நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!

மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :19, ஜூன் 2016(8:6 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2016(8:6 IST)

கருப்பினப் போராளி அலி!
-----------------------------------
-ஆரூர் தமிழ்நாடன்

முகமது அலி, உலக குத்துசண்டை உலகில் சுற்றிச் சுழன்ற கறுப்புச் சூறாவளி. 

அமெரிக்காவில் நிலவும் நிறவெறிக் கொடுமைகளுக்கு எதிராகத் தொடர்ந்து ஹெவிவெயிட்  ’பஞ்ச்’சுகளை விட்டுகொண்டிருந்த மாவீரர் அவர். பார்க்கிசன் நோயோடு 30 ஆண்டுகளுக்கும் மேலாய், மல்யுத்தம் நடத்திகொண்டிருந்த அந்த மாவீரர், தனது 74-வது வயதில், கடந்த 3-ந்தேதி  தன் ரசிகர்களிடமிருந்து நிரந்தரமாய்  விடைபெற்றுக்கொண்டார். உலகைப் போட்டிகளில் அழுத்தமான குத்துக்களால் எதிராளிகளை மிரட்டிய அவரது கைகள், அசைவற்ற மெளனத்தில் அமிழ்ந்துவிட்டன.

அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் 1942-ல்  பிறந்த அலியின் இயற்பெயர், காசியஸ் க்ளே. அவர் வாலிபப் பருவத்திலேயே  இஸ்லாத்தைத் தழுவி, முகமது  அலி என, பெயர் புனைந்துகொண்டார். அவர் குத்துசண்டை வீரராய் மாறியதே எதிர்பாரா ஒன்று.  12 வயது சிறுவனாக இருந்தபோது, அலியின்  சைக்கிளை ஒருவன் திருட முயன்றான். இதைப்பார்த்து ஆவேசமான அலி,  சரமாரியாக அவனைக் கையால் குத்தி வீழ்த்தினார். இதை தூரத்திலிருது கவனித்த  ஜோ மார்ட்டின் என்ற போலீஸ்காரர், அலியைக் கட்டித் தழுவி, ’டேய். உனக்குள் ஒரு குத்துச்சண்டை மாவீரன் ஒளிந்துகொண்டிருக்கிறான். அவனை வெளியே கொண்டு வா’ என்றபடி,முகமதுஅலியை முறையாகக் குத்துசண்டை பயிற்சிபெறச் செய்தார்.  பயிற்சிக் காலத்திலேயே அலி, தன் அதிரடித் தாக்குதலால் அசத்தத் தொடங்கினார்.   

அமெச்சூர் வீரராக உருவெடுத்த  அலி, 60-ல் ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ‘லைட் ஹெவி வெயிட்’ பிரிவில்  தங்கப் பதக்கம் வென்றார்.  இதன்பின் உலகம் அவரை ஆச்சரியமாய் திரும்பிப் பார்க்கத் தொடங்கியது. அடுத்தடுத்து 61 முறை ஹெவி வெய்ட் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்று,  56-முறை வெற்றிமகுடம்  தரித்தார். 37 முறை நாக் அவுட் பாணியில் வென்றதால் அவரை ரசிகர்கள் கூட்டம் ’ நாக் அவுட் நாயகன்’ என்று ஆனந்தமாய் அழைத்தது. 

மூன்று முறை உலகளாவிய போட்டிகளில், தங்கப் பதக்கங்களை வென்று, குத்துச் சண்டை வரலாற்றில், தனது சாதனைகளைப் பக்கம் பக்கமாய் எழுதிய அலி, 1981-ல் ஓய்வை நோக்கி நகர்ந்தார். எனினும் சமூகக்களத்தில் இருந்து விலகாமல்,  நிறவெறிக்கு எதிரான  குரலையே, அழுத்தமான  குத்துக்களாகக் கொடுத்துக்கொண்டே இருந்தார். 

அவரது சுயமரியாதைக்கு சான்றாக ஒரு சம்பவம். ரோம் ஒலிம்பிக்கில் அவர் தங்கப் பதக்கம்  வென்ற சமயத்தில், அமெரிக்க ஓட்டல் ஒன்றில் காபி குடிக்கப் போனார் முகமது அலி. அப்போது ஓட்டல் பணிப்பெண், ‘கருப்பினத்தவருக்கு எங்கள் ஓட்டலில் எதுவும் தரமாட்டோம்’ என்றார் ஆதிக்கத் திமிரோடு. அவ்வளவுதான், ”மனிதாபிமானத்தை மதிக்கத் தெரியாத இந்த நாட்டில், இந்தப் பதக்கத்துக்கு மட்டும் என்ன மதிப்பு இருக்கப்போகிறது?” என்றபடி கோபமாக எழுந்துசென்ற முகமது அலி, அருகில் சலனமற்று  ஓடிக்கொண்டிருந்த  ஓகியோ நதியில், தனது ஒலிம்பிக் பதக்கத்தை தூக்கி வீசி, நதியையே அதிரவைத்தார்.  அவர் வீசியது பதக்கத்தை மட்டுமல்ல; அமெரிக்காவின் நிறவெறியை.

குத்துசண்டை நாயகரான முகமது அலிக்கும்  தமிழகத்திற்கும் ஆழமான அன்புப் பிணைப்பு உண்டு.   80-ல் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கமும்  அப்பீஜே என்ற அமைப்பும், இணைந்து  நடத்திய  குத்துச் சண்டை போட்டி,  நமது சென்னை  மாநகர நேரு ஸ்டேடியத்தில்  நடந்தது.   இதில்  முகமது அலி, சக வீரரான  ஜிம்மி எல்லீசை எதிர்கொண்டு வெற்றிவாகை சூடினார். 

இதற்காக சென்னை  வந்த அலிக்கு,  அப்போதைய முதல்வரும் குத்துச்சண்டை ரசிகருமான  ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர், அன்போடு  விருந்துகொடுத்தார். ராமாவரம் தோட்டத்தில் ஜானகிஅம்மாள் மேற்பார்வையில், கைப்பக்குவம் மிக்க  மணி என்பவர், அசைவ உணவை வகை வகையாய்த் தயாரிக்க, அதை ருசித்துச் சாப்பிட்ட முகமது அலி, ’சாப்பாட்டில் உங்கள் அன்பின் ருசி, தூக்கலாகவே இருக்கிறது’ என்று எம்.ஜி.ஆரைப் பாராட்டினார்.

இதேபோல் கலைஞர் முதல்வராக இருந்த  90-லும் முகமது அலி, தன் துணைவியாரோடு  சென்னைக்கு வந்தார்.  கலைஞரை கோபாலபுரம் இல்லத்தில்  சந்தித்து அளவளாவினார். பின்னர் அங்கிருந்து அண்ணா அறிவாலயம் சென்று சுற்றிப் பார்த்த  முகமது அலிக்கு,  தமிழக திராவிட இயக்கப் போராட்டம் குறித்து சொல்லப்பட, அதை வியந்து கேட்டார் முகமது அலி. குத்துச் சண்டை ரிங்கைத் தாண்டி, முகமது அலியை தமிழகம், ஒரு கருப்பினப்  போரளியாகவே  பார்க்கிறது. 

களத்தில் வீழ்ந்து பழக்கப்படாத முகமது அலி, தனது  கல்லறையில் எழுதிவைக்கச் சொன்ன வாசகம் என்ன தெரியுமா?

’ஒன்... டூ... த்ரீ... எண்ணுங்கள். இந்தமுறை இவன்  எழுந்திருக்கப் போவதில்லை’

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :