நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :6, பிப்ரவரி 2013(10:54 IST)
மாற்றம் செய்த நாள் :6, பிப்ரவரி 2013(10:54 IST)நடுநிலையோடு சட்டத்தையும் நீதியையும் வழங்கியது
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம் பேச்சு

               புதுக்கோட்டை கைக்குறிச்சி, ஸ்ரீ பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகத் திருக்குறள் பேரவை  சார்பாக  திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ரீ பாரதி நிறுவனங்களின் தலைவர் குரு. தனசேகரன் தலைமை தாங்கினார். செயலர் வீ. வைத்தியநாதன்,  அறங்காவலர் உறுப்பினர்கள் கே. ஆர். குணசேகரன், கே. ரெங்கசாமி, அ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியில் பட்டிமன்ற நடுவர் மற்றும் மதுரை வெள்ளச்சாமி நாடார் கல்லூரியின் பேராசிரியர் த. இராஜாராம் கலந்து கொண்டு திருக்குறள்  பேரவை சார்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியது மானுடம் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு நாகரிகம் முகிழ்த்த போது சமூக, பொருளாதார, அரசியல் அமைப்புகள் உருவப்பெற்றன.

சட்டம் நீதியை பற்றி பல நாகரீகங்களின் குறிப்புகள் உள்ளன. மதங்களுக்கு அப்பாற்பட்டு மனித சமூகத்திற்கே பொதுவான முறையில் நடுநிலையோடு சட்டத்தையும் நீதியையும் வழங்கியது உலகின் முதல் நூல் திருக்குறள் தான். பிறரிடம் அன்பு காட்டுதல் மனிதனுக்கு மட்டுமே உரித்தான குணமாகும் அது என்னுடையதன்று என்றால் அன்பு இருக்கும் எனக்குரியது என்ற நிலையில் அன்பு இருக்காது வாழ்வில் அறம் அன்பு பெருக அனைத்துக்கும் குறள் வழி உண்டு. சமயம் சாராமலும்  எந்த மொழியையும், ஊரையும் போற்றாமல் நேர்மை இருந்தால் வெல்லலாம் எனக் கூறும் ஒரே நூல் திருக்குறள்தான். கண்ணாடியை  பார்க்கும் போது ஒரு முகம் அழகாக தெரிகிறது என்று நினைத்துப்பார்க்க வேண்டும். 

நாளை அந்த முகம் ஒரு வரலாற்று படைக்கும் என்று  கனவு கானுங்கள். கற்பூரம் ஒளி வீசுவது போலத்தான் உங்கள் கனவுகளும் ஒரு நாள் ஒளி வீச காத்திருக்கிறது.  இந்தியாவிற்கு  நோபல் பரிசு வாங்கித்தரும் மாணவிகள் கூட இங்கு இருக்கலாம். மூன்று வருடங்கள் கழித்து நீ வேலைக்கு போகும் போது சில மாணவிகளுக்கு விரும்பிய வேலை கிடைக்கும், சில மாணவிகளுக்கு ஏற்ற தொழில் போல் இருக்காது.

எந்த தொழிலும் பெரிது போல் நினைக்க  வேண்டும். கல்லூரி வாழ்க்கையின் மிகவும் சந்தோஷம் படிப்பதை விட விடுதியில் தங்குவதுதான், அங்கு தான் நட்பு மேம்படுகிறது. நட்பு என்பது சந்தோஷத்தை மட்டும் தான் தருவது. ஆனால் காதல் இனிமையும் தரும் அதைவிட அதிகமாக கண்ணீரையும் தரும். ஆகவே நட்பு கொள்ளுங்கள். கடவுளிடம் கேட்காமலேயே கிடைப்பது நட்பு மட்டும் தான். கடவுள் இருக்கிறார் என்று நினை கரும்புக்கும் சர்க்கரைக்கும் வித்தியாசத்தை நாவினால் உணரதான் முடியும் . ஆனால் என்ன வேறுபாடு என்று கூற முடியாது. என் மதமே முக்கியம் என்று நினை ஆனால் என் மதம் தான் உலகத்தில் முக்கியமானது என்று கூறாதே. கற்ற  பிள்ளைகள் எப்பொழுதும் கற்றறிவுடன்  வாழ வேண்டும்.  வாழ்க்கை சரிதான என்று முடிவெடுக்கும் பொறுப்பை பெற்றோர்களிடம் விடுங்கள் சிறுவயது முதல் உன்னை எப்படி வளர்த்து முடிக்க துன்பப்படும் பெற்றோர்க்கு நீ செய்யும் ஒரே கடமை இது ஒன்று மட்டுமே என்றார்.

