நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :24, செப்டம்பர் 2014(16:26 IST)
மாற்றம் செய்த நாள் :24, செப்டம்பர் 2014(16:26 IST)
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம் வெளியீடு!ட்டுக்கோட்டை என்றலே அது கல்யாணசுந்தரம் என்ற பட்டுக்கோட்டை என்பது பாட்டாளி மக்களும் அறிந்த ஒன்று. பாட்டுக்கட்ட ஆரம்பித்து சில ஆண்டுகளில் 29 ம் வயதில் இயற்கை அவரை அழைத்துக் கொண்டது. இயற்கையின் அந்த அழைப்பை கேட்ட பாட்டாளிமக்களும் திரைத்துறையும் கதறி அழுதது. இது நடந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டது.இந்தநிலையில் தான் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சரோனின் 7 ஆண்டுகள் விடா முயற்சியால் இப்போது 2.30 மணி நேரம் ஓடக் கூடிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற ஆவணப்படத்தை தேடித் தேடி படம் பிடித்து காட்சிப்படுத்தி இருக்கிறார்.

கல்யாணசுந்தரம் முதன் முதலில் நாடகத்தில் நடித்த மதுரை தங்கம் தியேட்டரில் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. படம் எடுத்த சில நாட்களில் அந்த திரையரங்கம் இடிக்கப்பட்டுவிட்டது. அதே போல கோவையில் மக்கள் கவிஞர் என்று பட்டம் கொடுத்த இடம், அந்த மக்களையும் காட்சிப்படுத்தி இருக்கிறார். பட்டுக்கோட்டையின் நண்பர்களை தேடிப்பிடித்து ஆவணமாக்கி இருக்கிறார்.

பழைய காட்சிகளை ஆவணப்படுத்த கல்யாணசுந்தரத்தின் நண்பர் ஓவியர் ராமச்சந்திரன் படமாக வரைந்து காட்டி இருக்கிறார்.

இப்படிப்பட்ட ஆவணப்படத்தை பட்டுக்கோட்டையில் கவிஞரின்  மனைவி கௌரவம்மாள் வெளியிட இயக்குநர் பாக்கியராஜ், தோழர் ஸ்டாலின் குணசேகரன், பேராசிரியர் பர்வீன்சுல்தானா, ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அரசு பள்ளி வளாகத்தில் நடந்த இந்த விழாவில் திறந்த வெளி அரங்கம் நிறைந்து மக்கள் வெள்ளம் கூடியிருந்தது.

மக்கள் கவிஞராகி 50வது நாளில் இறந்தார் பட்டுக்கோட்டை – ஸ்டாலின் குணசேகரன்

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்பட குறுந்தகட்டை பெற்றுக் கொண்டு தோழர் ஸ்டாலின் குணசேகரன் பேசும் போது, ஒரு முறை பட்டுக்கோட்டையும், வ.கே.பாலச்சந்தரும் கோவைக்கு சென்றனர். அதை அறிந்த வடிவேல், எழுத்தாளர் மு.பழனியப்பன் ஆகிய இருவரும் வந்து தொழிலாளர் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைத்தார்கள். கூட்டத்தில் பேச பட்டுக்கோட்டை எழுந்த போது மக்கள் கவிஞர் என்று பாட்டாளி மக்கள் குரல் உயர்ந்தது. மறுபடியும் எழும் போதும் அதே குரல்கள் உயர்ந்தது. அங்கு தான் பாட்டாளி மக்கள் வைத்த பெயர் தான் “மக்கள் கவிஞர்“  அந்த பெயர் வைத்த 50 வது நாளில் கவிஞர் இறந்துவிட்டார். இந்த தகவலை மு.பழனியப்பன்  ஒவ்வொரு தொழிற்சாலையாக சென்று தொழிலாளர்களிடம் சொல்கிறார். ஒட்டு மொத்த பாட்டாளி மக்களும் யாரும் அழைக்காமல் ஒன்று கூடி அமைதி ஊர்வலம் நடத்தி கதறி அழுதார்கள். இதை அப்படியே காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் பேராசிரியர் சரோன்.

20 மாதங்களே இல்வாழ்க்கை.. – கௌரவம்மாள் நெகிழ்ச்சி

என்னை கவிஞர் சின்னப்புள்ள என்று தான் அழைப்பார். அடிக்கடி சின்ன சின்ன கோபம் வரும். அது கொஞ்ச நேரம் தான். எங்களுக்கு 1957ல் திருமணம் ஆனது. 1959ல் இறந்துவிட்டார். 20 மாதங்கள் தான் அவர் என்னுடன் இருந்தது.

சில நேரங்கள் கம்பெனிகளுக்கு போயிட்டு ரொம்ப பாதி ஜாமத்தில் வருவார். அதற்குள் நான் தூங்கிவிடுவேன். சென்னையில் நாங்கள் இருக்கும்போது காலையில் ஒரு பையன் “பேப்பய“..“பேப்பய“  ன்னு சொல்லிக்கிட்டே வருவான். ஒரு நாள் கவிஞர்கிட்ட கேட்டேன் என்னங்க அந்த பையன் தினமும் “பேப்பய“  ன்னு சொல்றானே.. என்றேன். அவன் பேப்பரு பேப்பருன்னு சொல்றான் என்றார். சென்னை தமிழ் அப்படி இருக்கிறது. தமிழை கெடுக்கிறார்கள்.

அவரைப் பற்றி யார் பேசினாலும் அழுதுடுவேன். அவ்வளவு அன்பா இருந்தவரு கவிஞர் என்று நெகிழ்ந்தார்.

180 மணி நேரம் எடுத்து 2.30 மணி நேரமாக்கி இருக்கிறேன் – இயக்குநர் சரோன்

பட்டுக்கோட்டையின் பாட்டை எனக்கு பாடிக்காட்டி என் தந்தை என்னை வளர்த்தார். அதனால இந்த தூண்டுதல் வந்து அவணமாக்க நினைத்து அழைந்தேன். பல நாட்கள் பட்டினி கிடந்து தகவல்களை தேடினேன். படாத அவமானமில்லை அத்தனையும் பட்டேன். இப்போது உழைப்பு வீண் போகவில்லை என்று இத்தனை கூட்டத்தை பார்க்கும் போது மகிழ்கிறேன்.

மொத்தம் 180 மணி நேரம் காட்சிகளாக்கி அதை 2.30 மணி நேரமாக குறைத்து இருக்கிறேன். முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார் ஓவியர் ராமச்சந்திரன். ஏதாவது காட்சி எடுக்க வேண்டும் என்றால் அதை ஓவியமாக வரைந்து கொண்டு பெங்களுரில் இருந்து சென்னை வந்துவிடுவார்.

கவிஞர் தங்கிய அறை, முதல் நாடக கொட்டகை எல்லாம் நான் படம் எடுக்கும் வரை இருந்த்து. இப்போது அது எதுவும் இல்லை. கௌரவம்மாளை பெண் பார்த்துவிட்டு மாட்டு வண்டியில் வீடு திரும்பும் போது கவிஞர் ஒரு பாட்டு பாடி இருக்கிறார். “ என் அருமை காதலியாம் வெண்ணிலாவே”  என்ற பாடல் தான் அது.

ஒரு முறை கவிஞர் பட்டுக்கோட்டை அரியலூர் வழியாக ரயிலில் அரியலூர் சுலைமானுடன் சென்னை செல்கிறார். அப்போது அரியலூரில் சுலைமான் கவிஞரை இறங்கி தன் வீட்டுக்கு போயிட்டு போகலாம் என்று அழைத்துச் செல்கிறார். அதனால் அவர் செல்ல வேண்டிய ரயில் சென்றுவிட்டது. ஆனால் அந்த ரயில் சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகி பெரும் சேதம் எற்பட்டது. சுலைமான் வீட்டிற்கு செல்லவில்லை என்றால் கவிஞரும் அந்த ரயிலில் சென்று இருப்பார்.

கோயம்பேடு பூ கடையில் ஒரு சிறு படம் இருந்த்து. அதை உற்றுப்பார்த்தேன். அது கவிஞரின் அரிய படம். அதை அந்த கடைகாரரின் அப்பா வைத்திருப்பதாக சொன்னார். அதை அவர் கொடுக்க மறுத்தார். கெஞ்சி வாங்கி வந்து அந்த படத்தை சேகரித்தேன். அந்த படம் அந்த பூ கடையில் மட்டுமே உள்ளது என்பது தான் அபூர்வம்.

மண்ணையும், மாண்பையும் திரையில் உலா வர வைத்தவர் பட்டுக்கோட்டை மட்டுமே.. எல்லா தேடல்களும் இந்த கூட்டத்தை பார்க்கும் போது மறந்து போனது.

நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான் - 
இயக்குநர் பாக்கியராஜ்

நமீதா போன்ற நடிகைகள் இல்லா மேடையை பார்த்துக் கொண்டு இத்தனை நேரம் இவ்வளவு பேர் இருப்பது இந்த கூட்டத்தில் மட்டும் தான்.

பட்டுக்கோட்டையின் பாடல்களை கேட்டு வளர்ந்தவன் நான். திரைக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு சென்றேன். அங்கே என் நண்பன் அழகுராஜ் சோம்பேறியாக இருந்தான். கதை சொல்லும் போதே அவன் தூங்கிடுவான். அவன் முட்டாள் என்று நினைத்துக் கொண்டேன்.

ஒரு நாள் நாங்கள் இருவரும் நடந்து செல்லும் போது.. மாட்டு வண்டியில் பூட்டப்பட்டிருந்த மாடு ஒன்று கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்த்து. அதைப் பார்த்த மக்கள் கண்டு கொள்ளாமல் போனார்கள். ஆனால் அழகுராஜா மட்டும் அந்த மாட்டை நோக்கி போனான். அதன் வாயை திறந்தான். ஒரு ஊசி எடுத்து நாக்கில் குத்தினார் கருப்பாய் ரத்தம் வந்தது. சிறிது நேரத்தில் மாட்டை எழுப்பினான் எழுந்து நின்றது அந்த மாடு. மாடு வளக்கிறது பெரிசில்லை. அதற்கு தீனி போடும் போது அதில் என்ன கிடக்கிறது என்பதை பார்த்து போடவேண்டும். விஷம் கலந்த தீனியை தின்றதால் தான் மாடு விழுந்தது. இன்னும் 10 நிமிடம் தாமதம் செய்திருந்தால் மாடு இறந்திருக்கும் என்றான். அப்போது தான் அவனது பெருமை என்னை சுட்டது.

அதே போல வேலை தேடி ஹைதராபாத் சென்று 3 நாட்கள் உணவில்லை. ஒரு ஹோட்டலில் வேலை கேட்டு போனேன். எனக்கு சாப்பாடு கொடுத்து ரூ.5 ம் கொடுத்து ஊருக்கு போ என்றார்கள். வேலை என்றேன். சர்வர் வேலை கஷ்டமானது உனக்கு அது லாயக்கில்லை போ என்றார்கள். அப்போது தான் ஹோட்டல் சர்வர் வேலையும் கடினமானது என்று தெரிந்துகொண்டேன்.

வாலியை கூட கவிஞராக்கியது பட்டுக்கோட்டை தான். ஒரு முறை பட்டுக்கோட்டை யின் உதவியாளர்கள் அவர் எழுதிய பாடல்களை விற்று சாப்பிட்டனர். கவிஞருக்கும் சாப்பாடு வாங்கி கொடுத்தார்கள். எப்படி காசு வந்தது என்று கவிஞர் கேட்கும் போது தான் சொன்னார்கள் நீங்கள் எழுதி வைத்திருந்த பாட்டு பேப்பர்களை பழை பேப்பருக்கு விற்றோம் என்றனர். அதற்கு கவிஞர் கோபப்படவில்லை.

-   இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [10]
Name : baskaran r Date :12/2/2014 4:50:52 PM
பட்டுக்கோட்டையார் இருந்திருந்தால் மக்கள் மக்களாக இருந்திருப்பார்கள்
Name : Nagesu Singam Date :11/18/2014 6:20:52 AM
தயவு செய்து இந்த ஆவணப்படத்தை எங்கே பெறலாம் என்பதையும், இதனை கனடா நாட்டில் பெறும் வழிவகையையும் தெரிவிக்கவும்.
Name : abdul rahim Date :11/3/2014 5:38:20 PM
பட்டுகோட்டையருக்கு மிக அருமையான நினைவஞ்சலி .இப்படம் எங்கே கிடைக்கும் என்ற தகவலும் இருந்தால் மிக நன்றாயிருக்கும் .
Name : Kumar Date :10/31/2014 7:55:56 PM
அவர் மரணத்தால் பிற்காலத்தில் வரவேண்டிய பல தத்துவ பாடல்கள் பிறக்காமல் போயின . சித்திரப்பூப் போல சிதறும் மத்தாப்பு தீ ஏதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு . என்ன கற்பனை ?
Name : பொன்.மாறன், மதுரை. Date :10/26/2014 1:51:48 PM
ஆனால் ஒருவா் கூட பட்டுக்கோட்டையார் புரட்சிக்கவிஞர் அவா்களுடைய சீடா் என்பதை கூறாதது ஏன்?. பட்டுக்கோட்டையாரை தன் கூடவே வைத்திருந்து அவருக்கு சினிமா பாடல் எழுதும் வாய்ப்கை தந்தவா் பாவேந்தா் என்பதை இந்நன்னாளில் நினைவு கூா்வோம்.
Name : parthiban Date :10/4/2014 5:25:51 PM
நடிகர் பாக்கியராஜ் தனது உரையில் பாட்டுக்கோட்டையார் திரை உலகில் எப்படி நுழைந்தார் என்பதை உணர்ச்சிபூர்வமாக விரிவாகப் பேசினார். அது இந்த கட்டுரையில் இல்லை...
Name : siva. Date :10/3/2014 9:04:56 AM
ஆவணப்படம் பார்க்க முடியாதவர்களுக்கும் பட்டுகோட்டையாரை பற்றி பல நல்ல தகவல்களை கொடுத்த நக்கீரனுக்கு நன்றி..
Name : v.mathiazhagan Date :9/27/2014 7:15:40 AM
ஆவணப்படம் பார்தேன் .மெச்ச தகுந்த மேன்மையான முயற்சி .முழுமையாக வெற்றி பெற்றுள்ளது .எழுத்து பிழைகள் சில உள்ளன .சரிப்படுத்தவும் .வாழ்த்துக்கள் .
Name : கண்ணன். Date :9/25/2014 10:44:13 AM
காலத்தால் அழியாத பாடல்களைத் தந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவருக்கு ஆவணப்படம் எடுத்து விழா எடுத்திருப்பது நன்றாக உள்ளது. விழா குழுவுக்கும் தொகுத்து வெளியிட்ட நக்கீரனுக்கும் வாழ்த்துக்கள்.
Name : அம்மு Date :9/24/2014 5:02:02 PM
பட்டுக்கோட்டையாரின் ஆவணப்பட குறுந்தகடு வெளியீட்டு விழா தொகுப்பு மிக அறுமையாக உள்ளது. நக்கீரனுக்கு நன்றி.