நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :15, ஜூன் 2015(10:43 IST)
மாற்றம் செய்த நாள் :15, ஜூன் 2015(10:43 IST)"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர் பாராட்டு!

திமுக தலைவர் கலைஞர் 13.06.2015 சனிக்கிழமை கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

கேள்வி :- அண்மையில் படித்து ரசித்த ஒரு கவிதை?

கலைஞர் :- நம்முடைய கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய கவிதைகளை நான் எப்போதும் ரசித்துப் படிப்பேன்.  "இனிய உதயம்" என்ற இலக்கிய இதழில் இந்த மாதம் அவர் எழுதிய கவிதையை நான் படித்து ரசித்தேன். 

அரசு ஊழியர்களே!
அரசு ஊழியர்களே!
அஞ்சி அஞ்சி
லஞ்சம் வாங்கும் 
அரசு ஊழியர்களே!
உங்களுக்கோர் நற்செய்தி
இனிமேல்
அஞ்சாமல் வாங்குங்கள்
சட்டமே அனுமதிக்கிறது
ஆனால் எச்சரிக்கை
இருபது சதவீதத்திற்கு
மேலே போகாமல் 
பார்த்துக்கொள்ளுங்கள்

அப்படியே போனாலும் 
கவலையில்லை
நீங்கள்
தப்பாகச் சம்பாதித்த பணமே
உங்களை
வெளியே கொண்டுவந்துவிடும்

தப்பே உள்ளே தள்ளும்
தப்பே வெளியே கொண்டுவந்துவிடும்
இதுதான் இந்நாட்டின் நீதி

ஆம்
நிதியை நீட்டினால்
நீதி
பணமிருந்தால்
தேர்தலில் ஜெயிக்கலாம்

தேர்தலில் ஜெயித்தால்
இன்னும் அதிகமாகப் 
பணம் சம்பாதிக்கலாம்
பணம், பதவி இரண்டும்
அம்பும் கேடயமுமாகும்

அந்த அம்பு
சட்டத்தையும் துளைக்கும்
அந்தக் கேடயம்
எந்தத் தாக்குதலையும் தாங்கும்

"தர்மம் வென்றது'
என்கிறார்களே
அதர்மமல்லவா
வென்றிருக்கிறது
என்று குழம்புகிறீர்களா?

உங்களுக்கு
விஷயம் தெரியவில்லை
அதர்மம்
"நியூமராலஜி'ப்படி
தன் பெயரைத்
தர்மம் என்று
மாற்றிக்கொண்டது

கட்டப் பஞ்சாயத்து
வெளியேதான்
நடக்கும் என்பதல்ல
உள்ளேயும் நடக்கும்

சட்டம்
ஓர் இருட்டறை
அங்கே
ஒரு வக்கீல்
விளக்கேற்றினால்
இன்னொரு வக்கீல்
அணைத்துவிடுவார்

சட்டம்
ஓர் இருட்டறை
அங்கேயும்
"பவர்கட்'
"பவ'ரினால் பவர்கட்
"பவ'ருக்காக பவர்கட்

யார் சொன்னது
சட்டம் செத்துவிட்டதென்று?
சட்டத்துக்குள்தான்
இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்
அரசு அலுவலகங்களில்
படங்களைப் பார்த்ததில்லையா?

ஈஸ்வரன் ஈஸ்வரன்
கோடீஸ்வரன்
கோடி ஈஸ்வரன்
ஈஸ்வரனால் முடியாததை 
கோடீஸ்வரன் செய்வார்

"விசேஷப் பூஜை'
செய்தால்
"சாமி' வரம் கொடுக்கும்

தீர்ப்பு
விடுதலை என்கிறார்கள்
இல்லை
தண்டனைதான்
தமிழ்நாட்டுக்கு

"மக்கள்' பாவம்
இனிமேல் அவர்களுக்கு
"முதல்வர்' இல்லை

ஒரே தீர்ப்பில்
இரண்டு முதல்வர்களுக்கு
விடுதலை
நிரூபணமாகிவிட்டது

சட்டம் ஒரு
சிலந்திவலை
அதில்
சிறு பூச்சிகள்
சிக்கிக்கொள்ளும்
பெரிய வண்டுகள்
துளைத்துக்கொண்டு
போய்விடும்
இதுகூடச் 
சரியில்லை
நம் நாட்டுச் சட்டத்தில்
ஏற்கெனவே
ஓட்டைகள் இருக்கின்றன

வக்கீல்களின் திறமை
இந்த ஓட்டைகளைக் 
கண்டுபிடிப்பதில் இருக்கிறது

உங்களுக்குக் 
கூட்டல்
சரியாக வராதா?
அப்படியென்றால்
நீதிபதியாகிவிடுங்கள்

அப்புறம்
"கூட்டல்'தான்
"பெருக்கல்'தான்

அபாண்டமா
பழி போடாதீங்க
மத்திய அரசு
தலையீடு இதில்
இல்லை

விலையீடுதான்
நடந்தது

அருண்
வருண்
தருண்

வாங்கினால் 
உள்ளே 
கொடுத்தால்
வெளியே

"லஞ்சப் பணம்
குட்டரோகி கையிலிருக்கும்
வெண்ணெய்' என்றார்
அண்ணா
ஆனால் 
அண்ணாவின் பேர்சொல்லி
அரசியல் நடத்துபவர்களுக்கெல்லாம்
குட்டரோகிக் கை வெண்ணெய்தான்
விருப்ப உணவாக இருக்கிறது

நீதிபதிக்கு
உள்நோக்கம் 
கற்பிக்கக்கூடாது
ஏனெனில்
அவருக்கிருந்தது
வெளிநோக்கம்தான்
வெளியே விடும் நோக்கம்

நீதி தேவதையின் கண்கள் 
கட்டி இருப்பது
வசதியாகப் போய்விட்டது
அவளுடைய தராசை
வியாபாரிகள்
திருடிக்கொண்டார்கள்

ஜனநாயகத்தின்
மூன்று தூண்கள்
முன்பே
தகர்க்கப்பட்டுவிட்டன
நான்காவது தூணில்தான்
ஜனநாயகம்
நின்றுகொண்டிருந்தது
இப்போது அதையும்
இடிக்கத் தொடங்கிவிட்டார்கள்
பாவம் ஜனநாயகம்

இதழாளர்
தொலைக்காட்சியாளர்
அறிவாளர்
மூன்று குரங்குகள்
தீமையைப் பார்க்காமல்
கண் பொத்தித்
தீமையைக் கேட்காமல்
செவி பொத்தித் 
தீமையைக் கண்டித்துப்
பேசாமல்
வாய் பொத்தி
அரசியல்வாதியின்
மேசையின்மேல்
அமர்ந்திருக்கின்றன

"வந்தே மாதரம்'

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]
Name : Prof R Krishnamurthy Date :7/12/2015 1:13:47 PM
மிகவும் நல்ல கவிதை .இதை யார் ரசித்து படித்தாரோ அவருக்கும் இது பொருந்துமா ? இல்லை விஞ்சான ரீதியில் கொள்ளை அடித்து குபேரன் ஆகலாமா ?பொதுவாக இப்போது எல்லா கட்சி அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன் ,
Name : palani Date :6/27/2015 9:03:50 PM
நெத்தியடி தலைவர் சொன்னது , திருடியவருக்கு,அவருக்கு உதவியாக இருந்த அரசு அதிகாரிகளுக்கு, நீதிபதிக்கு , ஊடகங்களுக்கு மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்தவங்களுக்கு . இனிமேலாவது உண்மையா இருங்கடா.