நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :25, பிப்ரவரி 2016(11:39 IST)
மாற்றம் செய்த நாள் :25, பிப்ரவரி 2016(11:39 IST)

இயற்கையை மிதித்தும், அழித்தும் வருகிறோம்: சுற்றுசூழல் ஆய்வாளர்கள் வேதனை

ங்கம் 4 இரண்டாம் நாள் நிகழ்வில் இயற்கை, கழிவுநீர்  மேலாண்மை, நீர் மேலாண்மை குறித்து கணக்கீட்டின் தேவை போன்ற பல்வேறு தலைப்புகளின் சுற்றுசூழல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் பேசினார்கள்.

நவம்பரில் பெய்த பெரும்மழையின் போது அரசாங்கத்திடம் இருந்து வந்த அறிவிப்புகள் மழை வரும் போது வெள்ளம் வருவது இயல்புதான் மீட்பு பணிகள், வெள்ள நிவாரண பணிகளை செய்தால் மட்டுமே நல்ல அரசாங்கம் செயல்படுவதற்கான அறிகுறியாகும். டிசம்பர் 1ம் தேதிக்கு பின் வரலாற்றில் காணாத மழை என்று அறிவிப்பு வந்தது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வருடங்களில் நம்மிடம் வேறும் 250 ஆண்டுகளுக்கான மழை தொடர்பான ஆவணங்கள் மட்டுமே  இருக்கிறது. சென்னை முழுமைக்கும் வெறும் 8 கண்காணிப்பு நிலையங்கள் மட்டுமே இருக்கிறது இந்த நிலையங்கள் போதுமானதாக இருப்பது இல்லை. கடந்த 13 வருடங்களில் ஒவ்வொரு ஆண்டும் அதன் முந்தைய வருடங்களின் சுற்று சூழல் மாற்றங்கள் நிறைய நடைபெற்று வருகிறது. பெரும் பணக்காரர்களின் ஆக்கிரமிப்புகள் ஆற்றின் போக்கையே மாற்றி விடுகிறது.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசாயம் பேசும்போது, நாட்டில் வளர்ச்சி பெயரில் நம் நாட்டிக்கு பொருந்தாத மற்ற  நாடுகளுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை தான் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டும், செயல்படுத்தப்பட்டும் வருகிறது. புதிதாக கொண்டுவரபடும் வளர்ச்சி என்பது விவசாயத்தை சார்ந்தும், அதனை பாதிக்காத வளர்ச்சியாக தான் இருக்கவேண்டும்.20-25% வளர்ச்சி இருந்தாலும் கூட,70-75% கீழ் நோக்கி தான் சென்று கொண்டு இருக்கிறோம். வெளிநாடுகளில் இருந்து நேரடியாக முதலீடு என்பது முழுக்க முழுக்க ஒரு மோசடியான வேலையாகும். நகரமயமாக்கள் குறித்தான சரியான செயல்திட்டங்கள் இல்லை.இயற்கையின் வழிகளையும்,அதன் வளர்ச்சிகளையும் தடுத்தோம் என்றால் அது நம்மை அழித்து விடும். வளர்ச்சிகள் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களை சார்ந்து தான் இருக்கிறதே தவிர மக்களுக்காகவும்,நாட்டிற்கான வளர்ச்சி இங்கு நடப்பது இல்லை என்றார்.

பசுமை மாநகரம், கழிவு நீர் மேலாண்மை மாற்று திட்டங்கள் என்ற தலைப்பில் இளங்கோ பேசியது, உலகத்தில் எங்கும் இல்லாத நிலப்பரப்புகள் இங்கு இருக்கிறது குருஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் இதை எல்லாம் நாம் பாழாக்கி விட்டால் பாலையாக மாறிவிடும். 2000 ஆண்டுகளாக  கொடுத்த  இயற்கையை வளர்ச்சி என்ற பெயரில் மிதித்தும், அழித்தும் வருகிறோம். திருப்பூர், வாணியம்பாடியில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை நேரடியாக கடலில் கலந்து விடலாம் என்று திட்டம் தீட்டினார்கள் மக்கள் இதை எதிர்த்து போராட்டம் நடத்தியாதால் அந்த முடிவை கைவிட்டார்கள். வளர்ச்சி என்ற பெயரில் அனைத்தையும் தன்வசபடுத்துகிறார்கள். இது பெரிய ஆபத்தில் தான் முடியும் என்றார்.

நீர் மேலாண்மை கரிசனைகளும் சூழல் கணக்கீட்ற்கான தேவையும் என்ற தலைப்பில் பேராசிரியர் ஜனகராஜன் பேசியது சுற்றுபுற கணக்கீடுகள் பற்றி பேச படவே இல்லை. ஆறுகள், குளங்கள் மாசடைவதைதனிபட்ட முறையில் பார்பதைவிட எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்க்க வேண்டும். ஆறுகளும், குளங்களும் மாசடைந்து விட்டு என்று மட்டும் பேசிக்கொண்டு இருக்காமல் அது குறித்தும் கணக்கீடுகள் அதை எப்படி மீண்டும் முந்தைய நிலைக்கு கொண்டு செல்ல ஆகும் திட்டங்களையும்,அதற்கு ஆகும் செலவுகளை குறித்தும் கணக்கீடு செயல்படுத்த வேண்டும்.  நாட்டின் ஜி‌.டி.பி உயர்துவதற்காக காடுகளையும், நதிகளையும் அழித்து எல்லாம் விதமான புள்ளி விபரங்களை ஏற்றி கொண்டு இருக்கிறோம் ஆனால் பல ஆண்டுகள் பழைமையான நதிகள், ஆறுகள், குளங்களை  எல்லாம் அழித்துவிட்டு அதை பற்றி கவலை படுவதே இல்லை. நிலத்தடி நீர் நாளுக்கு நாள் அதிகம் மாசுபட்டும், குறைந்தும் வருகிறது அதை பற்றிய கணக்கீடே இல்லை.  இதை தான் நாம் வளர்ச்சி என்று சொல்லி கொண்டு இருக்கிறோம் என்றார்.

நீரால் அழிந்தோம், நீரால் எழுவோம் என்ற தலைப்பில் சதாசிவம் பேசியது நீர் வழி போக்குவரத்து குறித்தம் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், தேசிய நீர்வழி போக்குவரத்து மூலம் பெருளாதார மாற்றங்கள் குறித்தும் அதை முன்பு இருந்த காலங்களில் எப்படி பயன் படுத்தினார்கள் என்பதை குறித்தும் சிந்தித்து செயல்பட வேண்டும். தமிழக அரசு நீர் வழி சார்ந்து மத்திய அரசு ஒதுக்கும் நிதிகளை பெறுவதும் இல்லை அதற்கான நடவடிக்கைகளும் மத்திய  அரசு மேற்கொள்வதே இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா-பங்களாதேஷ் நீர்வழி போக்குவரத்தில் இருநாட்டு மீனவர்களும் போடபட்ட ஒப்பந்தங்கள்  போன்று இந்தியா-இலங்கை மீனவர்களுக்கு இடையே ஒரு ஓப்பந்ததை போட மத்திய,மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொள்ளாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. மற்ற மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் இருக்கும் நீர் நிலைகள் குறித்து சரியான கணக்குகள் கொடுத்து இருக்கின்றனர். ஆனால் தமிழக நம்ப முடியாத மிக குறைவான கணக்கை கொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. முன்பு இருந்து கால்வாய்கள் மீண்டும் உயிர்பெற்றால் மட்டுமே வெள்ள பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றார்.

- சி ஜீவாபாரதிதங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :