நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :19, நவம்பர் 2012(10:49 IST)
மாற்றம் செய்த நாள் :19, நவம்பர் 2012(10:49 IST)

      விக்கோ அப்துல்ரகுமான் கடந்த 9-ந் தேதி 75-ல் இருந்து 76-ல் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவரது பிறந்த நாளை அவரது முன்னாள் மாணவர்கள் வாணியம்பாடியில் வித்தியாசமாகக் கொண்டாட இருக்கிறார்கள் என நம் காதுக்குத் தகவல் வர, அங்குள்ள இஸ் லாமியக் கல்லூரியில் ஆஜரானோம். முகப்பில் ‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழாவிற்கு வரும் உங்களை வரவேற்கிறோம். சிறப்புரை கவிஞர் சிற்பி’என்ற பேனர் நம்மை வரவேற்றது.

கோலாகலமாகக் காணப்பட்ட அந்த பெரிய வகுப்பறைக்குள் நுழைந்தோம். நூற்றுக்கணக்கில் கூடியிருந்த தலைநரைத்த இளைஞர்கள், தங்களுக்குள் கடந்தகால அனுபவங்களைப் பகிர்ந்தபடி, வாசல் பக்கம் பார்வையை செலுத்திக்கொண் டிருந்தனர். அவர்களில் "ஆயிரம் பூக்கள் மலரட்டும்'’உட்பட பல படங்களை இயக் கிய திரைப்பட இயக்குநர் ராமதாஸும் இருக்க, அவரை நெருங்கினோம். ஏக உற்சாகத்தில் இருந்த அவர் ""இது வாழ்க்கையில் மறக்க முடியாத கல்வெட்டு நாள். என் ஆசானும் கவிதை உலகின் பிதாமகனுமான கவிக்கோவிடம், மீண்டும் வகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்கும் வாய்ப்பு எங்களுக்கு இன்று கிடைக்கப் போகிறது. அவரைபோல் பாடம் நடத்த யாராலும் முடியாது. என் எழுத்துக்களைப் பார்த்த அவர், "உனக்கு கவிதை நல்லா வரும்' என்று வாழ்த்தியதோடு, ’இளம் பிறை’என்ற புனைபெயரையும் எனக்கு சூட்டினார். படித்து முடித்தபின் எனக்கு அரசாங்க வேலை கிடைத்தது. கவிக்கோவோ, "நீ திரையுலகத்துக்குப் போ. உனக்கு எதிர்காலம் இருக்கிறது' என்றார். அதே போல் திரைத்துறைக்கு வந்தேன். நல்ல படங்களையும் பண்ணிவிட்டேன். கவிக்கோ ஒரு தமிழ்க்கடல். தீர்க்கமான ஞானி''’ என்றார் பரவசமாய். 

திருவண்ணாமலையில் இருந்து வந்திருந்த எல்.ஐ.சி. அதிகாரி அரசுவோ, ""அவரது ‘நேயர் விருப் பம்’என்ற கவிதைத் தொகுப்பின் பெயரைத்தான் நான் என் அலுவலகத்திற்கு வைத்திருக்கிறேன். "கவி ராத்திரி'’என்ற ஒன்றை உருவாக்கி எங்களையெல்லாம் கவிதை வாசிக்க வைத்து அழகு பார்த்தவர் அவர். "ஏதேன்' படைப்பிலக்கியப் பட்டறையை உருவாக்கி னார். "ஏதேன் பிலிம் சொஸைட்டி' என்ற அமைப் பைத் தொடங்கி, உலகின் சிறந்த திரைப்படங்களை எல்லாம் எங்களைப் பார்க்க வைத்து எங்களை விசாலப்படுத் தினார். அந்த நாட்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கம் பிறக்கிறது''’என்றார் நெகிழ்ச்சியாய்.

வழக்கறிஞர் ராமனும் தொழிலதிபர் கிருஷ் ணனும் ""கவிக்கோவைப் போல் துணிச்சலான ஆளைப் பார்க்க முடியாது. கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தப்ப, அவரை ஒரு கவியரங்கத்துக்காக இங்கே அழைத்து வந்தார் கவிக்கோ. அந்த சமயத்தில் கலைஞர், ’இந்திராணி இந்திரா காந்தின்னு’ விமர்சித்திருந்ததால், கலை ஞரைத் தாக்க காங்கிரஸ்காரர்கள் காத்திருந்தார்கள். கவிக்கோவோ கலைஞரை மாணவர்கள் புடைசூழ கம்பீரமாக அழைத்துவந்து மேடை யேற்றினார். அந்த நினைவுகள் இப்போதும் நெஞ்சில் ஈரமாக இருக்கிறது''’என்றனர் பூரிப்போடு. ’"வந்துட்டார் போலிருக்கு. கார் சத்தம் கேட்டுகுது'’என்று குரல் கொடுத்த ஆடிட்டர் ஷாஜகான், நம்மிடம் ""நான் அவர் வகுப்பு மாணவன் கிடையாது. இவர் தமிழ்ப் பாடம் நடத்தும்போது எனது காமர்ஸ் வகுப்பைப் புறக் கணிச்சிட்டு அவர் வகுப்புக்கு ஓடிவந்து விடுவேன். அவர் பாடம் நடத்டுவதே சங்கீத ஆலாபனைபோல் இருக்கும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே...
பேராசிரியர் அப்துல்காதர், கவிக்கோவை வரவேற்று அழைத்து வந்தார். அவரது முன்னாள் மாணவர்கள் எல்லோரும் எழுந்து வணக்கம் செலுத்திவிட்டு, மெலிதாகக் கைதட்ட, எல்லோரையும் வணங்கியபடியே தனக்காகப் போடப்பட்ட அரியாசனத்தில் அமர்ந்தார் கவிக்கோ. கவிஞர் சிற்பியும் அறிவுமதியும் உள்ளே வந்து அமர்ந்தனர். முன்னாள் மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள, ஒவ்வொருவரையும் கூர்ந்து கவனித்து நெகிழ்ந்தார் கவிக்கோ. எல்லோரும் சால்வை மாலைகளோடு எழ, ’""முதல்ல பாடம். இலக்கியவாதி கள் திரண்டு அழைத்திருந்தால்கூட வந்திருக்க மாட்டேன். என் மாணவர்களான நீங்கள் அழைத்ததும், உங்களைக் காணும் ஆவலில் ஓடி வந்துவிட்டேன்''’ என்றார் கவிக்கோ.

தமிழுக்கு செம்மொழித் தகுதி கிடைத்திருப்பது சரியா? என்ற தலைப்பில் பாடம் எடுக்கத் தொடங்கிய கவிக்கோ ‘""தமிழ் மொழியின் பெருமை நம் தமிழர் களுக்கே முழுமையாகத் தெரியவில்லை. உலகிலேயே உயிர் எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து என தமிழ்மொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் எழுத் துக்கள் பகுக்கப்படவில்லை. உயிர்போல உடல்போல, உயிரும் உடலும் போல நம் மூதாதையர்கள் தமிழ் மொழியை நேசித்ததற்கு அடையாளம்தான் இது. தமிழ் முனிவனான அகத்தியன் ஏராளமான தமிழ்ச்சொற்களை உருவாக்கியவன். குமரிக் கண்டத்தில்தான் முதல் மனிதன் தோன்றினான். அவன் பேசிய முதல் மொழி தமிழ். அவனது நாகரிகம்தான் முதல் நாகரிகம். இதை மேம்போக்காகச் சொல்லவில்லை. பலமொழி இலக்கியங் களை ஆராய்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். தமிழுக்கு செம்மொழித் தகுதி இல்லையென்றால் வேறு எந்த மொழிக்கு அந்தத் தகுதி இருக்க முடியும்? எனது இந்த ஆராய்சிக்காகவே எனக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்''’ என்று அவர் குபீர் சிரிப்பு சிரிக்க, ‘""அய்யா நீங்கள் வேடிக் கையாக சொல் கிறீர்கள். உண்மையிலேயே அதற்கு தகுதி படைத்தவர் நீங்கள்''’என்றனர் பலரும். கவிக்கோவின் பாடத்தைப் பலரும் குறிப்பு எடுத்தனர்.

இதன்பின் சிற்பி எழுந்தார். ""எங்கள் கவிக்கோ கல்லூரிக்கு வெளியிலும் அறிவுமதி, அப்துல்காதர் போன்ற இலக் கியப் பறவைகளை உருவாக்கியவர். ரகுமான் பிரபஞ்சத்தையே அடைகாக்கும் ஞானப்பறவை. என்னைப் பொறுத்தவரை பாரதிக்குப் பின் மகாகவிஞன் என்றால் அது கவிக்கோதான். 

அவரது எழுத்துகள் வாய்திறந்து பேசக்கூடியவை. தனது மௌனங்களால் யோசிக்க வைப்பவை''’என புகழாரம் சூட் டினார். முன்னாள் மாணவர்களின் கவிதைப் பட்டயத்தை அறிவுமதி வாசித் துக் கொடுத்தார். சால்வைகள், மாலைகள் என்று அணிவித்து அவரை அனைவரும் கௌரவப்படுத்தினர். நக்கீரன் சார்பில் நாம் கவிக்கோவிற்கு வாழ்த்துகளைச் சொன்ன போது, ""இருபது ஆண்டுகள் கழித்து என் மாணவர்களுக்காக நான் பாடம் எடுத்திருக்கிறேன். இது ஒரு வரலாற்று நிகழ்வு. எனது மாணவர்கள் ஒவ்வொரு வரும் உயர்ந்த நிலையில் இருப்பதைப் பார்க்கிறபோது மனம் பூரிக்கிறது''’என்று நெகிழ்ந்தார்.

ஒரு காவியக் கவிதையை, அதன் எழுத்துகளே முத்தமிட்டு ஆராதித்ததைப் பார்த்த நமக்கும் மகிழ்ச்சியான மகிழ்ச்சி.

-ராஜா

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [8]
Name : Siddique Date :11/26/2013 7:55:00 PM
இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் தொண்டாற்ற வேண்டும்.
Name : Ravi-Swiss Date :3/23/2013 11:14:32 AM
இப்படி ஓர் மேதைக்கு' அவரது பிறந்த நாளை வாழ்த்த பேச்சைக் கேட்க்க' போன சனம் ரொம்ப குறைவு' நாம் ஆரிடம் சொல்லி அழ முடியும்'''?
Name : Pocketokko Date :1/4/2013 1:12:58 PM
கவிக்கோ இஸ் எ கிரேட் கொக்கரக்கோ. ஹி இஸ் நொவ் வெண்டிங் வாடா பவ இன் ஆம்பூர் வாணியம்பாடி பெல்ட்.
Name : thameem Date :12/30/2012 2:52:50 PM
vaalthukindram
Name : Mohamed Date :12/29/2012 12:55:17 PM
தமிழ் வளர்த்த Tamil மகனே வாழ்க! வளர்க உன் Tamil பணி!
Name : musthafa Date :12/25/2012 6:53:40 PM
super.longlive abdurrahman.we must read his books and follow.we pray for his health.
Name : adv.ramasami@gmail.com Date :12/21/2012 3:55:21 PM
அய்யா. தங்களின் பவள விழா செய்தியினை பார்த்ததில் பெரிதும் மகிழ்ச்சி தங்கள் பணி தொடர vaalthukindran
Name : kalai Date :11/21/2012 2:48:02 AM
ஈழத்தமிழர்களின் போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்தி அவர்களின் இன்னல்களில் தானும் பங்கெடுத்துவந்த கவிக்கோவை ஈழத்தமிழர்கள் சார்பில் நாமும் வாழ்த்துகின்றோம் அவர் பணி தொடர........