நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :3, அக்டோபர் 2015(17:16 IST)
மாற்றம் செய்த நாள் :3, அக்டோபர் 2015(17:16 IST)

மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
மூகத்திற்காக போராடும் படைப்பாளிகளை  இங்குள்ள அரசியலும் இலக்கியமும் அங்கீகரிப்பதில்லை என்பதற்கு  கவிஞர் தமிழ்ஒளி ஓர் உதாரணம்- சென்னை பல்கலைக்கழக பவளவிழா அரங்கத்தில் 2015 செப்டம்படர்-22 அன்று நடந்த ‘கவிஞர் தமிழ் ஒளி-92 விழா’வில் வெளிப்பட்ட வேதனை இது.  தமிழ் ஒளியின் எழுத்து சரித்திரம் குறித்த கவிதைகள் வாசிப்புடன் மதியம் 2 மணிக்கு தொடங்கிய விழாவில், தோழர் நல்லக்கண்ணு,  சிகரம் செந்தில்நாதன், பிரின்ஸ் கஜேந்திரபாபு,  சஞ்சீவி, கவிஞர் பிரளயன், பேராசிரியர்களான பாலு, மணிவண்ணன், வெங்கடாசலபதி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். தோழர் சி.மகேந்திரன் பார்வையாளராக கலந்துகொண்டு சிறப்பு செய்தார். சுந்தரவள்ளி தொகுத்து வழங்கினார்.

         கவிஞரின் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அரங்குக்கு வருமா வராதா?  என்ற பதட்ட பரப்பிலேயே மூழ்கியிருந்த கூட்டத்துக்குள் திடீரென்று  கவிஞர் தமிழ் ஒளியின் நூல்கள் சுட சுட வந்துசேர,  உற்சாகத்துடம்  நூல்களை வெளியிட்டு பேசினார் தோழர் நல்லக்கண்ணு, “பாரதி ஒரு தேசிய கவிஞன். பாரதிதாசன்  சமூக விடுதலைக்கான கவிஞன்.  இவர்கள் பரம்பரையில் வந்தவர்தான் கவிஞர் தமிழ் ஒளி.  பாரதியின் படைப்பு என்றுமே  போற்றுதலுக்குரியது.  விடுதலைப் போராட்ட உணர்வை  ஊட்டிய கவிதைகள்.  பாரதிதாசன்  சமூக மாற்றத்துக்கான  படைப்புகளை தந்தவர்.  கவிஞர் தம்ழிஒளி உலக தொழிலாளி வர்க்கத்தின்  குரலாய் ஒலித்தவர்  இவர்கள் மூவருக்கும்   அவரவருக்குரிய  இடம்  தமிழ் இலக்கிய வரவாற்றில் உண்டு. பாரதியாரை ஞானகுருவாகவும் பாரதிதாசனை குருவாகவும் கொண்டு வர்க்க வேறுபாட்டை எதிர்த்தும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் எழுத்து யுத்தம் நடத்தியவர் தமிழ் ஒளி.  ஆனால், சமூகத்துக்காக போராடும் படைப்பாளிகளை இங்குள்ள அரசியலும் இலக்கியமும் அங்கீகரிப்பதில்லை. அபடித்தான், தமிழ் ஒளியை மறந்துவிட்டார்கள். ஆனால், அப்படியில்லாமல் அவரது புகழ் ஒளியை அனைவருக்கும் கொண்டுசெல்லவேண்டும்”என்றார்.
        
       தலைமையேற்று பேசிய  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன்,  “இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில்  பாசித்துக்கு எதிராக  உலகத்தில் இருக்கும்  அனைத்து எழுத்தாளர்களும்  குரல் எழுப்ப வேண்டும்  என்ற அறைகூவல்  உலகம் முழுக்க எழுந்தது.  அதன் ஒரு பகுதியாக  இந்திய முற்போக்கு எழுத்தாளர் அமைப்புகள் உருவாயின.  முதலில் தோன்றியது லண்டனில்தான். அதற்கு பிறகு, தமிழ்நாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தொடங்கியவர் கவிஞர் தமிழ் ஒளி.  எந்த சூழலில் இந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எவ்வாறு உர்வாயிற்று என்பதை பற்றிய விரிவான ஆய்வு நடத்தப்படவேண்டும்.  மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளிக்கு பாண்டிச்சேரி அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட தமிழக அரசு கொடுக்கவில்லை” என்று ஆதங்கப்பட்டார்.

முனைவர் இளமாறன்: “குறிப்பாக, தொழிலாளர் போராட்டங்களை ஆதரித்து எழுதிய கவிஞர் தமிழ் ஒளி, 9 காப்பியங்கள், 2 குறு நாவல்கள், 30 சிறுகதைகள், 20 ஓரங்கநாடகங்கள், 3 மேடைநாடகங்கள்,  100 குட்டிநாடகங்கள், 3 ஆய்வு நூல்கள், பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் என படைத்தவர்.  சிவாஜிகணேசன் நடித்த வணங்காமுடி திரைப்படம்  தமிழ் ஒளி நாடகத்தை வைத்து எடுக்கப்பட்டது. ஆனால், அப்படத்தில் தமிழ் ஒளியின் பெயர் மறைக்கப்பட்டுவிட்டது.  அரசியல், இலக்கிய உலகத்தால் மட்டுமல்ல திரையுலகத்தாலும் மறைக்கப்பட்டவர் கவிஞர் தமிழ் ஒளி”என்றார் வேதனையோடு.பொதுப்பள்ளிகளுக்கான மாநிலமேடை பொதுசெயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு:

கவிஞர் தமிழ் ஒளி  தமிழ்ச்சூழலில் வர்க்கப்பார்வையோடு  படைப்புகள் தந்த  ஒரு நெருப்புக் கவிஞன். பாரதியிடம் நாம் சில முரண்பாடுகளை பார்க்கமுடியும். பாரதிதாசன் தான் சார்ந்த இயக்கத்துக்காக அந்தந்த கால சூழலுக்கு தகுந்தார்போல் எழுதினார்.  கவிஞர் தமிழ் ஒளியோ பாரதியையும் பாரதிதாசனையும் விஞ்சி பொதுவுடமை கருத்துகளில்  தனது முதல் படைப்புத்தொடங்கி  கடைசிப்படைப்புவரை  எந்த தடுமாற்றமும் இன்றி  எழுதியவர்.  வர்க்க பார்வையோடு  சாதிய சிக்கலை அணுகியவர். அவரின்,  வீராயி காவியம் 1949- களில்  சாதி மறுப்பை பேசிய  காவியம். அண்ணல் அம்பேத்கர் அவர்கள்  நீண்ட நெடிய ஆய்வுக்குப்பிறகு  வகுத்துத்தந்த  சாதி ஒழிப்பு என்ற  ஆய்வறிக்கையை அப்படியே  தமிழில் காவியமாக  படைக்கப்பட்டதுதான் வீராயி.   ‘கவுண்டருக்கும் தலித்துக்கும் கல்யாணம் என்று அறிவித்துவிட்டான் ஆனந்தன்’ என்ற வரிகளின் மூலமாக சாதியை மறுத்து தமிழ் இளைஞர்கள் சமத்துவ சமூகம் படைக்க தயாராகிவிட்டார்கள் என்ற சூளுரையை 49-லேயே  தன் படைப்பின்மூலம் தந்தவர்தான் தமிழ் ஒளி.  மே-தினத்தை முதன்முதலில்  தமிழில் வரவேற்றுப் பாடியவர் கவிஞர் தமிழொளி. ஒடுக்கப்பட்ட மக்கள்  கூலித்தொழிலாளிகள் தெருவோரமாக  ஒன்றுமே இல்லாமல் நிற்கக்கூடிய விளிம்புநிலை மக்கள் அனைவருக்குமே  நம்பிக்கையும் அதிகாரத்தையும் கொடுக்கவந்த மே-தினமே என்று செங்கொடியை வாழ்த்தி வரவேற்றவர். தமிழ் இலக்கியத்தில் தனக்கென ஓர் இடம் பதித்த  கவிஞர் தமிழ்ஒளி தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில் சோஷலிச தத்துவத்தை  ஏன் ஏற்கவேண்டும் என்பதை குறிப்பிட்டு சமத்துவ சமூகத்தை உருவாக்கிட  முற்போக்கு சிந்தனையுடன் எழுத்துக்கள் படைக்கப்படவேண்டும் என்று எழுதினார். இன்றைக்கு தமிழ்ச்சூழல் எதிர்கொண்டிருக்கக்கூடிய  பல சிக்கல்களுக்கு  கவிஞர் தம்ழி ஒளியின்  கவிதைகளும்  காவியங்களும்  கடுரைகளும்  பல தீர்வுகளை கூருகின்றன.குழந்தைக்கு பாட்டு எழுதும்போதுகூட  வறுமையில் வாடும் குழந்தையின் மனநிலையை கருத்தில் கொண்டு  உனக்கு ஏன் பாப்பா நகை எல்லாம்?  என்று கூறி  பச்சைக் கிளிக்கும் மயிலுக்கும்  நகையில்லை. அவை அழகானவை. அதுபோல் உன்னிடம் புன்னகை உண்டு.  அதை விஞ்சிய நகை வேறொன்றும் இல்லை என்று கூறுவார்.  என்னிடம்,  வந்த ஒரு எட்டாம் வகுப்பு மாணவி   பாருங்கள் அய்யா,  கவிஞர் தமிழ் ஒளி எனக்காகவே ஒரு பாட்டு எழுதியிருக்கிறார் என்றாள்.  என்னம்மா சொல்கிறாய் என்று கேடதற்கு, என் கழுத்தை பாருங்களேன் என்றாள். அந்த சிறுமையின் கழுத்தில் நகை இல்லை.  நகையில்லாத அந்த சிறுமிக்கு தனக்காகவே கவிஞர் தமிழ் ஒளி பாட்டு எழுதியாக எண்ணத் தோன்றியது.  எந்த மக்களுக்காக  கவிஞர் தமிழ் ஒளி பாடல் எழுதினாரோ அந்த மக்களிடம்  கவிஞர் தம்ழிளி  படைப்புகளை  கொண்டு சேர்த்தால்  அவர் விரும்பிய  சமூக மாற்றமும் சமத்துவ சமூகமும்  உருவாகும்” என்றார். 

  சென்னை பல்கலைக்கழக சங்கத்தமிழ் மேம்பாட்டுத்துறை தலைவர் பேராசியர்  மணிகண்டன்: “பாரதியுனுடைய மாணவன் பாரதிதாசன்.  பாரதிதாசனின் மாணவன் கவிஞர் தம்ழி ஒளி. பாரதியிடமும் பரதிதாசனிடமிருந்து கற்று உள்வாக்கிக்கொண்டதை  மேலும்,  மெறுகேற்றி மிகச்சிறந்த படைப்பை தந்தவர் கவிஞர் தமிழ் ஒளி. அவரிடமிருந்து கற்றதில்  கூடுதல் சிறப்புடன்  தான் ஏற்றுக்கொண்ட தத்துவத்தில் எந்த இடத்திலும் பிரளாமல்  சிறந்த படைப்புகளை தந்தவர்.  சென்னை பல்கலைக்கழகத்தின்  தமிழ்த்துறை பேராசிரியராக இருந்த    சஞ்சீவி  ஒரு மிகச்சிறந்த படைபாளி தமிழ்ச்சூழலில் கண்டுகொள்ளாமலேயே விடப்பட்டிருக்கிறார் என்று கூறினார். இன்று  செ.து. சஞ்சிவி அவர்கள் கவிஞர் தமிழ் ஒளி மறைந்த பிறகு அவரின் படைப்புகளை  தொடர்ந்து வெளிக்கொண்டுவந்து தமிழ் உலகம்  தமிழ் ஒளி அறியச்செய்துள்ளார்.  இந்த இரண்டு சஞ்சீவிகளையும் என்னால் மறக்க இலயலாது.  
    
சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பாலு:  ‘கோழிக்கு முன்னெழுந்து கொத்தடிமை போல் உழைத்து...

பாடுபட்ட ஏழை முகம் பார்த்து பதைபதைத்து... கண்ணீர் துடைக்கவந்த காலமே நீ வருக...மண்ணை இரும்பை மரத்தை பொருளாக்கி...விண்ணில் மழையிறக்கி மேதினிக்கு நீர் பாய்ச்சி...

வாழ்க்கை பயிரிட்டு வாழ்ந்த தொழிலாளி... கையில் விலங்கிட்டு காலமெல்லாம் கொள்ளையிட்ட...

பொய்யர் குலம்  நடுங்க பொங்கிவந்த மே-தினமே நீ வருக’- என்று முதன்முதலில் இந்தியாவில் மே-தினம் குறித்து கவிதை பாடிய கவிஞர் தமிழ் ஒளிதான்.   ‘எனது ஆசானும் நண்பனும் தோழனுமாய் விளங்கியவர் தமிழ் ஒளி. நடைமுறையில் மக்கள் கவிஞராக வாழ்ந்தார். பாரதி, பாரதிதாசனுக்கு பின் கவிஞர்களின் பட்டியலை குறிப்பிட வேண்டும் என்றால்  முதல் பெயராக குறிக்கத்தக்கவர்  தமிழ் ஒளி’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் போற்றுவார்கள்.‘தமிழுக்கே எல்லாம் என்று ....தனக்கென்றே ஏதுமின்றி  தமிழுக்கே தன்னை ஈந்தோன் தன்மான சிகரமானோன்  தமிழுள்ள மட்டும்  தமிழ் ஒளியும் வாழ்வான்’ என்று பலரால் போற்றப்பட்டவர்.   ‘பாரதியையும் பாரதிதாசனையும்  போல் தமிழ் ஒளியும் கவிதையை  வாழ்வாகக்கொண்டவர். வாழ்க்கையும் கவிதையாக மாற்றியவர்.  தமக்கென்று வேறு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாதவர்.  நமக்கு த் தொழில் கவிதை ந்று கவிஞ்னாக வாழ்ந்தவர்’ என்று தோழர் நல்லக்கண்ணு அவர்கள் குறிப்பிடுவார்”என்றார் அவரது நினைவாக.

             இப்படி, பலரும் கலந்துகொண்ட கவிஞர் தமிழ் ஒளி-92 விழாவில் மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளியின் புகழ் ஒளியை வெளிக்கொண்டுவந்தனர்.

ம.மனோ செளந்தர்
படங்கள்: அசோக்
 
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :