நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :10, ஜூன் 2010(12:4 IST)
மாற்றம் செய்த நாள் :10, ஜூன் 2010(12:4 IST)

முந்தைய பகுதியின் (http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=13 ) தொடர்ச்சி: 1.

கேள்வி: வாசிப்பின் மீதான ஆர்வம் வந்தது எப்படி, அந்த வாசிப்ப எப்ப மொழி பெயர்ப்புக்காக மாத்தனிங்க, நவீன இலக்கிய பறிச்சியும் எந்த நேரத்துல வந்தது,அதற்கு காரணம் யார்?

ஜெயஸ்ரீ:
வாசிப்புக்கு எங்கம்மா மாதவி தான் காரணம். எங்கம்மாவுக்கு தமிழ் சுத்தமா தெரியாது. என் அக்காவை ஸ்கூல்ல சேத்து அவ கூடவே எங்கம்மாவும் தமிழ் கத்துக்கிட்டு வாசிக்க ஆரம்பிச்சாங்க. அவுங்க படிச்சத நானும் படிக்க ஆரம்பிச்சன். சின்ன வயசுல என் உடல் நிலை அடிக்கடி மோசமாகும். அதனால எனக்கு அதிகமான ஓய்வு கிடைக்கும் அந்த ஓய்வ படிக்கறதுக்காக பயன்படுத்திக்கிட்டன். ஷைலஜாவும் என் கூடவே வாசிக்க ஆரம்பிச்சாங்க. கல்லூயில படிக்கும்போது கல்கியோட சரித்திர நாவல்கலெயெல்லாம் விடிய விடிய படிப்போம். அவங்க படிக்க நான் கேட்க, நான் படிக்க அவுங்க கேட்க என்று பல நாட்கள் பொழுது விடியும்வரை வாசிச்சிக்கிட்டுயிருப்போம்.

ஒருமுறை நானும் ஷைலஜாவும் காலேஜ் லைப்ரரியில மோகமுள் புத்தகத்த கேட்டபோது என்ன காரணம்ன்னு தெரியல லைப்ரரியன் அதிர்ச்சியானாங்க. ஆனாலும் நாங்க படிக்க நினைச்ச புத்தகங்கள படிக்காம விட்டதில்ல. என் படிப்பார்வத்தை பாத்து பவா வந்து பல கூட்டங்களுக்கு அழைப்பாரு. நாங்க பெரும்பாலும் போனதேயில்ல. ஆனா பவா விடாம கூப்பிடுவாரு. காலம் எங்கள மாற்றியது. பவா பல்வேறு எழுத்தாளர்கள எங்களுக்கு அறிமுகப்படுத்தனாரு. அப்படி அறிமுகமானவரு தான் பிரபஞ்சன். பிரபஞ்சன் மூலமாதான் நவீன இலக்கியத்துக்குள்ள நாங்க வந்தோம்.

பவாவின் நண்பராத்தான் உத்திரகுமார் எனக்கு அறிமுகமானாரு. எங்க வீட்ல அம்மா, பாட்டிக்கிட்டயெல்லாம் பவா தான் பேசி சம்மதிக்க வச்சி எங்க திருமணத்த நடத்தி வச்சாரு.

கேள்வி: சொந்தமா எழுத நினைக்காத உங்கள் மனதுக்கு மொழி பெயர்ப்புக்கான ஆர்வம் வந்ததுயெப்படி?

ஜெயஸ்ரீ:
பவா-ஷைலஜா தான். நான் முதன் முதலா மலையாளத்தல வந்த ஒரு கட்டுரைய மொழி பெயர்த்து தந்தன். அது நல்லாயிருக்குன்னு பாராட்டனாங்க. மலைளாயத்துல 30 ஆண்டுகளா எழுதிக்கிட்டுயிருக்கற 7 எழுத்தாளர்களின் 7 சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து, கூடவே தமிழின் 7 சிறந்த கதைகளோட தொகுத்துப் போட்டிருந்த ’’பச்சை இருளனின் சகா பொந்தன் மாடன்’’ என்றத் தொகுப்பில் சில சிறுகதைகளை மொழிப்பெயர்த்து கொடுத்தன். மொழி பெயர்ப்பு நல்லாயிருந்ததுன்னு விமர்சனம் வந்தது.

