நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :11, மார்ச் 2016(15:47 IST)
மாற்றம் செய்த நாள் :11, மார்ச் 2016(15:47 IST)

பெண்மை ஒளிர்க!லக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய பெருநகரங்களில் 'பெண்மை ஒளிர்க' (நாரி சேத்னா) இலக்கிய பொழிவுகளை நடத்தியது சாகித்ய அகாதமி. 

சென்னையில், மயிலையில், பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில் 'நாரி சேத்னா' நடைபெற்றது.

'பழையன கழிதல்' நாவலின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை அழுத்தமாக பதிவு செய்து படைப்பிலக்கிய உலகில் நழைந்த சிவகாமி ஐ.ஏ.எஸ்., ஓவியரும் கவிதை மொழிப்பெயர்ப்பாளருமான தாரா.கணேசன், கவிதைகள், குறும்படங்கள், சிறுகதைகள் என தமிழ் இலக்கிய படைப்பாக்கத்திற்கான பல விருதுகளைப் பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் முனைவர் வைகைச்செல்வி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். 

தொடக்கத்தில் வரவேற்று, நிறைவில் நன்றி சொன்னார் எழுத்தாளர் மாலன். 

மாலன்: ஆண் எழுத்து பெண் எழுத்து என்று நான் பேதம் பார்ப்பதில்லை. எது நல்ல எழுத்து, எது சிறந்த எழுத்து என்பதையே தேடுகிறேன். பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு தொடங்கி, இன்றைய உமாமகேஸ்வரி வரை தங்கள் அனுபவங்களை கவிதைகளாக்கி உள்ளனர். இந்த அனுபவங்களின் விளைவுதான் இன்றைய உமா மகேஸ்வரியின் 'ஆண்டாண்டு காலமாக தோசை' கவிதை. பெண் படைப்பாளர்களின் அறுபதி ஆளுமைகளை பகிர்ந்துகொள்வதே இந்த வருட உலக மகளிர் தின நமது சிறப்பு நிகழ்வு. 

தாராகணேசன்: இன்னும் கொய்யப்படாத ஆப்பிளைப் போன்ற சிவந்த மாலை பொழுதில் இந்தக் கூட்டத்தில் பேச வந்திருக்கிறேன். (அமாவாசைக்கு அடுத்த நாள் முன்னிறவில், மூடி குளிரூட்டப்பட்ட அளைக்குள் மின் விளக்கு வெளிச்சத்தில் பேசுகிறார்).

ஒரு வெளிநாட்டு கவிஞன் சொன்னான். 'நீ இருக்கின்ற சூழல் உனக்கு பிடிக்காவிட்டால் அங்கிருந்து 
அகன்றுவிடு' என்று. 

இன்னொரு வெளிநாட்டு கவிஞன் சொன்னான். 'நாம் குருடர்களாக இருக்கிறோம். குடீருடர்களாக இருக்க விருப்பப்படுவதால் குருடர்களாகவே இருக்கிறோம்' என்று. 

(இப்படி வெளிநாட்டுக் கவிஞர்கள் பலரின் கவிதைகளை மொழிப்பெயர்த்து எழுதி வந்து பொன்மொழிகளாக வாசித்த தாராகணேசன், தமிழ் பெண்களின் ஒளிரும் கவிதைகளில் எதையும் சொல்லாதது வேதனைதான்)

வைகைச் செல்வி: சிறந்த மனிஷியால்தான் சிறந்த படைப்புகளைத் தரமுடியும். பெண் விடுதலையை பெண்களின் பிரச்சனைகளை பேசுபவரே, சிந்திப்பவரே சிறந்த பெண் படைப்பாளியாக முடியும். 

கிருபா சத்திய நாராயணன், மூவலூர் ராமாமிர்தம், வை.மு.கோதை நாயகி, சித்திக் சுலைமான், அழகிய நாயகியம்மாள், ராஜம் கிருஷ்ணன், ஹெப்சிபா யேசுதாஸ் ஆகிய பெண் எழுத்தாளர்கள் அத்தகைய சிறந்த படைப்பாளர்களாக திகழ்கிறார்கள். 

அரசியலில் ஐம்பது விழுக்காடு போல சிறந்த படைப்பாளிகளாக ஆண்களுக்கு இணையாக ஐம்பது விழுக்காடு பெண் படைப்பாளிகள் இருக்கிறோம் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும்.சிவகாமி: சாரு நிவேதிதாவின் ஒரு கூட்டத்திற்கு வந்த எடிட்டர் லெனின், நாம் மிருகங்களை விட உயர்ந்தவர்களா? மிருகங்கள் அவைகளுக்கான பருவத்தில் மட்டுமே உடலுறவு கொள்கின்றன. இன விருத்திக்காகவே உடலுறவு கொள்கின்றன. அந்த வகையில் பார்த்தால் நம்மை விட மிருகங்களே உயர்தவை என்று  சொன்னார். இன்னொரு சந்தேகத்தையும் கிளப்பினார். எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் கூட்டத்திற்கு வந்திருக்கும் அவருடைய வாசகர்கள் அனைவரும் ஆண்களாகவே இருக்கிறார்களே. இதன் மர்மம் என்ன. என்பதுதான் லெனின் எழுப்பிய சந்தேகம். 

நான் என்ன சொல்கிறேன் என்றால், படைப்பாளிகளாகிய நாம் நம் குழந்தைகளுக்கு எதை சொல்லப்போகிறோமோ, அதைத்தான் சமூகத்திற்காகவும் எழுத வேண்டும். என் குழந்தைக்கும் ஒன்றும், சமுதாயத்திற்கு வேறொன்றுமாக இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 

அறுபதுவயதில் நமது வாழ்க்கையை நாம் திரும்பி பார்க்கும்போது நாம் திருப்தியாக வாழ்ந்திருக்கிறோம் என்ற நிறைவு கணவன் மனைவி இருவருக்கும் வேண்டும். 

பாலுறவுன் உச்சம் தெரியாமலே இந்திய பெண்கள் வாழ்ந்து சாகிறார்கள் என்று ஒரு ஜெர்மனிய பெண்மணி சொன்னார். இந்த அவலம் அகற்றப்பட வேண்டும். எல்லா விசயங்களிலும் ஆணும், பெண்ணும் நிறைவு காண வேண்டும். 

விருந்தாளி ஒருவர் வரும்போது வீட்டில் குப்பை கிடந்தால் (வீட்டில் பெண்கள் இல்லையா என்று கேட்கிறார்) பெண்தான் குப்பையை அகற்ற வேண்டுமா. ஆண் அகற்றக் கூடாதா. இத்தகைய சிந்தனையை பெண் எழுத்தாளர்களாகிய நாம் சமூகத்திடம் உருவாக்க வேண்டும். 

தொகுப்பு: சிரவிழிநாதன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :