நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :17, ஜூன் 2016(10:7 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூன் 2016(10:7 IST)
கே.முரளி, புதுப் பெருங்களத்தூர், சென்னை-63

570 கோடி ரூபாய் விவகாரத் தில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பங்கு இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சுமத்து கிறாரே?

பங்கு என்பதைப் பொறுப்பு என்றும் சொல்லலாம். உரிய ஆவணங்கள் இல்லாமல் கண்டெய்னர்களில் இவ்வளவு பணம் ஏற்றப்பட்டது எப்படி? அது வங்கியின் பணம்தானா? மொத்த தொகை 570 கோடியா அதற்கும் மேலேயா? இந்த 3 கண்டெய்னர்களுக்கு முன் கடந்து சென்ற கண்டெய்னர்கள் எத்தனை? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு உண்மையான -நேர்மையான பதில் அளிக்க வேண்டிய பங்கு அருண்ஜெட்லிக்கு இருக்கிறது.

வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி

புதிய ஆட்சியை 6 மாதங்களுக்கு விமர்சனம் செய்யமாட்டேன் என்று சொன்னவர் முன்னாள் முதல்வர் காமராஜர். ஆனால் ராஜாஜி, காமராஜர் போன்ற பெரிய தலைவர்களுடன் அரசியல் செய்த கலைஞர் கருணாநிதியிடம் இந்த பண்பு இல்லையே?

புதிய அரசாக இருந் தால் அதன் தேனிலவு காலம் முடியும்வரை விமர்சிக் காமல் இருப்பது அரசியல் நாகரிகம். ஆனால், இது புதிய அரசு அல்ல, தொட ரும் அரசு. எனவே முடக்கப் பட்ட முந்தைய திட்டங்கள், நிறைவேற்றப்படாத பழைய வாக்குறுதிகள் குறித்து கலைஞர் மட்டுமல்ல, வாக்களித்த மக்களும்கூட விமர்சிக்கத்தான் செய்வார் கள்.

அ.குணசேகரன், புவனகிரி

மத்திய அமைச்சரவை யில் அ.தி.மு.க இணையுமா?

தற்போதைய நிலையில் மக்களவை - மாநிலங்களவை இரண்டிலும் சேர்த்து அ.தி.மு.க.வுக்கு 50 எம்.பிக்கள் இருக்கிறார்கள். ஒரு மாநிலக் கட்சி இந்தளவு எண்ணிக்கையுடன் நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பது அதற்குப் பெரிய வலிமைதான். எனினும், அமைச்சரவையில் இடம்பெற எண்ணிக்கையைவிட, மத்திய அரசுடனான இணக்கமான போக்கைப் பொறுத்தது. மோடி தலைமையிலான மத்திய     அரசு, அ.தி.மு.க. தலைமைக்கு எந்தவிதத்தில் உதவிகரமாக இருக்கிறது, பதிலுக்கு அ.தி.மு.க. மத்திய அரசுக்கு எப்படி கை கொடுக்கப்போகிறது என்பதெல்லாம் இதில் அடக்கம். 1989-ல் வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி ஆட்சி அமைந்தபோது, லோக்சபாவில் தி.மு.க.வுக்கு ஒரு எம்.பி.கூட இல்லை. ஆனால் அதன் ராஜ்யசபா எம்.பி.யான முரசொலி மாறன் கேபினட் அமைச்சராக்கப்பட்டார். 1979-ல் சரண்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க சார்பில் சத்தியவாணிமுத்து, பாலாபழனூர் இருவரும் அமைச்சரானார்கள். தமிழகத்திலிருந்து ஒரு மாநிலக் கட்சி சார்பில் மத்திய அமைச்சரவையில் முதலில் இடம்பிடித்தவர்கள் இவர்கள்தான். இருவரும் பதவியேற்ற இரண்டு நாட்களிலேயே சரண்சிங் அரசு கவிழ்ந்தது.

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்

சட்டமன்றத் தேர்தலில் பாரிவேந்தரின் ஐ.ஜே.கே. கட்சி அ.தி.மு.கவுக்கு மறைமுக ஆதரவு தந்தது ஏன்?

தனித்தனி அணிகளாக நின்ற பலவற்றின்  ஒரே நோக்கம், தி.மு.க. ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பதுதான். ஐ.ஜே.கே. ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே அது தி.மு.க.வுக்கு எதிராகவும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்தமுறை அது பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றது. தலைமை தாங்கிய பா.ஜ.க.வே மறைமுகமாக அ.தி.மு.க.வுக்கு பல வழிகளிலும் உதவியபோது, ஐ.ஜே.கே. உதவியதில் ஆச்சரியமில்லை. அரியலூர், குன்னம், உளுந்தூர்பேட்டை உள்பட பல தொகுதிகளில் தனது டெபாசிட்டைப் பறிகொடுத்து அ.தி.மு.க.வை ஜெயிக்க வைத்த பெருமை ஐ.ஜே.கே.வுக்கு உண்டு.

த.சிவாஜிமூக்கையா, தர்காஸ்

சட்டசபையில் தி.மு.க எதிரிக்கட்சியாக இருக்காது என்கிறாரே மு.க.ஸ்டாலின்?

அதற்காக தி.மு.கவுக்கு ஆளுங்கட்சி  என்ற அந்தஸ்தை ஜெ. வழங்கப்போவதில்லை. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் செயல்படுவதே தி.மு.க தனக்கு வாக் களித்தவர்களுக்கு செய்யும் கடமையும் கைம்மாறுமாகும்.

வி.கார்மேகம், தேவகோட்டை

234 எம்.எல்.ஏ.க்களை மக்கள் தேர்ந்தெடுத்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் 235வது உறுப்பினராக ஆங்கிலோ இந்தியரான டாக்டர் நான்சி ஆன் சிந்தியா ஃபிரான்சிஸ் என்பவரை நியமிக்க என்ன காரணம்?

இதற்கான அதிகாரத்தை ஆளுநருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 333-ஆவது பிரிவு வழங்கியுள்ளது. ஆங்கிலோஇந்தியர் சமூகத்தைச் சேர்ந்த வர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் சபையில் இல்லை என ஆளுநர் கருதும்போது, நியமன உறுப்பினராக ஒருவரை பதவியேற்கச் செய்யலாம். எனினும் நடைமுறையில் ஆளுங்கட்சிதான் அந்த உறுப்பினரின் பெயரை ஆளுநருக்குப் பரிந்துரைக்கிறது. அதன்படி, அ.தி.மு.க தலைமையின் சிபாரிசினால் நியமிப்பட்டவர்தான் நான்சி ஆன் சிந்தியா. பேரவையில் கௌரவ உறுப்பினராக இவர் இடம்பெற முடியுமே தவிர, வாக்களிப்பது உள்ளிட்ட அதிகாரப்பூர்வமான உரிமைகள் இவருக்கு கிடையாது. இப்படி ஒரு நியமன உறுப்பினர் இருப்பதே வாக்காளர்கள் பலருக்கும் தெரியாது.

எம்.முகம்மது ரபீக் ரஷாதி, விழுப்புரம்

117 மீட்டர் உயரத்தில் பறந்து மைதானத்துக்கு வெளியே விழுந்த ஐ.பி.எல். இறுதிப் போட்டி சிக்ஸர் குறித்து?

ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் பென்கட்டிங்கின் அந்த அடிதான்  இறுதிப் போட்டியின் உண்மையான வாணவேடிக்கை.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :