நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :22, நவம்பர் 2013(18:31 IST)
மாற்றம் செய்த நாள் :22, நவம்பர் 2013(18:31 IST)

இளையராஜாவிற்கும் வைரமுத்துவிற்கும்
என்னதான் பிரச்சனை?
இருவரும் மீண்டும் பணியாற்றும்
சூழல் இருக்கிறதா?

பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணி. ஒரு கட்டத்தில் வைரமுத்துவும், இளையராஜாவும் பிரிந்தார்கள். அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்வது கூட கிடையாது.

இந்நிலையில் மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா பேசியபோது, மதுரையில் ஒரு கோபுரம் கட்டிமுடிக்கப்படாமல் மொட்டைக்கோபுரமாய் இருக்கிறது. மீண்டும் அந்த கோபுரம் கட்டி முடிக்கப்பட வேண்டும். இளையராஜா - பாரதிராஜா - வைரமுத்து என்ற கூட்டணி மீண்டும் வர வேண்டும் என்ற தனது ஆசையை கூறினார்.

இது பாரதிராஜாவின் ஆசை மட்டுமல்ல. லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆசையும் கூட. இதையே விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர்’ இசை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவிஞர் வைரமுத்துவிடம் கேட்கப்பட்டது.இளையராஜாவிற்கும் வைரமுத்துவிற்கும் என்னதான் பிரச்சனை?

இளையராஜாவிற்கு இளையராஜா பிரச்சனை. வைரமுத்துவிற்கு வைரமுத்து பிரச்சனை.

இருவரும் மீண்டும் பணியாற்றும் சூழல் இருக்கிறதா?

காலம் கடந்துவிட்டதாக நினைக்கிறேன். விருப்பங்கள் வேறு; யதார்த்தங்கள் வேறு. இப்போது கூட அவரது இசையை நேசிக்கிறேன். பழைய பாடல் கேட்கிறபோதெல்லாம் நெகிழ்ச்சி ஏற்படுகிறது. பார்த்து பேசலாம் என்றுகூட தோன்றுகிறது. ஆனால், சில சின்னச்சின்ன தடைகள் பெரிய பெரிய சுவர்களை எழுப்புகின்றன. அந்த சுவர்கள் இல்லை என்று நான் தீர்மானிக்கிறபோது, அது சாத்தியமாகலாம். ஒன்று, அந்த சுவர்கள் இடியலாம். அல்லது சிலர் இடிக்கலாம். அதன்பிறகு உறவுகள் எப்படி சாத்தியமாகிறது என்று பார்ப்போம்.

என்னோடு சேர்ந்துதான் வெற்றி பெற வேண்டும் என்கிற நிலையில் அவர் இல்லை. அவரோடு சேர்ந்துதான் பணியாற்றி ஆகவேண்டும் என்கிற சூழ்நிலையிலும் நான் இல்லை. ஆனால், காலம் என்ன சொல்கிறதோ, அதைக்கேட்டு கட்டுப்படுவதற்கு நான் காத்திருப்பது மாதிரியே அவரும் காத்தி ருந்தால், சாத்தியமாகலாம்.எப்பொழுது வரும் அந்த வசந்தகாலம்?

தாவரங்களுக்கு வசந்தகாலம் வருடா வருடம் வருவதுண்டு. கலைத்துறையின் வசந்தகாலம் ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் வரும் என்று தோன்றுகிறது. வேண்டாம் என்று நான் நினைக்கவில்லை. காலம் எப்படி கட்டளையிடுகிறது என்றும் தெரியவில்லை.

ஒவ்வொரு காலகட்டத்திலும் சில சேர்மானங்கள்தான் வெற்றிபெறுகின்றன. இப்போது நாங்கள் மீண்டும் இணைந்தால் பழைய இளமை, பழைய கூட்டணி, பழைய இயக்குநர்கள், பழைய கதை, பழைய தளம் எல்லாவற்றையும் விட எங்கள் பழைய ரசிகர்கள் இருக்கிறார்களா என்று எனக்கு தோன்றவில்லை.

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்நாடு நகர்ந்துகொண்டிருக்கிறது. இப்போது ஊடக பெருக்கத் திற்கு பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழர்கள், ரசிகர்கள் மாறி மாறிப்போய்க் கொண்டிருக் கிறார்கள். எனவே, நாங்கள் இனிமேல் இணைந்து பணியாற்றினால், என்பதுகளில் நாங்கள் கொடுத்த பாடல்களைப்போல நாங்கள் எழுதுக்கொடுத்து இசையமைத்தால், அது பழைய பாடல் என்று சொல்லுவார்கள் தமிழர்கள்.

அதை விட்டு விட்டு நவீன பாணியில் அவர் இசையமைத்து, நவீன மொழியில் நான் பாட்டெழுதி, நவீமனான முறையில் படமாக்கப்பட்டால், எங்கே போயிற்று இவர்களின் பழைய ஜீவன் என்று கேட்பார்கள். இந்த இரண்டு பழிகளூக்கு மத்தியில் நாங்கள் தனித்திருப்பதே வெற்றி!’’

