நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :9, மே 2015(12:20 IST)
மாற்றம் செய்த நாள் :9, மே 2015(12:20 IST)

சின்னாபின்னாவாகும் தமிழ்!
-முனைவர் பா.இறையரசன்

ங்கிலத்தில் 26 எழுத்துகள்தான் உள்ளன; ஆனால் தமிழில் எழுத்துகள் 247 உள்ளன: அவற்றைத் தட்டச்சு செய்வது கடினம்; எனவே தமிழ் எழுத்துகளைக் குறைக்க  எழுத்துச் சீர்திருத்தம் செய்யவேண்டும். அதிகம் வழக்கில் புழக்கத்தில்  வழங்காத ங், ஞ்,வ்,ய் ஆகியவற்றின் உயிர்மெய் எழுத்துகளை நீக்க வேண்டும்; இகர ஈகார எழுத்துகளிலும், உகர ஊகார எழுத்துகளிலும் குறியீடுகள் முறையாக இல்லை, இவற்றைச் சீர்மை / சீர்திருத்தம்  செய்யவேண்டும் என்று கூறினார்கள். அச்சிட்ட பழந்தமிழ் நூல்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன.  எழுத்து வடிவை மாற்றினால் அவற்றை இழக்க நேரும்; அத்துடன் நம் எழுத்துகளின் மரபையும் இழக்கக்கூடாது என்று கி.ஆ.பெ. விசுவநாதம், பாவாணர், பெருஞ்சித்திரனார், வ.சுப.மாணிக்கம் முதலிய தமிழறிஞர்கள் எதிர்த்தனர்.அதனால் பெரியார் செய்தவற்றுள்  ஆகார ஐகார உயிர் மெய்யெழுத்துகளில் ஒருசில (னா, ணா, றா, லை,ளை, னை ,ணை) பொருத்தமான சீர்திருத்தங்கள் ஏற்கப் பெற்றன. கணினியில் மென்பொருள் மூலம் எத்துணை எழுத்துகள் இருந்தாலும் உள்ளிட முடியும் என்பதால் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய குரல்கள் ஒடுங்கின. (இப்போதும் ஓர் பொறியியல் அறிஞரும் திரைக்கவிஞர் மகனும் மறுபடிப் பேசத் தொடங்கியுள்ளனர்). 

கணினி பயன்பாட்டுக்கு வந்த போது தமிழுக்கான எழுத்துரு சரிவர உருவாக்கப்படவில்லை. கணினிப் பொறிஞர் ஒவ்வொருவரும் விருப்பப்படி வெவ்வேறு வகையில் உருவாக்கினர்.  ஒருநிறுவனம் அல்லது  அச்சகம் அல்லது  கணினி நிறுவனம் உருவாகிய எழுத்துரு வேறு கணினியில் அச்சில் வெறும் கட்டங்களாக அல்லது கருவி மொழியாகத் தெரியும். ( இப்போது கைப்பேசியில் இச்சிக்கலை நீங்கள் கண்டிருப்பீர்கள். ஒருவர் தமிழில் அனுப்பிய செய்தி உங்கள் கைப்பேசியில் வெறும் கட்டங்களாகத் தோன்றியிருக்கும்). உலகத் தமிழியல் ஆய்வு மன்றத் தலைவர் நொபுரு கரோசிமாவும்,    தொடக்க நிலையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தினரும்  ஆங்கிலத்தில் தமிழைத் தட்டச்சு செய்து ஆய்வுகளுக்குப் பயன்படுத்தினர். தமிழைக் கணினியில் பயன்படுத்துவதற்கு முற்பட்டபோது ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை எழுத்துருக்களை உருவாக்கினார்கள். ஒருவர் அனுப்பும் தகவலை மற்றொருவரால் படிக்க முடியாமல் இடர் நேர்ந்தது. 

இப்படிப்பட்ட நிலையில் இந்திய மொழிகளுக்கான பொதுவான ஓரெழுத்து முறையை இசுகி (ISCII: Indian Script Code for Information Interchange) இந்திய அரசு 1983-இல் உருவாக்கியது. இந்திய அரசு இந்திக்கும் இந்து மததிற்கும் இந்து மத அடிப்படையில் சமற்கிருதத்திற்கும் வேதத்திற்கும் முன்னுரிமை கொடுத்து வருகிறது என்று குற்றம்சாட்டுவர்.  இந்தியாவில் உள்ள பலமொழிகளுக்கும் பொது நிலையை எடுப்பதற்காக சமற்கிருத அடிப்படையை இந்திய நடுவண் அரசு மேற்கொண்டது. எட்டு புள்ளி (8-bit) அளவில் அமைய வேண்டியதைப் பிறமொழிகளுக்காக ஏழு புள்ளிகளாக (7-bit) ஆக்கித் தந்ததுடன் இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தேவநாகரியையும் சமற்கிருதத்தையும் முன்னோடியாக வைத்துக் கொண்டது. தமிழில் உள்ள உயிர்மெய் ஆய்தம் ஆகியவற்றுக்கான பெயரை இந்திய அரசு அனுசுவரா விசர்க்கம்  என்று  சமற்கிருத்தில் அமைத்துள்ளது. 

