நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :3, ஆகஸ்ட் 2015(9:53 IST)
மாற்றம் செய்த நாள் :3, ஆகஸ்ட் 2015(9:53 IST) விதைகள் உறங்குவதில்லை
-ஆரூர் புதியவன்விண்ணை
அளக்கும்
வியத்தகு  செயல்களால்
அன்னை

மண்ணைக்
குளிர்வித்த
அக்னியே...!

தேசப்பற்றின்
திசையாய் நின்ற
ஆண்பால்
பத்தினியே...!

நீ
புரிந்த சாதனைகள்
விண்ணில்...

உன்னைப்
பிரிந்த வேதனைகள்
எமது
கண்ணில்...

எத்தனையோ
இல்லாமையைத்
தாங்கிக் கொண்ட
இத்தேசம்...
நீ
இல்லாமையைத்
தாங்க முடியாமல்
தவி தவிக்கிறது...

பன்முகம் கொண்ட
பழம்பெரும் தேசம்
உன்முகம் தனில் 
தன்
ஒளிமுகம் கண்டது...

நீ
ராமேஸ்வரம்
பெற்ற
வரம்...
இந்தியா செய்த
தவம்...

நீ
ஏவிய கணைகள்
இலக்கைத்தொட்டன...

நீ
எழுப்பிய கனவுகள்
இதயம் தொட்டன...

உன்
குரலில் அதிகாரம்
இருந்ததில்லை...

ஆனால் 
என்றும்  இருந்ததோ
குறளின் அதிகாரம்...

ஆன்மீகமும் அறிவியலும்
சந்தித்த புள்ளி நீ...
அடித்தட்டு பிள்ளைகளுக்கு
அதிநம்பிக்கையூட்டிய பள்ளி நீ...

ஒவ்வொரு 
வீட்டிலும்
ஓர் இழப்பாய்
ஆனது
உன் இறப்பு...
இதயங்களின் துடிப்புகளை
உனக்கான
கைத்தட்டல்களாய்
ஆக்கிக் கொண்டது
உன் 
சிறப்பு
தேசத்தின்
ஓரத்தில் பிறந்தாய்
உயரத்தில் மறைந்தாய்...

எளிய இதயங்களின்
தீராத பக்கங்களில்
நம்பிக்கை எழுதிய
பறவையே..!

அக்னிச்சிறகுகளால்
நீ
அடை காத்ததும்
கூட
அமைதிப்புறாவின்
முட்டைகளைத் தானே...

அவநம்பிக்கைப் புயலில்
அலைக்கழிந்த
மனக்கப்பல்களை...
இலட்சியக் கரை சேர்த்த
கலங்கரை விளக்கமே...
நீ சாய்ந்துவிட்டாய்...
மனமெனும் மாக்கடலில்
சோகம்
ஆழிப்பேரலைகளாய்
அலைமோதுகின்றன...

வளர்ந்து
குழந்தையான
மெஞ்ஞானியே..!
விண்வயலில்
வியப்புகளை நடவு செய்த
விஞ்ஞானியே..!

இம்
மண்ணின்
முகவரியை
விண்ணில்
எழுதிய
நீ
வானம் போலவே...
பூமியில் வாழ்ந்தாய்...
குறுகிய வட்டத்தின்
கோடுகள் எதற்குள்ளும்
நீ சிக்கவில்லை..

விதைத்தவன் நீ
உறங்கி விட்டாய்...
விதைகளுமா...
உறங்கும்...

ஒரு கலாம்
போயிருக்கலாம்
இங்கே
அந்த அக்கினியை
உள்வாங்கிய
பல கலாம்...
அவர் வழியைப்
பழகலாம்...
பிறரையும் பழக்கலாம்...
தேசத்தை 
வளர்க்கலாம்...

ஏக இறைவா..!
தன் பிரிவால்
கோடிக்கணக்கான
இதயங்களை
அழவைத்துவிட்டு
உன்னிடம்
வந்திருக்கும்
அவரை
மகிழவை...
மென்மேலும்
மகிழவை...
மென்மேலும்
மென்மேலும்
மகிழவை...

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [9]
Name : Sathish Kumar Date :5/14/2016 11:18:47 AM
வெற்றி பெற்றதை நினைத்துப் பார்க்காதே, தோல்வி அடைந்ததை நினைத்துப் பார்.
Name : suresh Date :5/13/2016 5:18:35 PM
கலாமை பற்றி பற்றி முழிமையாக படிக்க தேவையில்லை இந்த கவிதை படித்தால் போதும் கலாமைமின் வரலாறு இதில் தெரிந்து விடும்
Name : selvaraja Date :1/3/2016 8:54:22 PM
இந்த கவிதை கலாமுக்கு செய்த அஞ்கலி அல்ல.இது அனைத்து கனவுக்காரர்களின் நெஞ்சொலி.
Name : Kavignar Mosay Date :8/28/2015 7:37:47 PM
இதயம் வெல்லும் இனிய கவிதை. புற்களும் பூக்கும் பூமி இது கற்களையும் சிலையாக்கும் கைவண்ணம் நமக்குண்டு மனிதனை செதுக்குவதிலா தோற்றுப்போவோம் விதைத்தோம் நிச்சயம் விடியல் வரும். கலாம் கனவுகள் நம் கண்ணெதிரே நனவாகும்.
Name : SAKTHI Date :8/10/2015 12:55:22 AM
kalam vanangalam
Name : அ. அப்துல் வதுத் Date :8/3/2015 8:44:09 AM
மறைந்த நம் குடியரசு தலைவர் திரு. அப்துல் கலாம் தேசமெங்கும் இளைய விதைகளை விதைத்ததோடு ஆற்றல் மிக்க சிந்தனை உரங்களையும் இட்டவர்.அத்தகைய சிறந்த மனிதரை பற்றிய அற்புத கல்வெட்டை சொல்வெட்டி செல்கிறது இந்த இரங்கல் கவிதை.
Name : PALANI Date :8/1/2015 3:23:37 PM
நல்ல கவிதை ,உண்மை வரிகள்
Name : ஞானச்செல்வன் Date :7/31/2015 5:16:06 PM
மிக அருமை.ஓட்டம் குறியீடுகள் சொல்லாட்சி எல்லாம் நன்று. ஒரேயொரு எழுத்துப்பிழை.பிறரையும் என மாற்றுக.(றை)உள்ளது.
Name : umardeen Date :7/30/2015 6:56:47 PM
ஒரு கலாம் போயிருக்கலாம் இங்கே அந்த அக்கினியை உள்வாங்கிய பல கலாம்... அவர் வழியைப் பழகலாம்... பிறறையும் பழக்கலாம்... தேசத்தை வளர்க்கலாம்..