நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :28, மார்ச் 2016(7:47 IST)
மாற்றம் செய்த நாள் :28, மார்ச் 2016(7:47 IST)கோலாலம்பூர்
சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு! “எந்த இனத்திற்கும் வாய்க்காத மிகப்பெரிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான நாம், அதை மற்றவர்களுடன் பகிராததால் இன்று வீழ்ந்திருக்கிறோம் ” என்று மலேசிய இளைஞர் விளையாட் டுத்துறை துணையமைச்சர், மாண்புமிகு டத்தோ எம். சரவணன் அவர்கள் எழுத்தாளர் மாநாட்டை தொடங்கி வைத்து பேசும் போது குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு 26_02_2016 முதல் 29_02_2016 வரையிலான நான்கு நாட்களில் கோலாலம்பூரிலுள்ள அனைத்துலக இளைஞர் மய்யத்தில் (International Youth Centre, Kuala Lampur) மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வை மலேசியா பிரதமர் துறையின் கீழுள்ள  (SITF) இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமலாக்கப்பிரிவுடன் சேர்ந்து கோலாலம்பூர் மாநகர் மன்றம் மற்றும் சென்னையிலுள்ள கலைஞன் பதிப்பகம் ஆகியவை மேற்கண்ட ஏற்பாடுகளை மிகச்சிறப்பாகச் செய்திருந்தன. இந்த மாநாடு 2010 ன் இறுதியில் தமிழ்நாட்டின் சென்னை மேயராகயிருந்த மா.சு. சுப்பிரமணியம் அவர்களுக்கும் மலேசிய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தமாகும். ஆனால், அதற்குப்பிறகு வந்த அ.தி.மு.க. அரசு இதில் கவனம் செலுத்தாததால் இப்பொழுது நடப்பதாக இருதரப்பிலும் தாமதத்திற்கு காரணமாக தெரிவிக் கப்பட்டது..

சிறப்பான வரலாற்றுக்குச் 
சொந்தக்காரர்கள் நாம்!
காலை 11 மணியளவில், இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டமாக ‘மலேசியாவில் தமிழ் _ மலாய் இலக்கிய வளர்ச்சி’ என்ற தலைப்பில் (SITF) இணைப் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணன் மணியம் அவர்கள் முதன்மை உரையாற்றினார். அதைத் தொடர்ந்து திரு. நடராஜன் அவர்கள் (SITF) வரவேற்புரை வழங்க, மலேசிய PENA அமைப்பின் தலைவர் டாக்டர் சாலே ரஹ்மாட் அவர்கள் மலாய் மொழியில் மாநாட்டின் அவசியம் பற்றி பேசினார். திரு நடராஜன் அதை தமிழில் மொழி பெயர்த்தார். அதைத்தொடர்ந்து, மலேசிய அரசின் இளைஞர், விளையாட்டுத்துறையின் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ எம். சரவணன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தமதுரையில் தமிழின் அருமை பெருமைகளையும், வேறு எந்த இனத்திற்கும் இல்லாத வரலாற்றுப் பெருமையாக தமிழர்கள் நிலங்களையே அய்ந்தாகப்பிரித்து வாழ்ந்த சிறப்பையும், இலக்கிய வளச்செரிவுக்கு உதாரணமாகத் திருக்குறளை எடுத்துக்காட்டியும் இப்படிபட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான நாம், அதை மற்றவர்களுக்கு பகிராததால் இன்று வீழ்ந்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுவிட்டு, அதைக் களைவதற்கான ஒரு முயற்சிதான் இந்த சென்னை _ மலாய் எழுத்தாளர்களின் சந்திப்பு என்று இந்த மாநாட்டிற்கான அவசியத்தைச் சுட்டிக்காட்டி, தமதுரையை நிறைவு செய்தார். அறுபது புத்தகங்கள் வெளியீடு!

அதைத்தொடர்ந்து மலேசிய தமிழ்தேசியப் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை கலைஞன் பதிப்பகம் இரண்டும் இணைந்து, கலைஞன் பதிப்பகத்தின் 60 ஆம் ஆண்டையொட்டி, நடத்தப்பெற்ற போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 60 புத்தகங்களை மலேசிய அரசின் இளைஞர், விளையாட்டுத்துறையின் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ எம். சரவணன் அவர்கள் மொத்தமாக வெளியிட இணைப்பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணன் மணியம் அவர்கள் பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து 60 புத்தகங்களையும் தனித்தனியாக சிங்கப்பூர் தமிழறிஞர் சுப. திண்ணப்பன் அவர்கள் வெளியிட, அதற்குரிய எழுத்தாளர்கள் பெற்றுக் கொள்ளும் மாநாட்டின் முக்கியமான நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழறிஞர் மன்னர் மன்னன், சிங்கப்பூரைச் சேர்ந்த புதுமைத்தேனி மா. அன்பழகன், திரு. வரதராஜன், ஏ.பி. ராமன் மற்றும்  திரு. சத்யப்பிரியன், திரு. எல்.ஆர். சப்தரிஷி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். நிறைவாக ஷிமிஜிதி அமைப்பைச் சேர்ந்த  மணிவாசகம் அவர்கள் நன்றியுரை கூறி தொடக்க நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

எழுத்தாளர்களுக்கு நினைவுப்பரிசு!
அதைத்தொடர்ந்து எழுத்தாளர் மாநாடு நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இணைப் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணன் மணியம் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மலாயா பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் தலைவர், முனைவர் மோகன்தாஸ் அவர்களும், சென்னை கலைஞன் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. நந்தன் மாசிலாமணி அவர்களும் முன்னிலை வகிக்க, ம.இ.கா தேசிய உதவித் தலைவர் மாண்புமிகு டத்தோ ஜி. மோகன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். தமிழ்நாட்டிலிருந்து வந்த எழுத்தாளர்களுள் ஒருவரான கமலாலயன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். முன்னதாக மாண்புமிகு டத்தோ. மோகன் அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கிச் சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் அங்குள்ள தமிழர்களின் நிலை, அதற்குக் காரணமானவர்களான கோ.சாரங்கபாணி போன்றவர்களை நினைவு கூர்தல், இன்னமும் அங்கு குடியுரிமை பெறாத தமிழர்களின் வாழ்க்கை போன்ற பல்வேறு விசயங்கள் குறித்துப் பேசப்பட்டன. முக்கியமாக மலேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் இந்தியர்களுக்கும் _ தமிழர்களுக்கும் கோயில் கட்டுவதற்குக்கூட அரசே பணம் தருவதையும், அதே சமயம் இந்தியாவில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழர்களுக்குத் தாழ்வுமனப்பாண்மை தேவையில்லை!

மதிய உணவுக்குப்பிறகும், அதைத்தொடர்ந்து அடுத்த நாளுமாக 60 எழுத்தாளர்கள் 6 அமர்வுகளில் தங்கள் தங்கள் அனுபவங்களையும், பொதுவாக மலேசியத் தமிழர்களின் தமிழ்ப்பற்றை பாராட்டியும், தமிழ்நாட்டில் தமிழ், மலேசியத் தமிழைப்போல இல்லை என்பதையும் சுட்டிக்காட்டிப் பேசினர். ஆறாவது அமர்வின் இறுதியில் பேசிய உடுமலை வடிவேல் அவர்கள், இந்த இரண்டு நாள் மாநாட்டின் பேசிய, எழுந்த சிந்தனைகளின் சாறாக, “அனைவரும் பேசியது போல தமிழ்நாட்டில் தமிழ் ஒன்றும் தாழ்ந்து போய்விடவில்லை என்றும், இவ்வளவு ஊடுறுவலுக்குப்பின்னும், தடைகளுக்குப்பின்னும் தனித்தமிழாகவும், செம்மொழியாகவும் வீறு நடைபோடுவதாகவும், தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் இன்று தமிழை அறிவியல் மொழியாக ஆக்கியுள்ளது என்பதையும், திராவிடர் இயக்கம் தொடர்ந்து பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்குவதற்கு பாடுபட்டு வருவதையும், அதற்கு ஏராளமான தடைகள் உள்ளதையும் சுட்டிக்காட்டி, அப்படியெல்லாம் நமக்குத் தாழ்வு மனப்பான்மை தேவையில்லை என்பதையும், மலேசியத் தமிழர்களின் சிறப்பைப் போற்றுவதுபோல, தாய்த்தமிழ்நாட்டில் நமது செயல்கள் இன்னமும் சிறப்பாக அமைய இரண்டு பக்கமும் உரியவர்களுடன் ஆலோசனை செய்வதுதான் பொருத்தமானது என்றும் பேசினார்.  

எழுத்தாளர் மணா அவர்கள் பேசும்போது, அங்கு வெளியிடப்பட்டிருந்த புத்தகத்திலிருந்து தான் எழுதிய சில சம்பவங்களை அரங்கிலுள்ளவர்களோடு பகிர்ந்து கொண்டார். குன்றக்குடி மடத்திற்கு சென்ற போது அங்கு தன்னை ஒரு கடவுள் மறுப்பாளர் என்பதைக் குறிப்பிட வேண்டிய தேவை இருப்பதைச் சொன்னார். அதன்பிறகு பேசவந்த எழுத்தாளர் மஞ்சுளா அவர்கள் அதையொரு விவாதப்பொருளாக்கி சிறிய சலசலப்பை ஏற்படுத்தினார். மற்றபடி எழுத்தாளர்கள் மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.வ.உ.சியின் பேரன் எழுத்தாளராக கலந்து கொண்டார்!