தமிழக அரசு எட்டுபுள்ளிகளுடன் தாம், தாபு (tam, tap) முறையை 1999-இல் கொண்டுவந்தது. 16 புள்ளிகளில் அமைந்துள்ள ஒருங்கு குறி (TACE-16) 2006-இல் கொண்டுவரப்பட்டது. இம்முறை இன்னும் செயற்பாட்டுக்கு வரவில்லை.  2007-இல் தமிழக அரசும் ஒருங்கு குறி சேர்த்தியத்தில் உறுப்பினராகிச் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஆயினும் இந்திய அரசு வடமொழிக்கேற்பவே தமிழுக்கு ஒருங்கு குறிக்கான இடம் அமைத்ததை மாற்றவில்லை. இவற்றை மாற்றுவதற்கு மிக நெடிய தொடர்ந்த வலிமையான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அடிப்படையில் நிகழ்ந்துவிட்ட இத்தவறுகளைக் களைவதற்கு நாம் முற்படும் முன்னரே, கடந்த சில ஆண்டுகளாக தமிழ் ஒருங்குகுறியில் பல்லவர் சோழர்காலக் கல்வெட்டுகளையும் சம்ற்கிருத மந்திர நூல்களையும் காரணம் காட்டி மேலும் கிரந்தத்திணிப்பை மேற்கொள்ளச் சிலர் முயன்று வருகின்றார்கள்.

தமிழ்நாட்டில் முதல்வகுப்புக்கான பள்ளிப் பாடப்புத்தகத்தில் அல்லது அரிச்சுவடியில் மேற்கண்ட கிரந்த எழுத்துகள் சேர்க்கப்பட்டுவிட்டன. எனவே, கிரந்த எழுத்துகள் ஜ ஸ ஷ க்ஷ ஹ ஸ்ரீ என்ற ஆறு எழுத்துகளையும் ஒருங்கு குறியில் தமிழோடு அப்போதே சேர்த்துவிட்டார்கள். ஆயினும் சமற்கிருத மந்திர நூல்களை அச்சிட 26 கிரந்த எழுத்துகளைத்  தமிழ் ஒருங்குகுறியில் சேர்க்க வேண்டும் என்று காஞ்சி மடத்தைச் சேர்ந்த சீரமண சர்மா 2010 –இல் அமெரிக்க ஒருங்குகுறி ஆணையத்திற்கு ஓர் முன் மொழிவை அனுப்பினார். இதற்கிடையே நாசாவில் பணியாற்றும் கணேசன் என்னும் பொறிஞர் தமிழின் சிறப்பெழுத்துகளாகிய “ற, ழ,ன, எ, ஒ” என்னும் எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என முன்மொழிவை அனுப்பினார். இவ்வாறு சேர்த்தால், தமிழர்கள் தம் நாட்குறிப்பை முதற்கொண்டு கிரந்தத்திலேயே எழுதத் தொடங்கிவிடுவார்கள் என்று நா.கணேசன் கூறுவார். தமிழர்களை ஆங்கிலத்திற்கு அடுத்து இந்தி சமற்கிருதம் ஆகியவற்றால் மாற்றிவிடலாம் என்பதே அவர்கள் திட்டமாகும். 

இந்திய மொழிகளில் தமிழ் தொன்மையானது என்று கால்டுவெல், ஞானப்பிரகாசர், மறைமலை அடிகள், பாவாணர் ஆகியோர்  நிறுவியபின்னும் சமற்கிருத மேலாண்மையைப் பலர் கொண்டிருந்தனர். தமிழின் தொன்மையை உணராதவர்கள் சமற்கிருத்திலிருந்து தமிழ் மொழியும் தமிழ் இலக்கியங்களும் சார்ந்தவை அல்லது பிற்பட்டவை என்று கூறியும் பரப்பியும் வந்தனர். தமிழின் தொன்மையான எழுத்துருவுக்கு மொழியியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அறிஞர்கள்  “தமிழி” என்று பெயரிட்டிருக்க, “பிராமி” எனப் பெயர் கொடுத்து தமிழ் பிராமி, வட பிராமி என சமற்கிருத மேலாண்மைக்குச் சிலர் வித்திட்டு வருகின்றனர். தமிழ் நூல்கள் சமற்கிருத நூல்களின் மொழிபெயர்ப்பு என்றும் கூறி வருகின்றனர். 

            இந்நிலையில் தமிழ் எழுத்துருக்களில் கிரந்த எழுத்துக்களையும் கிரந்த எழுத்துகளில் தமிழின் சிறப்பெழுத்துகளையும் கலந்தால், தமிழும் தென்னக (திராவிட) மொழிகளாகிய தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியவை சமற்கிருதத்தின் வழிமொழிகள் என்று கூறிவிடுவார்கள்.  எனவே இதனைத் தமிழக அறிஞர்களும் அரசியல் தலைவர்களும் கடுமையாக எதிர்த்துத் தடுத்தனர். 

             ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அச்சுப் புத்தகங்களில் பக்க எண்கள் பத்திரங்களில் உரூபாய், நில அளவை ஆகியன தமிழ் எண்களாக இருக்கும்;  சாலைகளில் உள்ள மைல் கற்கள் தமிழ் எண்களுடன் இருந்தன, தெரியுமா?  கால், அரை, முக்கால் எண்களே தெரியாத போது அரைக்கால், காணி, முக்காணி என்பவை எப்படித் தெரியும்? இன்னும் சொன்னால் இருபத்தொன்று என்றாலோ மஞ்சள் என்றாலோ தெரியாத தமிழனின் பிள்ளைகளுக்கு “ டுவெண்டி ஒன், யெல்லோ” என்று ஆங்கிலத்தில் கூறினால்தான் தெரியும். 

            பலம், சேர், வீசை என்ற எடுத்தல் அளவுகளும் படி, ஆழாக்கு போன்ற முகத்தல் அளவுகளும் பணம், காசு, வராகன் முதலிய நாணய அளவுகளும் பாரம், குழி, வேலி முதலிய நில அளவுகளும் பெரியவர்களுக்கே தெரியாமல் போய்விட்டன. ஒன்றிலிருந்து பத்து வரை தமிழ் எண்ணில் எழுதத் தமிழ் ஆசிரியர்களுக்கே தெரிவதில்லை.

தொடர்வண்டி நிலையங்களில், தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தி மட்டுமே எழுதப்பட்ட போது எதிர்த்துப் பிறகு கண்டுகொள்ளாமல் தூங்கப் போய்விட்டவன் தமிழன்.  “தூங்குகிறவன் தொடையில் கயிறு திரித்தது போல” என்று பழமொழி உண்டு. தமிழர்கள் அதிகம் பயன்படுத்தாமல் விட்டுள்ள தமிழ் எண்களை மாற்றிவிட்டால் யாரும் கவனிக்கப் போவதில்லை என்று தமிழ் எண்களையும் பின்னங்களையும் கிரந்ததுக்கு மாற்ற முனைந்துள்ளனர்.  இப்போது மீண்டும் தமிழின் அடிப்படைகளில் கைவைத்தால் தமிழின் தனித்தன்மையைச் சிதைத்துவிடலாம் என்று திட்டமிடுகிறார்கள். 

