நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :26, ஜனவரி 2017(0:35 IST)
மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2017(0:35 IST)

எழுதிடு நண்பா....!
எழுச்சியின் தொடர்ச்சி...!

ஆரூர் புதியவன்

மாணவனே...!
உரிமைக் களத்திற்கு
உரித்தானவனே...!
வீரியனே...!
விழுங்கும் இருள்
கிழித்த
சூரியனே...!
தமிழகம் என்ற
தாளில் நீ தான்
எழுச்சியை
எழுதினாய்...!
'அமிழகம் ' ஆன
ஆழ்துயில் கிழித்து
நீ தான்
எழுப்பினாய்...!

அலைகளை விஞ்சும்
தலைகளைச் சேர்த்தாய்...!
தளை தனை அறுக்கும்
களம் தனைக் காத்தாய்...!
தன்மானம் தந்த
சினத்தால் ஆர்த்தாய்...!
மண்மானம் வெல்லும்
குணத்தால் ஈர்த்தாய்...!
மாணவனே...! நீ
புதுக்களம் அமைத்தாய்...
மாசிலா நீ தான்
மற்றொரு தமிழ்த்தாய்....  

உனக்கு...!
வாடிவாசலைத்
திறக்கவும்
தெரியும்...
மோடி வாலினை 
நறுக்கவும்
தெரியும்....

திமிராய் இருந்த
தில்லியின் காதில்
தமிழன் யாரெனச்
சொல்லி அடித்தாய்...!

தமிழப் பால் குடித்தவன்
தந்த அடியினால்
தாழ்ப்பாள் போட்டவன்
தாள் பணிந்தானே...!

மாணவனே...!எம்
மாணவனே....!
தமிழக முகமாய்
ஆனவனே...!
புண்சொல் பேசிய
பொறுக்கியர்க் கெல்லாம்
கண்ணியத்தால் நீ
பதிலடி தந்தாய்...
களத்தை யாரும் 
களவாடாமல்
பலத்தைக் கொண்டு
பாதுகாத்தாய்...!

வடக்கின் இடக்கை
அடக்கியத் தடக்கை
மடக்காமல்...நீ
வளர்த்திடு இலக்கை....
வளரும் உலகுக்கு
நீதான் வலக்கை
புலர்ந்திடச் செய்வாய்
புதுமையின் கிழக்கை...

வாடும் உழவனின்
வாட்டம் துடைக்க...
கூடங் குளத்தின்
கொடுங் கதவடைக்க...
PETA சதிகளை
வேரோடழிக்க
NEET டால் முடங்கும்
நிலைமை தவிர்க்க...
காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்க...
காவி வெறிகளின்
கல்லறை சமைக்க...
காசுள்ளவர்க்கே
கல்வி என்னும்
மாசுபாட்டை
மண்ணில் புதைக்க...

வீசும் காற்றையும்
நீரையும் நிலத்தையும்
பேசும் தமிழையும்
தூய்மையாய்க்காக்க...
சாதிக் கொடுமையை
மோதி அழிக்க...
ஆதிப் பாதையில்
ஆன்மாவை இணைக்க....
என்னுயிர்த் தோழா
எழுவாய் நீயும்...!
மண்ணகம் உனது
மாண்பினில் தோயும்.....

மாணவனே...!
உரிமைக் களத்திற்கு
உரித்தானவனே...!
வீரியனே...!
விழுங்கும் இருள்
கிழித்த
சூரியனே...!
தமிழகம் என்ற
தாளில் நீ தான்
எழுச்சியை
எழுதினாய்...!
அமிழகம் என்னும்
ஆழ்துயில் கிழித்து
நீ தான்
எழுப்பினாய்...!
அலைகளை விஞ்சும்
தலைகளைச் சேர்த்தாய்...!
தளை தனை அலுக்கும்
களம் தனைக் காத்தாய்...!

தன்மானம் தந்த
சினத்தால் ஆர்த்தாய்...!
மண்மானம் வெல்லும்
குணத்தால் ஈர்த்தாய்...!

மாணவனே...! நீ
புதுக்களம் அமைத்தாய்...
மாசிலா நீ தான்
மற்றொரு தமிழ்த்தாய்.... 

உனக்கு...!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :