நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :7, ஜூலை 2016(15:42 IST)
மாற்றம் செய்த நாள் :7, ஜூலை 2016(15:42 IST)


பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கீ வீரமணி


திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் திருச்சி தமிழ்ச்சங்கத்தில் புத்தகங்களின் அறிமுக விழா கருத்தரங்கம் நேற்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாவட்ட ப.க செயலாளர் மலர்மன்னன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு மின்வாரிய முன்னால்  கோட்டப் பொறியாளர்  மா.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட தி.க.தலைவர் மு.சேகர்,  மண்டல தலைவர் ஞா-.ஆரோக்கியராஜ்,மண்டல செயலாளர் மு.நற்குணம், மாவட்ட செயலாளர் ச.கணேசன், பெரியார் வீரவிளையாட்டு கழகத் தலைவர் ப.சுப்ரமணியன், பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை, திருச்சி மாநகரத் தலைவர் சி.மருதை, செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவர்களும் அறிவியல் மனப்பான்மையும், கல்விமுறையும், தகுதியும் திறமையும் புத்தகங்களை தூய வளனார் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் இ.சூசை வெளியிட பெரியார் மருந்தியல் முதல்வர் இரா.செந்தாமரை பெற்றுக் கொண்டார்.

பெரியார் மறைந்தார், பெரியார் வாழ்க புத்தகத்தை தனிநாயகம் தமிழியல் கல்லூரி இயக்குநர் தவத்திரு அமுதன் அடிகள் வெளியிட திருச்சி விடுதலைச் சிறுத்தைகள்  கட்சி முன்னால் மாவட்ட செயலாளர் அ.க. தமிழாதன் பெற்றுக் கொண்டார். பெரியாரின் இறுதிப் பேரூரை, புத்தகங்களின் தாக்கம் புத்தகத்தை பொறியாளர் மா.முருகேசன் வெளியிட மாவட்ட தி.க தலைவர் மு.சேகர் பெற்றுக் கொண்டார்.

பெரியார் ஓர் அறிவுக்கருவூலம், பாரதிதாசன் ஆத்திச்சூடி எனும் அறிவுச்சுவடி, கருப்புச்சட்டை ஆகிய புத்தகங்களை அமுதன் அடிகள் வெளியிட திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் பெற்றுக் கொண்டார்.

அமுதன் அடிகள் பேசும் போது, பெரியார் வகுப்புரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டுமென போராடியவர் அவரது போராட்டங்களின் விளைவாகத்தான் நாம் தற்போது இடஒதுக்கீடு பலனை அனுபவித்து வருகிறோம். மதங்களுக்குள் உள்ள மூடநம்பிக்கைகளை ஒழிக்க விரும்பியதால், அவர் மதஒழிப்பு பிரச்சாரத்தை கையில் எடுத்தார். ஆனாலும் அவர் மற்றவர்களின் மதநம்பிக்கையை மதித்தவர். மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை பெற, பெண்களுக்கு சம உரிமை கிடைத்திட, தமிழர்கள் தமிழர்களாக வாழ பெரியாரின் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நிறைவுரையாற்றி தமிழர் தலைவர் கி.வீரமணி பேசுகையில், எழுத்தாளர் பெருமாள் முருகேசன் மாதொருபாகன் நூலை தடை செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பாராட்டுகிறேன். நூலின் கருத்துகள் பிடிக்கவில்லை என்றால் நேருக்கு நேர் விவாதிக்கலாமே, தடை செய்வது ஏற்புடையதல்ல. மக்களுக்கு விரோதமாக செயல்படும் மதவெறி சக்தியான ஆர்.எஸ்.எஸ்.யை கூட நாங்கள் தடை செய்ய வேண்டுமென்று நாங்கள் சொன்னதில்லை. இவர்களை பற்றி மக்களிடையே எடுத்துச் சொல்லி, மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற நிலையில்தான் நாம் செயல்படுகிறோம்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரை மாற்றினாலும், மத்திய அரசின் ஆர்.எஸ்.எஸ். கொள்கை திணிப்பை மாற்ற மாட்டார்கள். பலமொழி கலாச்சாரம் உள்ள நாட்டில் நடத்தப்படும் பண்பாட்டு படையெடுப்பை விழிப்புணர்வோடு செயல்பட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

நமது நாட்டில் நிலவும் இன வேறுபாட்டை களைய தந்தை பெரியார் போராடினார். ஆனால் அரித்துவாரில் திருவள்ளுவர் சிலையை எங்கே வைப்பது என குழப்பம் நிலவி வருகிறது. வடமாநில சாமியார்கள் இனவேறுபாட்டை காரணம் காட்டி மறுத்து வருகிறார் என்று பேசினார். இறுதியாக செயலாளர் பொன்னி நன்றி கூறினார்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :