நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :27, மார்ச் 2012(0:5 IST)
மாற்றம் செய்த நாள் :27, மார்ச் 2012(0:5 IST)
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!    ஹெல்மெட் அணியாமல் இருசக்கர மோட்டார் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு முதல்தடவை என்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.  இரண்டாவது முறை என்றால் 300 ரூபாய் அபராதம். மூன்றாவதுமுறை என்றால், லைசன்ஸ் ரத்து செய்யப்படும். அதனால், கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். தலைக்கவசம் நமது உயிர்க்கவசம் என்றெல்லாம் விழிப்புணர்வூட்டி கடுமையான  உத்தரவுகளை பிறப்பித்துள்ளது தமிழக அரசின் போக்குவரத்து காவல்துறை. பொதுமக்களின் உயிரை பாதுகாக்க எடுக்கப்பட்ட முடிவு  என்பதால் நிச்சயமாக இந்த கட்டாய ஹெல்மெட் சட்டத்தை வரவேற்கலாம். அதே நேரத்தில், நாம் வாங்கும் ஹெல்மெட்கள் தரமானதா? தமிழகத்தில் மிகப்பெரிய கடைகளிலிருந்து...ப்ளாட்ஃபார்ம் கடைகள் வரை விற்கப்படும் 99 சதவீத ஹெல்மெட்களில் ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப்பட்டிருக்கிறதே இதெல்லாம் உண்மைதானா? இப்படிப்பட்ட ஹெல்மெட்கள் நம் உயிரை பாதுகாக்கும் கவசமா இருக்குமா? என்று ஆராய்ந்தபோது பல அதிர்ச்சித்தகவல்களே நம்மை தலைசுற்றவைக்கிறது.

  சென்னை நகரின்...பிரபல ஹெல்மெட்கடைகளுக்கு சென்று நோட்டமிட்டோம். மினிமம் 500 ரூபாயில் ஆரம்பித்து மூவாயிரம் ரூபாய் வரை ரேட் போகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரேட். ஆனால், ஃபிக்ஸட் ரேட்தான். எல்லா, ஹெல்மெட்டிலுமே ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்தப்பட்டுள்ளதால்...தரம் பற்றி ஆராயப்படுவதில்லை. தலைக்குப் போடும்போது அழகாகவும்...கம்ஃபோர்ட்டபுளாகவும் உள்ள ஹெல்மெட்டை தேர்ந்தெடுத்து  வாங்கிச்செல்கிறார்கள் டூ வீலர் ஓட்டிகள். அங்கிருந்து ப்ளாட்ஃபார்ம் கடைகளுக்கு சென்றால்...ஹெல்மெட்டுகளின் அதிகபட்ச விலையே ஐநூறிலிருந்து ஆயிரம் ரூபாய்வரைதான் உள்ளது. குறைத்துக் கேட்டால் முந்நூறுபாய்க்குக்கூட ஹெல்மெட் வாங்கிவிடலாம். ஆனால், இதில் அதிர்ச்சிக்குள்ளாக்குவது... முந்நூறு ரூபாய்க்கு வாங்கப்படும் ஹெல்மெட்டுகளிலும் ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்தப்பட்டிருப்பதுதான்.

