நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :21, மார்ச் 2017(13:42 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017(13:42 IST)

இன்போ அம்பிகா கவிதைகள்ன்போ அம்பிகா, திருப்பூரைச் சேர்ந்தவர். இயற்கையையும் சமூகத்தையும் நேசித்துக் கவிதைகளை எழுதிக்குவிக்கிறவர். அண்மையில் திருப்பூர் ’படைப்பாளிகள் சங்கம், இவருக்கு ’சாதனைப் பெண்மணி’ விருதை வழங்கி சிறப்பித்திருக்கிறது. அவரது ஒருசில கவிதைகள் இங்கே...தப்பிப்பிழைத்த சிட்டுக்குருவி
---------------------------------------------------

உழவறியா
எதிர்காலத்தின்
பசி தீர்க்க உலையேறி
கொதிக்கிறது
மீந்திருந்த விதைநெல்..

எத்தனைமுறை
நினைந்தும் நினைவில்
வராத ஆண்டவனின்
கடவுச்சொல் ..

கனவில் மட்டுமே
பறந்தலைகின்றன..
தாழ்பறந்து தோள்
தொட்ட தட்டான்கள்..

கூட்டத்தை தொலைத்து
நேற்றைய நினைவில்
கண்ணாடி கொத்துகிறது ..
அலைக்கற்றையோடு
தப்பிப்பிழைத்த
ஒற்றை சிட்டுக்குருவி ..

உயிர் தீண்டித் துளிர்க்க..
------------------------------------------------

மரங்களைப் பற்றிய
கலைச்சொற்களை
இடம் விட்டு தள்ளித்தள்ளி நட்டுக்கொண்டிருக்கிறேன்
கவிதையில் ..

போன்வில்லா
மரங்களில்லா கவிதைக்கு
வலசை போவதை
பறவைகள் மறுபரிசீலனை செய்கின்றன..

மழைத்துளியொன்று
ஆதி வேர்பரப்பில்
உயிர்தீண்டி துளிர்க்க
துவங்குகிறது
என் கவிதை ..

சமன்மைப் புறக்கள்
-----------------------------------

தீண்டாமை
சுவர்த்தீண்டிய
புறாக்கள்..
கோவில் கோபுரத்து
மாடத்தில் கூடு
சமைக்கின்றன ..
பாகுபாடின்றி ..

நா வறட்சி...
------------------------------

ஆழியெங்கிலும்
ஆர்பரிக்கிறது நீர்..
அளவில்லாமல்..
தண்ணீர்,தண்ணீரென
நாவறண்டு கதறுகிறான்..
உறையடைத்த நீர்
விற்கும் சிறுவன்
கடற்கரையில்
சுடுமணலில்..

கனவைத் தேடியெடுத்து...
-------------------------------------------------

அலையெழுப்பி மறைந்த
பெருமூச்சின் நிழலில்
நேற்று கனிந்த கனவுகள்
உதிர்ந்து கிடக்கின்றன..
நின்று நிதானித்து சுவைமிகு
கனவை தேடியெடுத்து
ஊதி வாயிலிட்டு அதப்பி
சுவைத்தபடி நடக்கிறது கவிதை..தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [7]
Name : கவிவளவன் Date :4/1/2017 8:57:29 PM
அற்புதமான சிந்தை தூண்டும் படைப்புகள்.
Name : கவிவளவன் Date :4/1/2017 8:52:50 PM
அற்புதமான சிந்தை தூண்டும் படைப்புகள்.
Name : Kumar Ganesan Date :3/23/2017 1:32:08 PM
அருமை. கருத்தாழம் மிக்க கவிதைகள்.
Name : karthik123dubai@hotmail.com Date :3/23/2017 12:00:31 PM
கவிதைகள் சிறப்பு.மேம்படுகிறது வார்த்தைகள் .தமிழில் மென்மேலும் சிறந்து மிளிருங்கள்
Name : karthikeyan Date :3/23/2017 10:10:05 AM
"தப்பிப் பிழைத்த சிட்டுக்குருவி" மற்றும் "கனவைத் தேடியெடுத்து" ஆகிய கவிதைகள் நெஞ்சைத் தொட்டன... வாழ்த்துக்கள் சகோதரி... ஏதோ பிறந்தோம்... வாழ்ந்தோம்... பிரிந்தோம்.. எனபது போலல்லாமல், பிறந்ததும் சாதிக்க... வளர்வதும் சாதிக்க... வாழ்வதும் சாதிக்க... என வளர்பிறையாய் வானமே எல்லையாய், நீ சார்ந்திருக்கும் கலைக்கு பெருமைகள் பல குவித்திட வளர்பிறை வாழ்த்துக்கள் சகோதரி...!
Name : v muthumani Date :3/23/2017 10:09:55 AM
அருமையான வரிகள்
Name : ப்ரியா செந்தில் Date :3/22/2017 5:28:16 PM
அருமையான கவிதைகள்.வாழ்த்துகள். இலக்கியதுறையில் மிளிருங்கள். அருமையான எதிர்காலம் உங்களுக்கு உள்ளது