நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :27, பிப்ரவரி 2017(1:16 IST)
மாற்றம் செய்த நாள் :27, பிப்ரவரி 2017(1:16 IST)


காட்டுச் சுதந்திரம்
காப்பதற்காக...
-ஆரூர்புதியவன்



காட்டுமிராண்டித்தனங்களை
அழிக்க முடயாத
நாட்டில்
காட்டை அழிக்கிறார்கள்
சத்குருக்கள்...

இவர்கள்
சத்குருக்களா
இல்லை
இயற்கையின்
சத்ருக்களா?

யமுனைக்கரையை
நாசப்படுத்தினார்
ராஜ்ய ஸ்ரீக்களின்
எஜமானரான
பூஜ்ய ஸ்ரீ

வெள்ளியங்கிரி
மலையை
மொட்டையடிக்கிறார்
சத்குரு ஜக்கி,
வித்தையைக்கக்கி...

மதம்
நாட்டைப்பிடித்த போது
சட்டப்படியான
ஆணைகள் செத்தன...

மதம்
காட்டைப்பிடித்த போது
சர்வ சுதந்திரமான
யானைகள் செத்தன...

அங்குசம்
வைத்திருப்பவன்
யானையை வைத்து
பிழைக்கிறான்...

செங்கோல்
வைத்திருப்பவனோ
மதத்தை வைத்துப்
பிழைக்கிறான்...

இயற்கை
செத்துக்கொண்டிருக்கிறது.
அது
இயற்கையான
சாவல்ல...

தாக்கி களையும்
பல நேரம்
காக்கி களையும்
தமது
ஊக்கிகளாய்க்
கொண்ட
மதவாத
ஆக்கிகளுக்குத்
தூக்கி உயர்த்தும்
’ஜாக்கி’களாக
இருப்பவர்கள்தான்
ஜக்கிகள்...

ஆள்வோரோ
அவர்காலை
நக்கிகள்...

கஞ்சா
தியானத்தில்
கண்மூடி இருப்பவனே
அஞ்சா நெஞ்சோடு
அறிவுக்கண்
திறந்தெழுவாய்...

நாட்டுச் சுதந்திரத்தை
நரிகளிடம் இழந்து விட்டோம்...
காட்டுச் சுதந்திரத்தையாவது
காப்பாற்ற அணிதிரள்வோம்...

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]
Name : kasim Date :2/28/2017 1:27:21 PM
அருமையான கவிதை..