அதன் பின்னர், பிரபல மலையாள எழுத்தாளரான பால் சக்கரியாவின் பெண் மனம் சார்ந்த கதைகளையும், ஒரு குறுநாவலையும் ’இது தான் என் பெயர்’ என்ற பெயரில் கவிதா வெளியீடாக, எழுத்தாளர் பிரபஞ்சனின் மிகப்பெரிய ஊக்குவிப்பால் வெளிவந்தது.

வெளியீட்டு விழா திருவண்ணாமலையில் மிகப்பெரிய அளவுல நடத்திச்சி தமுஎச. ஏஸ்.ராமகிருஷ்ணன்லாம் அற்புதமா பேசினாரு.  தொடர்ந்து மலையாள எழுத்தாளர் ஷியாமளா சசிகுமாரோட நிசப்தாங்கற கவிதை தொகுப்ப நிசப்தம்ங்கற தலைப்புல தமிழ்ல மொழி பெயர்த்தன். அது திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில எம்.ஏவுக்குப் பாடமா வச்சியிருக்காங்க. கேரளக் கவிஞர் ச. அய்யப்பனோட கவிதை தொகுப்ப ’வார்த்தைகள் கிடைக்காத தீவில்’ங்கற தலைப்பில் மொழி பெயர்த்தன். இந்த மொழி பெயர்ப்புக்கு திருப்பூர் தமிழ் சங்க விருது கிடைச்சது. அப்பறமா, பால் சக்காரியாவோட தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை சாகித்ய அகாதமிக்காக மொழி பெயர்த்து தந்துயிருக்கன். சமீபமா நவீன மலையாள எழுத்தாளர் சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் ’ஒற்றைக்கதவு’ என்ற சிறுகதைத் தொகுப்பு மொழி பெயர்த்து வெளிவந்துயிருக்கு.

கேள்வி: இலக்கியத்தின் மீதான தீவிர காதலுக்கு எது காரணம்?

உத்திரகுமார்:
எங்கப்பா, நா. பார்த்தசாரதியோட மாணவர். எங்க ஊரான கிருஷ்ணன் கோவில் பக்கத்து ஊரான இராமச்சந்திரபுரத்தில் எங்க சமுதாயத்த சேர்ந்தவங்க பள்ளிக்கூடம் நடத்தனாங்க. அங்கே ஆங்கில ஆசிரியரா இருந்த அப்பா அப்போ நிறைய விருதுகள் வாங்கினவரு. அந்த ஸ்கூலோட லைப்ரரி இன்சார்ஜ் அவர் தான். அதனால இயற்கையாவே என்னோட பாட புத்தகங்கள் தவிர மத்த புத்தகங்கள் படிக்கற பழக்கம் வளர்ந்துச்சி. தொழில் நிமித்தமா எங்கப்பா 80கள்ல திருவண்ணாமலைக்கு வந்தாங்க. அதுக்குப் பிறகு இங்கதான் படிச்சன். முதலில் கவிதைகள் தான் விரும்பி படிச்சன். இங்க வந்ததுக்கப்புறம் உதயசங்கர் நட்பு தான் என்னை நவீன இலக்கியத்தின் மிது திருப்பி விட்டது.  90கள்ல இலக்கியம் மீதான காதல் எனக்கு வத்திப்போய் தத்துவம், வரலாறுகள் மீது என்னோட பார்வை திரும்பிச்சி.

கேள்வி: தீவிர இலக்கிய வாசிப்பாளராயிருந்த உங்களுக்கு அதன் மீதான ஆர்வக் குறைவுக்கு காரணம்மென்ன?

உத்திரகுமார்:
நவீன கால இலக்கியங்கள படிக்க ஆரம்பிச்சதுமே ஏண்டா இதப் படிக்கனும்கிற மாதிரியான எண்ணம் தான் உருவாச்சி. காரணம், சுந்தரராமசாமி போன்றவர்களின் எழுத்துகளைப் படிச்சபோது ஏற்பட்ட சுகம் நவீன இலக்கியங்கள்ள கிடைக்கல. சமீப கால புத்தகங்கள்ல, பழைய எழுத்தாளர்கள் எழுத்துல இருந்த ஈர்ப்பு இல்லாமல் போனது தான் இலக்கியம் மீதான ஆர்வம் குறையக் காரணம். அதோட நல்ல புத்தகங்கள் தேடிப் படிக்கறதும் பெரிய விஷயமாயிருக்கு. பெரிய பெரிய எழுத்தாளர்கள் கூட இப்ப வருஷத்துக்கு 10 புக் எழுதறாங்க. உதாரணத்துக்கு ஜெயமோகன் இந்த புத்தகம் வெளியிட்டுயிருக்காரு. இதப் படிக்கவே ஒரு வருஷம் ஓடிரும். அப்பறம் எப்படி மற்றவர்களை தேடறது. இதுல நல்ல நாவல், கவிதை எது என்று தேடுவதற்குள் போதுமென்றாகிறது.

