நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :21, ஜூன் 2010(10:37 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஜூன் 2010(10:37 IST)
கேள்வி: குறும்பட, ஆவணப்பட இயக்குநர்கள் சினிமாவுக்கு போகலாம், போகக்கூடாது என  இருவேறு கருத்துக்கள் இருக்கு. இதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

ஷைலஜா: குறும்பட, ஆவணப்பட இயக்குநர்கள் நிச்சயம் சினிமாவுக்கு போகலாம். காரணம் அவங்க தரமான படத்த தான் தர்றாங்க. அத மக்கள் கிட்ட  அவங்க பெருசா கொண்டுபோய்ச் சேர்க்கும்போது இன்னும் பிரபலமாகும். பவா எழுதின ஏழுமலை ஜமா கதைய, கருணா குறும்படமா எடுத்தாரு. அதையே அவர் சினிமாவா எடுத்து மக்கள் கிட்ட கொண்டுபோய், அந்தக் கலை, கலைஞர்கள் படும் பாட்டை... அவர்கள் மனசுல பதியவச்சி கலைய உயிர் பிக்க முடியும். அதனால அவங்க சினிமாவுக்கு போறதுல தப்பில்ல. 

கேள்வி: வரலாற்று நூல்களை படிக்கிறதுல மட்டும் ஆர்வம் என்ன ?   

உத்திரகுமார்: வரலாறு, ஆய்வு நூல்களைப் படிக்கும்போது வேறு மாதிரியான உணர்வு, எண்ணம் வருது. புதுப்புது விஷயங்களை தெரியவைக்குது. அதோட தொடர் புத்தகங்களை தேடித்தேடி படிக்க வைக்குது. வரலாறு, ஆய்வு, அரசியல் நூல்கள் எப்ப படிச்சாலும் அதோட சுகமே தனி தான்.

கேள்வி: உங்கள் மனைவி, அவரது சகோதரி ஷைலஜா பல புத்தகங்கள மொழிபெயர்ப்பு செய்து இருக்கிறார்கள். அதை விமர்சனம் செய்யுங்களேன் ?

உத்திரகுமார்: நான் மொழிபெயர்ப்பையே இரண்டாம் தரமா தான் பாக்கிறேன். அதனால அதை என்னத்த விமர்சனம் செய்யறது. நான் 1000 பக்கங்களுக்கு மலையாள எழுத்துக்கள தமிழுக்கு மொழி பெயர்த்துயிருக்கேன். இவ்வளவுக்கும் என் தாய்மொழி தமிழ். இப்ப கூட  ஒரே நேரத்தல 50 பக்கங்கள் மொழிபெயர்ப்பேன். காரணம் மலையாளத்துல எழுதினதை நாம தமிழுக்கு மாத்தறோம் அவ்ளோ தான், அதுல போய் என்ன இருக்கு. அதோட 30 ஆண்டுகளுக்கு முன்ன மாதிரி, இப்ப யாரும் மொழிபெயர்க்குறதில்ல. இலக்கியம், பிரிண்டிங் தொழில் வளர்ச்சி பெற்று இருக்கிற நிலையில் கூட, முன்னவிட குறைவா தான் மொழிபெயர்ப்பு இருக்கு. அதுவும் மோசமாயிருக்கு.

கேள்வி: தமுஎசவும், கலை இலக்கிய பெருமன்றமும் இலக்கியத்திற்காக தான் பாடுபடுகின்றன. ஆனால், சேர்ந்து இயங்காமல் போட்டி போடுகிறதே ஏன்?

பவா: போட்டியிருக்கறது நல்ல அம்சம் தானே. மக்களுக்கு இதனால திறமையான, நல்ல கருத்துகள் கொண்ட உலகத் திரைப்படங்கள், இலக்கியம், நாடகங்கள் பார்க்க, படிக்குறதுக்கான வாய்ப்புகள் அதிகமா கிடைக்கும். இந்தப் போட்டி ஆரோக்கியமானதுன்னு நான் நினைக்கறேன்.

கேள்வி: மொழிபெயர்ப்பில் உங்களது இலக்கு ?

ஜெயஸ்ரீ: நீண்ட வாசிப்பின் தொடர்ச்சியா எழுத முயற்சி செய்யலாமேன்னு நினைத்தபோது, சொந்தமா எழுதறதுக்கு முன் இரண்டு மொழிகள் தெரிந்திருந்த காரணத்தினால் மொழிபெயர்ப்பைக் கையிலெடுத்தேன். அது இவ்வளவு தூரம் என்னைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. சராசரியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடமிருந்து சற்றேனும் மாறுபட்டு இருப்பதில் மகிழ்ச்சியே. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு.

கேள்வி: வரலாறு, அரசியல், ஆய்வு நூல்களைத் தேடித்தேடி படிக்கின்ற நீங்கள், அப்போது முதல்,  இப்போது வரையான அரசியல் நிலைகளைப் பற்றி சொல்லுங்கள்?

உத்திரகுமார்: அப்பவும் சரி, இப்பவும் சரி அரசியல்ல பெரிய வித்தியாசம் எல்லாம் கிடையாது. எளிய மாற்றம் தான் நடந்திருக்கு. அப்ப மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு போன்றவங்க அரசியலுக்கு வந்தாங்க. இப்ப சோனியாகாந்தி, ராகுல்காந்தின்னு இருக்காங்க. அதே மாதிரி, தனி மனித துதி  கொள்கை அப்பொழுது போல இப்பவும் இருக்கத்தான் செய்யுது.

கேள்வி: சமீபத்தில் நெகிழ்ந்த சம்பவம் ?

ஜெயஸ்ரீ: 2 ஆண்டுக்கு முன் ஒருநாள் பஸ்ல தண்டராம்பட்டு நோக்கி போய்க்கிட்டுயிருந்தேன். மேல் செட்டிப்பட்டு தாண்டின்னு நினைக்கறேன். ஒரு பையன் பத்தாவது எக்ஸாம் எழுதப் போனவன், ஹால்டிக்கட்டை வீட்ல விட்டுட்டதனால திரும்ப எடுக்க திரும்பிக்கிட்டு இருந்தான். அப்பவே டைம் 9.15. நான், அந்தப் பையன் எக்ஸாம் எழுதற பள்ளியின் ஒரு ஆசிரியருக்கு போன் பண்ணி, இந்த மாதிரி பையன் கொஞ்சம் லேட்டா வந்தாலும் பரிட்சை எழுத அனுமதி கொடுங்கன்னு சொல்லிட்டு போய்ட்டேன். 2 வாரத்துக்கு முன்ன கவிதா என்கிற ஆங்கில ஆசிரியரைப் பார்க்க, பாய்ஸ் ஹை ஸ்கூலுக்குப் போயிருந்தேன். ஒரு பொண்ணுக் கிட்ட நான் வந்துயிருக்கறத கவிதா கிட்ட சொல்ல சொன்னன். அவ போய் ஜெயஸ்ரீ  டீச்சர் வந்திருக்கறதா சொல்லி அவங்களைக் கூட்டிக்கிட்டு வந்தா. அவங்களோட அரை மணி நேரத்துக்கு மேல பேசிட்டு வெளிய வந்தப்ப, அவ்ளோ நேரமும் ஒரு பையன் எனக்காக வெயிட் பண்ணி நீங்க தானே ஜெயஸ்ரீ டீச்சரான்னு கேட்டான். யார்ப்பா நீன்னு கேட்டன். 2 வருஷத்துக்கு முன்ன உதவி செஞ்ச அந்த டீச்சராதான் இருக்கும்ன்னு நெனச்சி என்ன வந்துப் பார்த்த அந்த விஷயம் என்ன ரொம்ப நெகிழ்த்திடுச்சி.

கேள்வி: பவா-ஷைலஜா தம்பதிக்கு அடுத்த ஜென்மத்தில் நான் மகனாக பிறக்க ஆசைப்படுகிறேன் என்று,  இயக்குநர் மிஷ்கின் மேடையில் நெகிழும் அளவிற்கு, அப்படி என்ன உங்கள் இருவர் மீது அப்படியொரு பாசம்…….?ஷைலஜா: சென்னையில நடந்த புத்தக வெளியீட்டு விழாவுல பாலுமகேந்திரா, பிரபஞ்சன், போன்ற பிரபலமானவங்க இருந்த மேடையில பேசின மிஷ்கின் அடுத்த ஜென்மம்ன்னு ஒண்ணு இருந்தா நான், பவா-ஷைலஜா தம்பதிக்கு மகனா பிறக்கனும்ன்னு சொல்லி, எங்கள நெகிழ வச்சிட்டாரு. அது ஏன்னு எங்களுக்கு தெரியாது. ஆனா அவர் எங்கள பெருமைப்படுத்தி பேசிய, அவருடைய மகன் ஆசை எங்களுடைய மனசுல மரணம் வரை மறக்காம இருக்கும்.

பவா: எங்களைத் திரும்பவும் நெகிழ வச்சிட்டாரு மிஷ்கின். உலக சினிமாக்களை எங்க வீட்ல சனிக்கிழமை மாலைகள்ல போடறத வழக்கமா வச்சிருக்கோம். அதுக்காக எல்.சி.டி புரஜக்டர அங்கயிங்கன்னு போய் வாங்கி வருவோம். சமீபத்தல கூட அரசாங்கமே அரசுப் பள்ளிகளுக்கு அதை தந்தது. ஆனா எந்தப் பள்ளியும் பயன்படுத்தறதில்ல. கேட்டா அத பயன்படுத்தறதுக்கான ஆ்ளை அரசாங்கம் தரலங்கறாங்க. சிடி பிளேயர் இயக்கற மாதிரி தான் இதுவும்.

இவுங்க வீடுகள்ல இருந்தா ஒரே நாள்ல கத்துக்கிட்டுருப்பாங்க. பள்ளிங்கறதால ஆள் வேணும்கிறாங்க. அப்படிப்பட்ட ஆசிரியர்கள் கிட்ட லெட்டர் எழுதி, பழுது ஏற்பட்டா சரிபண்ணி தர்றேன்னு கெஞ்சி ஒரு நாளைக்கு புரஜக்டர கேட்டு லெட்டர் தந்தோம்ன்னா, வாங்கி வச்சிக்கிட்டு பியூன் ஊருக்கு போய்ட்டாரு, சாவி கிளர்க்கு கிட்டயிருக்குன்னு ஏதாவது ஒரு காரணம் சொல்வாங்க.

இதையெல்லாம் யோசிச்சி கடந்த வாரம் நண்பர்கள் ஆளுக்கு ஆயிரம் ரூபா போட்டு நாமளே சொந்தமா வாங்களாம்னு முடிவு எடுத்தோம். நான்கு நண்பர்கள் பணமும் தந்துட்டாங்க. ஒரு நாள் மிஷ்கின் போன் செய்தாரு. பேசிக்கிட்டுருக்கும் போது இதை சொன்னன். மறுநாள் இரவு 9 மணியிருக்கும்... நாங்க வெளியில போயிட்டு வீட்டுக்கு வர்றோம். இயக்குநர் மிஷ்கினோட உதவி இயக்குநர் வடிவேல் வீட்டுக்கு வந்து காத்துக்கிட்டுருக்காரு. 

என்னங்க இந்த ராத்திரியில சொல்லாம கொள்ளாமன்னு கேட்டதும்... ஒரு பார்சல எங்கிட்ட தந்து இயக்குநர் தரச்சொன்னாருன்னு தந்தாரு. வாங்கிப் பிரிச்சி பாத்தா அதுல 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள, கனவா நினைச்ச புரஜக்டர், 30 உலக சினிமா படங்கள்னு இருந்தது. கண் கலங்கிடுச்சி. நான் இன்னும் அவர்கிட்ட நன்றின்னு கூட சொல்லலை. காரணம், அவர்கிட்ட எதுவுமே கேட்கல, என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறேன்னு கேட்டதற்கு பதில்  சொன்னன். அத கேட்டுட்டு கனவா நினைச்சத வாங்கித் தந்து நெகிழ வச்சிட்டார்.

கேள்வி: இலக்கியம், எழுத்தாளர் என்கிற இமேஜால் என் சிறு வயது சுதந்திரத்தை இழந்தேன் என்று  வளர்ந்த பவா சொல்கிறார். சின்ன வயசுல இலக்கிய உலகத்திற்குள் வந்திருக்கிற நீங்க, அதப்பத்தி என்ன சொல்றீங்க ?

சுகானா: என்னோட சுதந்திரம் பறிபோகலைன்னு தான் நினைக்கறேன். இன்னும் சொல்லனும்னா என் நண்பர்கள் முன்னாடி என்னை ஓரளவுக்கு உயர்த்தியிருக்கு. என் பள்ளி நிர்வாகத்திலிருந்து எனக்கு சரியான வரவேற்பு கிடைக்கலைன்னாலும் வெளியே நண்பர்கள், பெரியவர்களிடம் எனக்கு ஒரு அங்கீகாரம் கெடச்சிருக்கு. இது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த இலக்கிய வட்டத்துக்குள்ள என் சுதந்திரம் அதிகமாயிருக்குன்னு நெனைக்கறேன். சின்ன வயசுங்கறதால என் விருப்பப்படி எழுத முடியுது.

கேள்வி: தமுஎச நடத்திய குழந்தைகளுக்கான நூல் போட்டியில் எந்த நூலையும் விருதுக்காக தேர்ந்தெடுக்க முடியல. எல்லாமே பெரியவங்க பார்வையில தான் அந்த நூல்கள் எழுதியிருந்ததுன்னு சொன்னாங்க. குழந்தைகளுக்கான நூலை நீங்க மொழிபெயர்த்து இருக்கிறீர்கள், அதில் குழந்தைக்கானது என்று  என்ன இருந்தது? குழந்தைகளுக்கான இலக்கியத்தில் என்னவெல்லாம் இருக்க வேணும்னு  எதிர்பார்க்குறீங்க ?

சுகானா: …………………….. (நீண்ட மவுனத்துக்கு பின்) குழந்தையா இருக்கறதால சிபிலாவால், குழந்தைகள் உலகத்தைப் பத்தி ரொம்ப அழகா பதிவு செய்ய முடிஞ்சது. என்னாலயும் அதே உணர்வோட மொழி பெயர்க்க முடிஞ்சது. பெரியவங்க என்ன இருந்தாலும் பெரியவங்க தான். அவங்களால எங்க உலகை ஓரளவுதான் சித்தரிக்க முடியுமே தவிர முழுமையாக முடியாது. இதுல குழந்தைக்கான ஆசைகள், உணர்வுகள், ஏக்கங்கள், கற்பனைகள், நியாயங்களை நிதர்சனமா நாம பார்க்கலாம். இன்னும் நிறைய புத்தகங்கள் குழந்தைகளால எழுதப்படனும். இதைப் பெரியவங்க எழுதினா, அது ஏதோ நீதிக் கதை சொல்ற மாதிரிதான் இருக்குமே தவிர உண்மையா இருக்காது.

கேள்வி: நீண்டகாலமா இலக்கிய உலகத்தோட பிண்ணிப் பினைந்திருக்குறீங்க. உங்கப் பார்வையில இலக்கிய உலகம் எப்படி மாற்றமடைந்திருக்கு ?

பவா: புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், தி.ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்கள் காலம் ஒரு காலமாயிருந்தது. அந்த இலக்கிய காலம் சாமான்யனுக்கானதல்ல. அந்த உயரத்த யாராலும் எட்ட முடியாது. அதை யாரும் எழுத முடியாதுன்னு நினைச்சாங்க. 70, 80கள்ல பிரமாதமான ஒரு செட் இலக்கிய உலகத்துக்குள்ள வந்தது.

அது பிரபஞ்சன், நாஞ்சில்நாடன், வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, ராஜேந்திரசோழன் போன்றவங்க. இவங்க எழுத்த பாத்துட்டு, அட! நம்மோட வாழ்க்கையாயிருக்கே! இது தான் இலக்கியமா! இத நாம கூட எழுதலாமேன்னு மக்கள நினைக்க வச்சது. எழுதனும்கிற  ஆசையை, ஆர்வத்தை மக்கள் கிட்ட தூண்டி விட்டது. இப்போ வேறு மொழிகள்ல அப்படி வீரியமான, பரிசோதனை முயற்சியா, கதை, கவிதை நாவல்கள் எல்லாம் வருதுன்னு நினைக்கறேன். இது புதிய வீரியத்தோட வருது. இது சரின்னு நினைக்கறேன்.

கேள்வி: ஏன்?

பவா: இலக்கியம் பெரு உழைப்பை சாப்பிடுவது. நீண்ட நேரத்தை அது கோரும். பரதநாட்டியம் போல சின்னவயதிலிருந்து கத்துக்கிட்டு... அரங்கேற்றம் பண்ணி  பாராட்டு வாங்கறதில்லை. இலக்கியம் என்பது எழுதும் பயிற்சி. அப்படி எழுத நாம் நிறைய படிக்க வேண்டி வரும்.

படிக்கும் கட்டங்களைத் தாண்டிச் செல்ல வேண்டி வரும். அப்படிப் படிப்பதால் மட்டுமே ஒரு சிறந்த நாவலை படைக்க முடியும். யார் வேண்டுமானாலும் எழுதலாம். எழுதி வெற்றியடைந்தாலும் மீண்டும் எழுத நிறைய படிக்க வேண்டும். படிக்கவில்லையென்றால் காலப்போக்கில்... கால மாற்றத்தில் அது அந்த எழுத்தாளனை அந்த ஒரு நூலோடு அடித்துக்கொண்டு போய்விடும்.

கேள்வி: இலக்கிய உலகம்  இப்ப எப்படி இருக்கு ?

பவா: ஜாதி ரீதியா, குழுவா பிரிந்து போன நிலையிலிருக்கு. இந்தப் பிரிவு இந்தக் காலத்துல தான் வந்ததுன்னு நினைக்கறேன்.

கேள்வி: பிரபலமாவதற்காக சாருநிவேதிதா போன்ற சில எழுத்தாளர்கள் மற்ற கலைஞர்களைக் குறை கூறி விமர்சனம் செய்கிறார்கள் என்றக் குற்றச்சாட்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

பவா: சாருநிவேதிதாவோட படைப்புகள் மீது எனக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கு. ஆனா இளையராஜாவை விமர்சனம் பண்ணது சரிதான். விமர்சனத்தில் சில அதிரடி வார்த்தைகள சொல்லியிருந்தாரு. சாருநிவேதா சொன்னது தப்புன்னு ஆளாளுக்கு கண்டிச்சாங்க. ஆனா சாருநிவேதாவை விட, இசை விமர்சகர் ஷாஜி இளையராஜாவை அதிகமாவே விமர்சனம் செய்ததைப் பார்த்து எதுவுமே சொல்லாம மவுனமாகிட்டாங்க. இதுக்கு என்ன சொல்றீங்க. சினிமாவுலகில் இளையராஜாவைப் பத்தி சொல்ல பயப்படறாங்க. ஆனா சாருநிவேதா பயப்படாம சொல்லிட்டாருன்னு தான் நான் நினைக்கறன்.

கேள்வி: பவா.செல்லத்துரை இதற்கு முன் இயக்க ரீதியாக, தனிப்பட்ட முறையில  சமூகம் சார்ந்த விழாக்கள் நிறைய நடத்தினார். அது இப்ப குறைந்து போயிருக்கே  ஏன் ?

பவா: எனக்கு குடும்ப வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை, இலக்கிய வாழ்க்கைன்னு தனித்தனியா எதுவும் கிடையாது. எல்லாமே ஒரே வாழ்க்கை தான். நான் விழாவுக்கு தாமதமா வர்றன்னாலும், அலுவலகத்துக்கு தாமதமா போனாலும் காரணம் இலக்கியமா தானிருக்கும். நான் மாறிட்டதாவும் சிலர் சொல்றாங்க. அது உண்மையில்ல. அப்ப எப்படியிருந்தனோ அப்படியே தான் இப்பவும் இருக்கேன்.

அன்னைக்கி என் வீட்டுக்கு எப்படி நண்பர்கள் வந்தாங்களோ அப்படியே இப்பவும் வரனும்கிறதுக்காக தான் எங்க வீட்ட எப்பவும் பூட்டியதே கிடையாது. விழாக்கள் அதிகமா நடத்தாம குறைச்சதுக்கு காரணம்... நாம யார எதிர்க்கறமோ அவுங்ககிட்டயே போய் விழா நடத்தனும் நோட்டீஸ் போட்டுத் தாங்க, பணம் தாங்கன்னு நின்னு பிச்சையெடுக்க வேண்டியதாயிருக்கு. இது மன சங்கடத்த தருது.

இதனால தான் விழாக்கள் நடத்தறது குறைஞ்சிடுச்சி. ஆனா எங்களது சக்திக்குட்பட்டு இலக்கியத்துக்கான பணிகள் செய்துக்கிட்டு இருக்கோம். உதாரணத்துக்கு எங்க வீட்டு மொட்டை மாடியில் சனிக்கிழமை தோறும் குழந்தைகளுக்கான சினிமா, சிறந்த ஆவணப்படங்கள், குறும்படங்கள் போடறோம். அத யார் வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம்கிற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

சில விழாக்கள் வெளியில நடத்தனும் என்கிற போது எஸ்.கே.பி கல்லூரி நிர்வாகி கருணாநிதி போன்ற நண்பர்கள் கிட்டச் சொல்லி, சில விழாக்கள அவரோட கல்லூரியில நடத்தறோம். விழாக்கள் குறைந்தது உண்மை... ஆனா விடல. ஏன்னா என்னால இத விட்டுட்டு வாழ முடியாது.

(தொடர்ந்து மூன்று நாட்கள் இரவு நேரத்தில் தங்களது நேரங்களை ஒதுங்கி நம்முடன் கலந்துரையாடியவர்களிடம் பேசப்பேச சாரல் மழையாய் நிறைய தகவல்கள் அருவியாய் கொட்டிக்கொண்டேயிருந்தது. பதிவில் தான் தாமதம், இருந்தும் போதும் என்ற மனதோடு நன்றி கூறி விடைபெற்றோம்).

                               
நேர்காணல்: ராஜ்ப்ரியன்.
படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [5]
Name : subramani Date :8/14/2012 2:04:47 PM
படைப்பாளிக்கு என்ன கல்வித்தகுதி வேண்டும்? படைப்பை வைத்துத்தான் எடை போடனுமே தவிர படிப்பை வைத்து எடைபோடுவது தேவையில்லை.கல்வி கற்றுவிட்டால் படைப்பு கைவருமா? அப்படியிருந்தால் பள்ளிகூடம் போனவன் எல்லோருமே படைப்பாளிதான்.கல்வித்தகுதி உள்ளவனின் லச்சணம்தான் எல்லோருக்கும் தெரியுமே.
Name : Jenny Date :7/10/2011 3:42:37 PM
My hat is off to your atuste command over this topic—bravo!
Name : Kovai Vijay Date :7/30/2010 4:56:46 PM
எவன் வேண்டுமானாலும் எழுதலாம் எல்லோரும் வாசிக்க முடியாது. இந்த தமிழ் எழுத்தாளர்களுக்குள் ஏன் இத்தனை போட்டி பொறாமைகள் . ஒருத்தன் கூட அடுத்தவனை ஏற்க மறுக்கிறான். அதனால் தான் சத்தமில்லாமல் மார்வாடி சம்பாதித்து கொண்டு இருக்கிறன். இங்கே படைப்பாளி என்று சொல்லி கொண்டு இருப்பவனின் கல்வி தகுதி என்ன என்று விசாரியுங்கள் அவன் லச்சணம் தெரியும்.
Name : tamil Date :6/25/2010 12:46:53 PM
இலக்கியவாதிகள் மற்றும் எழுத்தாளர்கள் என்று இவர்களே சொல்லிக்கொள்ளும் இந்த ஈனப்பிறவிகள், இசையை பற்றி என்ன தெரியும் என்று பேசுகிறார்கள்? அவனே ஒரு வெத்துவேட்டு, அவன் சொன்னது சரியாமாம், இன்னொரு அரைவேக்காடு சொல்லுது. டேய், நீங்கலாம் நிகரில்லாமல் புகழ்பெற்று (?!?!?) விளங்கும் எழுத்து துறையை தவிர்த்து தெரியாத விஷயத்தை பத்தி எண்டா பேசுறீங்க?
Name : ராஜ் Date :6/25/2010 4:22:00 AM
உலகெங்கிலும் உள்ள இசைஞானி ரசிகர்கள் அவரது மெய்மறக்கச்செய்யும் இசையை அந்த இசைக்காக மட்டுமே ரசிக்கிறார்கள். அந்த இசையை புரிந்துணராத சாரு, பவா போன்றவர்கள் ராஜாவின் பணிவு, வள்ளண்மை, தற்பெருமை போன்ற பொருத்தமற்ற குணங்களை அளந்தவண்ணம் இருக்கிறார்கள்.