தமிழ்நாட்டிலிருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுயமரியாதையுடன் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் அவர்களின் பேரன் ப. முத்துக்குமாரசுவாமி, லா.சா.ராமாமிர்தத்தின் பேரன், பல்வேறு நாடுகளைச் சுற்றி வந்து தனது அனுபவங்களை பயண நூல்களாக எழுதிவரும் அருணகிரி, மணா, கர்ணன், சங்கரநாராயணன், பார்த்தசாரதி, ஆகியோர் தமிழ்நாட்டிலிருந்து சென்ற எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். முன்னதாக மலேயா மொழியில் எழுதி கிருஷ்ணசாமி மணியம் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு கவிதை நூலொன்று வெளியிடப்பட்டிருந்தது. இரண்டாம் நாள் இறுதியில் அதை எழுதிய மலேசியக் கவிஞர்கள், தங்கள் தங்கள் கவிதைகளை மலேயா மொழியிலேயே மேடையேற்றினர். நூலை மொழியாக்கம் செய்த கிருஷ்ணசாமி மணியம் அவர்களே மேடையிலும் தமிழில் மொழி பெயர்த்து கவிதை வாசித்துச் சிறப்பித்தார். அதைத்தொடர்ந்து, தமிழக எழுத்தாளர்களும் கவிதை வாசித்தனர். இறுதியாக மலேசிய நாட்டின் பண்பாட்டு நடனமான ‘கேட்ஜெட் நடனம்’ மலேசிய இருபால் கலைஞர்களால் வெகுசிறப்பாக நிகழ்த்திக் காட்டப்பட்டது. நடனத்தின் இறுதியில் மலேசியக் கலைஞர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களையும் தங்களோடு நடனத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ள, தமிழ்நாட்டு எழுத்தாளர்களும் அவர்களோடு இணைந்து நடனமாடினர். இருதரப்பிலும் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. பிறகு அனைவரும் இணைந்து ஒரு குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர்.

அரசு சார்பாக சுற்றுலா!
மூன்றாவது நாளும், நான்காவது நாளும் மலேசியாவின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலங்களான கெம்பங்செட்டி, மலேக்கா, செயின்ட் ஃபிரான்சிஸ் கோட்டை, நெகிரி, பாட் கேவ்ஸ், மலேசிய நாட்டின் புதிய நிர்வாக நகரமான புத்திர ஜெயா மற்றும் சைபர் ஜெயா பகுதிகளுக்கு அழைத்துச் சென்று சுற்றிக்காட்டப்பட்டது. அரசு சார்பாகவே ஆங்காங்கு உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. இரண்டு நாட்கள் சுற்றுலாவின் போதும்சரி, 29 ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு வந்து எழுத்தாளர்களை வழியனுப்புகிற வரையிலும் ஷிமிஜிதி யின் இணைப் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணன் மணியம், கலைஞன் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. நந்தன் மாசிலாமணி ஆகியோர் மிகுந்த கவனத்துடன் விரும்தோம்பல் செய்தும், உடனிருந்தும் வழியனுப்பி வைத்து இந்த பயணத்தை என்றென்றைக்கும் மறக்கவியலாத ஒன்றாக ஆக்கிவிட்டனர். தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் சார்பில் இந்த மாநாட்டை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத் ததைப் பாராட்டும் முகமாக, இணைப்பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணன் மணியம் அவர்களுக்கு, விமானநிலையத்தில் வைத்து நினைவுப்பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்வை எழுத்தாளரும், அருண் கன்ஸ்ட்ரக்சன் அமைப்பின் சேர்மனுமான எஸ்.ஆர். சுப்ரம ணியம் ஒருங்கிணைத்தார்.

மொத்தத்தில் இதில் கலந்து கொண்ட அனைவரும் இந்த எழுத்தாளர்கள் மாநாடு என்பது இருநாடுகளின் பண்பாட்டு உறவில் ஒரு புதிய மைல் கல்லாக விளங்குவதையும், இந்தப் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் ஒருமித்த கருத்தாக பரிமாறிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.’’

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]
Name : N Raju Date :3/30/2016 1:55:00 PM
தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு கொள்ளலாம்பூர்ல்ல் நடைபெற்றதை கண்டு மிக மகிழ்ச்சி . தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் தமிழ் கலச்சரத்துவுக்காகவும் பாடுபட்ட அததனை பெரியாவர்களுக்களுக்கு நன்றி நன்றி