கேள்வி: எழுத்தாளர்கள் இரண்டு பேர் சந்தித்துக்கொண்டாலே அங்கே காரசாரமான விவாதம் நடக்கும், ஒரே குடும்பமாகவுள்ள உங்களுக்குள்ள எப்படியிருக்கு? 

பவா:
எங்களுக்குள்ள படைப்பு குறித்த கருத்து முரண்பாடுகள் நிறையவே இருக்கு. எங்களுக்கான துறைகள் வெவ்வேறு. அதோட ஒவ்வொரு மனிதனுக்கும் வாசிப்பு மனநிலை மாறுபடும். கருத்தும், ரசனையும் வெவ்வேறு மாதிரிதான் இருக்கும். அப்படித்தான் எங்களுக்கும். ஒரு புத்தகத்தப் பத்தி பயங்கரமா விவாதிப்போம். ஆளாளுக்கு மாறுப்பட்ட கருத்து வெளிப்படும். நீண்ட நேரம் விவாதிப்போம். அதே  மாதிரி எனக்கு, ஷைலஜா, ஜெயஸ்ரீக்கு புனைவுகள் மேல ஆர்வம்.

கேள்வி: எழுத்துலகில் பெண்கள் மீதான பார்வை ஆண்களிடம் எப்படியிருக்கு……..

ஜெயஸ்ரீ:
எந்த வேறுபாட்டையும் எனக்கு தெரிந்து எழுத்தாளர்கள் பாக்கலன்னு நினைக்கறன். நான் பல இலக்கிய கூட்டங்களுக்கு போயிருக்கன். யாரும் ஆண் பெண்  வேறுபாடு பாக்கறதில்ல. ஆண் எழுத்தாளர்கள் ஊக்குவிக்கும் நபர்களாக தான் இருக்காங்க. என் அளவுல வேறு எந்த மாறுபாட்டையும் பாக்கலன்னுதான் நினைக்கறன். நானும் ஷைலஜாவும் போன இடங்கள்ல எங்கள யாரும் புறக்கணிச்சதா தோணல. என் எழுத்த எதிர்மறையா யாரும் விமர்சித்ததா கூட தெரியல.

கேள்வி: தலித் எழுத்தாளர்கள் புறக்கணிப்பு என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இலக்கிய உலகில் உள்ளது உங்களது பார்வையில் அதுப்பற்றிய கருத்தென்ன?

பவா:
இலக்கியத்தில் தலித்-தலித்தல்லாத எழுத்துன்னுயிருக்கு உண்மைதான். ஆனா தலித் எழுத்தாளர்கள் தங்களை தலித் எழுத்தாளர்ன்னு அடையாளப்படுத்திக்கொள்ளும் போது மற்ற சாதியினரும் அதையே ஜாதியின் பெயரால் செய்யறாங்க. பல எழுத்தாளர்கள் தங்களை சாதி ரீதியாக அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. குறிப்பா பூமணி எனக்கு பிடித்த எழுத்தாளர். அவர் எழுதிய பிறகு, வெக்கை போன்ற நாவல்களை பலமுறை வாசிச்சியிருக்கன். அவர் தன்னை எப்போதும் தலித் ரைட்டர்ன்னு அடையாளப்படுத்திக்கல. பெரும்பாலானா எழுத்தாளர்கள் தங்களை எழுத்தாளராக மட்டுமே இச்சமுகம் பார்க்க விரும்புகிறார்கள்.

கேள்வி: பெண் கவிஞர்கள் தங்களது உடல் கூறுகளை, பால் உணர்வுகளை வைத்து எழுதும் போது விமர்சனம் வருகிறது. அப்போது ஆணாதிக்கவாதிகள் தான் எங்களை எதிர்க்கிறார்கள் என்ற விமர்சனம் வருகிறது இதுப்பற்றி உங்களது கருத்தென்ன?

