நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :24, செப்டம்பர் 2012(17:5 IST)
மாற்றம் செய்த நாள் :24, செப்டம்பர் 2012(17:5 IST)
           ண்ணீர், மானஸரோவர், அப்பாவின் சிநேகிதன் உட்பட 8 நாவல்கள், 200 சிறுகதைகள், 15 கட்டுரை நூல்கள், மொழிபெயர்ப்புகள் என, 45 ஆண்டுகளாக, தமிழ்ப் படைப்பிலக்கியத்தில், தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர் அசோகமித்திரன்.

சாகித்திய அகாதமி (1996) சாரல், இலக்கியச் சிந்தனை, அக்சரா என ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கும் அசோகமித்திரனின் 82வது பிறந்த நாள் விழாவை விருட்சம் இலக்கிய அமைப்பு, 22.09.2012 சனிக்கிழமை மாலை சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் சிறப்பாக நடத்தியது.அசோகமித்திரன் 82' விழாவில் பங்கேற்று, வாழ்த்திய, பாராட்டிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கலின் உரையில் இருந்து...
கி.அ.சச்சிதானந்தம்: அசோக மித்திரன் ஆழமானவர்; ஆரவாரமற்றவர். அவரைப்போலவே அவருடைய எழுத்தும் ஆழமானது: ஆரவாரமற்றது.

ஞானக் கூத்தன்: அசோகமித்திரன் தனக்கென ஒரு புனைவியலை, அழகியலைக் கொண்டிருப்பவர். எழுதப்படும் எதைப்பற்றியும் முழுமையான விபரங்களைச் சேகரிப்பார். அவற்றில் அவசியமானதை மட்டுமே பயன்படுத்துவார்.

சா.கந்தசாமி: நல்ல எழுத்துகள், படைப்புகள் பழையதாவது இல்லை. எத்தனை ஆண்டுகளானாலும் புத்தம் புதிதாகவே இருக்கும். திருக்குறளும், புத்தரின் தம்மபதமும் இன்றைக்கும் புத்தம் புதிதாகவே இருக்கின்றன. அதைப்போலவே அசோகமித்திரனின் படைப்புகளும் எப்போதும் புதிதாகவே இருக்கும். அசோக மித்திரன் சர்வதேச தமிழ் எழுத்தாளர். முட்டாள் என்று என்னால் சொல்லப்படாத, மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் அசோகமித்திரனும் ஒருவர்.

அம்ஷன் குமார்: அசோக மித்திரன் எதிலும் தன்னை முன்னிறுத்திச் சொல்லாதவர். எப்போதும் தன்னை இழந்துவிடாதவர்.

பத்ரி: ரயில், பஸ் மூலம் பயணம் செய்வதைக் காட்டிலும் அசோகமித்திரனின் கவிதைகள் மூலம் நிறைய டிராவல் செய்துகொண்டிருக்கிறேன். என்னைக் கண்கலங்க வைப்பவை இவருடைய கதைகள்.

மனுஷ்யபுத்திரன்: தனது எழுத்துகள் மூலம், வாசகர்களிடம் மானசீக நெருக்கத்தை உண்டாக்கி வருபவர் அசோகமித்திரன். நவீன தமிழ் இலக்கியத்தில் இவருடைய நுட்பமும், அழகும், ஆழமும் நீண்டவை. கவிதைக்குப் பாரதி, உரைநடைக்கு அசோகமித்திரன்.

தேவிபாரதி: எழுத்தாளனுக்கு தமிழ்ச் சமூகம் ஏதும் செய்வதில்லை. எழுத்தைக் கொண்டு வாழ முடியாது. தமிழில் எழுத்தாளனாக இருப்பது பெரும் தண்டனை. வாழ்க்கையை பெரும் சவாலாகத்தான் எதிர்கொண்டிருக்கிறார் அசோகமித்திரன். எழுத்தாளர்களை பெருமைப்படுத்தும் எழுத்தாளர் இவர்.

கல்யாணராமன்: அசோகமித்திரனின் எழுத்தை தமிழில் படிக்கும் போது எளிமையாகத்தான் தோன்றும். ஆனால் மொழிபெயர்ப்பது அவ்வளவு எளிதல்ல. சிக்கலான மனித நிலைப்பற்றி மிக ஆழமாக எழுதுபவர் இவர். ஒரு சொல்லுக்கும் அடுத்த சொல்லுக்கும் இடையில் அதல பாதாலமாக இருக்கும். அதை வேறு மொழியில் கொண்டு வருவது ரொம்பக் கஷ்டம். கஷ்டப்பட்டுத்தான் அசோகமித்திரனின் படைப்புகளை மொழி மாற்றம் செய்கிறேன்.

தொகுப்பு: ஆறாவயல் பெரியய்யா
படங்கள் : ஸ்டாலின்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]
Name : jagan Date :9/25/2012 10:37:21 AM
அருமையான தொகுப்பு