நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :20, ஜூன் 2015(11:32 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஜூன் 2015(11:32 IST)

தர்சட்டை போட்டிருந்தாலும் உறுதியான பெரியாரிஸ்ட்... கலைஞரின் நெருங்கிய நண்பர் என்றாலும் எளிமையானவர். திருமணமாகாமல் தனித்திருந் தாலும் தோழமை சொந்தங்கள் சூழ வாழ்ந்தவர்தான் மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி.

அவரின் நினைவை போற்றும் வகையில் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி எழுத்துக்கான எதிர்கால களத்தை உருவாக்கும் முனைப்போடு ‘சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை,’ 4 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவை ஜூன் 15-ஆம் தேதி  சென்னை கவிக்கோ  அரங்கத்தில் நடத் தியது. 302 கட்டுரைகள் குவிய அதில், இரா. மோகன்ராஜன் எழுதிய "கடவுளின் படையும், குழந்தை போராளிகளும்', கவி எழுதிய "பெரியாரின் மொழிக் கொள்கை', "இரு வேறு இந்தியா இது என்றால்' எழுதிய எஸ்.வி. வேணுகோபாலன் ஆகியவை தேர்வு செய்யப்பட்டு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசளித்தது அறக்கட்டளை. புனே டாக்டர் கர்னல் பாலசுப்ரமணியம்   கோரிக் கையை ஏற்று ஒரு லட்சமாக உயர்த்தி  வாழ்நாள் சாதனை யாளர் விருதை அறக்கட்டளை வழங்க இன்முகத்துடன் பெற்றுக் கொண்டார் மக்கள் கவிஞர் இன்குலாப். அதன்பின் சின்ன குத்தூசியின் நினைவுகளை அசைபோட்டனர் அவருடன் பயணித்த சக தோழமைகள். விழாவிற்கு நேரில் வர இயலாத நிலையிலும் சின்னகுத்தூசியின் நினைவுகளோடு விருது மற்றும் பரிசு பெற்றவர்களுக்கு  வாழ்த்து களை தெரிவித்து கடிதம் அனுப்பி யிருந்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. கௌரா பதிப்பகம் ராஜசேகர் வரவேற்புரையாற்றி 50 ஆயிரம் ரூபாய் நிதியளித்தார்.தலைமை வகித்த தோழர் பேராசிரியர் பூர்ணம், ""அய்யாவ துறவின்னு சொல்லாதிங்க... ஏன்னா துறவின்னு சொல்லிக்கிறவங்க இந்தக் காலத்துல எப்படி இருக்காங்கன்னு உங்களுக்கே தெரியும்''’என கலகலப்பாகவே தொடங்கினார். ""என் கணவருக்கு (தோழர் ஜவஹர்) கட்டுரைகள் எழுதும்போது திடீர்னுதான் சந்தேகம் வரும். இப்படிதான் ஒருமுறை நைட் 12 மணிக்குப் போயி அய்யா வீட்டுக் கதவைத் தட்டினாரு. அந்த நேரத்துலயும் மனுசர் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். இவர் போனதும் சந்தேகத்தை தீர்த்து வைத்தார். அய்யாவுக்கு எல்லா இடத்திலும் எல்லாவித மனிதர்களும் தோஸ்துதான். தினமும் செருப்பு தைக் கும் ஒரு தொழிலாளியைக் கடந்துதான் காலையில வாக்கிங் போவாரு. போக, வர அந்தத் தொழிலாளி தோழர்கிட்ட பழக்கமாகி, தோள் மேல கை போட்டு ஹாயா கொஞ்ச நேரம் பேசிட்டு வருவாரு. ஒருநாள் அந்த தொழிலாளிய காணோம். தேடி அவர் வீட்டுக்கே போயிட்டாரு. அங்க, அவரு உடம்பு முடி யாம படுத்திருக்க... உடனே கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு மருத்துவர் கிட்டயும் கூட்டிட்டு போயிட்டு வந்தாரு. இப்படி ஒரு மனிதரை இப்போ பார்க்க முடியுமான்னு தெரில. அய்யா ஒரு மாமனிதர்'' என்றார் உருக்கமாக.

