நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :29, மார்ச் 2012(11:9 IST)
மாற்றம் செய்த நாள் :29, மார்ச் 2012(11:9 IST)
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
அறிவியல் ஆராய்ச்சியில் திடுக்கிடும் தகவல்!
  

    சாலையில் நடந்து செல்லும்போதுகூட விபத்து ஏற்பட்டு சாவு வரலாம். எதில்தான் ஆபத்து இல்லை? அணு உலையும் அப்படித்தான். அதை எதிர்த்து ஏன் உதயக்குமார் உள்ளிட்டவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்? என்பது பல்வேறு பட்ட மக்களின் கேள்வி. இந்த கேள்விக்கான பதிலை... தொடர்ந்து அணு உலைக்கெதிராக போராடிக்கொண்டிருக்கும் மக்கள் மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டோம். “அணு உலை பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. பாதுகாப்பாகத்தான் உள்ளது என்று மத்திய மாநில அரசுகள்...வல்லுநர் குழுக்கள்...அணுசக்தி நிர்வாகத்தினர்...எல்லோருமே சொல்லித்தான் கூடன்குளம் அணு உலையை திறந்திருக்கிறார்கள். ஆனால், அணு உலை பாதுகாப்பாக உள்ளதா? என்பதுதான் மிகப்பெரியக் கேள்விக்குறி! காரணம்...சர்வதேச அணுசக்தி கழகம், அமெரிக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், இந்தியாவிலுள்ள அணுசக்தி ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை அணு உலை பாதுகாப்பாக இயங்க பரிந்துரைக்கும் விதிமுறைகளை கடைபிடித்து கூடன்குளம் அணு உலையை கட்டவில்லை என்பதுதான் திடுக்கிடும் உண்மை. 

 

 ஆக, சர்வதேச தரத்திலும்...இந்தியத் தரத்திலும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் கட்டப்பட்ட அணு உலையில் ஆபத்துவராது என்று எப்படி சொல்கிறீர்கள்? என்று கேட்டால்... மன்மோகன் சிங்கின் மத்திய அரசும் ...மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியும்... தமிழக அரசின் ஜெயலலிதாவும்... மத்திய மாநில அரசு அமைத்த வல்லுநர் குழுக்களும்  அறிவியல் ரீதியான பதிலை சொல்லாமல்... “ஆபத்து வராதுன்னா வராது”என்று வடிவேலு ஸ்டைலில் ஒரே பதிலை ஜோசியக்காரர்களைப் போலவும் கடவுள்களை போலவும் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

  சர்வதேச அணுசக்தி கழகமும்.... அமெரிக்காவிலுள்ள அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் பாதுகாப்பான அணு உலையை அமைக்க விதிமுறைகளை மட்டுமே வகுக்கமுடியும். இன்னொரு நாட்டில் அமைக்கப்படும் அணு உலை குறித்து கேள்வி கேட்கமுடியாது. ஆனால், இந்தியாவிலுள்ள அணுசக்தி ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு வாரியம் தன்னுடைய விதிமுறைகளை மீறி இந்தியாவில் ஒரு அணு உலை கட்டப்பட்டால் அதுகுறித்து கேள்வி எழுப்பி நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனால், இதுவரை...விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கூடன்குளம் அணுஉலை குறித்து எந்த கேள்வியும் கேட்காமல் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து குறித்து கவலைப்படாமல் அமைதி காக்கிறது. 

  அதனால்தான், போராட்டக்குழு... மற்றும் பொதுமக்கள் சார்பில் பிரபல விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளடக்கிய 28 பேர் கொண்ட வல்லுநர் குழு...கூடன்குளம் அணு உலையை சுற்றி அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியில் இறங்கியது. சுனாமி ஏற்படும் வாய்ப்புள்ள பகுதியில் அணு உலை அமைக்கக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், கூடன்குளம் அணு உலையை பொறுத்தவரை அருகிலிருந்து சுனாமி உருவாகும் வாய்ப்பு இல்லை. செர்னோபில் விபத்து... ஃபுக்குஷிமா விபத்து போன்று இங்கு விபத்து நடக்கும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று மத்திய வல்லுநர் குழு அறிக்கை வெளியிட்டது. போராட்டக்குழு மற்றும் பொதுமக்கள் சார்பாக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவோ... “பிரபல விஞ்ஞானிகளான வில்லியம் வெஸ்டால் மற்றும் ஆலன் லௌரீ இருவரும்  1982 ல்  செய்த ஆய்வில் சரிந்துசாயும் வண்டல் குவியல்கள் கூடங்குளத்திலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலேயே இருப்பதை தெரிவித்திருக்கிறார்களே. அவர்களின் ஆய்வுப்படி பார்த்தால் கூடன்குளம் அணு உலையை சுற்றி  ஒரு மிகப்பெரிய சுனாமியே உருவாகும் வாய்ப்புள்ளதே இதுபற்றி உங்கள் முதல் கட்ட அறிக்கையில் குறிப்பிடக்கூட இல்லையே என்று நாங்கள் கேட்டோம். வேறு வழியில்லாமல் மத்திய வல்லுநர்க்குழு தாங்கள் சொன்னதை திருத்தி...(எழுதியவர்... மத்திய அரசின் வல்லுநர் குழுவில் உள்ளே ஒரே ஜியாலஜிஸ்ட் ஹர்ஷ்.கே.குப்தா) “சுனாமியை உருவாக்கக்கூடிய சரிந்துசாயும் வண்டல் குவியல்கள்  இருப்பது உண்மைதான். ஆனால், முப்பது டிகிரிவரை மட்டுமே சாயும்  என்றும்...ஐந்து மீட்டர்ருக்குமேல் மட்டுமே சாயாது  என்றும்  அதனால் சுனாமி ஏற்படும் என்பது உண்மைதான் ஆனால், அணு உலையை அந்த சுனாமி  பாதிக்காது என்று வல்லுநர்க்குழு இரண்டாவது அறிக்கையில் குறிப்பிட்டது. 

   சரிந்துசாயும் வண்டல் குவியல்கள் இருந்தால் அங்கு கெமிக்கல் அனலைசஸ் செய்யவேண்டும். ஆனால், அதை நீங்கள் செய்யவில்லை. அதில், களிமண் அதிகமாக இருந்தால் சீக்கிரம் சரிந்து சுனாமியை உருவாக்கும். 1981 ல் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுகுழுமம் (Oil and Nechural Gas Commission) என்ற பொதுத்துறை நிறுவனத்தின் விஞ்ஞானி சாஸ்திரி  செய்த ஆய்வில் கூடன்குளம் பகுதியில் உள்ள சரிந்துசாயும் வண்டல் குவியலில் களிமண் இருப்பதை உறுதி செய்திருக்கிறாரே... அப்படியிருக்க சுனாமி வராது என்று நீங்கள் எந்த அறிவியல் ஆராய்ச்சியின் மூலம்  குறிப்பிடுகிறீர்கள்? என்று கேட்டால் மத்திய வல்லுநர்க்குழுவிடமிருந்து அறிவியல் பூர்வமான பதில் இல்லை.

   அடுத்து...அணு உலை துவங்கப்போகும் இடத்துக்கு அருகிலுள்ள நிலப்பிளவுகள் குறித்து ஆய்வு செய்யவேண்டும். மத்திய அரசின் ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியாவின் ஆய்விலேயே இந்திராணி நிலப்பிளவு இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த நிலப்பிளவில் 100 ஆண்டுகாலத்திற்குள் எத்தனை தடவை நிலநடுக்கம் வந்துள்ளது என்பதையும்... இந்த நிலநடுக்கம் சரிந்து சாயும் வண்டல் மண்குவியல்களில் பாதிப்பை ஏற்படுத்தி சுனாமியை உண்டாக்கிவிடுமே? கடந்த 2011 நவம்பர் 19ந்தேதி 5.2 ரிக்டர் அளவுகோலில் இந்திராணி நிலப்பிளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை ஜி.எஸ்.ஐ. பதிவு செயிதிருக்கிறது. இதனால் ஏற்படக்கூடிய தாக்கத்தை  குறித்தும் ஆய்வு செய்யவில்லையே ஏன்? என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை.உண்ணாவிரத போராட்டத்தில் உதயகுமார்  சரிந்து சாயும் வண்டல் குவியல்கள் அருகில் எரிமலை வாய்(முகடுகள்) இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்யவேண்டும். மத்திய வல்லுநர்குழு தனது 38 பக்க முதல் அறிக்கையில் இதுபற்றி எதையுமே எழுதவில்லை. கொச்சியில் இயங்கும் இந்திய கடற்படையின் இயற்பியல்  மற்றும் கடலியல் ஆய்வுச்சாலையை சேர்ந்த ஜி.ஆர்.கே. மூர்த்தி, ஒய்.சத்யநாராயணா மற்றும் டி.பிரதீப் குமார் ஆகியோரே செய்த ஆய்வில் மன்னார் வளைகுடாவில் இரண்டு இடங்களில் எரிமலைகளின் முகவாய்கள் இருப்பதாக  (1994 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்) பதிவு செய்திருக்கிறார்கள். அதேபோல்... இந்தப்பகுதியில் கடல் எரிமலைகள் உள்ளன என்று 1975 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் முன்னணி நிலவியலாளர் உடிண்ட் சேவ் என்பவரும் 1981 ல்  இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுகுழுமத்தின் சாஸ்திரி ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளாரே? என்றெல்லாம் கேள்வி எழுப்பியபிறகு மத்திய வல்லுநர்க்குழு இரண்டாவது அறிக்கையில் எரிமலை இருப்பது உண்மைதான். ஆனால், வெடிக்காது என்று சொல்கிறார்கள். 

 தானே புயல்போன்று கூடன்குளம் அணு உலைக்கு அருகில் வந்தால் சரிந்துசாயும் வண்டல் குவியல்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வு செய்தீர்களா? என்று கேட்டாலும் பதில் இல்லை.

  அணு உலையை குளிர்விக்கவேண்டுமென்றால் கடல் நீரை எடுத்து உப்பு நீக்கி பயன்படுத்துவார்கள். கூடங்குளம் அணு உலையிலிருந்து 300 மீட்டர் தொலைவில் தண்ணீரை உறிஞ்சும் குழாய் இருக்கிறது. அந்த இடத்தில் திடீரென்று கடல் உள்வாங்கிக்கொண்டால் அணு உலையை குளிர்விக்க தண்ணீர் கிடைக்காமல் அணு உலையே வெடித்துவிடும் அபாயம் இருக்கிறதே. இப்பகுதியில்  வருடத்திற்கு மூன்று முறை அப்படி கடல் உள்வாங்கியிருக்கிறதே அதுகுறித்து ஆய்வு செய்தீர்களா? அணு உலையை தொடர்ந்து குளிர்விக்க 6 கோடி லிட்டர் தண்ணீர் சேமித்துவைத்திருக்கவேண்டும். ஆனால், 1.2 கோடி லிட்டர்தான் சேமிப்பில் வைத்திருக்கிறீர்கள் இதனால் ஏற்படப்போகும் ஆபத்துக்கு என்ன செய்வீர்கள்?

  கூடங்குளம் அணு உலையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் மூன்று முறை கார்ஸ்ட் குழிவு எனப்படும் விபத்து ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட விபத்து திரும்பவந்தால் அணு உலை அப்படியே பூமிக்குள் அமிழ்ந்துவிடும் அபாயம் இருக்கிறதே என்று நாங்கள் சொன்னபிறகு  கார்ஸ்ட் பாதிப்பு இருக்கிறது உண்மைதான். ஆனால், அப்படிப்பட்ட ஆபத்துவராது என்கிறார்கள் மத்தியக்குழு வல்லுநர் குழுவினர்.

   கூடன்குளம் பகுதியில் கடந்த பதினைந்து வருடங்களாக குறைந்த அளவு எரிமலை வெடிப்புகள் நான்குமுறை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல பூமியின் உள்ளே எரிமலை குழம்பு வெடித்துப் பிதுங்கி மேல் எழுந்து வந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம்... அணு உலை அமைந்துள்ள பகுதியில் பூமி மேலோட்டின் தடிமன் 40,000 மீட்டர் இருக்கவேண்டும். ஆனால், கூடன்குளம் அமைந்துள்ள பகுதியின் பூமி மேலோடு...150 மீட்டர் தடிமன்தான் உள்ளது. இப்படிப்பட்ட பகுதிகளில் அணு உலை அமைத்தால் மிகப்பெரிய ஆபத்து. இதுறித்தும் ஆய்வு செய்யவில்லை.


   கூடன்குளம் அமைந்துள்ள பகுதி...கடினப்பாறை மட்டுமே உள்ளது என்று தவறான ஆய்வை மனதில் கொண்டு அணு உலையை கட்டிவிட்டார்கள். ஆனால், தோண்டிப்பார்த்தபோது நடுநடுவே லேசான பாறைகள் உள்ளதை கண்டறிந்த சென்னை ஐ.ஐ.டியின் விஞ்ஞானி பூமிநாதன் 2004 கரண்ட் சயின்ஸ் பத்திரிகையில் முதலிலேயே கண்டுபிடித்திருக்கவேண்டுமே இப்படியிருந்தால் அணு உலைக்கு ஆபத்தாயிற்றே என்று வெளிப்படையாகவே திட்டியிருக்கிறார். இதில் பிரச்சனை என்னெவெனில் மிருதுவான பாறைகள் கடினமான பாறைகளுக்குள் இருக்குமானால் நில அதிர்வின்போது பாதிப்பு அதிகமாக இருக்கும்.

   

முதலில் கூடங்குளம் அணு உலை 2006 வரையிலான திட்டத்தில் பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் எடுப்பதாகத்தான் திட்டமிட்டிருந்தார்கள். அப்போதுதான்... எங்கள் குழுவில் உள்ள டாக்டர் ரமேஷ் அங்கு சென்று ஆய்வு செய்தார். பேச்சிப்பாறையில் எவ்வளவு கொள்ள்ளவு தண்ணீர் உள்ளது? மணல் படிதலின் காரணமாக எவ்வளவு தண்ணீர் குறைந்துள்ளது? சராசரி மழை எவ்வளவு? என்றெல்லாம் கணக்கெடுத்துவிட்டு... “ஒரு அணு உலை 40 வருடங்கள் இயங்கும். அதனால், அதுவரை பேச்சுப்பாறை அணையின் தண்ணீர் அணு உலைக்கு பத்தாது” என்று ஆய்வறிக்கையில் சொன்னபிறகுதான்... பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் எடுக்கும் திட்டத்தை மாற்றி... கடல்நீரை உப்புநீக்கி குளிர்விக்கப் பயன்படுத்திக்கொள்ளும் திட்டத்துக்கு மாறினார்கள் அணு உலை நிரிவாகத்தினர். அதே டாக்டர் ரமேஷ் உள்ளடக்கிய வல்லுநர்க்குழுவினர்தான் மேற்கண்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். ஆனால், கஷ்டப்பட்டு ஆய்வு செய்து நாங்கள் சொன்னதும் வேறு வழியில்லாமம் ஒத்துக்கொள்ளும் மத்திய அரசின் வல்லுநர் குழு...ஆபத்து இருக்கு... ஆனா ஆபத்துவராது என்று ஜோசியர்களை போலவும் கடவுள்களைப்போலவும் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?  சர்வதேச அணுசக்தி கழகம்,  மத்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு வாரியம் (ஏ.இ.ஆர்.பி) சொன்ன வழிமுறைகளின் படி... அணு உலையை அமைத்திருக்கிறோம் என்று அறிவியல்பூர்வமாக நிரூபித்துவிட்டு அணு உலையை தாராளமாக திறந்துகொள்ளுங்கள். கூடங்குளம் அணுஉலையும் மத்திய வல்லுநர் குழுவின் அறிவியலற்ற அணுகுமுறையும் என்கிற புத்தகத்தில் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கான முழு ஆதாரங்கள் உள்ளன. இந்த வகையில் பார்க்கும்போது உதயக்குமார் தலைமையிலான போராட்டம் நியாய”மானதே” என்கிறார் போராட்டக்குழு நிர்ணயித்த வல்லுநர்க்குழுவில் ஒருவரான மக்கள் மருத்துவர் புகழேந்தி.

 மனோசௌந்தர்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [19]
Name : nkulandhaisamy Date :7/18/2012 9:14:35 PM
இந்த கட்டுரையில் சுட்டிகாட்டப்பட்டிருக்கும் சில குறைபாடுகள் கவனிக்கப்படவேண்டியவை.குறிப்பாக அணு உலையை குளிர்விக்கப்போதுமான தண்ணீர் சேமிப்பு மிகவும் முக்கியமான ஒன்று.இந்த மாதிரி களையக்கூடிய சாத்தியக்கூறு உள்ள குறைகளை மத்திய அரசு கண்டிப்பாக களைய வேண்டும்.
Name : Arul Date :5/1/2012 2:18:49 PM
Dear All, Everyday we all inside dangers, problems. But life has to go on. If we start to think everything is problem. You cant go out. No Bus journey, no Train journey, Don't you think that, all your eatable is good. it has slow poison and side effect. If these area peoples still afraid, They they ready to sell their property if yes im ready to buy and live there. Let me know who is interested?
Name : sharmila Date :4/25/2012 9:51:22 PM
இதிலும் 2 வருடங்களுக்கு பிறகு கோடிக்கணக்கில் ஊழல், நாட்டிற்கு பேராபத்து என்று இந்த government சொல்லாமல் இருந்தால் போதும். இதிலும் யார் யார் காசு பார்த்துக் கொண்டிருக்கின்றர்களோ என்று ஐயம் இருக்கத்தான் செய்கின்றது.
Name : sethu P Kumar Date :4/20/2012 8:53:27 PM
எனக்கு திர புகழேந்தி மேல் அளவற்ற மரியாதையை உண்டு.அதே சமயம்,அவர்களது பயம் தேவை இல்லாதது.நான் இந்த பவர் உற்பத்தி துறையில் ௨௮ வருஷம் முடித்து விட்டேன்.நீங்கள் தினமும்,பஸ்சில் போகிறிர்கள்.போகும் முன் ,நீங்கள் நினைத்து பர்கமட்டேர்கள்,அந்த பஸ் அச்சிதேன்ட் ஆகும் என்று.நீங்கள் நினைத்தாள் ,போகமடீர்கள்.இந்த உதயகுமார் முற்றும் இந்த டாக்டர் ,எல்லாம்,உங்கள் பயத்தை உஸ் புண்ணி ,வாழ்கிறார்கள்.இதுதான் உண்மைகள்.முதலில் இவர்களை னது கடத்தவேண்டும்
Name : kaja Date :4/18/2012 10:24:46 PM
உங்க வீட்டில இருக்கிற டிவி பேன் மிக்ஸ்ய் கரண்ட் இப்படி எல்லாத்துலேயும் ஆபத்து இருக்கு, ரொம்ப ஆராய்ச்சி பண்ணாதீங்க, அவன் அவன் கரண்ட் இல்லாம அவஸ்தை படுறான் கொஞ்சம் கூட அறிவே இல்லாம அது வேண்டாம் இது வேண்டாம், எவனும் அறுபது வயேசு வாழ மாட்டான், பொய் சேர வழிய பாரங்க, கொஞ்சம் காரது வரட்டும்,
Name : Raju,tuticorin Date :4/14/2012 5:48:13 PM
கூடங்குளம் உண்மை நிலை நிறைய மக்களுக்கு தெரிய வில்லை என்பதால் அரசியல் புள்ளிகள் அவர்களின் சொந்த நலனுக்கு ஏற்றவாறு பயன்படுத்துகிறார்கள் அருகில் இருக்கும் எங்களை போன்ற மக்கள் பாவம் செய்தவர்களா எப்படியோ நல்லாது மட்டுமே நடக்கட்டும் தகவலுக்கு நன்றி
Name : Valan Date :4/9/2012 10:37:49 PM
அணு உலைகள் மின்சாரதிற்கு மட்டும் தானா? எப்படி இருந்தாலும் அணுவை பிளப்பது புலி வாலைப் பிடிப்பதற்கு சமம்.
Name : prem Date :4/6/2012 2:10:02 PM
பெரும்பாலான மக்கள் உண்மை நிலை தெரியாதவர்களாக இருகிறார்கள் ,காரணம் மக்கள் எந்த பிரச்சனைகளையும் ,மதத்தாலும் ,ஜாதியாலும் ,கட்சியாகவும் பார்கிறார்கள் ,இதில் பல பேர் யாருக்கு எந்த ஆபத்து வந்தாலும் பரவாயில்லை அவர்களுக்கு தேவை பூர்த்தி யாகனும் ,மொத்தத்தில் ஜனங்களுக்கு அறிவு போதாது ,அரசியல் வாதி மிரட்டி பணிய வைக்கிறான் ,உண்மையான தீவிரவாதி இவர்களே
Name : Senthil Date :4/5/2012 1:35:15 PM
