நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :13, அக்டோபர் 2016(15:21 IST)
மாற்றம் செய்த நாள் :13, அக்டோபர் 2016(15:21 IST)

என் எழுதுகோலின் பிறவிகள்!
-கவிக்கோ அப்துல்ரகுமான்

ன் எழுதுகோல்
முன்னால்
பல பிறவிகளை
எடுத்திருந்தது

மதக் கலவரத்தில்
அநியாயமாகக்
கொலை செய்யப்பட்ட
அப்பாவியின்
இரத்தமாக இருந்தது

தாய்நாட்டை இழந்து
அன்னிய நாடுகளில்
அலைந்து திரியும்
அகதிகளின்
கால்களாக இருந்தது

ஆணவக் கொலையுண்டவனின்
கடைசி மூச்சாக இருந்தது

"கட்அவுட்'டுக்குப்
பாலாபிஷேகம் செய்யும்
ரசிகனின்
கைக்குத் தப்பி
அழுத குழந்தையின்
வாய்க்குச் சென்ற
பாலாக இருந்தது

தற்கொலை செய்துகொண்ட
விவசாயியின்
கடைசி வியர்வைத் துளியாய்
இருந்தது

முதிர் கன்னியின்
ஏக்கப் பெருமூச்சாய்
இருந்தது

மதுரையில்
கண்ணகி மூட்டிய
நெருப்பாக இருந்தது

துச்சாதனன்
துகிலுரிந்தபோது
கண்ணபெருமான்
திரௌபதிக்குக் கொடுத்த
சேலையாக இருந்தது

கல்லாய்க் கிடந்த
அகலியை
உயிர்ப்பித்த
இராமனின்
பாதத் தூசியாக
இருந்தது

தாய் நாட்டின்
விடுதலைக்காகப்
போராடிய
போராளியின்
துப்பாக்கியாக இருந்தது

நோவா காலத்துப்
பிரளயமாக இருந்தது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]
Name : Mohamed Zakariyya Date :2/24/2017 10:34:34 PM
எனது கவிதைகளை இங்கு பதிவு செய்ய எந்த ஒரு லிங்க்கும் இல்லை.எனது கவிதைகளை பதிவு செய்ய உதவி செய்யவும். நன்றி
Name : திருநாவுக்கரசு Date :12/1/2016 10:59:35 AM
காசுக்கு விற்கப்படாத எழுதுகோலாக பிறவிப் பெருங்கடல் நீந்திய எழுதுகோலும் அது.