நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :4, ஜனவரி 2014(17:6 IST)
மாற்றம் செய்த நாள் :4, ஜனவரி 2014(17:6 IST)
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக்
கனவு காணும் இளங்குமரன்     ‘’அன்னசத்திரம் ஆயிரம் நாட்டல் ஆலயம் பதினாறாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’ என்ற மகாகவி பாரதியின் வரிகளை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார் சிங்கப்பூரில் உள்ள தமிழாசிரியர் ஒருவர் என்றால் நம்பமுடிகிறதா உங்களால்… நம்புங்கள் அவர் ஏழை மாணவர்களுக்காக 100 ஏக்கர் நிலத்தில் இலவச பள்ளிக் கூடமும் கட்ட இருக்கிறார்.

அவர் ஒரு ஏழையை மட்டுமல்ல கிட்டத்தட்ட 500 ஏழை மாணவர்கள் படிப்பதற்கு உதவி செய்து வருகிறார். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், மிகவும் வறிய நிலையில் இருந்த பத்து ஏழை மாணவர்களை தத்து எடுத்து, அவர்களது ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை படிக்க வைத்திருக்கிறார். அந்த பத்து பேரும் நல்ல முறையில் படித்து, தற்போது ஓவிய ஆசிரியராகவும், கணிப்பொறி வல்லுனராகவும், பள்ளி ஆசிரியராகவும் பல துறைகளில் மின்னி வருகின்றனர்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ‘எழுத்தேணி அறக்கட்டளையை’ நிறுவி அதன் மூலம் பல்வேறு ஏழை மாணவர்கள் படிப்பதற்கு நிதி உதவிகளைச் செய்துவருகிறார். இவை அத்தனையும் சிங்கப்பூரில் செய்யவில்லை. நமது தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்குத்தான் செய்து வருகிறார் அந்த அறக்கட்டளையின் தலைவரான இளங்குமரன்.ம.பொ.சி. மீசை, தெளிவான முகம், எளிமையான உடை, அன்போடு பழகும் மாண்பு, எப்போதும் உதவத்தயாராக இருக்கும் உள்ளத்தோடு இருந்த, அந்த 50 வயது நிறைந்த ‘இளங்குமரன்’, அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்குகொள்ள சென்னைக்கு வந்திருந்தார்.

அவரிடம்  உரையாடியபோது…

நீங்கள் பிறந்து வளர்ந்தது, படித்ததுளைப் பற்றி சொல்லுங்களேன்…


நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சாவூரில்தான். எனது அப்பா டேவிட் பொதுப்பணித்துறையில் இருந்தவர். எனது அம்மா அந்தோணியம்மாள் இல்லத்தரசி. எங்கள் வீட்டில் 9 பிள்ளைகள் கொண்ட பெரிய குடும்பம். நான் எனத் பெற்றோருக்கு இரண்டாவது பிள்ளை. தஞ்சையில் பள்ளிப் படிப்பை முடித்தேன். இதனையடுத்து தஞ்சாவூரிலுள்ள கரந்தை புலவர் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்தேன். இளங்கலை படிப்பைமுடித்ததும் தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து 5 ஆண்டுகள் களப்பணி ஆற்றினேன். அதன்பிறகு பூண்டி மலர்க்கல்லூரியில் முதுகலை படிப்பைப்பயின்றேன்.

சிங்கப்பூரில் பணி வாய்ப்பு எப்படி, எப்போது கிடைத்தது?


முதுகலை படிப்பை முடித்ததும் தஞ்சையிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் 1990-ல் தமிழாசிரியராக பணிக்குச் சேர்ந்தேன். அப்போது எனக்கு அங்கு வழங்கப்பட்ட மாதச்சம்பளம் 250 ரூபாய். இதிலும் ஆசிரியர் கூட்டம், பேனாவிற்கு இங்க் ஊற்றியது என்று கணக்கு காட்டி 15 ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். இப்படியாக ஓராண்டு போனதும், தஞ்சாவூரிலுள்ள தொன்போஸ்கோ பள்ளியில் மாதம் 1000 ரூபாய் சம்பளத்தில் தமிழாசிரியராக பணிக்குச் சேர்ந்தேன். அங்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றி இருப்பேன். அப்போது எனது நண்பர் நாகேந்திரன் என்பவர் சிங்கப்பூரில் தமிழாசிரியர் பணி இருக்கிறது என்று தகவல் கொடுத்தார். அவரது வழிகாட்டுதலின்படி விண்ணப்பித்தேன். பணிவாய்ப்பு கிடைத்தது. 1997 மார்ச்சில், சிங்கப்பூரில் உள்ள பூச்சூன் உயர்நிலை அரசுப்பள்ளியில் பணிக்கு சேர்ந்து விட்டேன்.

அரசுப்பள்ளியில் ஆசிரியப்பணி கிடைத்துவிட்டால் தான் உண்டு, தன் குடும்பம் உண்டு இருப்பவர்களிடையே நீங்கள் இப்படிப்பட்ட கல்விச்சேவையில் ஈடுபடக்காரணம் என்ன? இதற்கான முதல் வித்தை உங்கள் மனதில் விதைத்தவர் யார்?


எங்கள் குடும்பம் பெரியதென்று முன்பே சொல்லி இருக்கிறேன். நாங்கள் ஒன்பது பேர் எனது சிற்றப்பா வீட்டு பிள்ளைகள் மூன்று பேர் என 12 பிள்ளைகள் வீட்டில் இருப்போம். இத்தனை பிள்ளைகள் இருப்பதால் எந்நேரமும் எங்கள் வீட்டில் சாப்பாடு இருந்து கொண்டே இருக்கும். உதவி என்று கேட்டு வந்தால் என் அம்மா இல்லை என்று சொன்னது இல்லை.  அம்மாவிடம் பணம் இல்லையென்றால் கழுத்தில் இருக்கும் நகையை அடகு வைத்து கூட கொடுக்கும் தாராள மனம் அவருக்கு. ‘இருக்கும் வரை நம்மால் ஆன உதவியை நாலுபேருக்கு செய்யறவன்தான் மனுசன்’ என்பார் என் அம்மா. இப்படி மற்றவருக்கு உதவவேண்டும் என்ற முதல் விதையை என்னுள் விதைத்தவர் எனது அம்மா. இளங்கலை படிப்பை முடித்து விட்டு தொண்டு நிறுவனத்தின் மூலம் களப்பணியாற்றும் போது தமிழகத்திலுள்ள கிராமப்பகுதிகள், மீனவக்கிராமங்கள் என பாமரர்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் ஏழை மக்கள் படும் வேதனை என்னால் முழுமையாக உணர முடிந்தது. அப்போது முடிவு எடுத்தவன்தான். நம்மால் ஆனவரை நாலுபேருக்கு உதவிட வேண்டும் என்று அப்போதிருந்தே ஏழை மாணவர்களுக்கு என்னால் ஆன உதவிகளை செய்துகொண்டிருந்தேன்.இந்த உதவிகளை செய்ய ஒரு அறக்கட்டளை தொடங்கினால் என்ன என்று அப்போது எனக்குத் தோன்றியது. அதற்கு எனது முன்னாள் மாணவர்களும் அதற்கு ஆதரவு தந்தார்கள். அதனடிப்படையில்தான் ‘எழுத்தேணி அறக்கட்டளை’யைத் தொடங்கினேன்.

எழுத்தேணி அறக்கட்டளை இதுவரை செய்தது என்ன?


இந்த அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது முப்பதுக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் படிப்பதற்கு நிதிஉதவி செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி மிகவும் வறியநிலையில் உள்ள பத்து மாணவர்களை தத்தெடுத்து, ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரிப்படிப்பு வரை படிக்க வைத்திருக்கிறது. அந்த பத்து பேரில் ஒரு மாணவர் உயிருடன் இல்லை என்ற சுமை எந்நெஞ்சை அழுத்திக் கொண்டே இருக்கிறது. மீதமுள்ள 9 பேரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் சென்னையில் ஒவிய ஆசிரியராகவும் மற்றொருவர் அமெரிக்காவில் கணினி வல்லுனராகவும் இருக்கிறார். இத்தகைய செயல்களை செய்வதற்கு எனது முன்னாள் மாணவர்களும் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள். அறக்கட்டளையில் மட்டுமில்லை என் அக வாழ்க்கையிலும் கூட முக்கிய பாங்காற்றி இருக்கிறார்கள்.

அகவாழ்க்கையில் உங்களது மாணவர்கள் எப்படி?


எனது திருமணம் காதல் திருமணம். இரு வீட்டாரிடமிருந்து கடும் எதிர்ப்பு. எதிர்ப்பையும் மீறி எங்களது திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை உற்றார் வந்து நடத்தி வைக்கவில்லை, எனது முன்னாள் மாணவர்கள்தான் நடத்தி வைத்தார்கள். என்னிடம் படித்த 500 மாணவர்கள் இந்த திருமணத்தை நடத்திக் காட்டினர். நான் ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லை. அனைத்து செலவுகளையும் எனது மாணவர்களே பார்த்துக் கொண்டனர். ஆசிரியர்கள்தான் மாணவர்களது திருமணத்தை நடத்தி வைத்து பார்த்திருப்பீர்கள். மாணவர்கள் எல்லாம் சேர்ந்து ஆசிரியருக்கு திருமணம் நடத்தி வைத்தது எனது வாழ்க்கையில்தான்.  

உங்களது குடும்பம் பற்றி..?


அழகான குடும்பம். அன்பான மனைவி. அறிவான 3 பிள்ளைகள். மூத்தமகள் இளந்தமிழ். இரண்டாமாவன் இளங்கதிர். மூன்றாமாவன் இலக்கியன். ஏன் அழகான குடும்பம் என்று சொன்னேனென்றால், நிறைய ஏழை மாணவர்களுக்கு நான் உதவுகிறேன் என்பதை மட்டும்தான் அவர்கள் பார்ப்பார்கள். எவ்வளவு தொகை கொடுத்து உதவுகிறேன் என்று பார்க்க மாட்டார்கள். என் மனைவியின் ஆதரவு இதற்கு எப்போதும் உண்டு. என் மூன்று பிள்ளைகளும், அவர்களுக்கு கொடுக்கும் நான் கொடுக்கும் பணத்தினை மிச்சம் செய்து, உண்டியலில் சேர்த்து, ஒரு ஏழை மாணவர் படிப்பதற்கு நிதியாகத் தந்தனர். அதனால்தான் அப்படிச் சொன்னேன்.

உங்களுடைய எதிர்காலக் கனவு?


நான் எதிர்காலம் குறித்து கனவு ஏதும் காணவில்லை. எதிர்காலத்தை எப்படி அமைக்க வேண்டும் என்று திட்டமே வைத்திருக்கிறேன். ‘100 ஏக்கர் நிலம். நூறு கோடி பணம்’ இதுதான் எனது எதிர்காலத் திட்டம். இது எனது குடும்பத்துக்காக இல்லை. தமிழ்நாட்டில் கல்வி அறிவு கிடைக்காமல் அல்லல் படும் அனைத்துப்பிரிவு மக்களுக்காக.நூறு ஏக்கர் நிலத்தை சொந்தமாக வாங்கி அதை நான்காக பிரித்துக் கொள்வேன். முதல் 25 ஏக்கரில் ஏழைப்பிள்ளகள் படிக்க பள்ளிக்கூடம், தங்குமிடம், ஆசிரியர் குடியிருப்பு, ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், மாற்றுத்திறனாளிகள் இல்லம், திருநங்கைகளுக்கான இல்லம் எல்லாம் அதில் அமையும்.அடுத்த 25 ஏக்கரில் இங்கு தங்கி, படிக்க இருக்கும் அனைவருக்குமான உணவு தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை பயிரிடப் பயன்படுத்த வேண்டும். அடுத்த 25 ஏக்கரில் நீண்டகாலப் பலன்களை அளிக்கக்கூடிய மா, தென்னை, தேக்கு உள்ளிட்ட மர வகைகள் வளர்க்கப்படும். கடைசி 25 ஏக்கரில் வனம் ஒன்று அமைக்கப்படும். இந்த 25 ஏக்கர் நிலத்தில் அமையவிருக்கும் பள்ளிகள், இல்லங்கள் அனைத்தும் மீதமுள்ள 75 ஏக்கர் நிலத்தில் உருவாகும் பயன்களைக் கொண்டு, தடங்கலின்றி, யாருடைய உதவியுமின்றி செயல்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும். அறிவு, கல்வி, சமூகம், பொருளாதாரம் என எல்லா துறைகளிலும் தன்னிறைவு பெற்ற பள்ளியாக அது திகழ வேண்டும்.அங்கு பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் விவசாயம், தோட்டக்கலை குறித்த பாடங்கள் நேரடியாக நடத்தப்படும். இதன்மூலம் நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயம் காப்பற்றப்படும். இதனை நிறைவேற்ற 100 கோடி ரூபாய் பணம் தேவைப்படும். செலவு போக மீதமுள்ள பணத்தை வங்கியில் போட்டு வைத்து, அக்கல்வி நிறுவனத்தின் செலவீனங்களுக்கும் பராமரிப்பிற்கும் பயன்படும். தற்போது 100 ஏக்கர் என்பதில் 15 ஏக்கர் நிலத்தை தஞ்சாவூர், செங்கிப்பட்டி அருகே உள்ள தெம்மாவூர் கிராமத்தில் வாங்கி விட்டேன். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் அங்கே பத்து ஏக்கர் பரப்பளவில் இலவசப் பள்ளியை கட்ட வேண்டும். அதன்பிறகு எனது திட்டத்தை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்ற திட்டத்திலிருக்கிறேன்.

மாணவர்களுக்கு நீங்கள் வழிகாட்டுவது போல் உங்களுக்கு வழிகாட்டுவது யார்?


