நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :30, ஏப்ரல் 2012(15:12 IST)
மாற்றம் செய்த நாள் :30, ஏப்ரல் 2012(15:12 IST)

       

நிலவைப் பற்றி  எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம்.  அப்படியிருக்க; ஒரு கவிஞரின் பெயரே வெண்ணிலா.

அ.வெண்ணிலா என்கிற அந்தக் கவிஞரின்  பெயரைக் காணும்போதெல்லாம்  ஓ! நிலவுக்கே இனிசியல் இருக்கே என்றுதான் நினைக்கத் தோன்றும். அந்த வெண்ணிலாவுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம்.   கவிஞர் மு.முருகேஷின் கரம் பிடித்த அவருக்கு இப்போது மூன்று நிலாக்கள். (பெண்ணுக்கு நிலா,  ஆணுக்கு சூரியன் என்பதுதானே பொதுவில் இருக்கு )

கவிஞர் என்ற ஒற்றை அடையாளம் மட்டுமல்ல சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், கட்டுரை ஆசிரியர் என்ற பன்முகங்கள் கொண்டவர் வெண்ணிலா.  மிக முக்கியமாக பாடம் புகட்டும் ஆசிரியர் என்கிற முகமும் இருக்கிறது.

வசித்து வரும் வந்தவாசியிலிருந்து அவர் தொலைபேசி வாயிலாக தனது வாழ்வை வாசித்தார்.   இதோ - சென்னையில் பதிவான வெண்ணிலாவின் வெளிச்சம்.


நவீன இலக்கியத்தளம் விட்டு இடம்பெயரும் எண்ணமில்லையா?


வாசிக்கத் தெரிந்த  நாள் முதல்  அப்பா வாசிக்கச்சொன்னவற்றை மட்டுமே வாசித்தேன்.  பதின் மூன்று வயசுக்கு பிறகு புத்தகபிரியை ஆனேன்.  கிடைத்ததை எல்லாம் வாசித்தேன்.   இருபது வயசுக்கு பின் எனது பார்வை நவீன இலக்கியம் பக்கம் திரும்பியது.  இதுதான் என்று முடிவெடுத்தேன்.  அதன்பிறகு நவீன இலக்கியத்தின் மீதான ஆர்வம்தான் எனக்குள் இருக்கிறது.   அது குறித்துதான் எனது தேடலும் இருக்குது.  எப்போதும் என்னை நவீன இலக்கியவாதி என்று வெளிப்படுத்திக்கொள்ளவே விருப்பம்.

அதிகம் படிக்கும் பழக்கம் இருக்கு. ஆனால் அதிகம் படைப்பதில்லையே ஏன்?

அப்பா திராவிடர் கழகத்தில் இருந்ததால் பெரியார் புத்தகங்களை நிறைய வாசிக்கச் சொல்வார்.   வாசித்து முடித்த பிறகு அந்த புத்தகம் குறித்து கேள்விகள் கேட்பார்.  நான் பதில் சொல்வேன்.  அந்த கேள்வி பதில் பொழுதுகளே நல்ல விவாதமாக அமையும். வாசிப்பது அது குறித்து விவாதிப்பது என்று இருந்துவிட்டேன்.   நாமும்  படைக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது.நான் சின்ன வயதில் இருந்தே கவிதை எழுதத்தொடங்கி விட்டேன் என்று  எல்லோரும் சொல்லும் பதிலை என்னால் சொல்லமுடியாது.   ஏன் தெரியுமா?  நான் எழுதத்தொடங்கியதே இருபத்து ஏழு வயதில்தான்.

எழுதத்தொடங்கிய பிறகும் சில பதிவுகள்தான் செய்திருக்கிறேன். ‘நீரில் அலையும் முகம்’,  ’ஆதியில் சொற்கள் இருந்தன’    ‘கனவை போலொரு மரணம்’ என்று மூன்று கவிதை தொகுப்புகளும் ‘பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில்’ என்ற சிறுகதை தொகுப்பு மற்றும் ‘கனவிருந்த கூடு’என்ற காதல் கடிதங்களின் தொகுப்பும் பெண் எழுத்தாளர்களின் வாழ்க்கை பற்றிய ஆவணத்தொகுப்பாக’மீதமிருக்கும் சொற்கள்’ ஆகியவைதான் எனது பதிவுகள்.

நிறைய படிக்க வேண்டும் நிறைவான படைப்புகளை தரவேண்டும் என்று விரும்புகிறேன்.   இதுதான் நான் அதிகம் எழுதாமல் இருப்பதற்கான காரணம்.

தலைப்பில்லா கவிதைகளே எழுதிவருகிறீர்களே;  தலையாய காரணம் என்ன?

கவிதைகளை ஒரு வட்டத்துக்குள் வைக்க  விருப்பமில்லை.   இஷ்டத்திற்கு இருக்க வேண்டும் என்பதால்தான் தலைப்பு வைப்பதில்லை.   இஷ்டத்திற்கு என்று சொன்னது -  சுதந்திரம்!. அப்புறம் முக்கியமான ஒன்று...   தலைப்புகள்,  இது குறித்துதான் என்பதை உணர்த்திவிடுகிறது.     எது குறித்து என்கிற தேடல் இருக்க வேண்டும்.  அந்த தேடலில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும்.  அது எனக்கு பிடிக்கும்.   அதனால்தான் அப்படி எழுதுகிறேன்.மற்றவர்களுக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு உறைக்குள் இரு வாள் என்பது மாதிரி ஒரு வீட்டுக்குள் இரு கவிஞர்கள் இருக்கிறீர்கள்.  உரசல்கள் வருவதற்கு சந்தர்ப்பங்கள் அமைந்திடுமே?

இருவரும் கவிஞர்கள் என்பதாலும் காதல்திருமணம் என்பதாலும்  நல்ல புரிதல் இருக்கு.  மற்றபடி  இலக்கியம் குறித்தான சூடான விவாதம் அடிக்கடி நிகழும்.    விவாதத்தில்  ஆவி பறக்கும். எனது எல்லாக் கவிதைகளையும் அவர் பாராட்டியிருக்கிறார்.   அவரின் சில கவிதைகளை மட்டுமே நான் பாராட்டியிருக்கிறேன்.    ஹைக்கூ கவிதைகளை அவர்(மு.முருகேஷ்) எழுதிக்குவிக்கிறார்.  எனக்கு அவற்றில் விருப்பமில்லை.  அப்படியிருந்தும் பதினைந்து  ஹைக்கூ கவிதைகள் எழுதியிருக்கிறேன்.

காதலித்தால் கவிதை வரும் என்பார்கள்.  கவிதை எழுதினாலும் காதல் வரும் என்பார்கள்.  நீங்க சொல்லுங்க.  கவிதை வந்ததும் காதல் வந்ததா? காதல் வந்ததும் கவிதை வந்ததா?

காதல் என்னை காதல் கடிதங்கள்தான்  எழுதவைத்தது.   திருமணம்தான் என்னை கவிதை எழுத வைத்தது.  எனது முதல் தொகுப்பே காதல் கடிதங்களின் தொகுப்புதான்.  ’கனவிருந்த கூடு’ எனும் அத்தொகுப்பில் இருக்கும் கடிதங்கள் அனைத்தும் ஆறு மாதங்களாக நான் அவருக்கு எழுதிய காதல் கடிதங்களே.  இத்தொகுப்பையும் திருமணத்திற்கு பிறகே வெளியிட்டேன்.

தோழர்களுடன் இணைந்து ‘பூங்குயில்’ சிற்றிதழ் நடத்தினேன்.   அது சம்பந்தமான விழாக்களுக்கு அடிக்கடி அவர் வருவார்.   ஆரம்பத்தில் இலக்கியங்கள் பற்றிய விவாதமாகத்தான் இருந்தது எங்கள் பேச்சு.  பின்பு காதலானது.  1991 முதல் 97 வரை நண்பர்களாக இருந்தோம்.   அப்புறம் ஆறுமாதம் காதலர்கள்.   அதன்பிறகுதான் திருமணம் பற்றிய முடிவுக்கு வந்தோம்.

என்னதான் நானும் அவரும் ஆறு வருடங்கள் பழகியிருந்தாலும் கல்யாணம் என்று முடிவெடுத்துவிட்ட பிறகு எனக்குள் ஒரு வித கலக்கம்.   ஒரே பயம்.   அந்த பயம்தான் என்னை கவிதை எழுத வைத்தது.   அடுத்த ஆண்டும் வசந்தம் ஆர்ப்பாட்டமாய் வரும்..என்று தொடங்கும் அந்தக்கவிதை.

ஒரு பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு வரை தந்தையின் பெயரே இனிசியல்.  திருமணத்திற்கு பிறகு கணவரின் பெயரே இனிசியல் என்பது தமிழ்வழக்கம்.   இதில் ஏன் முரண்பட்டீர்கள்?

திருமணத்துக்கு பிறகு ஆணின் பெயரில் எந்த மாற்றமும் இல்லை.  பெண்ணின் பெயரில் மட்டும் ஏன் மாற்றமிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?    தந்தை பெயர்தான் இனிஷியலாக இருக்க வேண்டும் என்பதும் ஆணாதிக்கம்.   தாய்,தந்தை பெயர்தான் பெயருக்கு முன்னால் இருக்கவேண்டும்.

அ.வெண்ணிலா என்று அடையாளப்பட்டுவிட்டதால் அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் என் மூன்று குழந்தைகளுக்கும் மு.வெ.கவின்மொழி, மு.வெ. அன்புபாரதி, மு.வெ.நிலாபாரதி என்று பெயர் வைத்துள்ளேன்.   அன்புபாரதியும் நிலாபாரதியும் இரட்டையர்கள்.

இனிசியல் குறித்து பேசியதால் நினைவுக்கு வந்தது.  ஆண்கள் - பெண் பெயரில் எழுதக்கூடாது என்று சொல்லிவருகிறீர்களே?

சமீப காலத்தில்  பெண்களின் குரலும், தலித்துகளின் குரலும், திருநங்கைகளின் குரலும், விளிம்புநிலை மக்களின் குரலும் தனித்த அடையாளங்களைக் கொண்டவை.  வரலாற்றை மீள்பார்வை செய்பவை. வரலாற்றுக்கு எதார்த்த நிலையை தருபவை.   இதில் பால் வேறுபட்டு புணைப் பெயரை சூடுதல் வரலாற்று திரிபை உண்டாக்கும்.

தமிழ் பெண் சிறுகதை எழுத்தாளர்களின் வரலாற்றை ஆவணமாக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினேன்.   1927 முதல் 2000 வரையிலான கால கட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்கள் பட்டியலை தயார் செய்து கொண்டு எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களை சந்தித்தேன்.

இவர் தன் மனைவி பெயரில் எழுதியவர்,  இவர் தன் தாயின் பெயரில் எழுதியவர் என்று பல பெயர்களை அடித்துவிட்டார் அவர்.   வல்லிக்கண்ணன் போன்ற அனுபவமிக்க எழுத்தாளரின் அந்த வழிகாட்டுதல் இல்லாதிருந்தால் என் தொகுப்பில் பிழை நேர்ந்திருக்கும். 

ஆய்வு செய்துதானே ஆவணப்படுத்த வேண்டும்.  பின்பு எப்படி வரலாற்று திரிபு ஆகும் என்று கேட்கலாம்.  சில எழுத்தாளர்களுக்கு குறிப்புகள் இருக்கு.  பல எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளே இல்லை.   இருபத்து ஏழுகளில் எழுதிய எழுத்தாளர்களின் படைப்புகளையே மிகுந்த சிரத்தையுடன் தேடவேண்டியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெயர் தேர்வும், புனைபெயரும் படைப்பாளியின் சுதந்திரம்தான்.   ஆனால்,  கறுப்பின எழுத்து, தலித் எழுத்து என்று சிலவற்றிற்கு தனித்த அடையாளம் இருக்கு.  பெயர் மாற்றி எழுதுவதால் அடையாளங்கள் வேறுவிதமாக அர்த்தத்தை தந்து விடுகின்றன.

இன்றைக்கு  ஒடுக்கப்பட்ட, கீழ்நிலைக்குத் தள்ளப்பட்ட பால்வேறுபாட்டை/இன வேறுபாட்டை அடையாளப்படுத்தும் குரல்களும் ஒலிக்கத் துவங்கியுள்ள காலத்தில் எழுதுபவன் சுயம் பற்றிய அடையாளமும் தேவைப்படுகிறது. பொதுவான இலக்கியம் படைப்பவர்கள் வரலாற்று திரிபு ஏற்பட காரணமாக இருக்கக்கூடாது.

பெண் சிறுகதை எழுத்தாளர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் எண்ணம் எப்படி வந்தது?

பெயர் சொல்லும் பிள்ளை என்பது போல் எழுத்தாளர்களின் பெயர் சொல்லும் கதைகளும் இருக்கின்றன.   சில  படைப்புகள் படைப்பாளியைப்பற்றி அறிய ஆவலைத்தூண்டும்.  சிறுகதைகளை அதிகம் படிக்கும் நான் அச்சிறுகதைகளின் ஆசிரியர்கள் பற்றிய முழு விபரங்களை அறிய விரும்பினேன்.   அதற்கான முயற்சியில் இறங்கினேன்.  இந்த தேடல் எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் அமையும் என்கிற நம்பிக்கை இருந்ததால் தேடலை தீவிரப்படுத்தினேன்.  மூன்று வருட தேடலுக்கு பிறகுதான் ‘மீதமிருக்கும் சொற்கள்’ உருவானது.

எழுத்தாளர் அனுத்தமாவுக்கு இப்போது 90வயசு.   சரியாக பேச முடியாத நிலையில் இருந்தார்.   சிரமப்பட்டுத்தான் அவரும் பேசினார்; நானும் குறிப்புகளை சேகரித்தேன். மூப்பின் காரணமாக சரியாக பேசமுடியாத நிலையிலும் காது கேளாத நிலையிலும் சுயநினைவு சரியாக இல்லாத நிலையிலும் இருந்தார் கிருத்திகா. அவரது உறவினர்களின் உதவியுடன் அவரை கொஞ்சம் கொஞ்சம் பேச வைத்தேன். இந்த தொகுப்பில் இருக்கும் பலர் இப்போது உயிருடன் இல்லை.  இந்நூல் வருவதற்கு உதவிய வல்லிக்கண்ணன், சிட்டி முதலான பெரும் படைப்பாளிகள்    இந்நூல் வெளிவந்தபோது உயிருடன் இல்லை.   மனசுக்கு கஷ்டமாக இருந்தது.

முதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் இப்போது முதியோர் இல்லத்தில் இருக்கிறாரே; சந்தித்தீர்களா?

‘மீதமிருக்கும் சொற்கள்’-க்காக அவருடன் தொலைபேசியில் தான் பேசினேன்.  இப்போது அவர் விச்ராந்தி முதியோர் இல்லத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.  பிள்ளைகள் இல்லாததால் கணவர் இறந்தபிறகு ( 2002ல்) சொந்தத்தை நம்பி இருந்திருக்கிறார்.  இருந்ததை எல்லாம் சொந்தங்கள் பிடிங்கிக்கொண்டதால் இந்த  என்பத்து மூன்று வயதில் இப்படிப்பட்ட நிலைக்கு வந்திருக்கிறார்.

இருபத்தைந்தில் திருச்சி முசிறியில் பிறந்த இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள், நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.  உப்பள மக்களின் வாழ்க்கை பற்றி எழுதிய ‘ வேருக்கு நீர்’ படைப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். அவருக்கா இந்த நிலமை என்று நினைக்கும் போது  கஷ்டமாக இருக்கு.  அவரை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.   அது வெறும் அனுதாபம் குறித்த சந்திப்பாக இருக்கக்கூடாது.   அர்த்தமுள்ள சந்திப்பாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.  மீதமிருக்கும் சொற்களில் அவரை வைத்துவிட்டாலும் இன்னும் அவரைப்பற்றிய பதிவுகள் ஏதும் பண்ணனும் என்று விரும்புகிறேன்.   

தேவதாசிகளின் போராளி  ராமாமிர்தத்தின் போராட்டங்கள் குறித்தும் வரலாற்றில் அவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என   நீங்க எழுதியிருப்பதும்  முக்கியமான பதிவு.   ராமாமிர்தம் பற்றி அறிய முற்பட்டது எப்படி?

மதிபெற்ற மைனர் அல்லது தாசிகளின் மோசவலை என்று மூவலூர் ஆ.ராமாமிர்தம் எழுதிய நாவலை படித்தேன்.  அந்த நாவல் கிட்டத்தட்ட சுயசரிதை போன்று தன் வாழ்வை அடிப்படையாகக்கொண்டு அவர் எழுதியிருக்கிறார். இந்த நாவலே அவரைப் பற்றி, தேவதாசிகளும் ராமாமிர்தத்தின் போராட்டங்களும் என்ற கட்டுரை எழுத வைத்தது.  தேவதாசிப்பெண்களிடையே விழிப்புணர்வை உண்டாக்குவதற்காக அவர்களையே உறுப்பினர்களாக கொண்ட நாகபாசத்தார் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.  இந்த சங்கமே இசை வேளாளர் சங்கம் என பெயர் மாற்றப்பட்டு இசை வேளாளர் மாநாடு,  தேவதாசிகள் மாநாடு போன்றவற்றை நடத்தியுள்ளது. 
 
தமிழகத்தில் இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்த பெண்களே தேவதாசிகளாக்கப்பட்டுள்ளனர்.  பொட்டு கட்டுதல், சுமங்கலி சடங்கு  முதலான சடங்குகளின் மூலம் ஒரு பெண் தேவதாசியாக்கப்பட்டிருக்கிறாள். 

கோயிலில் நாட்டியப்பெண்ணாகவும் தெய்வத்தின் முன்னால் இசைப்பாடல் இசைப்பவளாகவும் பூஜைக்கு தேவையான பணிகளை செய்பவளாகவும் தேவதாசிப்பெண்களின் முக்கியப்பணிகள் இருந்துள்ளன.
 
தேவதாசிப்பெண்களை இம்முறையில் இருந்து விடுவித்து அவர்களை திருமண வாழ்க்கைக்குள் கொண்டு வந்துள்ளார்.   டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் இருவரின் தொடர் முயற்சியால் தேவதாசி முறை ஒழிப்பிற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் துவங்கின.


நாட்டின் கலை கலாச்சாரத்தினை காப்பதற்கு ஒரே வழி தேவதாசி முறையை தக்க வைத்திருப்பதே என்று முட்டுக்கட்டை போட்டனர்.  இத்தனை காலம் எங்கள் வீட்டுப்பெண்கள் கலையையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றியது போதும். 

இனி கொஞ்ச காலத்திற்கு உங்கள் வீட்டு பெண்களை தேவதாசிகளாக்குங்கள் என்று முத்துலட்சுமியை சட்டமன்றத்தில் பேசவைத்தவர் மூவலூர் ராமாமிர்தம்.  தேவதாசிகள் முறை ஒழிப்பு போராட்டத்தில் ராமாமிர்தம் முக்கிய பங்கு வகித்தார்.  அவரின் போராட்டத்திற்கு முத்துலட்சுமியும் உறுதுணையாக இருந்துள்ளார்.   ஆனால் வரலாற்றில் முத்துலட்சுமிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ராமாமிர்தத்துக்கு தரவில்லை என்பதுதான் வேதனை.


இசை வேளாளப்பெண்களின் தொழிலாக இருந்த பரதமும் நாட்டியமும் எப்படி மேல் தட்டு நாகரிகமானது என்ற கேள்விக்குறியோடு அந்த கட்டுரையை நிறைவு செய்திருந்தீர்கள்.  எப்படி என்பதற்கான தேடல் தொடர்ந்ததா?

இன்று பரதநாட்டியம் என்றால் ’கலாஷேத்ரா’, கலாஷேத்ரா என்றால் பரதநாட்டியம் என்கிறார்கள்.  இந்த கலாஷேத்ராவை நிறுவியவர் அமரர் ருக்மணி அருண்டேல்.    இவருடைய காலத்திற்கு பிறகுதான் இசை வேளாளப்பெண்களின் பரதநாட்டியம் மேல் தட்டு மக்களின் கலையானது. குறிப்பாக பார்ப்பனப் பெண்களின் கலையானது.

பார்ப்பனப் பெண்ணான ருக்மணி அருண்டேல் பரதநாட்டியத்தின் மேல் ஆர்வம் கொண்டபோது,   தேவதாசிகளின் கலையின் மேல் நீ ஆர்வம் கொள்வதா என்று  பார்ப்பனர்களால் எதிர்ப்பு கிளம்பியது.  பல எதிர்ப்புகளையும் மீறி அந்தக்கலையை கற்றுக்கொண்டதோடு அல்லாமல் அதை கற்றுக்கொடுக்கவும் ஆரம்பித்தார்.   இப்படித்தான் இது மேல் தட்டு கலையாக மாறியிருக்கிறது.  பொதுவாக இது மக்களுக்கான கலை என்று அடையாளப்படுதாமல் உயர் சாதிக்கென்று ஆக்கிவிட்டார்.  அதுதான் கொஞ்சம் நெருடுகிறது.

இதைப்பற்றி பேசும்போது இது சம்பந்தமான வருத்தத்தையும் சொல்லவேண்டும்.   தேவதாசி ஒழிப்பு போராட்டத்தால் அரசு செவிசாய்த்தது.    கோயில்களில் இருந்து தேவதாசிகளை விலக்கி வைத்து தேவதாசிகளுக்கு சொந்தமான நிலங்களை கட்டாயம் தேவதாசிகளிடம் வழங்கவேண்டும் என்று அரசு சட்டம் போட்டது.   ஆனால் அச்சட்டம் முறையாக நடைமுறைப் படுத்தவில்லை. 

கோயில் நிலங்களை தங்கள் வசம் வைத்திருந்த பிராமணர்களும் பிறசாதியினரும் தேவதாசிகளுக்கு நிலங்களை வழங்கவில்லை.  நிலவருவாய் அளிப்பதையும் நிறுத்திவிட்டனர்.   பிழைக்க வழியின்றி சமூக புறக்கணிப்போடு  பல தேவதாசிகளின் வாழ்க்கை கேள்விக்குறியானது.  இதனால் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டி இருவரையும்  தேவதாசிகளின் முன் குற்றவாளிகள் போல் ஆகிவிட்டார்கள்.  பழைய வாழ்வே நல்லாதானே இருந்தது... இப்படி நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிட்டாளே நம் குலத்தை அழிக்க பிறந்தவள்... என்று ராமாமிர்தத்தை தீட்டித்தீர்த்துள்ளார்கள் தேவதாசிப்பெண்கள்.
 
அடுத்து உங்களின் படைப்பு என்ன?

சாகித்ய அகாதமிக்காக ‘கனவும் விடியும்’எழுதியிருக்கிறேன்.  அடுத்து, கைத்தறி நெசவு  மக்களின் கையொடிந்து போன வாழ்க்கையை பதிவு செய்யும் முயற்சியில் மும்முரமாயிருக்கிறேன்.

 காஞ்சீபுரம் பக்கம்தான் என் ஊர் வந்தவாசி ’அம்மையப்பட்டு’ .  கைத்தறி நெசவாளர்களின்  வாழ்க்கையை நன்கு அறிவேன்.   பொதுவாகவே மண்ணின் மரபு மாறிப்போச்சு.  அந்த மாற்றங்களும் அதில் பதிவாகும்.  கம்ப்யூட்டர் காலம் என்னவெல்லாமோ செய்துவிட்டதால் கைநெசவு இல்லாமல் போய்விட்டது.    கைநெசவு கைவிட்டதால் பிழைப்பு தேடி நகரம் சென்று நரகவேதனையை அனுபவிக்கும் அந்த மக்களின் பதிவுக்காக நான் பல காலம் செலவழித்துவருகிறேன்.

படிப்பது, படைப்பது ஒரு பக்கம் இருந்தாலும் பாடவேண்டும்(நன்றாக) என்பது நெடுநாள் ஆசை. அதற்காக வாய்ப்பாடு கற்று வருகிறேன்.   கைத்தறி நெசவு மக்கள்  பதிவுக்கு பிறகு எனது படைப்பு தனிபாடல் தொகுப்பாக இருக்கலாம்.  ஆசிரியையாகவும் இருப்பதால் நினைத்த நேரத்தில் எதையும் செய்ய முடியவில்லை.  

உங்க மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் பற்றி சொல்லமுடியுமா?

 சுற்றி வளைத்து எங்கே வருகிறீர்கள் என்பது புரிகிறது. ( ஒரு சிறிய சிரிப்புக்கு பின் )  ஆசிரியர் என்பதற்கு அர்த்தம் தெரியும். அதன்படி நடக்கிறேன்.   ஆனால் ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆரம்ப காலங்களில் அழுது அடம்பிடித்துக் கொண்டுதான் பள்ளிக்கு போவேன். 

இப்போது எம்.ஏ.உளவியல், பி.எஸ்.சி.கணிதம், எம்.எட். படித்திருக்கிறேன்.  அப்போது  பத்தாம் வகுப்பு படித்ததும் அப்பாவும், அம்மாவும்(வசந்தா) ஆசிரியர் பயிற்சிக்கு படிக்கவைத்தார்கள். 

பதினெட்டு வயதிலேயே ஆசிரியர் ஆகிவிட்டேன். வேண்டா வெறுப்பாகத்தான் ஆசிரியர் பொறுப்பேற்றேன்.   ஒவ்வொரு நாட்டின் தலைவிதியும் வகுப்பறையில் தான் நிர்ணயிக்கப்படுகின்றன  என்று நேரு சொல்வதை மெல்ல மெல்ல உணர்ந்தேன். நான் படித்த அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலேயே  இப்போது பணியாற்றுகிறேன்..’ என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வெண்ஸ் யாரு போன்ல....என்ற குரல்.   ’அவர் வந்திருக்கிறார்’   என்றபடி தொடர்ந்தார்.


என் வீட்டுல நான் ஒரே பொண்ணு.  அப்படி இருந்தும் எனக்கு செல்லப்பெயர் கிடையாது.  என்னம்மா என்னை இத்தனை பெயர் சொல்லி அழைக்கறீங்க என்று என் மகள்கள் கேட்பார்கள்.  அத்தனை செல்லப்பெயர்களில் அவர்களை அழைப்பேன்.   அது ஏன் என்றே தெரியவில்லை எனக்கு செல்லப்பெயர் வைக்கவில்லை.  அதுக்கு வட்டியாகத்தான் அவர் வெண்ஸ்..வெண்ஸ்... என்று கூப்பிடுகிறார்’ என்றவர் பேச்சை நிறுத்தினார்.

 இதைப்போய்   எதுக்கு சொல்லனும் என்று ஜாடையொளி சிந்தியிருப்பாரா  வெண்ணிலாவின் அவர். ’ம்..இருக்கட்டும்’ என்று அங்கே பதில் சொல்லிவிட்டு,    ’என் மேல் அவருக்கு ரொம்ப பிரியம்....’  என்று இங்கே சொல்லிவிட்டு மீண்டும் ஒரு சிறிய சிரிப்பு.     வெளியே இப்படிச் சொன்னாலும் இன்னும் தன்  கணவரின் காதலை முழுமையாக பெறவில்லை வெண்ணிலா.  

சாப்பிடும் சோறு
பேசும் பேச்சு
சிரிக்கும் சிரிப்பு
எல்லாம் குழந்தைக்காக என
கரு சுமந்து...

நாளை
உன்னோட வண்டியில்
முன்நின்று சிரித்து வர
உன் இனிசியல் போட்டுக்கொள்ள
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்
நான்கைந்து மணிநேரம்
ரத்த வெள்ளத்தில் மிதந்து

கேட்டால் கிடைக்கும்தான்
உன் முத்தம்
உன் அரவணைப்பு
உன் ஆறுதல்
பச்சப்புள்ள கேட்டா
பாலூட்டுகிறோம்

கரு சுமந்து
குழந்தை தவமிருக்கும் பெண்களை
சுமக்க
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.

--
என்று அவர் எழுதியிருக்கும் கவிதை அதைத்தான் உணர்த்துகிறது.

                    எழுத்தாக்கம் :  கதிரவன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [23]
Name : K.P.JAMES Date :1/21/2014 1:45:15 PM
அற்புதமான கவிதை.
Name : dr.anbushiva Date :10/7/2013 2:04:11 PM
அற்புதமான கவிதை
Name : S Manikantan Date :10/8/2012 11:11:51 AM
பெண்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு, ஆனால் அதை தவறுதலாக வெளிப்படுத்துவது மிக கேவலமான ஒன்று. இயற்க்கை கொடுத்திருப்பதை வைத்து தலை கணம் கொள்வது மிக மிக அறிவுகெட்ட தனம், விதை பை இல்லாமல் கரு பைக்கு ஒரு முக்கியத்துவமும் இல்லை. இதை அவர் புரிந்துகொண்டால் அவருடைய அறியாமையும் / அகம்பாவமும் அகலும்.
Name : kodisvaran, Malaysia Date :9/10/2012 5:45:56 PM
சிறப்பான நேர்காணல். உங்கள் மாணவர்களின் தலைவிதியை உங்கள் வகுப்பறைகளில் நீங்கள் நிர்ணய க்கின்றீர்கள். பிரதமர் நேரு சொன்னதை நீங்கள் பின்பற்றுவதற்காக மகிழ்ச்சியடைகிறேன். தொடரட்டும் உங்கள் பணி.
Name : sriviji Date :9/7/2012 9:39:16 AM
சில தேடல்களை விதைத்துச்சென்ற நல்லதொரு நேர்காணல்.
Name : Ravi-Swiss Date :8/21/2012 2:35:38 AM
வந்தவாசி இலும் புதியதோர் ஆகாஜமா''? இப்படி ஓர் வெண்ணிலாவை காண்பிக்க' மிக சிறப்பான நேர்காணல்' தவிர'நானும் முன்று வருடத்துக்கு முன்பு' இதே (வந்த வாசி) ரோட்டால் சென்று இருக்கின்றேன்' சிதம்பரம் கோவை தஞ்சாவூர் கன்னியாகுமரி செல்ல பாண்டிச்சேரி ரோட்டால் சென்றோம்' இவரின் பதிவுகள் இன்னும் பல வெளிவரவேண்டும்'காலம் குறிகியது' இதில் மனிதர்கள் என்ன பண்ணவேண்டுமோ' அதனை உடன் பண்ணவேண்டும்'இதில் எனக்குப் பிடித்தது' தேவதாசி முறைமை' உண்மையில் 2000 ஆண்டுக்கு கிட்ட மதுரை ஆண்ட பாண்டிய மன்னர்களின் அரசவைக்குள்' ஓர் கவுரவ பாத்திரமாகவே இப்பெண்கள் பணி செய்தார்கள்' ஆரியர்கள் உள்ளே நுழைந்து' மன்னர்களுக்கு புலவர்களாக ஆலோசகர்களாக இருந்து' இவர்களை தேவதாசிகளாக்கி'இராணுவத்தை இப்போ தமிழக மீனவர்களாக்கி விட்டார்கள்'இவர்கள் ஆரியர்களுக்கு மட்டுமல்ல' வந்து போனவர்களுக்கு எல்லாம் பிரியாணி ஆக்கப்பட்டார்கள்'இப்போதும் இந்தியாவில் கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருக்கின்றது' இதனை தமிழகத்தில் தடை பண்ணியது போன்று' அங்கும் தடை வர முஜலவேண்டும்' சரி ராமாவை திட்டிய தேவதாசிகள்' பின்பு என்ன பண்ணினார்கள்' என்பதனை சகோதரி வெண்ணிலா குறிப்பிடவும்'
Name : m.raju Date :8/19/2012 7:37:04 AM
ஆணுக்கு கருப்பை கிடைக்குமென்றால் sari நீங்கள் என்ன செய்விர்கள்
Name : nandavanamchandrasekaran Date :8/13/2012 5:09:35 PM
திருப்தியான நேர்காணல் வெண்ணிலாவுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்
Name : subramani Date :7/24/2012 3:55:00 PM
இப்போ சொன்னீங்களே இதை ஒரு கல்வெட்டில் செதுக்கி கையில் பிடித்துக்கொண்டு சென்னையில் கடற்கரையோரம் உட்கார்ந்து கொள்ளுங்கள்.உங்களுக்கு பின்னால் வரும் தலைமுறை இதைப்படித்து தெரிந்துகொள்ளட்டும்.
Name : nkulandhaisamy Date :7/18/2012 8:51:31 PM
ஆணுக்கு கருப்பை கிடைக்குமென்றால் அதை பெற்றுக்கொள்ளும் முதல் ஆளாக நான் இருப்பேன்!
Name : Carlos Date :6/29/2012 5:19:02 AM
Just cause it's smilpe doesn't mean it's not super helpful.
Name : thenpathiyan Date :6/27/2012 10:21:40 AM
அக்கா குலைக்கிற நாய் கடிக்காது .உண்மைய சொன்னால் இங்கே பல பேருக்கு பொறுக்காது.. அதனால் நீங்க கவலை பட மாட்டீர்கள் என்றும் தெரியும் உங்கள் கருத்துக்கள் இன்றைய பெண்களின் வாழ்வை மேம்படுத்த உற்ற துணையாக இருக்க விரும்பி உங்களிடம் இன்னும் எதிர் பார்க்கிறேன்..இன்சியல் விஷயம் மிக மிக வரவேற்க வேண்டிய விஷயம்..வாழ்த்துக்கள் ...
Name : chandrasekar Date :6/25/2012 7:10:27 PM
சிந்திக்க வைக்கும் பதில்கள். கருத்தாழம் உள்ள சொல்லாடல். கற்பனைகளையே எழுதி குவிக்கும் கவின்ஞர்களுக்கு மத்தியில், கவிதையும் இருக்கும் அதில் உண்மையும் இருக்கும் என்ற நேர்த்தி பாராட்டத்தக்கது. நிறைய எழுதுங்கள் படிக்கும் ஆயிரம் பேரில் இரண்டு பேராவது தாயில் மகத்துவத்தை புரிந்து சாகட்டும். வாழ்க வளர்க. நன்றி.
Name : tamil vanan Date :6/21/2012 1:25:39 AM
எந்த பெண்ணுக்கு உள்ளது விந்துப் பை? இப்படியெல்லாம் கேட்பது தான் கவிதையா?
Name : tamil vanan Date :6/18/2012 9:52:10 PM
கருத்துள்ள வினா. ஆனால் தந்தை பெரியார் பெண்கள் அந்த கருப்பையை எடுதுதுவிட்டுதான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னதாக ஞாபகம். அப்படியே செய்து விட்டால் அப்புறம் இந்த வினாவிற்கே தேவை இல்லையே
Name : B.S.Mani Date :6/13/2012 11:20:25 PM
எப்போது பெண்ணுக்கு சுதந்திரம் என்று பேசி பேசி தண்ணீர் தெளித்து விட்டீர்களோ அன்றிலிருந்து ஆரம்பமானது தானே இந்த விவாகரத்துக்கள் ! எந்த பெண் கணவனுக்கோ அல்லது மாமனார் மாமியாருக்கோ அடங்கி வாழ்கிரதுகள். வெறும் கருப்பை இருக்கிறது என்பதற்காக தலைகனம் பிடித்து ஆடக்கூடாது ! அதுவும் திரு பிள்ளை சொன்னது போல் விதை பை இல்லாமல் வேகாது.......
Name : ganabathy Date :6/7/2012 12:37:04 PM
ஆணின் பங்களிப்பில்லாமல் ஒரு பெண் குழந்தையை பெற்றிட முடியாது. ஒரு குழந்தையின் தாயை யாரும் அறிமுகம் செய்ய தேவையில்லை. காரணம் அவர் தான் தனது குழந்தையை பத்துமாதம் சுமந்து தேரை போன்று ஊர்வலம் வந்தவர். ஆனால் ஒரு குழந்தையின் தந்தையை அந்த குழந்தையின் தாயை தவிர வேறு யாராலும் அறிமுகம் செய்து வைக்க முடியாது. இன்னார் மூலமாக தான் கருதரித்தேன் என்பதற்காக தனது கணவர் பெயரை இனிசியலாக ஒரு பெண் வைப்பது, இன்னார்தான் இந்த குழந்தையின் தந்தை என்பதை உரைக்க குழந்தைக்கும் அதே ஆணின் பெயரை இனிசியலாக வைப்பதும் வழக்கமாகும். ஆனால் இன்று “காம சுதந்திரம்” என்ற ஒன்றை மட்டுமே உள்ளார்ந்த வேட்கையாக கொண்டு “பெண் சுதந்திரம்” என்று புற உலகில் போலியாக பாவித்து கொண்டு கள்ள தனம் செய்யும் காமுகிகள் மட்டுமே கணவனது பெயரை இனிசியலாக தனக்கோ தனது குழந்தைக்கோ வைக்க மறுத்து வருகிறார்கள். காரணம் இவர்கள் தனக்கு ஒரு கணவன் மட்டுமே இருக்க விரும்பாதவர்கள். தனது குழந்தைக்கு யார் தந்தை என்பதை இவர்களுக்கே தெரிய வாய்ப்பில்லாதவர்கள். சுயநல எண்ணம் அறவே இல்லாத, அர்ப்பணிப்பு உணர்வு உள்ள, அன்பு ஆன்மாக்களை கொண்ட தெய்வங
Name : ganabathy Date :6/7/2012 12:04:21 PM
