நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :2, ஜூன் 2010(18:30 IST)
மாற்றம் செய்த நாள் :2, ஜூன் 2010(18:30 IST)

 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செல்லும் சாலையில் பேருந்தே நிற்காத கத்தக்குறிச்சி என்னும் குக்கிராமத்தில் பிறந்து வறுமையின் பிடியில் வளர்ந்து, சத்துணவு,  கூட இல்லாமல் பயிற்சி மேற்கொண்டு ஓடத் தொடங்கிய சாந்தி,  தேசிய அளவு போட்டிகளில் ஓடி 100க்கும் மேற்பட்ட தங்கம், வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று வந்தார். படிப்படியாக தன் நிலையை உயர்த்திக் கொண்டார்.

இந்தியாவுக்காக விளையாட தொடங்கினார். பதக்கங்கள் குவிந்தது போல குடும்ப வறுமை நிலையும் வளர்ந்து
கொண்டேதான் போனது. சத்தான உணவு மட்டுமில்லை பசியாறக்கூட குடும்பத்தினருக்கு உணவு கிடைக்காத சூழ்நிலையில் 2003ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்காக விளையாடத் தயாரானார்.

 2003ம் ஆண்டு உலகச் சமாதானத்துக்கான ஓட்டப்பந்தயம் தென்கொரியாவில் நடந்தது. 5 ஆயிரம் மீட்டரில் ஓடி தங்கமும், 800 மீட்டரில் வெள்ளியும், 400 மீட்டரில் வெண்கலமும் வென்றவர் தொடர்ந்து தனது உலகப் பயணத்தைத் தொடர்ந்தார்.

2005 ஆசிய தடகள போட்டியில் வெள்ளி, அதே ஆண்டில் இலங்கையில் நடந்த தெற்காசிய விளையாட்டுப்
போட்டிகளில் 2 தங்கம், ஒரு வெள்ளியும் பெற்றவர். தாய்லாந்து சென்று தங்கம் வென்றார். தொடர்ந்து அதே ஆண்டில் பல வெள்ளிகளைப் பெற்றார்.

2006ம் ஆண்டு ‘தோகா’வில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வறுமையை
நினைத்து தலைதெரிக்க 800 மீட்டரில் ஓடினார். இந்த ஓட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று நினைத்தார்.

நூலிலையில்
தடுமாற்றம் வெள்ளியைப் பரிசாக கொடுத்தது. வாழ்வின் உச்சத்தை தொட்டு வறுமை அகழ்வது போல கனவு கண்டார். அந்தக் கனவு அடுத்த நாள்வரை நீடிக்கவில்லை.

 போட்டிகளை நடத்திய அமைப்பு அடுத்த நாள் நடந்த போட்டியில் சாந்தியை கலந்து கொள்ள விடாமல் தடுத்தது.

மருத்துவப் பரிசோதனைச் செய்ய வேண்டும் என்றதுடன் ஊருக்குப் போகலாம் என்றது. சென்னை வரும் போது மற்றொரு பேரிடி விழுந்து நிலைகுலைய வைத்தது.

நிலைகுலைந்த சாந்தி முதல்வர் கலைஞரை சந்திக்கச் சென்றார். ஆறுதலாக பேசிய முதல்வர்,  
சாந்தி ஏனம்மா கவலைப்படுறே உன்னை யாராவது ஏதாவது சொன்னா என்கிட்ட சொல் நான் பாத்துக்கிறேன் என்று சொன்னார்.

 ஆறுதலுடன்
கூடிய அந்தத் தேறுதல் வார்த்தைகள் நிலைகுலைந்த சாந்தியை நிமிரச் செய்தது. கூடவே ரூ.15 லட்சம் பரிசும், ரூ.1.30லட்சம் மதிப்பில் டி.வியும் கொடுத்தார். பல்வேறு நிறுவனங்கள் பரிசும், பதவியும் தருவதாக அறிவித்தது.