Nice article.
Name : tamil selvi Date :4/3/2012 10:36:07 PM
எல்லா மாநிலங்களும் அணு உலை திட்டத்தை நிராஹரித்த நிலையில் இருபத்தி ஐந்து அன்டுஹளுக்கு முன்பு அணு உலை பற்றிய அறிவு, விழிப்புணர்வு இல்லாததை பயன்படுத்தி அந்த அப்பாவி மக்களின் எதிர் காலத்தை சிறிதளவும் கண்டு கொள்ளாமல் இந்த திட்டத்தை ஆரம்பித்து விட்டு , இப்போது தங்களுக்கும் தங்கள் சந்ததிகள்கும் இந்த அணு உலை ஆபத்தாக அமைய போஹிறதோ என்ற அச்சத்தில் போராடும் மக்களை சொஹுசு மாளிஹையில் இருக்கும் அரசியல் வாதிகள் விமர்சிப்பது தான் வேதனைக்குரியது.
Name : Gerald rajan Date :4/1/2012 10:14:23 PM
இந்த காரணங்களுக்கதான் நங்கள் போராடிக்கொண்டு இருக்கிறோம். இதில் உள்ள கருத்துக்கள் மக்கள் யாருக்கும் தெரியாமல் இருந்தது. இப்போது தெரிந்து கேள்வி கேட்டால் கேட்பவர்கள் தீவிரவாதிகள். இதில் வேதனையானது என்னவெனில் ஊடகங்களும்
Name : Jagan Date :4/1/2012 12:07:31 PM
Like Mr. Muthu said, can you or Dr. Pughalendi please translate this article in english and make available in your site. We will not be able to do the exact translation as it involves lots of technical/scientific words and specifics. Please, please do it.
Name : pari Date :3/31/2012 2:19:14 PM
வெரி குட் scientificinformation தகஸ் சார்
Name : Robert Caldwell Date :3/30/2012 8:08:44 PM
பூர்வீகக் குடிகளின் வாழ்வாதரங்களையும், வாழ்விடங்களையும் பிடுங்கிக்கொண்டு அவர்களை நடுத்தெருவில் விடும் கொடுமைகள் 1945 க்குப்பின் எத்தனையோ முறைகள், எத்தனையோ இடங்களில் தொடர்ந்து நடந்துவருகிறது. பிடுங்கிக் கொள்பவர்கள் "சட்டம்" என்று நமக்குக் காட்டுவதும் அதை அங்கீகரிக்கிறது! கூடன்குளமும், ஓடிஸா (வேதாந்தா) பாக்சைட் சுரங்கமும் தற்போதைய பெரும்கொடுமைகள்! மனசாட்சியுள்ள மருத்துவர் புகழேந்தி அவர்களால் தோலூரித்துக் காட்டப்படும் "ஜோதிட-தெய்வீக" (அஞ்)ஞானிகளின் குருட்டு நம்பிக்கை பொய்த்து இரண்டு கோடி பூர்வீகக் குடிகளின் வாழ்வு தொலையும் பேரபாயம் உள்ளது! அணுவுலையின் மரண நிழலில், இந்த ஜோதிட-தெய்வீக தேசிகர்கள் சொல்வதை நம்பி வாழும் கூடங்குளம் அப்பாவி மக்களின் நிலை மட்டுமல்ல, தமிழ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி மக்களின் நிலையே பரிதாபத்துக்குரியது.
Name : DHARANI Date :3/30/2012 8:57:49 AM
மத்திய அன்மைச்சர் பா.சி அவர்களையும், நாராயணசாமி அவர்களையும் தங்கள் குடும்பத்துடன் கூடங்குளத்துக்கு குடி வந்துவிட சொல்லுங்கள். எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும்.
Name : Muthu Date :3/29/2012 9:24:58 PM
Very excellent article with valuable scientific information packed. Please translate this article in English, Hindi and publish it in other national, international medias.
Name : mahesh Date :3/29/2012 12:24:15 PM
நல்லா சொன்னீங்க இதை கொஞ்சம் சத்தமா சொல்லுங்க தமிழகத்துக்கு கேக்கும் படி
Name : pachaimalkannan Date :3/28/2012 7:56:40 PM
கூடங்குளம் மக்களின் அச்சத்துக்கான அடிப்படை காரணம் இந்த கட்டுரையை படிக்கும் போது நமக்கு தெளிவாக தெரிகிறது.
Name : raman Date :3/28/2012 6:37:13 PM
super