நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :13, ஜூன் 2016(14:26 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஜூன் 2016(14:26 IST)

அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!தீண்டாமையே நம் நாட்டில் முடிவுக்கு வராதநிலையில், நவீன தீண்டாமை உருவெடுத்துவருவது வருத்தத்திற்குரியது. தன் கணவரின் பிறந்தநாளையொட்டி ஒரு பெண் தெருவோரக் குழந்தைகள் சிலருக்கு விருந்தளிக்க, டெல்லியின் பிரபல ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றபோது அக்குழந்தைகளுக்கு அனுமதி மறுத்திருக்கிறது ஹோட்டல் நிர்வாகம்.

சோனாலி ஷெட்டி டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் வசித்துவருகிறார். இவர் பிரபல எழுத்தாளரும்கூட. இவரது கணவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றிவருகிறார். தனது கணவரின் பிறந்தநாளை சற்று வித்தியாசமாகக் கொண்டாடவிரும்பிய சோனாலி, தன் வீட்டருகில் வசிக்கும் தெருவோரக் குழந்தைகளை பிரபல ஹோட்டலுக்கு அழைத்துச்சென்று விருந்தளிக்க விரும்பினார்.

தான் நினைத்தபடி அப்பகுதியிலுள்ள எட்டுக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கன்னாட் பிளேஸ் பகுதியின் பிரபல ஹோட்டல்களில் ஒன்றான ஷிவ்சாகர் ரெஸ்டாரண்ட்டுக்குச் சென்றார். டேபிளில் அமர்ந்து அவர்களுக்குப் பிடித்த உணவை ஆர்டர் செய்தபோது, ஹோட்டல் நிர்வாகிகள் “தெருவோரக் குழந்தைகள் இங்கே சாப்பிடமுடியாது, அவர்களை அழைத்துக்கொண்டு வெளியேறுங்கள்” என்றுகூறி சோனாலியை விரட்டினர்.இதனால் கோபமடைந்த சோனாலி, ஹோட்டல் நிர்வாகம் காட்டிய தீண்டாமைக்கு எதிராக ஹோட்டல் எதிரிலேயே அந்த பிள்ளைகளுடன் அமர்ந்து நள்ளிரவு 12 மணி வரை தர்ணாவில் ஈடுபட்டார். காவல் துறை வந்து என்னவென விசாரித்தது. அவர்களுக்கு நிர்வாகத்தின்மீது தவறிருப்பதாகத் தெரியவில்லை. குழந்தைகளை அழைத்துக்கொண்டு வேறு ஹோட்டலுக்குச் செல்லும்படி சோனாலிக்கு அறிவுறுத்தியது.

எனினும் ஊடகங்களின் கவனத்தால் இந்த விஷயம் டெல்லியின் துணை முதல்வர் மணி சிசோடியாவின் கவனத்துக்குச் சென்றது. சோனாலியின் போராட்டத்தில் நியாயம் இருப்பதாக அவருக்குப் பட்டது. துணை மாஜிஸ்திரேட் ஒருவரை இவ்விஷயத்தை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஹோட்டல் நிர்வாகம் அவர்கள் தெருவோரக் குழந்தைகள் என்பதால் துரத்தவில்லை என்றும், ஹோட்டலுக்குள் அவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அதனால்தான் விரட்டியதாகவும் கூறியுள்ளார்.

சோனாலி இந்த விவகாரம் இத்தோடு முடிந்தது என கருதவில்லை. “மீண்டும் அதே குழந்தைகளுடன் அதே ஹோட்டலுக்குச் செல்வேன். அவர்களுக்கு உணவு பரிமாறுவதோடு, குழந்தைகளிடம் அவர்கள் மன்னிப்பும் கேட்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்களை விடப்போவதில்லை” என்றிருக்கிறார்.

டெல்லியில்தான் என்றில்லை, சென்னையிலும்கூட வேட்டி கட்டி வந்ததற்காக சென்னை கிரிக்கெட் அசோசியேஷன் கிளப் நீதிபதிக்கே உள்ளே நுழைய அனுமதி மறுத்தது. நட்சத்திர ஹோட்டல்களும் குறிப்பிட்ட ட்ரெஸ் கோடை பின்பற்றாத யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. இத்தகைய நவீன தீண்டாமைகள் இந்தியாவின் ஜனநாயகத்துக்கும் சமத்துவத்துக்கும் தீங்கிழைப்பவை என்பதில் துளியும் சந்தேகமில்லை.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :