நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :19, ஏப்ரல் 2016(13:39 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஏப்ரல் 2016(13:39 IST)

நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
லூர்து நாதனை தெரிந்து கொள்ளுங்கள்!

திருநெல்வேலி – பாளை தெற்கு பஜாரில் லூர்து நாதன் என்பவரின் சிலை இருக்கிறது. 21-11-1972 ல் பெருந்தலைவர் காமராஜர்தான் இந்தச் சிலையை திறந்து வைத்தார். 43 வருடங்கள் உருண்டோடி விட்டன.  இப்போது, மாலை வேளைகளில் அச்சிலை அருகே பானி பூரி, உளுந்த வடை, பருப்பு வடையை ஆசையோடு தின்று கொண்டிருக்கும் மாணவர்களும், பெரியோர்களும் ‘யாருக்கோ சிலை வைத்திருக்கிறார்கள்’ என்றளவில்தான் அதை பார்க்கிறார்கள். வரலாறு தெரிந்திருந்தால் மட்டுமே  ‘இது ஒரு மாமனிதனின் சிலை’ என்பதை அவர்களால் உணர முடியும். லூர்து நாதன் மாமனிதரா? அவர் அப்படி என்ன செய்தார்?

தூய சவேரியார் கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியராக இருந்தார் சீனிவாசன். இவர் பாளை. தெற்கு பஜாரில் வசித்தார். ஒரு நாள் தன் வீட்டு வாசலில் நின்று அவர் பேசிக்கொண்டிருந்த போது,  அந்த வழியே வந்த மேடை போலீஸ் ஸ்டேஷன் காவல் ஆய்வாளரின் மகன் யாரோ ஒரு பெண்ணை கேலி செய்வதை பார்த்து  விட்டார்.  “ஏன் இப்படி பண்ணுற?” என்று அவனை சத்தம் போட்டார். அவன்  தனது அப்பாவிடம் சென்று பேராசிரியர் திட்டியதைச் சொல்லி இருக்கிறான். உடனே, அந்த இன்ஸ்பெக்டர் பேராசிரியரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கினார். அருகில் இருந்த இன்னொரு பேராசிரியர்   “ஏன் இப்படி செய்கிறீர்கள்?”  என்று நியாயம் கேட்டவுடன்,  அவரையும் தாக்கினார் இன்ஸ்பெக்டர். பிறகு,  இருவரையும் ரிமாண்ட் செய்து விட்டார். மறுநாள் காலையில் விசயம் வெளியே தெரிந்த, சேவியர் கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் செய்தார்கள். மேலும் ஊர்வலமாக அணிவகுத்து, மாவட்ட ஆட்சியரிடம் முறையிட சென்றார்கள். சுலோச்சனா முதலியார் பாலம் வரும் போது காவல் துறை  மாணவர்களை தடுத்து நிறுத்தியது. மாணவர்கள் மீது கடுமையாக லத்தி சார்ஜ் செய்தனர். (ஜுலை 21 ல் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் விவகாரத்தில் மக்கள் கடுமையாக  தாக்கப்பட்ட சம்பவம் ஞாபகம் வருகிறது அல்லவா?) அந்த மாணவர் கூட்டத்தில் ஓடிய லூர்து நாதன், தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக,  அந்தப் பாலத்தின் வலது புறத்தில் இருந்து ஆற்றில் குதித்தான்.  அது ஆழமான பகுதி என்பதால், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்து போனான். இறந்த லூர்து நாதனின் உடலைஊர்வலமாக கல்லூரிக்கு எடுத்துச் செல்ல முயன்றார்கள் மாணவர்கள்.  காவல் துறையோ, கல்லூரி வாசலிலேயே  லூர்து நாதனின் உடலை கைப்பற்றியது. இந்த அநீதிக்கு எதிராக,  தமிழகமெங்கும் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அன்றைய தி.மு.க.அரசு வழக்கம் போல ஒரு கமிஷனை போட்டது.போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பிறகு அவர் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டார். 
 
எங்கோ சேலத்தில் இருந்து நெல்லைக்கு படிப்பதற்காக வந்து, நம்மூர் பேராசிரியர் சீனிவாசனுக்காக உயிர் தியாகம் செய்தவர் லூர்து நாதன் என்பதை இன்றைய தலைமுறையினர் எத்தனை பேர் அறிந்திருப்பார்கள். நெல்லையில் மட்டுமல்ல.. ஊருக்கு ஊர் லூர்துநாதனைப் போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். ஏதோ ஒரு அறப்போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். 

வாட்ஸ்-அப், ஃபேஸ் புக் போன்ற தேடலில், டச் போனை தேய்ப்பதிலேயே நேரம் ஓடிவிடுகிறது. அப்புறம் எப்படி வரலாற்றின் பக்கங்களை புரட்டப் போகிறோம்? வரலாறு முக்கியம் அல்லவா? 

-சி.என்.இராமகிருஷ்ணன் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]
Name : dharanai Date :5/12/2016 6:25:04 AM
சமூகத்தில் நடக்கும் அநீதிகளை கண்டிக்கும் பக்குவம் அன்றைய லூர்து நாதன் போன்ற மாணவர்களுக்கு இருந்தது. இன்றைய மாணவர்களுக்கு சமூக அக்கரையையும் , பொறுப்புணர்வையும் ஊட்டி வளர்க்க பெற்றோர்களும், பேராசிரியர்களும் மறந்து விட்டனர்.
Name : S. Rajendran Date :4/23/2016 1:21:51 AM
I stull remember the day when Mr. Lurdunathan jumped into the Tamiraparani river and died. The post-mortem was done by Dr. Natarajan who was the Anatomy Professor at that time. Due to his loyalty to DMK and false report, he was promoted as the Dean of Tirunelveli Medical College. St. Xavier's college administration was not supportive of the students' strike and wanted to crush the effort of forming the student union. I feel sorry for Prof. Srinivasan who was not only beaten but pushed down the stone staircase of Medai Police Station. Atrocities thy name is DMK.