பவா:
ரொம்ப அபத்தமான விமர்சனம். குட்டிரேவதி முலைகள்ன்னு தன்னோட படைப்புக்கு தலைப்பு வைக்கறாங்க. அதல, ஆண்களுக்கு உறுப்புகள் உள்ளதை போல தான் பெண்களுக்கும்மிருக்கு, பால் உணர்வுன்றது மனித உடலுக்கு பசியென்பதைப் போல சாதாரணமானது. அதில் பெண்களுக்கு மட்டும் வேறுபாடு இல்லன்னு சொல்றாங்க. இதை எப்படி பெண் சொல்லலாம்ன்னு ஏத்துக்க முடியாதவங்க பதறறாங்க. அதை என்னால ஏற்றுக் கொள்ள முடியாது.

கேள்வி: குடும்பத்தல மனைவி, மைத்துணி, நண்பர் மூன்று பேரும் மொழி பெயர்ப்புகள் செய்து உங்களிடம் தரும் போது ஒரு எழுத்தாளரா உங்களுடைய விமர்சனத்த எப்படி வைக்கிறிங்க ?

பவா:
நான் வெளிப்படையா என்னுடைய விமர்சனத்த வச்சியிருக்கன். மொழி பெயர்த்தது, எழுதினதுன்னு எங்கிட்ட தந்து கருத்து கேட்கும்போது அதோட குறைகளை அப்படியே உதாரணமா இது கட்டுரை தனமாயிருக்கு, இது சரியான நடையில்ல, இது ஒன்னுத்துக்கும் உதவாதுன்னு சொல்லி நிராகரிச்சியிருக்கேன். நல்லாயிருந்தா நல்லாயிருக்குன்னு சொல்வன். ஆனா அதுக்காக சாதாரணமா எழுதித் தரும் போது அத ஏத்துக்க முடியாது. உறவுகளாயிருந்தாலும் படைப்புகள்ல காம்பரமைஸ் கிடையாது. 

கேள்வி: சிரமப்பட்டு மொழி பெயர்த்ததை மோசமாக உள்ளது என விமர்சனம் செய்யும்போது உங்களது மனநிலை எப்படி?

ஜெயஸ்ரீ:
நான் எழுதறத முதல்ல ஷைலஜா, பவாக்கிட்ட தான் தருவன். அவுங்களோட விமர்சனம் சரியாயிருக்கும். அதனால சரியில்லன்னு சொன்னாங்கன்னா அத ஏத்துக்குவன். வேற யார்க்கிட்டயாவது தந்து கன்சல் பண்ணியிருக்கலாம்கிற எண்ணம் எனக்கு வந்ததில்ல. குடும்பத்தலயிருந்து நம்மை அறிந்தவங்ககிட்டயிருந்து விமர்சனம் வரும்பொது அது மூலமா நம்மை மாத்திக்க முடியுது.

கேள்வி: எழுத்தாளர்களுக்குத் தரப்படும் மாநில, மத்திய விருதுகளில் லாபியிருக்கு என்கிற பேச்சு உள்ளது அதுப்பற்றி என்ன நினைக்கிறிர்கள் ?

ஷைலஜா:
நிச்சயமா விருதுகள் வழங்கறதல லாபியிருக்கு. அது மறுக்கமுடியாத  உண்மை. 99 சதவிதம் லாபியில்லாம விருதுகளோ, பரிசுகளோ தர்றதில்ல. சுந்தரராமசாமிக்கு சாகித்யஅகதாமி விருது அவர் சாகும் வரை கிடைக்கல. 2009 ல ஆனந்த விகடன் தந்த விருது பட்டியல்ல ஒரு நாவல்க்கு விருது அறிவிச்சியிருந்தது. அந்த விருது அறிவிக்கப்படும்போது அந்த நாவல் வந்தே 10 நாள் தான் ஆகியிருந்தது. அந்த நாவலை படிக்கவே 2 மாசம்மாகும். அப்படியிருக்க வந்தே 10 நாள் ஆனா அந்த நாவல்க்கு எத வச்சி விருது தந்தாங்கன்னு சந்தேகம் வருது. விருதுகள்ல லாபியிருக்கு.

கேள்வி: எல்லா விருதுகளிலும் லாபியிருக்குன்னு சொன்னிங்க. தமுஎகச வும் விருதுகள் வழங்கி வருது அப்ப அதலயும் லாபியிருக்கா?

ஷைலஜா:
தமுஎகச அமைப்புல திறமைக்கு தான் விருது. குழந்தைகள் போட்டிக்கு நடுவரா என்னை நியமிச்சாங்க. கூட இரண்டு உறுப்பினர்கள். விருதுக்காக 67 புத்தகங்களை சிரமத்தோடு படிச்சன். அதுல ஒண்ணு கூட குழந்தைகளுக்கானதுயில்ல. நான் எங்க பொதுச் செயலாளர் தமிழ்செல்வன்கிட்ட இதல எந்தப் புத்தகமும் குழந்தைகளுக்கானதுயில்லன்னு சொல்லி அதுக்கான பரிச கேன்சல் பண்ணிடுவோம்ன்னு சொன்னன். அவரும் சரின்னு சொன்னாரு.

அந்தப் போட்டிக்கான விருதுக்கு எதுவும் தேர்ந்தெடுக்க படலன்னு சொல்ல நினைச்சோம். விழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி,வானொலி அண்ணா எழுதின ஒரு புத்தகம் போட்டிக்கு வந்தது. அது குழந்தைகளுக்கானதுன்னு படிச்சி பாத்து தேர்வு பண்ணன். அதுக்கு விருது கிடைச்சது.
அதே மாதிரி சமீபத்தல குறும்பட, ஆவணப்படங்களுக்கான போட்டி நடத்தனோம். அதுக்கான நடுவரா கருணாயிருந்தாரு. வந்திருந்த 50க்கும் அதிகமான குறும்படம், ஆவணப் படங்கள பொறுமையா பார்த்து தேர்வு செய்தாரு. அதல விருது வாங்கன 4 பேர்ல 3 பேர் தமுஎசவுல உறுப்பினர் அல்லாதவங்க. இப்படி திறமையானவர்கள கண்டுபிடிச்சி திறமைக்கு மட்டுமே விருது தர்றோம். தறமற்றத தேர்வு செய்து தந்து நாங்க இங்க லாபி பண்ண விரும்பறதில்ல. அது இங்க நடக்கவும் நடக்காது.

கேள்வி: எழுத்தாளர்கள் அதிகமாக பயணப்படவேண்டியிருக்கும். பயணம் போக பெண் எழுத்தாளர்களுக்கு குடும்பத்தில் சுதந்திரம் கிடைக்கிறதா? விழாக்களுக்கு போகும் பெண் எழுத்தாளர்களுக்கு அங்கு உரிமைகள் கிடைக்கிறதா?

ஷைலஜா:
எப்ப எங்க வேண்டுமானாலும் போகறதுக்கான சுதந்திரம் எனக்கிருக்கு. என் குடும்பம் அப்படியிருக்கு. அது மற்ற பெண் எழுத்தாளர்கள் லைப்ல இருக்கான்னு பாத்தா குறைவுன்னு தான் சொல்லனும். அதே மாதிரி, எழுத்தாளர்கள் விழா மேடையிலாகட்டும், மற்ற மேடைகளாகட்டும், விழாக்களாகட்டும் பெண் எழுத்தாளர்களுக்கான உரிமை அதிகமா மறுக்கப்படுது.

இதுவரை தான் உன்னோட எல்லைன்னு எழுத்தாளர்கள் மத்தியிலயே பெண்களுக்குன்னு வரையறை வச்சியிருக்காங்க. அதுக்கு மேல போனா திமிர் பிடிச்சவன்னு சொல்றதோட அவளோட தனிப்பட்ட வாழ்க்கையை கொச்சைபடுத்தும் வேலைகள் செய்றாங்க. பெண்கள் மீதான பார்வை எழுத்துலகிலயும் ஆணாதிக்க தன்மையோட தான்யிருக்கு. காலங்கள் மாறினாலும் மற்றவர்களை போல எழுத்தாளர்களும் மாறுவதில்லை.

கேள்வி: எழுத்தாளரா பல வெளி நிகழ்ச்சிகளுக்கு நீங்க போகும்போது குடும்பதலைவியா, குழந்தைகள வீட்ல விட்டுட்டு போகும் போது உங்கள் மனநிலை எப்படியிருக்கு?

ஷைலஜா:
குடும்பத்த விட்டுட்டு வெளியில நிகழ்ச்சிக்கு போய்ட்டு வரும் போது தான் குழந்தைகள எந்தளவுக்கு மிஸ் பண்றோம்ங்கறது தெரியுது. அப்ப அம்மாவுக்கான மனவேதனை எனக்கு அதிகமாவேயிருக்கு. ஆனாலும் பல விழாக்கள தவிர்க்க முடியலங்கறதால அவர்களை விட்டுட்டு போக வேண்டியிருக்கு. அப்ப என் அம்மா தான் அவங்கள பாத்துக்கிட்டு என் சுமைகள குறைக்கறாங்க. இருந்தும் என் பிள்ளைகளுக்காக அதிகமான நேரத்தை செலவிட முடியலையேங்கற வருத்தம்மிருக்கு.

கேள்வி: பெண் உடல் கூறுகள முதன்மை படுத்தியும், பாலின உணர்வுகள மையப்படுத்தி பெண்கள் எழுதறதப்பத்தி என்ன நினைக்கிறிங்க? அந்த எழுத்துக்கான எதிர்மறை மோசமாக விமர்சனம் வருதுப்பற்றி பெண் எழுத்தாளரான உங்க கருத்துயென்ன?

ஷைலஜா:
பெண்கள் எழுதும் எழுத்தயே இரண்டா பிரிச்சி பாக்க சொல்றன். எப்படின்னா பிரபலத்துக்காக எழுதறதுங்கறது ஒண்ணு. உண்மைகள, மனக் குறைகள எழுதறதுங்கறது ஒண்ணு. இதல பிரபலத்துக்காக தலைப்புகள, படங்கள வைக்கறத விமர்சனம் பண்ணலாம். ஆனா ஒரு பெண் தன் மனவேதனைகள எழுதறத எப்படி விமர்சனம் பண்ண முடியும். அவளுடைய வேதனையை அவள் தான் உணர முடியும். ஆண்களால் உணர முடியாது.. என்று சொல்லும்போதே

இடையில் புகுந்த ஜெயஸ்ரீ: ஆண்கள் பெண்களின் மனவேதனையை கொச்சையா எழுதும் போது ஏத்துக்கற இந்த சமுகம் அதையே அவள் பிரச்சனையை அவளே எழுதும் போது மோசமான விமர்சனம் வைக்கிறது. அதுக்கு காரணம் பெண்கள் அடுப்படியிலயே இருக்கணும்கிற ஆணாதிக்க மனோபாவம் தான். பெண் எழுத்தாளர்கள் தன் சமுகம் சந்திக்கும் ரணத்தை குறைவான அளவுக்குத் தான் எழுதறாங்க. அத ஆரம்பத்தலயே தடுக்கறதுக்காக தான் பெண் எழுத்தாளர்கள் மீது பாய்ந்து மோசமான விமர்சனம் செய்யறது.

சிற்றிலக்கியங்களில் 5வயது முதல் 40 வயது பெண்களைப் பற்றி கொச்சையாக எழுதி பதிவு செய்துயிருக்காங்க. தி. ஜானகிராமனைவிடவா பெண்களை பற்றி பெண்கள் எழுதிட்டாங்க. அடுப்படியிலயிருக்கற பெண் வெளியில வர்றத விரும்பாத கூட்டம் தான் இத விமர்சனம் செய்யுது.


இன்னும் பேசுவார்கள்.……..

சந்திப்பு : ராஜ்ப்ரியன்
படங்கள்: எம்.ஆர். விவேகானந்தன்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [3]
Name : nkulandhaisamy Date :8/7/2012 9:21:08 PM
பெண்ணாதிக்கம் வளராமல் போனதற்கு காரணம்: வைப்பு கிடைத்த ஒரு சில பெண்கள் ஊழலின் உச்சத்திற்கு சென்று சரித்திரம் படைத்திருப்பதுதான்!
Name : sam Date :6/10/2010 12:00:10 PM
இது ஒரு நல்ல நேர்காணல்
Name : senthil Date :6/10/2010 11:50:52 AM
you r looking good and your answer fro the last question is 100% true.