எனது ஆசான்கள்தான் எனக்கு வழிகாட்டிகள். எனது தமிழாசிரியரான முனைவர் பா. இறையரசன் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறார். எழுத்தேணி அறக்கட்டளையின் செயலாளராக இருக்கிறார். முதிய வயதிலும் இளைஞர் போல் பணியாற்றுபவர். எனது நண்பர் நாகேந்திரன் எனக்கு தோள் கொடுக்கும் தோழன் மட்டுமில்லாமில் எனக்கு சிங்கப்பூரில் வேலை கிடைக்க காரணமாக இருந்தவர்.  இவர் இந்த அறக்கட்டளையின் துணைத்தலைவராக இருக்கிறார்.  எனது மற்றுமொரு தமிழாசிரியரான பா. மதிவாணன் இந்த அறக்கட்டளையின் ஆலோசகராக இருக்கிறார். எனது மாணவர்கள் எனக்கு தூண்களாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் போதே பிறருக்கு உதவும் பண்பை வளர்த்துக் கொண்டு, திரைகடல் ஓடி திரவியம் தேடி தமிழ்நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் இலவசமாக கல்விபயில செலவிட்டுக் கொண்டிருக்கும் தமிழாசிரியர் இளங்குமரனால் ஆசிரிய குலத்துக்கே பெருமை என்றால் அது மிகையல்ல.நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை எனும் ஔவையின் வாக்கு இவருக்கு நிச்சயம் பொருந்தும் என மனதில் நினைத்தபடி இளங்குமரனிடமிருந்து விடைபெற்றோம்.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [44]
Name : இளங்குமரன் Date :5/30/2016 6:47:35 PM
Name : colonelpavadaiganesan வணக்கம். உங்கள் வலைப்பூ முகவரி என்ன?
Name : colonelpavadaiganesan Date :4/29/2016 12:24:43 PM
வெரி குட் ப்ராஜெக்ட்.முடிந்தால் என்னுடைய ப்ளாக் க்கு வருகை தரவும்.
Name : sridharan Date :3/8/2015 2:33:26 PM
very good and nice
Name : K.MURUGANANDAM Date :9/5/2014 6:26:35 PM
நன்றி ஐயா , தங்கள் முயற்சி தொடர என் வாழுதுகள். நாங்களும் உங்களுடன் சார்ந்து பனி செய்ய வேரும்ப்புகிறோம் நன்றி .
Name : K.MURUGANANDAM Date :9/5/2014 4:49:39 PM
great salute to mr.aiyya. iam belongs to cuddalore dist. if you permit me to serve the society along with you. i will be very happy.
Name : Tamilselvan Date :5/8/2014 1:44:40 PM
த்தே கிரேட் அய்யா
Name : கவி.செங்குட்டுவன் Date :5/2/2014 8:36:05 PM
இன்றைய உலகம் இயல்பாய் இயங்கிக் கொண்டுள்ளமைக்கு இளங்குமரன் போன்றோரின் இத்தகு விந்தைச் செயல்பாடுகளும் ஓர் காரணம் என்றால் அது மிகையாகாது. வளர்க அவரின் கல்விப் பணி.... வாழ்க அவரின் வாழ்க்கை வளமாக....
Name : U.Samson ebenezar Date :4/17/2014 9:20:59 AM
நானும் தஞ்சையைய் சேர்ந்தவன், ஆசிரியரியாரை போன்று ஒரு தமிழ் பள்ளி ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணம்கொண்டவன். ஆசிரியர் அவர்களோடு இணைந்து பணியாற்ற ஆவலோடு உள்ளேன்.
Name : maran Date :4/11/2014 3:40:56 PM
உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் அய்யா.
Name : B.Mathivanan Date :4/2/2014 7:55:27 PM
உங்கள் பனி தொடர எங்களைப் போன்றவர்கள் தோல் கொடுக்க தயாராக உள்ளோம் . உங்கள் பணி தொடர்ந்து நடைபெறவும் வெற்றி பெறவும் வாழ்த்துகிறோம்
Name : mohana sundhari Date :3/17/2014 11:17:04 PM
Thangal panikku thalai vannagukiraen
Name : RATHAKRISHNAN NORWAY Date :3/10/2014 2:55:25 PM
உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் அய்யா.
Name : rathanam Date :3/8/2014 10:03:00 AM
தங்களின் கனவு மெய்பட இறை அருள் என்றும் துணை இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Name : S K Srinivasan Date :2/27/2014 2:07:58 PM
ஐயாவை எனக்கு சற்றொப்ப 10 ஆண்டுகளாய் தெரியும். 2008 வாக்கில் நான் சிங்கையில் ஐயாவை சந்தித்த போது என்ன குறிக்கோளை விளக்கினரோ அதே கருத்தை 2014ல் எந்த பிசகும் இல்லாமல் இங்கு விளக்கியுள்ளார். கொண்ட குறிக்கோளை நோக்கி உறுதியாக பயணிக்கும் ஐயாவை உளமுவந்து வாழ்த்தி வணங்குகிறேன். சேர்ந்து பயணிப்போம் ஐயா. தஞ்சை S K ஸ்ரீனிவாசன்
Name : இளங்குமரன் Date :2/5/2014 1:41:45 PM
அன்புள்ளங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள். இங்கே இந்த நேர்காணலால் நீண்ட காலம் தொடர்பு விட்டுப் போயிருந்த என் மாணவனைக் கண்டேன்... என் உணர்வைப் புரிந்து கொண்ட என் ஆசிரியர்... எனக்குத் தோள் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கும் அன்புள்ளங்கள்.. வாயார மனமாற வாழ்த்திய உறவுகள் அனைவருக்கும் நன்றி... விரைவில் இதை சாத்தியமாக்குவோம்... ssdavid63@yahoo.com என்னோடு தொடர்பு கொள்ளலாம். நன்றி
Name : karunanidhi Date :2/4/2014 12:56:59 PM
உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் அய்யா.
Name : Sujatha Sujithkumar Date :2/1/2014 5:48:58 PM
Muyarchi vetripera vazhthukal (y)
Name : Saravanan Karuppaiya Date :1/31/2014 12:43:03 PM
அய்யா மிக்க மகிழ்ச்சி உங்களுடன் ஆர்குட்டில் நான் சென்னையில் வேலை செய்த போது உரையாடியது 5-6 வருடங்களுக்கு உங்களுடைய திடத்திலும் திட்டத்திலும் இம்மி அளவும் மாற்றம் இல்லை தொய்வு இல்லை விடா முயற்சி ஒன்றையே காண்கிறேன் எனக்கு அது புத்துணர்ச்சி அளித்து எனக்கும் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் அளித்திருக்கிறது. உங்களுடைய கனவு மெய் படும்
Name : கோபால் கண்ணன் Date :1/29/2014 4:44:56 PM
கனவு மெய்ப்படும். உங்களின் அயராத உழைப்பையும்,முயற்சிகளையும் அருகிருந்து கண்டவன் என்ற முறையில் சொல்கிறேன்.
Name : XAVIER BRITTO Date :1/29/2014 4:32:40 PM
ஐயா வணக்கம். வாழ்த்துகள். நாங்கள் உடன் இருக்கிறோம்.
Name : கோவிந்தராசன். Date :1/28/2014 9:58:57 PM
"உண்டாலம்ம இவ்வுலகம் .....தமக்கென வாழா பிற ர் குரியாளர்..." என்ற புறநானூற்றுப் பாடலுக்கு நீங்களே சான்றாக இருக்கிறீர்கள்.ஒரு நாள் நூறு கோடியும், நூறு ஏக்கரும் மலர்ந்து, விரிந்து பரவி நறுமணம் பயக்கும். நாங்கள் எல்லோரும் உங்களுக்கு துணை நிற்போம்.
Name : Y R Gnanamani Date :1/28/2014 9:21:52 PM
தங்களின் கனவு மெய்பட இறை அருள் என்றும் துணை இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Name : k.velusamy Date :1/26/2014 12:58:08 AM