விழாவில் திருக்குறள் பேரவை உறுப்பினர்கள் மகளிர் அணி இணைச் செயலாளர் த. சங்கமித்ரா, புண்ணியமூர்த்தி, சுப்பிரமணியன், புலவர் மா. நாகூர், சிலட்டூர் ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் முன்னதாக தமிழ்த்துறை பேராசிரியர் மு. பாலசுப்பிரமணியன் வரவேற்றார். முடிவில் கல்லூரி முதல்வர் ஜானகி சுவாமிநாதன் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

- இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [10]
Name : jeyachandran Thiruvarankulam, Pudukkkottai. Date :2/27/2013 3:23:01 PM
ரவி அரபு தமிழன் இரண்டு பேரும் முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். பரிசுத்த வேதகாமம் என்பது ஒரு மதத்திற்கு உட்பட்டது ஆனால் திருக்குறள் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது ஆகவே ஐயா ராஜாராம் கூறியது மதங்களுக்கு அப்பாற்பட்டது தான் என்று கூறியுள்ளார் நடு நிலையோடு சட்டத்தையும் நீதியையும் வழங்கியது திருக்குறள் என்பதை சட்டமன்ற விதிகள் வரைவு புத்தாயிரம் ஆண்டிற்க்கான சட்ட விதிகள் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் ஹமுராபி சட்ட விதிகள் ரோமானியர்களின் சட்டம் மனு விதிகள் இஸ்லாமிய சட்டங்கள் ஆகியன மதம் சார்ந்தவை என்றும் மனித சமூகத்திற்கு மத சார்பற்ற பொதுவான முறையில் சட்ட விதிகளை மிகச் சுருக்கமாக அளித்த ஒப்பற்ற நூல் திருக்குறள் ஒன்றுதான் என்று ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது . ஆகவே செய்தியை புரிந்து கொண்டு கருத்துரைகளை வெளியிட வேண்டும் .
Name : Ravi-Swiss Date :2/19/2013 2:34:34 AM
ஆர் சொன்னது திருக்குறள் முதல் நுல் என்று''? கிமு 3500 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரேலில் ஜூதர்கள் வாழ்ந்தார்கள்' அவர்களுக்கு ஆண்டவரால் கொடுக்கப்பட்ட ஓர் கொடைதான் பரிசுத்த வேதாகமம்' பத்துக் கட்டளைகளை ஆண்டவர் அந்த மக்களுக்குக் கொடுத்து அதன் படி வாழ சொன்னார்' அவர்கள் பாவம் பண்ணினார்கள் தேவனுக்கு விரோதமாக வாழ்ந்தார்கள்' விளைவு'? பக்கத்து நாடுகளால் அந்நாடு அபகரிக்கப்பட்டு அவர்கள் உலகம் முழுதும் விரட்டப்பட்டார்கள்' இது ஆண்டவரால் உருவாக்கப்பட்டது' அமரிக்கா சீனா ரச்சயா கனடா இந்தியா என்று ஓடியவர்களே இந்த ஜூதர்கள்' இவர்களே இந்தியாவில் இன்னுலை திருவள்ளுவருக்குக் கொடுத்து' திருக்குறள் உருவாகியது' இதனை நான் கூறவில்லை' சென்னை சகோதரி தேவகலா அவரின் தகப்பன் தெய்வ நாஜகம் போன்றோர்' 36 வருடமாக ஆராய்ந்து எழுதி இருக்கின்றார்கள்' ஓர் வரலாற்றை திசை திருப்புவது கூடாது' உண்மைகளை ஒத்துக் கொள்வதே எல்லோருக்கும் நல்லது'
Name : selvarajan Date :2/15/2013 5:53:38 PM
திருக்குறள் மனித இனத்துக்கு மறை நூல். எந்த காலத்துக்கும் ஏற்ற நூல். நாளுக்கு நாள் நாகரிகம் மாறும். ஆனால் திருக்குறள் மாறாது. மனிதன் தவறாமல் படிக்க வேண்டிய ஒரு நூல் தெய்வ புலவரின் திருக்குறள்.
Name : S. Vijayasamoondeeswari Date :2/12/2013 4:01:21 PM
எந்த சமயத்தையும் சேராமல் எந்த மொழியையும் சாராமல் நேர்மையோடு இருந்தால் இந்த உலகை வெல்ல முடியும் என்று உலக பொதுமறையான திருக்குறள் கருத்துக்கள் சிந்தனையை தூண்டியது
Name : V. Poongothai Date :2/12/2013 3:54:03 PM
திருக்குறள் சிலருக்கு அறிவில் புரிகிறது சிலருக்கு அனுபவத்தில் தன் அனுபவத்தின் வலி நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறிய சிறப்பு விருந்தினரின் கருத்துக்கள் பனுள்ளதாக இருந்ந்தது .
Name : P. Padmavathi Date :2/12/2013 2:54:37 PM
பிறரிடம் அன்பு கட்டுதல் மனிதனுக்கு மட்டுமே உள்ள குணம் உறவினால் ஆகும் அன்பை விட அன்பினால் ஆகும் உறவே உயர்ந்தது வள்ளுவரின் சிந்தனை பயனுடையதாக இருந்தது
Name : janaki swaminathan (Principal) Date :2/12/2013 2:51:21 PM
எதிர்கால இந்திய மாணவர்கள் கையில் உள்ளது கற்பூரம் ஒளி வீசுவது போல் மாணவிகள் கனவும் ஒளி வீச போகிறது திருக்குறள் துணை நிற்கும்
Name : Natarajan Date :2/11/2013 9:33:05 AM
எல்லா மனிதர்களையும் பரிசுத்தமாக்கும் அற நூல் திருக்குறள்.
Name : tamilan Date :2/10/2013 1:12:19 PM
முதல் சட்ட நூல் திருக்குறல் தான். ஆனால் தமிழ்நாட்டில் சட்டத்தை மதிக்கவில்லையே ராஜாராம்.
Name : arabuthamilan Date :2/9/2013 4:31:24 PM
தவறு ராஜாராம் அவர்களே! உலகின் முதல் நூல் பரிசுத்த வேதாகமம் (HOLY BIBLE ) ஆகும். .