தமிழக அரசின் ஒருங்கு குறிக்கான உயர் மட்டக் குழு அமைத்துள்ளது.  காஞ்சி ஆச்சாரியாரின் மடத்தைச் சேர்ந்த இரமண சர்மா மீண்டும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளார். தமிழ் எண்களைச் சின்னாபின்னமாக்கும் இம்முயற்சியில் அமெரிக்க ஒருங்குகுறிச் சேர்த்தியத்தில் வரும் சூலை 20 ஆம் நாள் இறுதி முடிவு செய்ய உள்ளனர். தமிழ் அறிஞர்களையும் தொல்லியல் அறிஞர்களையும் தமிழக மொழியியல் அறிஞர்களையும் கலந்து பேசி ஒருங்குகுறிச் சேர்த்தியத்திற்கு அனுப்பும் முடிவுகளே நிறைவேற்றப் பெற வேண்டும். தமிழர்களே! விழித்தெழுங்கள்! 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [10]
Name : Ram.K Date :6/30/2015 8:46:31 AM
தமிழ்மொழியில் தொழில்நுட்பம் காரணமாக எந்தத் திருத்தங்களும் வரவேண்டியதில்லை. தொழில் நுட்பத்தில் மாற்றங்களை மேற்கொண்டால் போதுமானது .
Name : r.janardhanak Date :5/18/2015 11:16:43 PM
ithanai ippothe thadukka vendum illaientral nammai niranthara adimaiyaga aakkividuvaargal.varungaala tamil samoothayam nammai mannikkaathu.
Name : Ram.K Date :5/14/2015 10:56:37 AM
தமிழ்மொழியில் தொழில்நுட்பம் காரணமாக எந்தத் திருத்தங்களும் வரவேண்டியதில்லை. தொழில் நுட்பத்தில் மாற்றங்களை மேற்கொண்டால் போதுமானது .
Name : முனைவர் பா.இறையரசன் Date :5/12/2015 7:06:28 AM
ஆசிரியர் குறிப்பு : ஊடகம்., கல்வி, சமயம்., . . . முதலியவற்றில் செய்யப்படும் கேடுகள்,பிழைகள் பற்றித் தனியே எழுதுவோம்.
Name : Rajkumar periyathamby Date :5/12/2015 4:58:44 AM
தமிழ் மொழியை அழிபதட்கு இன்று நேற்றல்ல பல நூறு ஆண்டுகளாக சூழ்சிகளும் , சதிகளும் செய்து வருகின்றார்கள் தமிழர்களின் உண்மையான வரலாறுகளை மாற்றி,மறைத்து பொய்யான கட்டுக்கதைகளை உருவாக்கியது.தமிழ் மன்னர்களை கொடியவர்கலாகவும் அரக்கர்களாகவும் கட்டுக்கதை சொல்வது , தமிழ் மன்னர்களை இந்து கடவுள்களாக மாற்றியது .மூட நம்பிக்கைகளுக்குள் தமிழர்களை முடக்கி வைத்திருப்பது ,ஆடம்பரவாழ்க்கையை காட்டி சிந்திக்க விடாமல் அறிவை மழுங்கடிப்பது,சாதியாய்,மதமாய் .பிரித்துவைதிருப்பது , பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்வைக்காமல் பார்த்துக்கொள்வது ,இந்த சதி சூழ்ச்சி எல்லாத்தையும் தாண்டி தமிழர்கள் தலைநிமிரும்போது யுத்தத்தின் மூலம் அழித்தொழிப்பது ,இப்படியே எழுதிக்கொண்டே போகலாம் தமிழருக்கும் தமிழ் மொழிக்கு எதிராக மேல்கொள்ளப்படும் சதிகளையும் சூழ்சிகளையும் சுயநலத்தோடு வாழாமல் தமிழர்கள் விழிப்பாய் ஒற்றுமையாக இருந்தால் சதிகள் சூழ்ச்சிகள் எல்லாத்தையும தாண்டி தமிழ் ஓர்நாள் வெல்லும் !!!!! நன்றி சா .பெ .இராவணசூரன்
Name : Nadaraasan Date :5/11/2015 6:59:22 AM
Very important article.
Name : ramaswamy s Date :5/10/2015 1:15:47 PM
ஆங்கிலத்தில் 26 எழுத்துகள்தான் உள்ளன; ஆனால் தமிழில் எழுத்துகள் 247 உள்ளன: அவற்றைத் தட்டச்சு செய்வது கடினம்; எனவே தமிழ் எழுத்துகளைக் குறைக்க எழுத்துச் சீர்திருத்தம் செய்யவேண்டும்.
Name : Maran Date :5/10/2015 12:27:09 PM
தமிழ் படித்தோருக்கு அமிர்தம் பழிதொர்க்கு வேல் போன்றது .
Name : ELAVALAGAN V A Date :5/10/2015 10:59:22 AM
Even the so called reformation brought by EVR was not duly and fully accepted by Tamil Scholars, since EVR was not at all a linguist or a philologist. His mother tongue was not at all Tamil. Each and every body cannot and should not poke their nose into the well laid Tamil Scripts. All those changes, as suggested by EVR, might not be brought in the morphology of Tamil and that old system was best suited for Computer typing and applications. The reformed scripts leads to enormous time and space. It is utter nonsense to cite the existence of large number of alphabet (247) in Tamil. It is only 18 + 12. Even then, Is there any body dared to suggest reformations in the scripts of Japanese, Chinesse and Korean Scripts?...They are all highly difficult to write and speak especially Mandarin noted for their huge pictograph scripts...First of all Please try to spell and write correct Tamil..It is day in and day our being butchered in all the electronic and print media...You stop that .
Name : Moorthy Date :5/9/2015 2:12:23 PM
முதல்லே டிவி சினிமாலே ந ன ண ழ ல ள சரியாய் உச்சரிக்கறவர்களே வேலைக்கு சேருங்க!