நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!

உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :15, செப்டம்பர் 2016(7:53 IST)
மாற்றம் செய்த நாள் :15, செப்டம்பர் 2016(7:53 IST)

வெறுப்பறுப்போம்!
ஆரூன் புதியவன்

காலம் கடந்து
காவிரி கடந்தது
கன்னடத்தை....
ஈரம் இழந்த
கன்னடம் இழந்ததோ
நன்னடத்தை......

தேசம் என்பது
தேகம்....
வயிற்றினைக்
கைகளே
வன்மத்தால் கிழிப்பது
சோகம்....

ஒருமைப்பாடோ
வெறுமைப்பாடு....
இங்கே...
வந்தேமாதரம்
பெருமைப்பாடு

தண்ணீர் கேட்டோம்
செந்நீர் கொடுத்தனர்
கண்ணீர் வடித்தோம்
கனலால் எரித்தனர்.

நீர் கொடு என்றால்
தீ கொடுப்பதோ
நீதி....
தமிழரோடு எங்கும்
தப்பாமல் உறைவது
பீதி....

எல்லோருக்கும் சம உரிமை
என்று
ஏற்றப்படுவதே
தேசியக் கொடியது....

எம்மவர்களே எப்போதும்
இழிவு செய்யப்பட்டால்
அந்த
தேசியம் கொடியது....

கன்னட நிறுவனங்கள்மேல்
தமிழகத்தில் ஓரிரு
தாக்குதல்கள்...

அது
சாகக்கொடுத்து
வந்துநிற்பவனை
செருப்பால் அடிப்பதுபோல....

மேன்மைமிகு தமிழினமே...
மிருகம் பார்த்து நீ
மிருகமாகாதே.....

வெறுப்பை விதைத்து
அதிகாரங்களை
அறுவடை செய்வோரின்
வசந்த காலம் இக்காலம்

ஆதலால்- அதிகாரக்
காதலில்
தேசிய இனங்கள் மோத
ஊதுகிறார்கள் எக்காளம்....

பெல்லட் குண்டுகள்
காஷ்மீருக்கு மட்டும்தான்
கர்நாடகத்திற்கு இல்லை...

இது
மத்தியில் உள்ளோரின்
மனித நேயம்....
இதில்தான் வெளுக்கிறது
விவசாயம் வெறுப்போரின்
வெறிச் சாயம்காவிரி பிரச்சினையில் 
இடையில் புகுந்தது 
காவி -
அது
சர்வ வன்முறைகளுக்கும்
சாவி...

தமிழன் என்றோர்
இனமுண்டு
அவன்
வரலாறெங்கும்
ரணமுண்டு.... 

வயலைச் சகதியாக்க
ஆசைப்பட்டான் - அவன்
அகதியாக்கப்பட்டான்

முதலில்
பயிர் அபாயம் கண்டு
பதறினான்
பிறகு
உயிர் அபாயம் கண்டு 
கதறினான்..

இது
உழவு தேசமோ...!
இழவு தேசமோ...?

தமிழர்கள் வாழ்வு
எப்போதும்
செந்நீரும், கண்ணீரும்
சிந்தி...
கனல் வீசும் சோதரனே
கருணையோடு சிந்தி....

வன்முறை நிறுத்து...
உன்
வழிமுறை திருத்து....

தமிழகம்
உனக்கு
பங்கம் நினைக்கவில்லை
தனது
பங்கைத் தான் கேட்கிறது.....

உற்றவருக்கு
உயிரையும் கொடுப்பது
எமது பண்பாடு......
வெறுப்பை மறந்து
சிறப்பை அடைவோம்
பெருத்த அன்போடு...

உண்மைத் தமிழன்...
தன் மண்ணை
நம்பி வந்தவனைப் பாதுகாப்பான்.....
அவ்வாறே நீயும் 
அறம்காப்பாய் சோதரனே.....!

ஆட்சிகள் மீதான
நம்பிக்கைகள்
அற்று வருகிறன....

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]
Name : M.selvan Date :11/3/2016 4:04:56 PM
சூப்பர் கவிதை ............. உண்மைத் தமிழன்... தன் மண்ணை நம்பி வந்தவனைப் பாதுகாப்பான்..... அவ்வாறே நீயும் அறம்காப்பாய் சோதரனே.....! ஆட்சிகள் மீதான நம்பிக்கைகள் அற்று வருகிறன....