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [18]
Name : கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா Date :4/18/2016 10:34:45 PM
இருவரில் ஒருவர் படுகாயப்பட்டிருக்கிறார்.இருவருமே மறைக்கிறார்கள். தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
Name : ச.விவேக் Date :8/16/2014 9:05:50 AM
தொடர்ந்து பத்துமுறை ராஜா சாரின் பாடல் கேட்டாலும் , பாடலின் ரசனை சலித்துப்போகாது . அதேபோல் , ஐயா வைரமுத்துவின் பாடல்வரிகளும் எத்தனைமுறை கேட்டாலும் ரசனையின் படியில் இருந்து இறங்குவதில்லை . இருவரும் சேர்ந்து தயாரித்த பாடல்கள் அனைத்தும் கேட்டுவிட்டோம் புதிதாக மீண்டும் அந்த அந்நக்குறிஞ்சி பாடல் வெளிவந்தால் , மகிழ்ச்சியே !!
Name : G.rajavelu Date :1/28/2014 5:42:12 PM
மூவ்வேந்தருக்குல் ஏன் இந்த பிளவுகல்! எப்பொழுது இணையும் இந்த நிலவுகள் ! ஆவலுடன் பார்க்கும் எங்கள் ,,,,,,,,,,,,,,,,,, இதயங்கள் !!!!!!!!!!!!!!!!!!!
Name : m.d.anand Date :1/22/2014 10:09:39 PM
உங்களுடைய கவிதைக்கும் அவருடைய இசைக்கும் நாங்கள் என்றைக்கும் அடிமை.........''''''
Name : Kaarunyan, Palladam. Date :1/20/2014 9:46:23 PM
கவிஞர் அவர்களே நீங்கள் இருவரும் பார்க்காத வெற்றிகளா? தொடாத உயரங்களா? உங்களை நீங்கள் மெய்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்றும் உங்களின் பாடல்கள் தான் பட்டி தொட்டி எல்லாம். இந்த காலத்து தலைமுறைகளும் உங்கள் பாட்டை தான் இன்னமும் ரசிக்கிறார்கள. முதலில் மனம் வையுங்கள் மார்க்கம் தன்னால் அமையும். வெறியுடன் காத்திருக்கிறோம்.
Name : k.siva Date :1/17/2014 12:30:08 AM
ars உம்முடைய சொல்லை இரண்டு ராசாவும் சம்மதிக்க மாட்டார்கள் உண்மை எழுதவும் .
Name : Kavithan A. Date :1/1/2014 8:44:57 PM
திறமை உள்ள இருவரும் இன்று மிகப்பெரிய கலைத்தொழில் அதிபர்கள் ஆனபின் , ஈகோ மிகுந்து இப்படி இப்படி ஆகிவிடுகிறார்கள். தமிழர்களோ ரசிகர்களோ விரும்புவதர்காக தங்களின் "நான்"களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இளைய நிலாவும் அன்னக்கிளியும் பண்ணுவது இசையானாலும் எண்ணுவது பண நோட்டுக்களையே !!
Name : arivalagan Date :1/1/2014 12:34:43 PM
உங்கள் பழைய நட்பு வேண்டும் பிறகு திரை உலகம்...
Name : Kavith Raja Date :12/21/2013 4:03:14 PM
அது ஒரு வசந்த காலம்... ஆனால் ஓன்று கவிஞர் கண்ணதாசனுக்கு பிறகு எந்த ஒரு கவிஞர் பாடல் எழுதியதாக இருந்தாலும் ஒரு பல்லவி அல்லது ஒரு சரணத்திற்கு மேல் நம் மனதில் பதிவதில்லை ஏனென்றால் நமது உணர்வோடு ஒன்றாததே அதற்கு காரணம்.. இளையராஜாவும் வைரமுத்துவும் இணைவதில் அனைவருக்கும் ஆனந்தமே இருந்தாலும் இளையராஜாவின் இசை வைரமுத்து வரிகளையே ஆட்கொண்டதேன்பதே சரியானதாக இருக்கும்.. வைரமுத்து பிரிந்த பின்னும் இளையராஜா பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளதே அதற்கு சாட்சி..
Name : ars Date :12/17/2013 6:17:21 PM
வைரமுத்துவின் பாடல்களில் அர்த்தமே இல்லை. இல்லயரவின் இசையால் தன அவைகள் பேசப்பட்டன. தனியாக பாடல்களை மட்டும் கேட்க முடியவில்லை. அவற்றில் அர்த்தம் இல்லை. அனைத்தும் செக்ஸ் ஆக உள்ளது.
Name : Paranthaman Date :12/14/2013 6:24:12 PM
நல்ல புத்திசாலி தனமான பதில் கவிஞரே !!!!!!!!!!!
Name : P.Senguttuvan Date :12/11/2013 7:55:09 PM
இருவரும் இனைநது மீண்டும் தரும் வெற்றி படைப்புகளை விட இருவரும் இனைந்து நட்பை வெற்றி பெற செய்யுங்கள் தமிழும் தமிழகமும் எதிர்பார்ப்பது இருவரிடமும் இதைதான்
Name : srigangatharan Date :12/6/2013 5:48:38 PM
உங்கள் கூட்டணி வெற்றி பெரும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்க்றேன்.
Name : selvakumar Date :12/2/2013 11:08:54 PM
Super
Name : கவிஞர்இரவிச்சந்திரன் Date :11/30/2013 7:10:59 PM
சந்தங்கள் சொந்தங்களாக வேண்டும்
Name : M.D.Bharathi Date :11/29/2013 3:40:00 PM
அருமை
Name : T.KATHIRAVAN Date :11/24/2013 8:51:56 PM
உங்கள் கூட்டணி வெற்றி பெரும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்க்ஹீறேன்.
Name : jgowri Date :11/24/2013 8:37:08 PM
கரெக்ட்