழ்ப் படைப்பாளிகளில் இளையவர் இவர் தான். அதோடு 1048 பக்கங்கள் கொண்ட ”காவல் கோட்டம்” தான் சு.வெங்கடேசனின் முதல் நாவல் என்பது மற்றொரு சிறப்பு.

    சாகித்ய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனுக்கு இந்த நாவலை வெளியிட்ட தமிழினி பதிப்பகம் 4.1.12 அன்று சென்னையிலுள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் பாராட்டு விழா நடத்தியது.     திருமூலரை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற ஆறுமுகத் தமிழனின் ஆசிரியப்பா வடிவிலான அழகிய வரவேற்புரையுடன் தொடங்கிய இந்த பாராட்டுவிழாவில்.....

இராசேந்திர சோழன்  (விழாத் தலைவர்) :

    இருபத்தெட்டு வயதில் இந்த நாவலை எழுதத் தொடங்கி 38 வயதில் முடித்து, 41 வயதில் வசீகரமான இளம்பெண்ணுக்கு நிகரான இந்த விருதினை பெற்றிருக்கிறார் சு.வெங்கடேசன்.  விளிம்பு நிலை மக்களின் 600 ஆண்டுகால வரலாறு இதில் சுவைவோடு விரிந்து கிடக்கிறது. சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டவுடனேயே சர்ச்சைகள் கிளம்புவது வழக்கமான ஒன்று. ஆனால் கடந்த ஆண்டு “சூடிய பூ சூடற்க” சிறுகதை தொகுப்புக்காக நாஞ்சில் நாடன் விருது பெற்ற போதும், இப்போது சு.வெங்கடேசன் பெற்றிருக்கிற போதும் சர்ச்சைகள் இல்லை.  மிக மிக முக்கியமான இதை தமிழக படைப்புலகம் இவர்களுக்கு கொடுத்த தடையில்லா சான்றிதழ் என்றே கொள்ள வேண்டும்.

தமிழ்ச்செல்வன் (த மு எ ச ச):

    20 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயளாலராக சு.வெங்கடேசன் பொறுப்புக்கு வந்து 3 மாதம் தான் ஆகிறது. இதோ விருது பெற்று விட்டார். தேநீர் டி.செல்வராஜ், சிங்கம் சின்னபாரதி வரிசையில் இடம்பிடித்திருக்கிறார். காவல் கோட்டம் எப்படி எழுதப்பட்டது என்பதை நாவலாக எழுதினால் அதுவே ஒரு சுவையான நூலாக விளங்கும். அவ்வளவு திட்டமிட்டு மெனக்கட்டு எழுதியிருக்கிறார்.  புதிய பார்வையோடு எழுதியிருக்கும் காவல் கோட்டத்தை  முன் முடிவுகள் இன்றி வாசியுங்கள். நாங்கள் பெற்ற இன்பத்தை பெறுவீர்கள்.

கண்மனி குணசேகரன் (அஞ்சலை நாவலின் ஆசிரியர்) :

    முதல் நாவலே முத்தான நாவலாக அமைந்து விடுவதில் பெரிய அதிசயமில்லை. தரிசாக கிடந்த நிலத்தை உழுது கிழங்கு போட்டால் அது மண்ணைத் துளைத்துக் கொண்டு தார்த் தாராக ஓடும். அப்படித்தான் நெஞ்சையள்ளும் சம்பவங்களை நாவலில் ஓடவிட்டிருக்கிறார் சு.வெங்கடேசன். நான் சாகித்ய அகாதமியை கேட்டுக் கொள்வதெல்லாம்.......

    பட்டத்து யானை என்ற பெருமையை பெற்ற யானை, கோவிலில் பிச்சையெடுக்கலாமா? உப்பு, புளி, சர்க்கரை, பால், கரண்ட் என்ன விலை விற்கிறது? கொடுக்குற தொகையை கூடக் கொடுங்கப்பா. சாகித்ய அகாதமி விருது பெற்ற ஒருத்தன் அதற்கப்புறம் காசுக்கு சிரமப்படலாமா? இன்னொருத்தண்ட்ட கையேந்தலாமா?

சு.வேணுகோபால் (பாஷா பரிஷத் விருது பெற்றவர்) :

    டால்ஸ்டாயின் “போரும் வாழ்வும்” நாவலுக்கு இணையான ஒரு நாவல் தமிழில் இல்லையே என்ற எங்கள் ஏக்கத்தைப் போக்கிவிட்டார் சு.வெங்கடேசன். இனி ஒரு ரஷியனிடம் மார்பை உயர்த்தி சொல்ல முடியும் “WAR AND PEACE"-க்கு நிகரான காவல் கோட்டம் தமிழனிடம் இருக்கிறது என்று. காலத்தின் உருமாற்றத்தை பேசுகின்ற காவல் கோட்டத்தை ‘உரசிப்’ பாருங்கள். படியுங்கள் இதன் உன்னதம் புரியும்.

நாஞ்சில் நாடன்  (நாவலாசிரியர்) :

    விருது பெற்று கடந்த வருடம் இதே அரங்கில் வாழ்த்து பெற்ற நான், இப்போது வாழ்த்த வந்திருக்கிறேன். எழுத்தாளனும் பதிப்பகத்தானும் இணைந்து நண்பர்களாக செயல்பட்டால் சிறந்த நூலகளை தரமுடியும் என்பதற்கு தமிழினி சாட்சியாக நிற்கிறது. இசையை தெரிந்திராதவன் சிலப்பதிகாரத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. விஜயநகர சாம்ராஜ்ய வரலாற்றை தெரிந்திராதவன் களஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் காவல் கோட்டத்தை புரிந்து கொள்வது கடினம் தான்.

பழ.கருப்பையா (எம்.எல்.ஏ) :

    மேலறியும் வேட்கையை தூண்டும் எழுத்தே வெற்றி பெறுகிறது.  நாம் படிக்கும் புத்தகம், நம்மை ஒரு அங்குலமாவது உயர்த்த வேண்டும். இந்த உயர்வும், வேட்கையும் காவல் கோட்டத்தில் உள்ளது. காவல் கோட்டத்தை படித்துவிட்டே இதைச் சொல்கிறேன். சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் வெகுகாலத்தை தாண்டி நிற்கும்.

வாழ்த்துகளை ஏற்று நன்றி சொன்ன சு.வெங்கடேசன் முகத்திலும், விழாவை நடத்திய தமிழினி வசந்தகுமார் முகத்திலும் பெருமிதம் நிறைந்திருந்தது. அது,

    “தமிழ்ச் சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இணையக் கூடாமல் ஒதுக்கப்பட்டு, களவுக்குத் தள்ளப்பட்ட ஒரு இனக்குழுவின் வாழ்வியலை உயிர்த்துடிப்போடு, வளமார்ந்த மொழிநடையோடு, கூர்மையான உரையாடலோடு, குறிப்புணர்த்தும் தன்மையோடு ‘காவல் கோட்டம்’ நாவலை எழுதியதால், அதை வெளியிட்டதால், சாகித்ய அகாதமி விருது பெற்றதால் ஏற்பட்ட பெருமிதம்”.

-ஆறாவயல் பெரியய்யா

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [4]
Name : N.B.Bennet raj Date :1/23/2012 5:02:56 PM
Best wishes Mr. Venkatesan
Name : rajamanilr Date :1/18/2012 4:36:47 PM
காவல் கோட்டம் நாவலைப்படிதேன் மிகவும் நன்றாக இருக்கிறது
Name : tamilselvan Date :1/11/2012 12:05:51 AM
பதிவுக்கு மிக்க nandri
Name : era.the.muthu Date :1/11/2012 12:00:54 AM
நல்ல பதிவு வாழ்த்துகள்.வெங்கடேசன் உரையையும் எழுதி இருக்கலாம்.த,மு.எ.க.ச என்பது த .மு.எ.ச.ச என்றும்,சங்கம் சின்னப்பபாரதி சிங்கம் என்றும் உள்ளது.