 சாந்தி ஊருக்கு வரும் முன்பே வீட்டில் டி.வி.ஓடத்தொடங்கியது. அதன் பிறகு சாந்திக்கு ஆண் தன்மை கூடுதலாக உள்ளது என்று ஆசிய விளையாட்டு வாரியம் அறிவித்து பதக்கம் பறிப்பு அறிவிப்பை வெளியிட்டது.

தொடர்ந்து ஒலிம்பிக்கில்
ஓடி தங்க மங்கையாக வேண்டும் என்ற எண்ணம் ஈடேறவில்லை. இந்திய விளையாட்டு ஆணையமும் சாந்தியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. பரிசும், பதவியும் அறிவித்த நிறுவனங்களும் கை விட்டுவிட்டது.

 இந்த நிலையில் தான் முதல்வர் கலைஞர் சாந்தியை அழைத்து தற்காலிகமாக தடகள பயிற்றுனராக ரூ.5,000
சம்பளத்தில் பணியைக் கொடுத்தார். இந்தப் பணி மேலும் ஆறுதலாக அமைந்தது சாந்திக்கு.

 புதுக்கோட்டை விளையாட்டு அரங்கத்தில் 80 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி கொடுக்க தொடங்கிய சாந்தி
அவர்களில் பலரை இன்று மாவட்ட, மாநில, தேசிய தடகள வீரர், வீராங்கனைகளாக உயர்த்தி பதக்கம் பெற வைத்துள்ளார்.

 மேலும் பி.டி.உஷா போல தானும் தனியாக 8 வீரர்களை தேர்வுச் செய்து உணவு, உடை, தங்குமிடம், பயிற்சியும் கொடுத்து 
தன் சொந்தச் செலவு செய்து வந்தார். தான் வாங்கும் ரூ.5000 சம்பளம் போதுமானதாக இல்லாததால் தனது சொந்தப் பயிற்சி மையத்தை மூடவேண்டிய நிலை வந்தது.

 புதுக்கோட்டையில் வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு காலை 5 மணி முதல் விளையாட்டு மைதானத்தில் பயிற்சிக்
கொடுத்து வருவதால் அவருக்கும், அவரது மாணவர்களுக்கும் இன்று வரை பயிற்சிக்கான சத்தான உணவு கிடைக்கவில்லை.

மேலும்
தற்காலிக பணியில் சேர்ந்து 2½ ஆண்டுகள் முடிந்த நிலையிலும் எனக்கு நிரந்தர பணி கிடைக்காததால் வாங்கும் ரூ.5000 சம்பளம் போதுமானதாக இல்லை என்றும் முதல்வர் கலைஞருக்கும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் தனக்கு நிரந்தர பணி கிடைத்தால் என் குடும்ப வறுமை போகும்.

மேலும், புதுக்கோட்டையில் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்கி பயிற்சி
பெறவும், சத்தான உணவு கிடைக்கவும் வழி செய்தால் சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்கிப் பெயர் வாங்கித் தருவேன் என்றும் கோரிக்கை மனு அனுப்பி காத்திருக்கிறார்.

 கோரிக்கை மனு அனுப்பியிருப்பது அறிந்து சாந்தியை சந்திக்கச் சென்றோம்.  மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பயிற்சிக்
கொடுத்து கொண்டிருந்த சாந்தி பயிற்சிக்குப் பின்னர் நம்மிடையே பேசினார்.

’’என்னோட வறுமை பற்றியும், குடும்ப நிலை பற்றியும் எல்லாருக்குமே ரொம்ப நல்லாவே தெரியும். முதல்வருக்கு ரொம்ப நல்லாவே தெரியும். அதனாலதான் எனக்கு ஆறுதல் சொன்னதோட பணமும், பரிசும் கொடுத்தார். இது தான் எனக்கு கிடைச்ச பெரிய பரிசா நினைக்கிறேன்.

முதல்வரோட ஆறுதல் வார்த்தைகள் தான்
என்னைத் தொடர்ந்து பயிற்சியாளரா நீடிக்க வச்சிருக்கு. கூடவே எனக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தடகள பயிற்சியாளராகவும் என்னை தற்காலிக பணிக்கு ரூ.5000 சம்பளத்தில் நியமித்தார். எல்லாத்துக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

 நான் வெற்றிப் பெற்றச் செய்தி வெளியான நாளில் என் வீட்டில் அந்தக் காட்சியைப் பார்க்க முடியல. டி.வி.இல்ல. அதனால
தான் முதல்வர் நான் வரும் முன்னால வீட்டுக்கு டி.வி. தந்தார்.

 வெற்றிச் செய்தியைக் கேட்ட பல நிறுவனங்கள் எனக்கு ரூபாய் பல  லட்சம் பரிசும், உயர்ந்த பதவியும் தர்றோம்னு
விளம்பரத்துக்காக அறிவிச்சாங்க. ஆனா பதக்கம் பறிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதும் அந்த நிறுவனங்கள் காணாமல் ஓடிப் போய்விட்டது. அந்த நேரம் முதல்வர் கலைஞர் மட்டும் தான் ஆறுதலாக இருந்து எப்ப வேணும்னாலும் வந்து பாருமான்னு சொன்னார்.

 இப்ப என்னோட மாணவர்களில் 8 பேருக்கு தனியா என் சொந்தச் செலவுல பயிற்சிக் கொடுத்தேன். தங்கிப் பயிற்சிப்பெறச்
செய்தேன். வசதி போதல இப்ப விளையாட்டு அரங்கில் 80 பேருக்கு பயிற்சி தர்றேன். என்னோட மாணவர்கள் இப்ப தேசிய அளவுலயும் பதக்கம் வாங்கி இருக்காங்க. இன்னும் கொஞ்ச நாள்ல இன்னும் உயர்த்துவேன். அதுக்குப்க் போதுமான உணவு இல்லை.

முதல்வரய்யாவும், துணை முதல்வரும் சத்தான உணவுடன் கூடிய விடுதி கொடுத்தால் ரொம்ப நல்லா இருக்கும்.

மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்க எங்க ஊர்ல இருந்து அதிகாலை வரமுடியல. அதனால புதுக்கோட்டையிலயே
வாடகை வீட்ல தங்கிட்டேன். போதுமான வருமானம் இல்லை. அதனால எனக்கு இந்த வேலையை நிரந்தரமாக்கித் தரவேணும்னு முதல்வர்கிட்ட மனு கொடுக்கப் போனேன். கீழேயே வாங்கிக் கிட்டாங்க.

நேரா பார்க்க முடியல. துணை முதல்வர் ஸ்டாலினுக்கும்
கோரிக்கை மனு கொடுத்திருக்கேன்’’என்று தெரிவித்தார்.

சாதனை நிகழ்த்திய தமிழச்சி சாந்தியின் எதிர்காலத்தை நிர்ணயிப்பாரா முதல்வர்?

        சந்திப்பு : இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [15]
Name : அம்மு Date :5/5/2013 1:35:26 PM
தழிழன் சாதிக்க நினைத்தால் “இந்தி“யன் தடையாக இருப்பான். அது தான் தமிழச்சி சாந்தியின் சாதனைக்கு தடையாக இருந்தது.
Name : Sabariprabu Date :5/3/2013 3:15:08 PM
santhi un muyarchi vetry adaya ean vazthukal
Name : Abdul Date :10/23/2010 8:34:00 PM
கலைஞரின் கடைக்கண் பார்வைக்கு உன் மனு சென்றால் போதும். உன்னால் இன்னும் எத்தனையோ பரிசுகள் நம் நாட்டிற்கு வரும்..
Name : Elanthirayan Date :6/9/2010 8:13:15 PM
Ponraj ,Rajkumar Ramaswamy ,Kancharayan and ,suresh kumar , இவர்களுடன் நானும் பண உதவி செய்ய விரும்புகிறேன். என்னுடைய தொலைபேசி ஏன் +973 3912705 , Mail ID selanthirayan@gmail.com, நக்கீரனுக்கு சிறிய வேண்டுகோள். தயவு செய்யிது எங்களுக்கு அந்த வீராங்கனையை தொடர்புகொள்ள உதவினால் நன்றாக இருக்கும். நன்றி, இளந்திரையன், அறந்தாங்கி.
Name : brahmma prabu ram Date :5/13/2010 3:39:51 PM
சில நேரங்களில் நீ மட்டும் இல்லை எம்மையும் அழுவதுடன் வெட்கப்படவும் செய்து விட்டாய் தோழியே கண்டிப்பாக உன் தேவை பூர்த்தியாக்கப்படும் கவலைப்படாதே பாரதியின் புதுமைப் பெண்ணே . ,
Name : solarajac Date :5/8/2010 7:02:14 PM
சாந்திக்கு அரசாங்கம் athavathu செய்து ஊகுவிக்கணும். கிரிக்கெட் சூதாட்டம் செலவு பண்றதுல துளயுண்டு கொடுத்த போதும் .arsangatha matranum
Name : solarajac Date :5/8/2010 7:01:17 PM
சாந்திக்கு அரசாங்கம் athavathu செய்து ஊகுவிக்கணும். கிரிக்கெட் சூதாட்டம் செலவு பண்றதுல துளயுண்டு கொடுத்த போதும் .arsangatha matranum
Name : thavamurgan Date :4/30/2010 2:46:08 PM
santhi un muyarchi vetry adaya ean vazthukal.pudukkottai(dt)vallathirakottai(po)palakkudipatti.murugan g
Name : muthuselvi Date :4/29/2010 6:03:22 PM
the tamilnadu govt must help to shanthi and their team.
Name : suresh kumar Date :4/29/2010 8:29:09 AM
We are with you, some one pls provide the contact and account details you can contact me in 9962294445
Name : Kancharayan Date :4/28/2010 1:31:52 PM
It is really sad. Being a sports personal I can understand the finacial assistance required Could you please send Santhi's contact details or ask to contact me at 9791170372, kanch_m@hotmail.com I would like to thank Prem, Rajkumar and Ponraj for showing concern. Friends: I am in Coimbatore now and we can coordinate and help Santhi. send me your thoughts Thanks Kancharayan
Name : bhagath checuvera Date :4/28/2010 1:12:14 PM
தோழர்கள் ஜீவா ,ராஜ்குமார் ,பொன்ராஜ் போல என்னால் உதவி செய்ய முடியாத சுழலில் இருந்தாலும் அவர்களை மனதார பாராட்டுகிறேன் .திண்டிவனம்
Name : Jeevan Date :4/28/2010 5:25:27 AM
நக்ஹீரன், ப்ளீஸ் போஸ்ட் சாந்தி காண்டக்ட் இன்போர்மைடன் சோ தட் வி கேன் ஹெல்ப். பிரோம் Canada
Name : Rajkumar Ramaswamy Date :4/27/2010 8:39:18 PM
Dear Editor, please inform Shanthi to contact me on my email id rajkumar.2.ramaswamy@gmail.com. I can help her with possible monthly funding from my end. Thanks! Rajkumar, Finland
Name : Ponraj M Date :4/27/2010 4:07:11 PM
என் அருமை தோழியே, நீ ஏன் கண்டவனிடம் பிச்சை எடுக்க வேண்டும். நான் இருக்கிறேன். நாங்கள் இருக்கிறோம். கவலைப் படாதே. மாதம் முடிந்த அளவு உதவ தயாராக இருக்கிறோம். உமது முகவரியும், அலைபேசி என்னும் தேவை. கிடைக்குமா ? ம.பொன்ராஜ் ( 09900977330) திருச்சியில் இருந்து