 எப்படி? இதுகுறித்து அதிர்ச்சிகரமான தகவல்களை சொல்ல ஆரம்பித்தார் கன்சர்ட் கன்சியூமர் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் இயக்குனர் சந்தானராஜன் நம்மிடம், “உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் சட்டம்போட்ட பிறகுதான் ஹெல்மெட் போடவேண்டும் நின்று நினைக்கமாட்டார்கள். ஆனால், அந்த ஹெல்மெட் தரமானதா என்பது கேள்விக்குறியை உருவாக்கியிருக்கிறது. மத்திய அரசின் பிரோ ஆஃப் இந்தியன் ஸ்டேண்டர்ட் எனப்படும் பி.ஐ.எஸ். அமைப்புதான் இந்தியாவிலுள்ள பொருட்களை தர நிர்ணயம் செய்து சான்றிதழ் வழங்குகிறது. அது, வழங்கும் தர முத்திரைக்கு பெயர்தான் ஐ.எஸ்.ஐ. இதன்மூலம் அந்தப்பொருளின் தரத்துக்கு அரசே பொறுப்பேறுக்கொள்கிறது என்று அர்த்தம். இப்படி ஐ.எஸ்.ஐ முத்திரை வழங்குவதில் இரண்டு விதம் உள்ளது.  ஒன்று... கம்பல்சரி மற்றொன்று வாலண்டரி. கம்பல்சரி என்றால்...நாம் தயாரிக்கும் பொருட்களுக்கு கட்டாயமாக மத்திய அரசின் பி.ஐ.எஸ் வழங்கும் ஐ.எஸ்.ஐ. முத்திரையை பெற்றுத்தான் விற்கவே முடியும். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தாலும் அதற்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்றுத்தான் விற்கமுடியும்.
  ஆனால், வாலண்டரியில் அப்படியில்லை. பொருட்களை தயாரிப்பவர்கள்... தங்களுடைய பொருள் தரமாக இருக்கிறது என்று சொல்லி விற்க விரும்புபர்கள்...தானாகவே முன்வந்து ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்றுக்கொள்ளலாம். இல்லை என்றாலும் கட்டாயம் கிடையாது.   அந்த அடிப்படையில்... ஹெல்மெட் என்பது வாலிண்டரி என்ற பிரிவின்கீழ் வரையறுத்துள்ளது பீரோ ஆஃப் இண்டியன் ஸ்டேண்டர்ட். அப்படியென்றால்...ஹெல்மெட் தயாரிப்பவர்கள் தானாகவே முன் வந்து ஐ.எஸ்.ஐ. முத்திரைக்கு விண்ணப்பித்தால்தான் உண்டு. இல்லையென்றால் ஏன் இந்த ஹெல்மெட் ஐ.எஸ்.ஐ. சர்டிஃபிகேட் பெறவில்லை  என்றெல்லாம் அரசோ நாமோ கேள்வி எழுப்பமுடியாது”” என்று ஷாக் கிளப்பியவர்... “இதுவரை  19,000 பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ.முத்திரை வழங்கியிருக்கிறது பி.எஸ்.ஐ. இதில்... குழந்தைகளின் பால்பொருட்கள்,  கியாஸ் சிலிண்டர், மினரல் வாட்டர்,சிமெண்ட் உள்ளிட்ட 77 பொருட்களுக்கு மட்டும்தான் கட்டாயம் தரச்சான்றிதழ் வழங்கியிருக்கிறது.  செல்ஃபோன், பிஸ்கட்டுகள், வனஸ்பதி, ஹெல்மெட் போன்ற 18 ஆயிரத்து 923 பொருட்களுக்கு கட்டாய ஐ.எஸ்.ஐ. சான்றிதழ் கிடையாது. இப்படித்தான் தங்கத்திற்கு ஹால்மார்க் எனப்படும் தரமுத்திரை வழங்குகிறது பி.ஐ.எஸ். கடந்த பல வருடங்களாக இந்த ஹால்மார்க் முத்திரை...கட்டாயமாக்கப்படாமல் இருந்தது. ஆனால், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஹால்மார்க் முத்திரை குத்தப்பட்ட தங்கத்தைதான் விற்பனை செய்யவேண்டும் என்று பி.எஸ்.ஐ. உத்தரவிட்டுள்ளது. ஆக, பணமாக மட்டுமே  பயன்படும் தங்கத்தை தரப்படுத்தி விற்க பொறுப்பேற்றுக்கொண்ட மத்திய அரசு...உயிரை காக்க உதவும் ஹெல்மெட்டை கண்டுகொள்ளாமல் இருப்பது... உயிரைவிட விலைமதிப்பில்லாதாதா ஹெல்மெட்?” என்றுதான் கேட்கத்தோன்றுகிறது” என்கிறார் அதிரடியாக.

  சரி...கட்டாயமாக இல்லை என்றாலும்... தரமான ஹெல்மெட்டை விற்கவேண்டும் என்று நினைத்து எத்தனை ஹெல்மெட் கம்பெனிகள் ஐ.எஸ்.ஐ. முத்திரைகளை வாலிண்டரியாக வந்து பெற்றிருக்கிறார்கள்? ஏன் உயிர்காக்கும் ஹெல்மெட்டுக்கு கட்டாய ஐ.எஸ்.ஐ. முத்திரை வழங்குவதில்லை? என்று... சென்னை தரமணியிலுள்ள பீரோ ஆஃப் இண்டியன் ஸ்டேண்டர்ட் கிளை அலுவலகத்தின் இயக்குனர் ரங்கநாதனிடம் கேட்டொம். “எந்தெந்த ஹெல்மெட் கம்பெனிகள் விரும்பி வந்து எங்களிடம் ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்றிருக்கின்றன
என்பதை எங்கள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.bis.org.in    என்கிற வெப்ஸைட்டில் பார்த்துக்கொள்ளலாம்”” என்றவர் “மோட்டார் வாகனச்சட்டங்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுபடும். இதில் தலையிடும் உரிமை எங்களுக்கு இல்லை. ஹெல்மெட்டையும் கட்டாயமாக ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்தப்பட்டு தரமாக விற்கவேண்டுமென்றால் மத்திய அரசு முடிவு செய்யவேண்டும்” என்று முடித்துக்கொண்டார்.

தமிழ்நாட்டில் எத்தனை ஹெல்மெட் கம்பெனிகள் ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்றுள்ளது? என்பதை அறிய www.bis.org.in வெப்ஸைட்டுக்குள் நுழைந்து பார்த்தோம். IS 4151 என்று குறிப்பிடப்படிருந்ததோடு... டெல்லி, உத்திரபிரதேசம், கர்நாகடகா போன்ற மாநிலங்களில் உள்ள 150 ஹெல்மெட் கம்பெனிகள் மட்டுமே ஐ.எஸ்.ஐ. முத்திரைகளை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் விற்கப்படும்...ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்தப்பட்ட அத்தனை ஹெல்மெட்களிலுமே IS 4151 என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான ஐ.எஸ்.ஐ. முத்திரைதானா என்பதுதான் கேள்விக்குறி. உயிர்காக்க ஹெல்மெட் அணிவது நல்லதுதான்...ஆனால், தரம்குறைந்த...ஹெல்மெட்களால் எந்தப்பயனும் இல்லை. தங்கத்துக்கு கொடுக்கும் உத்திரவாதத்தை...உயிர் காக்க உதவும் ஹெல்மெட்டுக்கு கொடுக்காமல் மத்திய மாநில அரசுகள் சைலண்டாக இருப்பது ஏன்? உங்கள் உயிர்காக்கத்தான் ஹெல்மெட் அணியவேண்டும் என்கிறோம்...என்று சொல்லி டூவீலர்கார்களிடம் பணம் வசூலிப்பது வெறும் கண் துடைப்புதானா?

மனோசௌந்தர்தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [6]
Name : Nalliah K Date :2/12/2017 9:30:35 PM
சரிதான் . தலைக்கவசம் அணிந்தாலும், நமது சாலை எப்படி உள்ளது?. வேகத்தடை கொள்கை எவ்வாறு உள்ளது? சாலை தரத்தை நிர்ணயம் செய்துவிட்டால் மக்களின் பெட்ரோல் செலவு மிச்சமாகும் ஏழை எளியவர்களின் பெட்ரோல் செலவு மிச்சமாகும். அந்நியச்செலாவணி (கச்ச எண்ணெய்) மிச்சமாகும். விபத்துகள் குறையும். இந்நாட்டு மன்னர்களின் நிலை இப்படித்தான் உள்ளது. யார் மணி கட்ட போகின்றார்கள்? எதற்கு எல்லாமோ நான் வழக்கு தொடுக்கப் போகின்றேன் என்று கூவும் அறிவு மேதைகளின் கண்களில் இவை படாதா? இலவசங்களை அள்ளி கொடுக்கும் அரசு இலவசமாக போடும் சாலையை தரமானதாக போட கவனம் செலுத்துமா? விரைவில் பழுதாகி போகின்றதே.
Name : kannan Date :10/21/2012 12:41:28 PM
wearing the qulityless helmate and not wearing the helmate are same
Name : nkulandhaisamy Date :8/7/2012 9:25:48 PM
தமிழ் நாட்டில் வசூலுக்கான ஒரு ஆயுதமாகத்தான் ஹெல்மெட் உள்ளது.
Name : mahboobali Date :4/10/2012 1:53:35 PM
தரம் மிக முக்கியம் அப்படியிருக்க ஏன் அரசு கண்டுகொள்ளவில்லை?
Name : பிரியா Date :4/10/2012 12:42:34 PM
அப்படியென்றால் நம் தமிழகத்தில் அணியக்கூடிய எந்த ஒரு ஹெல்மெட்டுமே தரமானது இல்லையா? அப்புரம் எதுக்குத்தான் இந்த ஹெல்மெட்டை அணியுறது?
Name : ப ரவிவர்மன் Date :3/31/2012 3:51:04 PM
ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கியதைப் போல் தரமற்ற ஹெல்மெட்டுக்களை விற்கும் கடைகளிலிருந்து அவற்றைப் பறிமுதல் செய்வதையும் கட்டயமாக்க வேண்டும்..