விழாவிற்கு முன்னிலை வகித்த ஞாநியாரடிகள் தமிழ் மன்றத்தின் நிறுவனர் அ.நா.பாலகிருஷ்ணன், தமிழக அரசியல் குறித்த அரிய தகவல்களை சின்னகுத்தூசி தனது சிறிய அறை முழுவதும் சேகரித்து வைத்திருந்ததை எடுத்துக் கூறினார்.

கட்டுரையாளர்களுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பரிசுகளை வழங்க, வாழ்நாள் சாத னையாளரான இன்குலாப்பிற்கு நக்கீரன் ஆசிரியர் விருது வழங்கி சிறப்பித்தார்.

சிறப்புரையில் தனது உணர்வுகளை பகிரத் தொடங்கிய காங். தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்,  ""எங்கப்பா ஈ.வி. கே.சம்பத்தும், சின்னகுத்தூசியும் நெருங்கிய இயக்க நண்பர்கள்.  நான் சின்ன வயசா இருந்தபோது எங்க அப்பா சிவாஜியாவும், அறிஞர் அண்ணா காக பட்டரா வும்  நடித்த "சத்ரபதி சிவாஜி' நாடகம் பார்த்திருக்கேன். ஒரு முறை எங்கப்பா அவர் காட்சி முடிந்ததும் வெளிய போனவரு, ஒரு தம் போட்டாரு. திடீர்னு அவரை மீண்டும் கூப்பிடவும் அப்படியே ஓடி மேடைக்கு வர... "என்ன சிவாஜி, நீ அனல் கக்க வருவீர்னு நினச்சேன், புகை கக்கி வருகிறாயே'  என வேடிக்கையாக கேட்டார் அறிஞர் அண்ணா. 1956-ல் திருச்சியில 2-வது மகாநாடு. பல இடங்கள்ல அங்க குழந்தை தொட்டில்கள் தொங்கும். அன்னைக்கு இருந்த திராவிட உணர்வாளர்கள் குடும்பத்தின ருக்கு இதுபோன்ற இடங்களுக்கு வருவதுதான் சுற்றுலா. ஒருவர் ஆத்திகராக இருந்து பின்னால் நாத்திகராக மாறுவதும், நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறுவதும் அது காலப்போக்கில் அவர்கள் மனநிலை பொறுத்த ஒன்று. ஆனால் அதில் ஒரு நேர்மை இருக்க வேண்டும். இன்னைக்கு பல பேர் பணம் புகழ் வந்ததும்  ஆன்மீகத்திற்கு மாறிடுறாங்க. அதுவும் எப்படின்னா தங்கள் கொள்ளையில் கடவுளுக்கே ஒரு பங்கு தந்து.  இப்படிப்பட்ட நபர்களுக்கு மத்தியில்தான் என் அப்பாவுடன் உறுதியாக இருந்து அவருக்குப் பிறகு தீவிரமாக தி.மு.க. ஆதரவாளராக இருந்தாலும் தன்னுடைய அடிப்படை கொள்கை மாறாமல் இருந்தவர் சின்னகுத்தூசி. அதேசமயம் நம் தவறுகளை மென்மையாக ஆனால் அழுத்தமாக சுட்டிக் காட்டுவதிலும் தேர்ந்தவர்.

ஒருமுறை அவர் சின்ன அறையில தங்கி யிருக்கார்னு கேள்விப்பட்டேன். நானே நேரில் போயி பார்த்துருக்கணும். ஆனா அதிகப் பிர சங்கித்தனமா ஒரு ஆள் மூலம் ஒரு தொகை யை கொடுத்து அனுப்பினேன். அதை வாங்காத அவர் "நேரமிருந்தால் சொல்லுங்கள், உங்களை நேரில் வந்து பார்க்கிறேன்'னு சொல்லி திருப்பி அனுப்பினார். எனக்கு செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது.  இறுதிவரை கொள்கை தவறாமல் வாழ்ந்தவரே சின்னகுத்தூசி...'' என்றவர் தனது பங்காக அறக் கட்டளைக்கு ஒரு லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்தார் பலத்த கரவொலிக்கு இடையே.  எழுத்தாளர்கள், பத்திரி கையாளர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சின்னகுத்தூசி மீது தனிப்பட்ட முறையில் அன்புகொண்ட வர்கள் என பலரும் நிறைந்திருந்த அரங்கில் சிறந்த கட்டுரைகளுக்காக பரிசு பெற்ற மூவரும் சுருக்கமாக தங்களின் நன்றியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

உடல் தளர்ந்து இருந்தாலும் கொள்கை தளரவில்லை "மனுசங்கடா'’கவிதை படைத்த கவிஞர் இன்குலாப் பேச்சில். “""சின்னகுத்தூசி ஒரு வித்தியாசமான மனிதர். ஒருமுறை பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம், தான் ஏற்றுக்கொண்ட ஐந்து பிராமணர்கள் பட்டியலில் ஒருவராக சின்னகுத்தூசியையும் கூறியிருந்தார். "மற்றவர்களாக இருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்கள் ஆனால் நான் அம்பது ஆண்டுகளுக்கு மேலாக பெரியார் வழியில் பயணிக்கிறேன். சூத்திரர் பட்டியலில் நான் இடம் பெறும் போதுதான்  சுயமரியாதையோடு நான் வெற்றி பெற்றதற் கான பொருள்' என்றார். அதுதான் சின்னகுத்தூசி.

இன்றைக்கு தமிழகத்தில் எங்கும் மொட்டைத் தலைகள் தெரிகின்றன.. "நம்ம மந்திரிமார்கள் இதுவரை மக்களை மொட்டையடித்தார்கள். இப்போ அவங்களே அடிச்சுக்குறாங்க' என வேடிக்கையாகச் சொன்னார் நண் பர் திருச்சி வேலுச்சாமி. ஒரு ஊடகமே மக்களின் வேண்டு தலால் அம்மா விடுதலையானார் என்று சொல்கிறது இது என்ன ஊடக அறம் என்று தெரியவில்லை. ஆனால் சின்ன குத்தூசி ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்பாடு களை கடுமையாக தனது எழுத்துக்களில் சாடத் தவறியதேயில்லை''’என்றவர் தொடர்ந்து, ""அதியமான் என்ற போராளிக்கு அவ்வையாரும், பாரி என்ற போராளிக்கு கபிலரும் இருந்ததுபோல, நக்கீரன் என்ற போராளிக்குத் துணையாக இருந்தவர் சின்னகுத்தூசி.

இன்று தமிழகத்தை  ஒரு பித்த நிலை, அறிவற்ற நிலை, மனம் பிறழ்ந்த நிலையில் வைத்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். ஒரு மாயாவி அரசியல் நடந்துகொண்டு இருக்கிறது. இதை நாம் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்க முடியாது.  நம்முடைய பேனா நேர்மை ஒன்றுக்கு மட்டுமே முன்னிருப்பதாக இருக்கவேண்டும். அந்த உறுதிப்பாட்டை இத்தகைய கூட்டம் நிறைவேற்றும். ஏனெனில் அதிகார வர்க்கத்தின் ஆயுதங்களைவிட வலிமையானது நக்கீரனின் எழுத்து. நக்கீரன் குடும்பம் மட்டுமல்ல அது ஒரு இயக்கம்'' என்றார் எழுச்சியோடு.

செ.அருள்செல்வனின் நன்றியுரையுடன் சின்னகுத்தூசியின் சமத்துவ, சுயமரியாதை சிந்தனைகளை இயக்கமாக கொண்டு செல்லும் பயணமாக அமைந்தது விழா.

-சே.த இளங்கோவன்

படங்கள் : ஸ்டாலின், அசோக்தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]
Name : vasan Date :6/21/2015 4:55:26 PM
அருமையான பதிவு. நண்பர் எஸ்.வி.விக்கு வாழ்த்துக்கள். அரிய மனிதர் சின்ன குத்தூசிக்கு தெரியாமல்இறுதிவரை இருந்த விஷயம் எச்சமயத்திலும் பிராமண அடையாளத்தை மற்றவர்கள் மறக்க மாட்டார்கள் என்பதே. அவர்உண்மையான பெரியாரிஸ்ட்டாக இருப்பினும் எல்லவற்றையும் துறந்து எவர் பின் சென்றாலும் பிராமணராக வே அவர் பிற சமூகத்தினாரால் மதிக்கவும் மிதிக்கபடுவார். 'ஞாநி'களே காலம் கடந்துதான் உணர்ந்த இந்த கருத்தை வேணுகளும் ஒரு நாள் உணர்வர்.