நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...

எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :16, ஆகஸ்ட் 2016(17:39 IST)
மாற்றம் செய்த நாள் :16, ஆகஸ்ட் 2016(17:39 IST)

உறங்காத ராகம்...
-ஆரூர் புதியவன்காஞ்சி என்றால்
நிலையாமை 
காஞ்சியில் பிறந்த நீ
அதை 
உணர்த்திப் பறந்து விட்டாய்

காற்று வெளியெங்கும்
காந்த விசைகொண்ட
உன்
சொல்வெட்டுக் 
கல்வெட்டுகள்...

பாட்டை வடித்தாய்
அதில் உனக்கென
தனியொரு
பாட்டையும் அமைத்தாய்

நட்பில் பதித்தாய்
ஞாபக முத்திரை...
உன்திரைவாழ்வு
நமக்கொரு
திரையானது...

முதலில்
சத்திரமாய் இருந்தாய்
இலக்கிய உள்ளங்கள்
இளைப்பாற வருவோம்
பிறகு
நட்சத்திரம் ஆனாய்
தூரமாகிப் போனாய்

சீக்கிரமாகவே
பல
சிகரங்கள் தொட்டாய்
தொடமுடியா தொலைவுக்குப்
பறந்து சென்றுவிட்டாய்...

எழுத்தின்
எல்லா வடிவங்களையும்
வசம் செய்தாய்...
வாசக இதயங்களில்
வாசம் செய்தாய்...

உறவுகள்
பாலைவனமாகி வரும்
பயங்கர காலத்தில்
உன் 
அணிலாடும் முன்றில்
பாச நதிகளைப் பாயந்த்தோட வைத்தது

மாணவர் பருவம் முதல்
வெற்றிக் கோப்பைகள்
உன்
விலாசம் தேடி வந்தன...
உன்னையே
பருக விரும்பிய அந்த
பயங்கரக் கோப்பையுள்
நீ விழுந்திருக்க வேண்டுமா?

முப்பதுக்குள்
தன் பாட்டுகளுக்கு
முற்றுப்புள்ளி வைத்தான்
பட்டுக்கோட்டை...
பட்டு நகர் காஞ்சியில்
பிறந்த நீயோ...
நாற்பதின் முடிவில்
நூற்பதை முடித்தாய்...

ஆதவன் என்று 
பிள்ளைக்குப் பேர்வைத்துவிட்டு
அஸ்தமனமாகிவிட்டாயே...
அருமை நண்பனே...

உறங்காத ராகமாய்
இறங்காத மேகமாய்
ஊர்வலம் வந்தாய்...

பாமாலை வடித்த உன்னைக் 
காமாலை அடித்தது
கவியுலகம் துடித்தது

பறந்துவிட்ட
பாட்டுப்பறவையே...
சுரங்கள் யாவும்
உனக்கு 
இரங்கல் பாடும்...
நிகழ் தமிழில் உனது
நிறங்கள் கூடும்..

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [3]
Name : Raja Date :8/17/2016 9:15:05 AM
அருமையான கவிதை தைத்தவருக்கு என் வாழ்த்துக்கள்
Name : அப்துல் வதுத் Date :8/16/2016 8:55:17 PM
தமிழ் திரையிசை உலகில் நா.முத்துகுமார் போன்ற நல்முத்து கிடைப்பதரிது. அவரின் ஆன்மா இந்த இரங்கற்பா எனும் மெழுகுவர்த்தியில் ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது.
Name : Arafath Date :8/16/2016 7:09:20 PM
அருமையான வரிகள்...,