நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :21, நவம்பர் 2014(17:2 IST)
மாற்றம் செய்த நாள் :21, நவம்பர் 2014(17:2 IST)

“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”

தென்னிந்தியாவில் ஐந்து மாநிலங்களை இணைக்கும் அழகிய மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் (Western Gates) "யுனெஸ்கோ'வின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இம்மலைத்தொடர் அரபிக்கடலிருந்து வரும் குளிர்காற்றை தடுத்து, மழைப்பொழிவைத் தருகிறது. இதன்மூலமே, தமிழகத்தின் 40% நீர்த்தேவையையும், கேரளத்தின் 100% நீர்த்தேவையையும்  நிறைவு செய்யப்படுகிறது.

8841-அடி உயரமுடைய ஆனைமுடி என்ற மலை உச்சியைக்கொண்ட இம்மலைத் தொடர் உலகில் பல்லுயிரின பெருக்கம் மிக்க பத்து இடங்களில் ஒன்று. இங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட தேசிய சரணாலயங்கள் பாதுகாக்கப்பட்ட பல்லுயிரின பெருக்கத்திற்கு வழிவகை செய்கிறது. அரிய உயிரினங்கள், மூலிகைகள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. 5000-வகைத் தாவரங்கள், 139-வகைப் பாலூட்டிகள், 508-பறவைகள் 179-நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினங்கள் இந்த மலைத்தொடரில் வாழ்கின்றன.

உலகளவில் அழியும் நிலையில் உள்ள 325-வகை உயிரினங்கள் இங்கே கடும் போராட்டத்திற்கிடையில் உயிர் வாழ்வதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆனைமலைத் தொடரிலுள்ள “டாப்சிலிப்”. என்ற இடம் இரண்டு புலிகள் சரணாலயங்களுக்கு தாயாக விளங்குகிறது.

யானை, புலி, மான், காட்டெருமை, மயில்கள் என பலவகை வனவிலங்குகளையும் “டாப்சிலிப்”.க்கு சென்றால் நேரில் பார்க்கமுடியும். தற்போது இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடம். ஒரு நெடிய வரலாற்றையும், பெரும் துயரத்தையும் மையமாக கொண்டுள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக மொட்டையாகி, பொட்டல் காடாகிப்போன இந்த மலைப்பகுதியை மீண்டும் இயற்கையான சோலையாக மாற்றிய ஒரு ஆங்கிலேயரை பற்றியதுதன் இந்த தொடர். இதற்காக நாம் உலக வரலாறில் கொஞ்சம் பின்னோக்கிச் செல்வோம்.

இந்தியாவிலிருந்து வந்திறங்கிய ஒரு பவுண்டு மிளகின் விலையை 5-ஷில்லாங் அளவுக்கு உயர்த்திய “டச்சு” வியாபாரிகளின் செல்வாக்கை குறைக்க நினைத்த இலண்டன் நகரத்து பிரிட்டிஷ் வியாபாரிகள் 24-பேர் ஒன்றிணைந்து 1859,செபம்பர் 24-ம் தேதியன்று, 72,000 பவுண்ட் முதலீட்டுடன் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒரு நிறுவனத்தை துவக்கினர். வாசனை திரவிய வியாபரத்திற்காக இந்தியா செல்ல மேன்மை தாங்கிய பிரிட்டிஷ் மகாராணியிடம் அனுமதி வாங்கிய இவர்கள், முதலில் நம் நாட்டுக்கு வியாபாரத்திற்காக மட்டுமே வந்தனர்.

போட்டி, பொறாமை, காட்டிக்கொடுக்கும் குணம், பேராசை, ஒருவருக்கு ஒருவர் குழிபறித்தல் என்ற கெட்ட பண்புகளை கொண்ட இந்த நாட்டின் மன்னர்களையும், சாதி, மதம், இனம், மொழி என்ற பிரிவாலும், பில்லி, சூனியம், பேய், பிசாசு, கடவுள் என்ற  மூட நம்பிக்கைகளில் சிக்கிக்கிடந்த நம் நாட்டு மக்களையும் எளிதில் தங்களுக்கு அடிமைபடுத்தி பல நாடுகளை கையாகப்படுத்த தொடங்கினர். இருநூறு ஆண்டுகளில் இந்திய நாட்டின் பெரும்பாலான பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியினர் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தை பிடித்தாலும், கொங்கு நாடான கோவை மண்டலத்தை அவர்களால் கைபற்ற முடியவில்லை.

காரணம், மைசூரை தலைமையாக கொண்டு ஆட்சி செய்த திப்புசுல்தானின் ஆளுமையின் கீழ் கொங்கு நாடு இருந்தாது. திப்புவின் எல்லைக்குள் ஆங்கிலேயர்களால் நுழைய முடியவில்லை. மைசூர் அருகிலுள்ள ஸ்ரீரங்கப்படிணத்திலிருந்த திப்புவை சூழ்ச்சியால் வீழ்த்தி பல ஆண்டுகள் நடந்த மைசூர் போரை 1799-ல்,  முடிவுக்கு கொண்டுவந்த பிறகுதான் கொங்குநாடு ஆங்கிலேயர் வசமானது.

புதிதாக தங்களுக்கு கிடைத்த கொங்கு நாட்டை எப்படி நிர்வாகிப்பது என்பது குறித்த ஆய்வுக்காக 1801-ல், சென்னை மாகாண கவர்னர் ஜெனரலாக இருந்த எட்வார்டு கிளிவ் (Edward Clive) என்பாவரின் உத்தரவின் பேரில் சென்னையிலிருந்து  நடையாகச் புறப்பட்ட மருத்துவ அலுவலரும், ஆய்வாளரும் இயற்கை ஆர்வலரான டாக்டர்.பிரான்சிஸ் புக்கானன் (Buchanan Francis Hamilton) என்ற ஆங்கிலேயர், கேரளா கடற்கரை வரை பயணம் மேற்கொண்டார்.

கொங்குநாட்டில் வசித்துவந்த கிராமப்புற மக்களை சந்தித்து அவர்களின் உணர்வுகளை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக பயணம் மேற்கொண்ட இவர் மற்றவர்களை போல இல்லாமல், முற்றிலும் கிராமங்களின் வழியே நடந்து சென்றுள்ளார். பொள்ளாச்சியிலிருந்து மலபார் நோக்கி பயணம் செய்யும் போது அங்கிருந்த ஒரு மாபெரும் வனப்பகுதியை பார்த்துள்ளார். மலையின் அடிவாரத்திலிருந்து 24-கல் தொலைவில் இருந்த “ஆனைமலை” என்ற ஊர் வரை இம்மலைக்காடுகள் பரந்திருந்தன, அங்கே பல அறிய உயிரினங்கள் வாழ்ந்தாகவும், யானைகள் நிறைந்திருந்த காடுகள் இருந்ததால் தான் “ஆனைமலை” என்ற பெயர் ஏற்பட்டுள்ளது என்று தனது பயண நூலில் (A Journey from Madras through the countries of Mysore, Canura and Malabar) குறிப்பிட்டுள்ளார்.ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளை மட்டுமறிந்த ஆங்கிலேய அதிகாரிகளால், கொங்கு நாட்டில் ஆட்சியைச் சிறப்பாக நடத்த இயலாது என்பதை உணர்ந்த புக்கானன், இந்த கருத்தை கிழக்கிந்திய கம்பெனிக்கும், பிரிட்டிஷ் அரசுக்கும் எழுதினார். இதையடுத்து, கலெக்டர், துணை கலெக்டர், நீதிபதி மற்றும் காவல்துறை அதிகாரிகள் போன்ற பதவிகளில் உள்ள ஆங்கிலேயர்கள் உள்ளூர் மொழியையும் கற்கவேண்டும், அதற்கான தேர்வுகளில் தேர்ச்சி பெறவேண்டும் என பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது.

டாக்டர்.பிரான்சிஸ் புக்கானனின் பயணம் மூலமாக நம் நாட்டு மக்களுக்கு ஒரு நன்மை கிடைத்தாலும், அவர் தயரித்துக்கொடுத்த  அறிக்கையின் மூலமாக இன்னொரு மிகப்பெரிய பேரழிவும் ஏற்ப்பட்டது.

பொள்ளாச்சி, ஆனைமலை வழியாக பயணம் மேற்கொண்ட இவர் அங்குள்ள காடுகளின் வளத்தைப் பற்றியும் அதிலுள்ள தேக்கு, பலா, கடம்பு, வேங்கை, ஈட்டி, கடுக்காய் உள்ளிட்ட வலிமையான மரங்களைப் பற்றியும், மரங்களை வெட்டி வெளியில் கொண்டுவர முடியாத அளவுக்கு அவை உயர்ந்தோங்கி வளர்ந்துள்ளது என்பதைப் பற்றியும் பக்கம் பக்கமாகத் தனது பயண நூலில் எழுதிக் கொடுத்துவிட்டார்.

பின்னாளில் இதையறிந்த சென்னை மாகான பிரிட்டிஷ் ஆளுநர் தாமஸ் மன்றோ (Thomas Munro)  இந்தப் பகுதியை ஆய்வு செய்து நிலங்களை கணக்கெடுக்கக்கும் பணிக்காக 1820-ல் வார்டு மற்றும் கொன்னர் (Ward and Connor) என்ற இரு ஆங்கிலேயர்கள் ஆனைமலை பகுதிக்கு அனுபியுள்ளார். ஆய்வுக்கு வந்த அவர்கள் தாங்கள் அதுவரை வேறெங்கும் கண்டிராத பெரும் தேக்கு மரங்களைக் கொண்ட காடுகள் இங்கே இருப்பதைப்பற்றி இருவரும் தங்கள் அறிக்கையில் பதிவு செய்து ஆங்கில அரசுக்கு கொடுத்தனர்.

18-நூற்றாண்டின் துவக்கத்தில், ஐரோப்பாவில் மிகப்பெரும் தொழில் புரட்சி ஏற்பட்டதன் காரணமாக அங்கே ஏராளமான புதிய தொழிற்சாலைகள் உருவாகின. ஐரோப்பிய நாடுகளில் “ஓக்” மரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இங்கிலாந்தின் காடுகளிலிருந்த வலிமையான “ஓக்” மரங்கள் அனைத்தும் வெட்டி முடிக்கப்பட்ட நிலையில், புதிதாக கப்பல் கட்டவும், தொழிற்சாலைகளை அமைக்கவும், புதிய இரயில் பாதைகளை அமைக்க, துறைமுகங்கள் கட்ட, தந்திக்கம்பம் நட எனப் பல்வேறு பணிகளுக்காக பெருமளவில் மரம் தேவைப்பட்டது. அப்போது தான், தங்களின் காலனியில் உள்ள ஆனைமலைப்பகுதியில்  பெருமளவில் தேக்குமரம் இருப்பதை மேற்கண்ட அறிக்கையின் மூலம் பிரிட்டிஷ் அரசு தெரிந்தது.

ஐரோப்பிய நாட்களில் உள்ள “ஓக்” மரங்களைப் போலவே உயரமும் வலிமையும் கொண்டிருந்ததால், இந்த தேக்கு மரங்களை “இண்டியன் ஓக்” என்று பிரிட்டிஷார் குறிப்பிட்டனர். ஆனைமலைப்பகுதியில் இருந்த “இண்டியன் ஓக்” மரங்களை, வெட்டும் வேலையை துவக்கியது பிரிட்டிஷ் அரசு. இதற்காக, பொள்ளாச்சியிலிருந்து மலையின் அடிவாரம் வரை தெற்காகவும் மேற்காகவும் பாதைகள் அமைக்கப்பட்டது.

பின்னர் மலை மக்களை ஏற்றி மரங்களை வெட்ட உத்தரவிட்டனர். தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு போன்ற பயிர்களை நட்டு வளர்ப்பதற்கு ஆனைமலைப்பகுதியில் உள்ள இயற்கை சூழல் ஏற்றதாக இருப்பதை தெரிந்த கிழக்கிந்திய கம்பெனியின் பெரும் தொழிலதிபர்கள் காடுகளை அழித்து அதிலிருக்கும் மரங்களை வெட்டி தங்களின் மன்னர்களுக்கு பரிசாகக் கொடுத்துவிட்டு மரம் வெட்டிய பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை தங்கள் கையகப்படுத்தி சீர்செய்து தேயிலைத் தோட்டம் அமைத்தனர்.
மலை மீதிருந்த பெரும் நிலங்கலெல்லாம் பிரிட்டிஷ் முதலாளிகளின் கைவசமானது. வால்பாறை பகுதிகளிலும், அதன் பின்புறத்தில் உள்ள கொடைக்காணல் மலைச்சரிவிலும் இப்போது உள்ள பல தேயிலை தோட்டங்கள் எல்லாமே இயற்கையான காடுகளை அழித்து அந்த இடத்தில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட “எஸ்டேட்” என்ற “பசும் பாலைவனங்களே.

மாலையின் கீழே இருந்த சிறு,சிறு நிலங்களில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு அந்த நிலங்கள் ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்த இந்திய “ஜமீன்”களின் கைக்கு போனது.

ஆணைமலைக்கு மேற்கிலுள்ள மலை மீது மக்கள் நேராக ஏறமுடியாத அளவுக்கு உயரமாக இருந்ததால் சேத்துமடை வழியாக மலைமீது மக்கள் ஏற்றப்பட்டனர். பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவிலிருந்த உயர்ந்தோங்கிய தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு மலை உச்சியிலிருந்த ஒரு சமதளத்தில் கொண்டுவந்து அடுக்கப்பட்டது. சாலை வசதியில்லாத மலைப்பகுதியில்,  2000-அடி உயரத்தில் இருந்த அந்த மரங்களை கீழே கொண்டுவர ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பெயர்தான் “ஆபரேஷன் டாப்சிலிப்” என்பது.

இந்த நடவடிக்கையின் படி மலை உச்சியில் இருந்த ஒரு சமதளத்திலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் ஒரு பள்ளத்தின் வழியாக அடுக்கப்பட்டிருந்த மரத்துண்டுகளை கீழே தூக்கிப்போட்டனர். ஆயிரக்கணக்கில் போடப்பட்ட மரத்துண்டுகள் ஒன்றோடு ஓன்று மோதி, முட்டி, சரிந்து கீழே வந்து விழுந்தது. இப்போது சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் இருந்த பள்ளத்தில் வந்து விழுந்த மரங்களை மாட்டு வண்டியின் மூலமாக சுப்பேகவுண்டன் புதூரில் கொண்டுவந்து சேர்த்தனர்.
அங்கிருந்து புகைவண்டி மூலமாக இந்த மரங்கள் கொச்சின் துறைமுகத்துக்கும், இந்தியாவின் பிறபகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. இதற்காகவே ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷன் துவக்கப்பட்டது. மலையிலுள்ள பாறை இடுக்குகளில் சிக்கும் மரங்கள் தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும்போது உப்பாற்று தண்ணீரில் மிதந்துகொண்டு வரும். இப்போதுள்ள அம்பராம்பாளையம் அருகில் ஒதுங்கும் அந்த மரத்துண்டுகளை அங்கே சேகரித்து வைத்துள்ளனர்.

இப்படியாக மலை முகட்டிலிருந்து மரங்களை கீழே தள்ளப்பட்ட இடத்திற்கு “டாப்ஸ்லிப்” (Top Slip) என்று பெயர் ஏற்பட்டுள்ளது. முதன் முதலாக இங்கே துவங்கிய ஒரு அஞ்சலகத்திற்குத்தான் “டாப் ஸ்லிப்” என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக ஆங்கிலேயர்களால் சூட்டப்பட்டது. இப்போது உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு பக்கத்தில் உள்ள பள்ளத்தில் தான் அந்த காலகட்டத்தில் மரங்களை தூக்கி கீழே தள்ளிவிடும் வழியாக இருந்துள்ளது.

ஆனைமலை காடுகளில் வெட்டவெட்ட குறையாமல் இருந்த மரங்களை வெட்டி வெளியே கொண்டுவர முடியாத நிலையில், 1850-ஆம் ஆண்டு, கேப்டன் மைக்கேல் என்பவரால், “டாப்சிலிப்”பிலிருந்து வால்பாறைக்கு செல்லும் வழியிலுள்ள சிச்சுழி என்ற இடம்வரை   11 கி.மீ. நீளத்திற்கு ஒரு பதை அமைக்கபட்டது. 1956- கேப்டன் கோஷ்லிங்  என்பவரால், இப்போதுள்ள பரம்பிக்குளம் செல்லும் வழியில் ஒரு புதிய பாதை அமைத்துள்ளார். இந்த வழியில், யானைகளால் இழுக்கப்பட்ட பெட்டிகள் மூலம் மரங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த காலகட்டத்தில், கிழக்கிந்தியகம்பெனியின் வசமிருந்த அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பெரும்பாலான அதிகாரமும், நிர்வாகமும் பிரிட்டிஷ் அரசின் கைக்குப் போனது. அவர்களின் நிர்வாக வசதிக்காக இரயில் பாதை அமைக்கவும், இராணுவத்தின் தேவைக்கு தொலைபேசி தொடர்புகளை ஏற்படுத்தவும் ஆங்கில அரசு முடிவு செய்தது. அதற்காக, இரயில் தண்டவாளத்தில் போடும் “ஸ்லீப்பர்” கட்டைகளுக்காகவும், இரயில் பாதை ஓரங்களில் நடப்படும் தந்திக் கம்பங்களுக்காகவும் நெடிய, பலமான மரங்களும், மரத்துண்டுகளும் இந்திய-பிரிட்டிஷ் அரசுக்கு தேவைப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சிக்கு என்று சொல்லப்பட்ட போதிலும், இங்கிலாந்தின் மறைமுகத் தேவைக்காக ஆனைமலையில்  மீதமிருந்த மரங்களும் கோடாலிக்கு பலியானது. இந்த மலைப்பகுதியில், அதிகமான மரங்களை வெட்டி, காடு திருத்திய வேட்டைகாரன்புதூர் ஒப்பந்த(ஜாமீன்)தாரர் ஒருவருக்கு பிரிட்டிஷ் அரசு, யானை தந்தத்தால் ஆன பல்லக்கு ஒன்றைப் பரிசளித்தது என்று பழைய வரலாற்று கதை ஓன்று உண்டு.

சுதந்திரம் பெறுவதற்கு முன்புவரை இந்த யானைத்தந்த பல்லாக்கில் தான் பிரிட்டிஷ் அரசுக்கு கொடுக்கப்படும் வரிதொகையான (கிஸ்து) பொள்ளாச்சிக்கு எடுத்துக்கொண்டு போய் சந்குனி ஆஸ்பத்திரி என்ற இடத்திலிருந்த ஆங்கில அதிகாரியிடம் கொடுப்பார்கள் என்று தனது சிறு வயது நினைவை நம்முடன் பகிர்ந்துகொண்டார் வேட்டைக்காரன் புதூரை சேர்ந்த 87-வயது முதியவரான சுந்தரலிங்கம்.

இங்கிலாந்தின் தேவைக்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அனைத்தும் மொட்டையான நிலையில், மழைப்பொழிவு குறைந்தது. காட்டு விலங்குகள் நாட்டுக்குள் படையெடுத்து. அடுத்தடுத்து ஏற்பட்ட மரத்தின் தேவைகளுக்காகவும் இந்திய காடுகளை வளர்க்கவேண்டிய அவசியம் பிரிட்டிஷ் அரசுக்கு ஏற்பட்டது.

1855-ல், இந்திய காடுகளை கண்காணித்து வளர்க்க பிரிட்டிஷ் அரசால் காடுகளுக்கென ஒரு தனித்துறை ஏற்படுத்தப்பட்டது. சமூக அக்கறையுள்ள மருத்துவரான Dr..கிளைகார் Dr.H.F.Cleghorn என்பவர் மெட்ராஸ் பிரசிடென்சியின் முதல் வனப்பாதுகாவலராக (Conservator) நியமிக்கப்பட்டார்.
அவரது ஆலோசனைப்படியே இந்தியா காடுகளுக்கென தனி சட்டம், தனி அமைச்சகம், தனித்தனி அதிகாரிகள் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் பணியாற்றும் ICS, IPS பணியாளர்கள் போலவே, வனத்துறைக்கு என தனியாக  IFS என்ற புதிய படிப்பும் இங்கிலாந்தில் ஏற்படுத்தப்பட்டது.  இதன் பயனாக  ஆனைமலைக்காடுகலெல்லாம் அழிந்து போய் மொட்டையாக இருந்த 1915-ஆண்டு வாக்கில் (Top Slip) பகுதிக்கு “ஹியூகோ வுட்” (Hugo Francis Andrew Wood)என்ற IFS அலுவலர் வந்து சேர்ந்தார்.

முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மிர் காடுகளில் அவர் செய்த பணியைக் கவனித்த பிரிட்டிஷ் அரசு ஆனைமலை பகுதியை மறு சீரமைப்பு செய்யும் பணிக்காக அவரை கோயம்புத்தூர் (தெற்கு) வனக்கோட்டத்திற்கு அனுப்பியது. ஆனைமலை காடுகளை சுற்றிலுமுள்ள மலைவாழ் மக்கள், மரம் வெட்டுவோர், மரம் விற்போர் என பலரிடமும் தொடர்பு கொண்டு பேசினார். மரம் வெட்டப்பட்ட காடுகளில் பயணம் மேற்கொண்டார். முதல் கட்டமாக அழிந்துபோன காடுகளை மீட்டெடுக்க 1915-ல் ஒரு செயல் திட்டத்தை (working Plan) தாயரித்து பிரிட்டிஷ் அரசுக்கு சமர்ப்பித்தார்.

அரசுக்கு தேவையான மர அறுவடையை நிறுத்தாமலும், அதே நேரத்தில் ஆனைமலைக்காடுகள் மரமில்லாத பொட்டல் காட்டகிப்போகாமல் இருப்பதற்கான திட்டம் தான் அது. இந்த செயல்திட்டத்தில், இருமுனைச் செயல்பாட்டை வலியுறுத்தினார். முதலாவது திட்டம். காடுகளில் வளர்ந்துள்ள மரங்களை வேரோடு வெட்டக்கூடாது. நிலத்துக்கு மேலே ஒரு அடி மரத்தை விட்டு வெட்டினால், நமக்கு தேவையான வெட்டுமரம் கிடைக்கும். அதே நேரத்தில், மரவேரின் ஊக்கம் குறையாமல் வெட்டப்பட்ட மரத்தின் அடியிலிருந்து மறுபடியும் துளிர்த்து வேகமாக வளரும். இதன் மூலம் காடுகள் அழியாது என்று கூறினார்.

இன்றளவும் நம் நாடு முழுவதும் கையாளப்படும் Coppice Method எனப்படும் இந்த மர அறுவடை முறையை நம் நாட்டில் முதன் முதலில் “ஹூகோ வுட்” தான் அறிமுகப்படுத்தினார் (நம் நாட்டு மக்களின் வழக்கப்படி மரத்தை வெட்டும் போது நிலத்திலுள்ள அடிமரத்தின் வேரையும் சேர்த்து தோண்டிப் புடுங்குவது தான் வழக்கம். ஒரு மரத்தின் எடையில் நான்கில் ஒரு பங்கு எடை அதன் வேரின் மூலம் கிடைக்கும் என்பது மர வியாபாரிகளின் கணக்கு அதனால், மரத்தை வேறோடுதான் வெட்டுவார்கள்.)

இரண்டாவது செயல்திட்டம்:- குறிப்பிட்ட சில காட்டுப்பகுதிகளில் உள்ள மரங்களை குறைந்தது 25-ஆண்டுகளுக்குத் வெட்டாமலிருப்பது. அப்படியே தேவைக்காக வெட்டினாலும், ஒன்றுக்கு நான்காக மரங்களை நடுவது. இதன் மூலம் இயற்கையாக வளர்ந்துள்ள காடுகளின் வளம் குறையாது. மாறாக மரவளம் பெருகும் என்று அந்த செயல்திட்ட அறிக்கையில் “ஹியூகோ வுட்” கூறியிருந்தார்.

இந்திய காடுகளை காக்கவேண்டும் என்று முடிவு செய்த பிரிட்டிஷ் அரசு இந்த திட்டத்துக்கு ஒத்துக்கொண்டது. “ஹியூகோ வுட்” இனி அவரது செயல்திட்டத்தின்படி காடுகளை வளர்க்க முயற்சி மேற்கொள்ள அனுமதி கிடைத்தது. “டாப் சிலிப்” காடுகளில் வெட்டிக் குவிக்கப்பட்டிருந்த மரங்களை சீர் செய்து, விஞ்சு மூலமாக ஒரே இடத்தில் கொண்டுவந்து சேர்த்தார். வெட்டப்பட்டு கிடந்த மரங்களை எல்லாம் அறுத்து சடங்களாக்கினார். காட்டில் வாழும் பழங்குடியினரான “காடர்” இன மக்களை வேலைக்கு அமர்த்தினர்.

இந்தியா முளுவதுமுள்ள அரசு அலுவலகங்களுக்கு தேவையான நாற்காலி, மேசை செய்ய தேவையான மரசட்டங்கள் Top Slip-லிருந்து பயனமாகின. மரச் சட்ட விற்பனையில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு புதிய மரக்கன்றுகளை இந்த மலைப்பகுதியில் நடவு செய்தார். வேலையே இல்லாமல் இருந்த மலைவாழ் மக்களுக்கு இருமுறை வேலை வாய்ப்பை ஏற்படுத்தினார். இப்போதுள்ள வனத்துறை அதிகாரிகளை போல மாவட்ட தலைநகரில் உள்ள பங்களாவில் தாங்காமல், மலைப்பகுதியிலேயே தங்கி மரவளம் பெருகவும், அதன் மூலம் வன உயிரினங்கள் பெருக்கவும் திட்டமிட்டார்.

முறையான சாலைவசதிகள் இல்லாமல் இருந்த அந்த நாளில், “ஹியூகோ வுட்” தனது பயணத்துக்காக நான்கு குதிரைகளை வளர்த்து வந்துள்ளார். ஒவ்வொரு நாளும் ஒரு குதிரையில் பயணம் செய்யும் “வுட்” காடுகளில் வசித்துவந்த பூர்வ குடிமக்களான காடர்களுக்கு வசதியான குடியிருப்புகளை உருவாக்கினார். அவர்களின் குடியிருப்புகளுக்கு தேவையான சாலை வாசதிகளை செய்துள்ளார். அந்த மக்களைக் கொண்டு மரமின்றி கிடந்த ஆணைமலைக் காடுகளை மறு சீரமைப்பு செய்தார்.

1885-1915, காலகட்டத்தில் இங்கு பணியாற்றிய கேப்டன். டக்லஸ் கோமில்டன் (Douglas Hamilton),லூசிங்டன்(Lushington),பிஷார் (Fischer) போன்ற பல அலுவலர்கள் மொட்டையாக இருந்த இந்த மலைப்பகுதியில் தேக்கு மரங்களை நடவு செய்து தோல்விகண்டனர். அதற்கான காரணங்கள் என்ன என “ஹியூகோ” ஆய்வு செய்தார். மலைப்பகுதிகளில் மண்டிக்கிடந்த “லேண்டனா” என்ற அறிவியல் பெயருடைய உன்னிச்செடிகளை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடங்களில் தேக்கு மரங்களை நடவு செய்தார். (கால்நடைகளின் உடலில் ஒட்டிக்கொண்டு அதன் இரத்தத்தை குடித்தது உயிர் வாழும் உன்னியை போலவே, இந்த உன்னிச்செடிகளும் காடுகளில் உள்ள மரங்களில் வேரில் உள்ள சத்துகளை உறிஞ்சிக்கொள்ளும். இந்த “களை”ச்செடியின் வளர்ச்சியால் தான் இப்போது இந்தியாவிலுள்ள பெரும்பாலான காடுகளும், மரங்களும் அழிந்து வருகிறது) சோதனை முயற்சியாக 1916-17-ம் ஆண்டில், 25-ஏக்கர் பரப்பளவில் துவங்கிய இந்த செயல் திட்டம் 1937-வரை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது. இதனால், ஏறக்குறைய 650-சதுர கிலோ மீட்டார் பரப்பளவில் இருந்த காடுகளில் தேக்குமரங்கள் நட்டு வளர்க்கப்பட்டது.

இப்போதுள்ள, “டாப் சிலிப்”பிலிருந்து நான்கு கி.மீ தூரத்திலுள்ள உலாந்தி என்ற பள்ளத்தாக்கில் மவுன்ட் ஸ்டுவார்ட்(Mount Stuart) என பெயரிடப்பட்ட ஒரு சிறு வீட்டில் தான் “ஹியூகோ வுட்” வாழ்ந்தார். தனக்கு தேவையான உணவை அவரே சமைத்துண்டார். அந்த பகுதியில் வுட் வீட்டை தவிர வேறு வீடுகளே இல்லை. இரவில் பல காட்டு விலங்குகள் “ஹியூகோ வுட்” வசித்த வீட்டுக்கு விருந்தாளியாக வந்து செல்லும். தனக்கு கீழுள்ள அலுவலர்களுக்கும், இவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மலைவாழ் மகளுக்கும் தனித்தனியே வேலைகளை ஒடுக்கிக்கொடுத்துவிட்டு மீதி நேரம் காடுகளில் தனியாக நடந்துகொண்டேயிருக்கும் “ஹியூகோ வுட்” தனது சட்டையிலும், கால் ட்ரவுசரிலும் இருக்கும் “பை”களில் தேக்கு விதைகளை நிரப்பிக்கொண்டு போவார்.

கால் போன போக்கில் நடக்கும் “வுட்” மரங்கள் வெட்டப்பட்டு மொட்டையாக இருந்த காடுகளில், தனது வெள்ளி பூண் போட்ட ஊன்று கோலால் (Walking stick) நிலத்தில் ஒரு குத்து குத்துவார். ஒரு அடி ஆழம் வரை செல்லும் அந்த குழியில் ஒரு தேக்குக் கொட்டையை போட்டு ஷூ காலால் மிதித்து மூடுவார். பிறகு 12-15 அடி இடைவெளியில் மீண்டும் ஒரு குத்து. அந்த குழியில் ஒரு தேக்குக்கொட்டையை போட்டு ஒரு மிதி. பையிலிருக்கும் கொட்டைகள் காலியானதும், மீண்டும் சட்டை பையில் தேக்குக்கொட்டையை நிரப்பிக்கொண்டு காட்டுக்குள் புறப்பட்டுவிடுவார்.

அப்போது ஒன்றிணைந்த சென்னை மாகாணத்திலும், இப்போது கேரளா மாநிலத்தின் கட்டுபாட்டில் உள்ள பரம்பிக்குளம் வனப்பகுதியிலும், ஆனைமலை புலிகள் காப்பக வணபகுதியிலும் உள்ள தேக்கு மரங்கள் அனைத்துமே “ஹியூகோ வுட்” போட்ட விதைதான் என்கின்றனர் அங்குள்ள காடர் இன பழங்குடி மக்கள்.

இப்போது பரம்பிக்குளம் (கேரள)காட்டுப் பகுதியில் இருக்கும் பத்து இலட்சம் தேக்குமரங்களும் “ஹியூகோ வுட்” அவர்களின் திட்டத்தில் உருவானவையே. ஒவ்வொரு மரமும் 30-ஆயிரம் முதல் மூன்று இலச்சம் ரூபாய் வரை மதிப்புடையது என கூறும் பரம்பிக்குளம் புலிகள் காப்பக ஊழியர்கள் இப்போதும் “ஹியூகோ வுட்”அவர்கள் நட்டுவிட்டு சென்றுள்ள மரத்தை கண்காணித்து அதை அரக்கி சுத்தம் செய்து நேர்த்தியாக வளர்த்து வருகின்றனர்.
ஆனால், தமிழக வனத்துறை அதிகாரிகள் நாங்கள் இயற்கையான காடுகளை இயற்கையாவே வளரவிடுகிறோம். அதனால், எதையும் வெட்டிவிடுவதில்லை என்று கூறுகின்றனர்.

வெளியுலக தொடர்பும், போதிய வசதி வாய்ப்புகளும் இல்லாத “டாப் சிலிப்” பகுதியில் வாழ்ந்த “ஹியூகோ வுட்” திருமணம் செய்து கொள்ள வில்லை. மனைவி, மக்கள், இனம், மொழி, தாய்நாடு என எந்த பற்றுக்கும் ஆளாகாமல் தான் எடுத்துக்கொண்ட கடமையிலேயே குறிக்கோளாக இருந்து ஆனைமலை காடுகளின் நலனுக்காவே வாழ்ந்துள்ளார். பின்னர் நீலகிரி மாவட்ட வனப்பதுகாவலராகச் சென்ற அவர் அங்கும் தனது மரம் நடும் பணியை தொடர்ந்து செய்துள்ளார்.

மருத்துவ வசையில்லாத அந்த கலத்தில், காசநோய் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரியவரும் இவர் பணி ஓய்வு பெற்ற பின் குன்னூரில் தங்கியுள்ளார். 24.10.1933-ல், மெட்ராஸ் ரீஜென்சி முதன்மை வனப்பதுகாவலருக்கு தான் எழுதிய உயில்(WIll) சாசனத்தில்,  தனது உடலை, தான் நேசித்த ஆனைமலை காட்டிலுள்ள தான் வசித்த,வந்த “மவுன்ட் ஸ்டுவார்ட்” வீட்டுக்கு அருகிலேயே புதைக்கப்பட வேண்டுமென்று எழுதியதுடன், அவரது கல்லறை அமைக்கவும் அதை பராமரிக்கவும் ஒரு தொகையையும் ஒதுக்கி வைத்திருந்தார்.

12.12.1933- அன்று அவர் மரணமடைந்த பின் அவரது உடல் “டாப் ஸ்லிப்” கொண்டுவரப்பட்டு அவர் வாழ்ந்துவந்த “மவுன்ட் ஸ்டுவார்ட்” இல்லத்தின் கிழக்கில் அடர்ந்த தேக்குகாடுகளுக்குள் புதைக்கப்பட்டுள்ளது. “ஹியூகோ வுட்” அவர்களின் உடல் இங்கே எடுத்துக்கொண்டு வரும் போது கிட்டத்தட்ட 12-மோட்டார் கார்களில் பிரிட்டிஷ் அரசின் பல துறை அதிகாரிகளும் “டாப் சிலிப்” பகுதிக்கு  வந்துள்ளனர்.

சேத்துமடையிலிருந்து “டாப் சிலிப்” பகுதிக்கு இப்போது நாம் செல்லும் பாதை அப்போது “ஹியூகோ வுட்” அவர்களால் குதிரை சவாரிக்காக அமைக்கப்பட்ட பாதை. அதன் வழியாகத்தான் ஹியூகோ வுட்டின் உடல் மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஹியூகோ வுட் உடலைச் சுமந்துகொண்டு சென்ற ஒரு சிறிய லாரியும், அதைத்தொடர்ந்து அதிகாரிகள் பயணம் செய்த 11-மோட்டார் கார்களும் தான் முதன்முறையாக டாப்சிலிப் மலை மீது  ஏறிய வாகனங்கள் ஆகும்.

“ஹியூகோ வுட்” அவர்களை அடக்கம் செய்த போது ஏழு வயது சிறுமியாக இருந்த மெக்கரீன் என்ற கோவை மாவட்ட வன அலுவலரின் மகள் கடந்த 2004-ம் ஆண்டில் தனது 83-வயதில், இந்தியாவுக்கு வந்து “ஹியூகோ வுட்” அவர்களின் கல்லறையை பார்த்து விட்டு, “ஹியூகோ வுட்” உடலடக்கம்  நடந்த அன்று நிகழ்ந்த சில நினைவுகளை அங்கிருந்த தமிழக வனத்துறை அதிகாரிகளுடன் பகிர்ந்து சென்றுள்ளார்.

1956-ல், மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துக்கு வந்தது, பாலக்காடு மாவட்டம் கேரளாவின் வசமானது. அப்போது, ““ஹியூகோ வுட்”” வாசித்த “மவுன்ட் ஸ்டுவார்ட்” இல்லமும், அவர் புதைக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்ட சமதியின் கழுத்து வரை இருந்த நிலம் மட்டுமே தமிழகத்தில் சேர்ந்தது. அவரது தாலையும், அவர் நேசித்து, நட்டு வளர்த்த பல இலட்சம் தேக்கு மரங்களும் கேராளாவின் எல்லைக்குள் சென்றுவிட்டது. ““ஹியூகோ வுட்”” வசித்த வீட்டின் வாசலில் தமிழக கேரளா எல்லையை குறிக்கும் “கல்” நடப்பட்டு இதிலிருந்து கேரளா என்பதற்கு அடையாளமாக N-என்ற ஆங்கில எழுத்து வடக்கு திசையை காட்டுகிறது. தேக்கு மரங்களுக்கு இடையில் அமைந்துள்ள ““ஹியூகோ வுட்” என்ற அந்த “மா”மனிதரின் கல்லறையில், அவரது தோற்றம், மறைவை குறிக்கும் தகவலுடன், என்னை பார்க்க நினைப்பவர்கள்; என்னைச் சுற்றிப்பருங்கள் என்ற பொருள்படும் இலத்தின் வாசகம் ‘Si Monumentum Requiris Circumspice’ எழுதப்பட்டிருந்தது.

அந்த கல்லறையின் முன்பாக நின்று அவர் நட்டுவிட்டு போயுள்ள தேக்கு மரங்களை சுற்றிப்பார்க்கும் போது நூறடி உயரத்துக்கு வளர்ந்து வானமே தெரியாத அளவுக்கு அடர்த்தியாக வளர்ந்துள்ள பெரும் மரத்தோப்பில் ஒவ்வொரு மரத்திலும் ““ஹியூகோ வுட்” வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது.

1993-ல் தமிழக வனத்துறையினர் ““ஹியூகோ வுட்””அந்த வீட்டை சீரமைத்துள்ளனர். யாருமே அந்தபக்கம் போகாதகாரனத்தால் இப்போது, தினமும் கரடிகள் வந்து அந்த வீட்டின் திணையில் வசிப்பதாக என்னுடன் வந்த வனத்துறையினர் கூறினர். அதற்கு அடையாளமாக கரடியின் உடம்பிலிருந்த சேரும்,சகதியும் “ஹியூகோ வுட்” வாழ்ந்த  “மவுண்ட் ஸ்டுவார்ட்” வீட்டின் சுவர்களில் ஒட்டியிருந்தது.

நான் சமாதியை பார்த்து படமெடுத்துக்கொண்டு வந்தபோது, ஒரு தேக்கு மரத்திலிருந்த அடையாளத்தை பார்த்த ஒரு வனத்துறை அலுவலர் இப்போதுதான் ஒரு பெண் யானை தேக்கம்பட்டையை உரித்து தின்றுவிட்டு போயுள்ளது என்று மரத்தின் பட்டை உரிக்கப்பட்ட பகுதியை காட்டினார். இரண்டு முறை “ஹியூகோ வுட்” வசித்த வீட்டை யானைகள் உடைத்துவிட்டு சென்றுள்ளது. அதை வனத்துறையினர் சரி செய்து வைத்துள்ளனர். இன்று அந்த இடம் இந்திராகாந்தி வனச் சரணாலயம் என்று உலகப் புகழ் பெற்று விளங்குகின்றது. இங்கே, இலையுதிர்க்காடுகள், மழைக்காடுகள், புல்வெளிகள், நீர் நிலைகள் என பலவகையான வனப்பகுதிகளை உள்ளடக்கிய அரிய ஊயிரின உறைவிடம், அழிவின் விளிம்பிலிருக்கும் பல உயிரினங்களை காத்து வருகிறது. சோலைமந்தி எனப்படும் சிங்கவால் குரங்கு, நீலகிரி வரையாடு, வேங்கை, புலி, ராஜநாகம், மரகதப்புறா, நீலகிரி உடும்பு போன்ற அரிய விலங்குகளின் வாழிடமாகவும் இந்த காடு திகழ்கிறது.

18-ம் நூற்றாண்டில் அழிந்துபோன ஒரு மலையை “ஹியூகோ வுட்”. மறு சீரமைப்பு செய்துள்ளார். இந்த நூற்றாண்டில் அழிந்துபோன ஏராளமான மலைகளை மறு சீரமைப்பு செய்ய இன்னும் ஆயிரம் “ஹியூகோ வுட்” பிறக்கவேண்டும்.

கட்டுரை, படங்கள்:- பெ.சிவசுப்ரமணியம்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [4]
Name : Dhinesh prabhakaran Date :3/3/2015 8:31:47 AM
மரணம் தொட்டு மறுபடியும் மலர் பூத்து குலுங்கும் மரங்களின்... பதிவுகளுக்கு நன்றி...
Name : Satheesh Date :2/27/2015 6:52:43 AM
மிக அருமையான பதிவு படங்களும் அருமை நன்றி
Name : Mathiyalagan Date :11/16/2014 9:41:44 PM
அருமையான கட்டுரை, சொகுசு அனுபவிப்பதற்கு மட்டுமே டாப்சிலிப் செல்பவர்கள் ஹியூகோ வுட்-ன் வரலாற்றை தெரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் டாப்சிலிப், சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகாமல் தடுக்க முடியும்.
Name : dhaksina Date :11/16/2014 7:21:13 PM
அருமை