ஆதிகாலத்தில் சர்வசுதந்திரமாக சுற்றி திரிந்த ஆண் சமூகம் பெண் இனத்தை பலவீனமானவர்களாக கருதியதால் பெண்களையும், குடும்பத்தையும் காக்கும் பொறுப்புகளை தாங்களே ஏற்று இன்று வரை வாழ்க்கை போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.. பொருளாதாரம் என்னும் பெயரில் அகில உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள வியாபார உலகம், தனது வியாபாரத்தின் நுகர்வோராக பெண் இனத்தை பயன்படுத்த வசதியாக அவிழ்த்துவிடும் புழுகு மூட்டைகள் தான் “ ஆண் ஆதிக்கம்”, “பெண் அடிமை” என்னும் புளுகு மூட்டைகள். இந்த புளுகு மூட்டைகளை ஆதரிப்பவர்களே புத்திசாலிகள், புரட்சியாளர்கள் என்பன போன்ற மாயையை ஏற்படுத்தியுள்ளனர். நாட்டு நலனில் உண்மையான அக்கறை இல்லாத ஊழல் அரசியல்வாதிகளும், காம பித்து பிடித்த பெண்ணிய வாதிகளும் தங்களை புரட்சியாலர்களாகவும்,புத்திசாலிகளாகவும் மட்டுமே நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பியும், தனிப்பட்ட ஆதாயத்திர்க்காகவும் “ ஆண் ஆதிக்கம், பெண் அடிமை “ என்னும் இல்லாத ஆடையை அணிந்துகொண்டு நிர்வாணமாக உலாவருகிரார்கள். ஊடகங்களும்,பேச்சாளர்களும் அரசியல்வாதிகளை அப்பட்டமாக அறிந்த நிலையிலும் கூட தங்களை புத்திசாலிகள்
Name : ganabathy Date :6/7/2012 10:19:49 AM
ஆதிகாலத்தில் சர்வசுதந்திரமாக சுற்றி திரிந்த ஆண் சமூகம் பெண் இனத்தை பலவீனமானவர்களாக கருதியதால் பெண்களையும், குடும்பத்தையும் காக்கும் பொறுப்புகளை தாங்களே ஏற்று இன்று வரை வாழ்க்கை போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.. பொருளாதாரம் என்னும் பெயரில் அகில உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள வியாபார உலகம், தனது வியாபாரத்தின் நுகர்வோராக பெண் இனத்தை பயன்படுத்த வசதியாக அவிழ்த்துவிடும் புழுகு மூட்டைகள் தான் “ ஆண் ஆதிக்கம்”, “பெண் அடிமை” என்னும் புளுகு மூட்டைகள். இந்த புளுகு மூட்டைகளை ஆதரிப்பவர்களே புத்திசாலிகள், புரட்சியாளர்கள் என்பன போன்ற மாயையை ஏற்படுத்தியுள்ளனர். நாட்டு நலனில் உண்மையான அக்கறை இல்லாத ஊழல் அரசியல்வாதிகளும், காம பித்து பிடித்த பெண்ணிய வாதிகளும் தங்களை புரட்சியாலர்களாகவும்,புத்திசாலிகளாகவும் மட்டுமே நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பியும், தனிப்பட்ட ஆதாயத்திர்க்காகவும் “ ஆண் ஆதிக்கம், பெண் அடிமை “ என்னும் இல்லாத ஆடையை அணிந்துகொண்டு நிர்வாணமாக உலாவருகிரார்கள். ஊடகங்களும்,பேச்சாளர்களும் அரசியல்வாதிகளை அப்பட்டமாக அறிந்த நிலையிலும் கூட தங்களை புத்திசாலிகள்
Name : mallaiyaa Date :5/30/2012 12:05:43 AM
உங்களை சந்திக்கணும் அக்கா உங்க கிட்ட நிறைய பேசணும் என் எனக்கு உங்க தொலைபேசி எண் வேணும் அக்கா அன்புடன் மல்லையா
Name : pillai Date :5/1/2012 2:27:38 PM
அற்புதமான கவிதை ஆக்கம் தோழி ! "எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை !.....அனல் விதைப்பை இல்லை என்றால் கருப்பைக்கு உள்ளது என்ன பெருமை !!!!
Name : rajkumar Date :4/30/2012 6:59:13 PM
கவிதை எழுதுவதை மட்டும் செய்யவும்... சும்மா இனிசியலை மாத்துறேன் என்று ஓவரா புரட்சி பண்ண வேண்டாம்...
Name : wasim askar Date :4/30/2012 4:46:13 PM
ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா என்ற பொதுவான கேள்வி பலரிடையே எழுவதுண்டு. பெண்களில் அனேகர் திருமணமான பின்னர் தமது கணவரின் பெயரைத் தம் பெயரோடு இணைத்து திருமதி 'இன்னார்' என்று அடையாளப்படுத்திக் கொள்வதை நாம் நடைமுறையில் காண்கின்றோம். 'அது கூடாது' என்று சிலரும் 'இல்லை, கூடும்' என்று சிலரும் சொல்வதை நாம் செவியுற்றுள்ளோம். ஒரு பெண் தனது கணவனின் பெயரை இணைத்து அழைக்கக்கூடாது. மாறாக, தனது தந்தையின் பெயரை இணைத்தே அழைத்தல் வேண்டும் என்று கூறுவோர் தமது கூற்றுக்கு ஆதாரமாக, "அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்' என்றுதான் அல் குர்ஆன் கூறுகின்றது" என்று நிறுவுகின்றனர். ஆனால், இந்த அல்குர்ஆன் வசனத்தை முழுமையாகவும், அதற்கு முந்தைய வசனத்தோடு சேர்த்தும் பார்ப்பதோடு மட்டுமின்றி, அந்த இறைவசனங்கள் அருளப்பட்ட பின்னணியை விளக்கும் ஹதீஸ்களையும் பற்றி சற்று விரிவாக ஆராய்ந்து பார்ப்போம். "எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில் எவரையு