வெரி குட், மேலும் கோயம்புத்தூர் ஆசியன் enineerings collage உள்ளது அதில் 1000 மார்க் மலே இருத்தல் நான்கு வருடம் ப்ரீ யாக படிக்க உதவிரகள் collage செல்போன் 99650 24393, 98433 69539, 99444 66188
Name : Srinivasan murugesan Date :1/25/2014 5:28:58 AM
இளங்குமறன் போன்றவர்களால் நமது நாட்டுக்கு பெருமை. அவர் நீண்டகாலம் நல்ல வளத்துடன் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
Name : K.RAMADAS Date :1/22/2014 5:38:15 PM
CONGRATS.
Name : nallusamy Date :1/21/2014 7:02:23 PM
நம்ம ஊரில் கொள்ளை அடிக்க நாமக்கலில் நிறைய ஸ்கூல் உள்ளது
Name : vasuki Date :1/20/2014 5:39:56 PM
தமிழன் என்று சொல்லடா ..!தலை நிமிர்ந்து நில்லடா....!
Name : thainese Date :1/19/2014 2:30:48 PM
நான் உங்கள் மாணவன். உங்கள் கருத்தை வரவேற்கிறேன். உடனிருந்து பயணிக்க ஆசிக்கிறேன். தொடர்பு கொள்க.. 9566683896
Name : ellappan Date :1/17/2014 6:36:32 PM
வாழ்த்துகள்
Name : ஆலவாய் சொக்கலிங்கம் Date :1/16/2014 7:36:49 AM
ஐயா வணக்கம்.செயற்கரிய செயலைச்செய்கின்றீர்கள். வாழ்த்துகள்.உங்கள் உள்ளம் மற்றவர்களுக்கும் இருந்தால் தமிழகம் மிக உயரும். இங்கனம் ஓய்வபெற்ற தமிழ் மொழியாசிரியன் கமு.கல்மு தற்பொழுது அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் ஊராட்சி அறங்கோட்டை என்னும் சிற்றூரில் வாழ்கிறேன்.
Name : Sekaran Date :1/14/2014 9:16:15 AM
நல்லதோர் பணி! எண்ணம்போல் வாழ்வு என்பார்கள். நல்ல எண்ணம்! நல்ல பணி! ஆகவே, நல்லமுறையில் நிறைவேறும் எண்பது திண்ணம். வாழ்க!
Name : mani Date :1/12/2014 1:09:21 PM
எனக்கு இளங்குக்குமரன் அவர்களை இணையம் மூலமாக தெரியும். அவரின் மின்னஞ்சல் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை வெளிக்கொணரும் அந்த வகையில் எழுத்தேனி இயக்கம் மேலும் தழைத்து வளர வாழ்த்துக்கள் கட்டுரை படித்தேன். அவரது குடும்பமும் அவர்களால் முடிந்த அளவு அவரின் கனவுக்கு உதவியாக இருப்பது அவர்களது மேன்மையை காட்டுகிறது.
Name : அங்கு நமசிவாயம், சிங்கபூர் Date :1/10/2014 12:09:27 PM
அன்புள்ள தமிழ் ஐயா திரு டேவிட் அவர்கள் என் மகள் நிவேதாவுக்கு சிங்கபூர், உயர்நிலை அரசுப்பள்ளியில் தமிழ் ஆசிரியர், நல்ல எண்ணம் கொண்ட நல்ல ஆசிரியரும் எனக்கு நண்பரும் அவார். அவர் ‘எழுத்தேணி அறக்கட்டளையை’ வெற்றிகரமாக நடத்துவதற்கு அவரின் நல்ல எண்ணமே காரணம். அவர்களின் குடும்பமும் அவரை போலவே நல்ல உதவி செய்யும் குணம் உள்ளவர்கள். மூத்தமகள் வீணை மற்றும் தேவார பாடல்களும் நன்றாக பாடுவர், மகன்கள் அனைவருக்கும் நல்ல உதவி செய்யும் குணம் உள்ளவர்கள். சிங்கப்பூரில் உள்ள அவரின் நண்பர்கள் அனைவரும் அவரின் இந்த பணிக்கு நிச்சயம் உதவி செய்வோம். அவரின் இந்த நற்பணியை உலகத்துக்கு எடுத்து கட்டிய நக்கீரனுக்கு நன்றி. உங்கள் அன்புள்ள, அங்கு நமசிவாயம், சிங்கபூர்.
Name : Pasupathy Date :1/10/2014 10:55:09 AM
எனக்கு அய்யாவை கடந்த 24 ஆண்டுகளாக தெரியும். அவருக்கு நிகர் அவரே. அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம். இன்னும் நிறைய கற்போம். அவரது பள்ளி கனவு அவருடைய மாணாக்கர்கள் அறிந்த ஒரு கனவே. அதனை மெய்பிக்க அவரது மாணாக்கர்கள் அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருப்போம். அய்யா தங்களது கனவை நோக்கி பயணித்து கொண்டே இருங்கள் நாங்கள் உடன் இருக்கிறோம்.
Name : siraj Date :1/9/2014 1:45:54 PM
அய்யா உங்களுக்கு நல்ல விசயத்தில் எல்லாம் வல்ல ஏக இறைவன் துணையும் உதவியும் புரிவனாக ! நல்ல வழியில் நடக்க கிருபை செய்வானாக. இந்த விசயத்தை வெளி கொணர்ந்த நக்கீரனுக்கு நன்றி !
Name : சந்திரசேகரன் Date :1/9/2014 11:52:17 AM
தங்களைப் பற்றி நானும் அறிவேன்.. உங்களைப் போல நானும் பணியாற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் ஒருபுறம் இருந்தாலும், உங்களைப்போன்றவர்களைப் பார்க்கும் போதும் , பழகும் போதும் எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.
Name : senthil Date :1/9/2014 10:09:32 AM
செந்தில் . தமிழன் முகவன்மி சதி.
Name : gopalan Date :1/8/2014 5:50:51 AM
நன்றி வாழ்க
Name : முத்து குமார் Date :1/7/2014 9:48:09 PM
ஐயா இளங்குமரன் அவர்களை நான் கடந்த மூன்று ஆண்டுகளாக அறிவேன். என்னிடம் நண்பர்கள் மூலமாக ஒரு கோரிக்கை வந்தது மதுரை அருகில் உச்ச்சப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள ஒரு பெண்ணிற்கு செவிலியர் கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது. ஆனால் நிதிப் பற்றாக்குறை காரணமாக அவரால் கல்வியை தொடர இயலாமல் இருந்தபோது நான் அந்த தகவலை முகப்பில் பதிந்தேன். அதனைப் பார்த்து என்னை முதலில் தொடர்பு கொண்டவர் ஐயாதான். அவரின் எழுத்தேணி அறக்கட்டளை சார்பாக ஒருவரை அனுப்பி அவர்களுக்கு உதவியும் புரிந்தார்... தமிழை விற்று பிழைப்பவனெல்லாம் தலைவனே என்றால் தமிழாசிரியராக இருந்து தமிழை வளர்ப்பவர் அவனுக்கும் மேல்...
Name : k karthik Date :1/6/2014 4:55:24 PM
100
Name : shekhar Date :1/5/2014 8:39:04 PM
வாழ்த்துக்கள் நண்பரே
Name : salem sabarimuthu Date :1/5/2014 12:50:30 AM
ஆசிரிய குலத்துக்கே பெருமை
Name : தரணி Date :1/4/2014 9:11:23 PM
உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் அய்யா...
Name : Shri. Namo Narayana! Date :1/4/2014 8:37:33 PM
25 ஏக்கரில் இலவசப் பள்ளி! 75 ஏக்கரில் வயல், தோட்டம், காடு என, அந்த பள்ளிக்கு நிரந்தர விளைநிலம்! அரசாங்கமே, மக்களின் வாழ்விடங்களையும், இயற்கை வளங்களாகிய காடு, மலை, கடல், கடற்கரை ஆகியவற்றையும் மொத்தமாக சுரண்டல் குழுமங்களுக்கு விற்று, மக்களுக்குத் துரோகம் செய்யும் இந்தக் காலத்தில், இப்படி ஒருவர் இருப்பது அரிதினும் அரிது! கோழிப்பண்ணை நடத்துபவனெல்லாம் கல்வித் தந்தையாகி, தானும் கோடிகளைக் குவித்துக்கொண்டு, ஏமாந்த சோணகிரி பெற்றோரின் துணையுடனேயே மாணவர்களையும் சுயபுத்தியோ படைப்புத்திறனோ அற்ற மனநோயாளிகளாக மாற்றிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், இப்படியும் ஒருவரா?