நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :26, மார்ச் 2017(10:13 IST)
மாற்றம் செய்த நாள் :26, மார்ச் 2017(10:13 IST)உனக்கும் எனக்குமான ஞாயிறு!
-ஆரூர் தமிழ்நாடன்என் ஞாயிறு சோம்பல் நிரம்பியது.
அது வெகுநேரம் புரண்டுவிட்டுத்தான்
கட்டிலை விடுவிக்கிறது. 
பின்னர் நாளிதழ் புரட்டுகிறது 
தொலைகாட்சிச் சேனல்களை மாற்றி மாற்றி
ஆர்வமின்றிச் செய்தி கொறிக்கிறது.
மணிகொரு தரம் தேநீர் அருந்துகிறது
நண்பர்களுடன் தொலைப்பேசியில் அரட்டையடிக்கிறது.
கைமீறிப் போகும் அரசியலுக்காக எரிச்சலில் கொஞ்சம் வசவும் தயாரிக்கிறது.
பிள்ளைகளிடமும்  உன்னிடனும்  அனாவசியமாய் அதிகாரம்செலுத்துகிறது.
யாதொன்றும் நிகழ்த்தாது அது வெற்றுப்படகாய் என் அன்றைய நதியைக் கடந்துவிடுகிறது.
உன் ஞாயிறு அவ்வாறில்லை.
அதிகாலையிலேயே என் கைவிலக்கி அது எழுந்துகொள்கிறது.
வியர்த்துக்களைத்து அடுக்களையைப் புதுப்பிக்கிறது.
நாட்கள் போட்ட குப்பைகளையும் அழுக்கையும் துப்புரவு செய்கிறது. 
 மிக்ஸியிலும் கிரைண்டரிலும் கொஞ்சம் அரைபடுகிறது. 
இட்டலிப் பானையிலும் குக்கரிலும் வேகிறது.
அடுகளையில் புழுங்கி சமையலில் மணக்கிறது. 
அடம்பிடிக்கும் பிள்ளைகளைக் குளிக்கவைத்து உடைபூட்டி அமுதூட்டுகிறது.
சாப்பாட்டு மேசையில் கூட அது நிதானிப்பதில்லை.
கொட்டும் வெய்யிலில் அங்காடிக் கடைகளில் அது கொஞ்சம் ஏறி இறங்குகிறது.
பழவண்டி, காய்கறிக்காரனிடம் பேரம் பேசுகிறது.
லாண்டரி வண்டியிடமும் துணிகளைக் கொடுத்து வாங்குகிறது. 
சக்கரப்பொழுதுகளுக்கு மத்தியில் கடவுளுக்கும் வஞ்சகம் பண்ணாமல்
விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்கிறது. 
இடையிடையே என் காதலுக்கும் அது கொஞ்சம் கருணை காட்டுகிறது.
பிள்ளைகளின் வீட்டுப்பாடத்திலும் சற்றே கரைந்து 
அவர்களின் புத்தகங்களை நேர்த்தி செய்கிறது.
வேலைகளின் நெரிசலிலும் அக்கம் பக்கம் சிநேகமாய்ப் புன்னகைக்கிறது
குடும்ப உறவுகளைப் பூக்கச்செய்யவும் அது தவறுவதில்லை. 
குடும்ப பட்ஜெட் குழறுபடிகளையும் கூர்த்தமதிகொண்டு அது வகுக்கிறது.
அலுத்துவரும் இரவில் பிள்ளைகளின் 
தலைகோதிக் கதைசொல்லி உறங்கச்செய்கிறது
மொத்தத்தில் உன்னைக் கரைந்து 
எங்களை வண்ணமயமாய் வரைகிறது உன் ஞாயிறு. 
இப்படியாய் இன்றைய பரிபாலனத்தை முடித்து
உலகக் களைப்போடு கட்டில் சாய்ந்து 
அப்பழுக்கற்ற  குழந்தையாய் உறங்கிப்போகும் உன் ஞாயிறை
ஆழ்ந்து ரசித்துக் கொஞ்சம் கவலையுறுகிறேன் 
பின்னர் அதன் கைபற்றி நன்றியோடு மெல்ல முத்தமிடுகிறேன்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [3]
Name : S.v.rangarajan Date :4/22/2017 9:02:06 AM
கவிதை,ullathaiஉள்ளபடி எழுதியதற்கு Mika nanri
Name : Vasanth Balakrishnan Date :4/20/2017 11:45:57 AM
ஒரு நாள், ஒரே நாளாய் இருப்பதில்லை... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளாய் இருக்கிறது. நகர வாழ்க்கை கோரும் உழைப்பிலும், தரும் களைப்பிலும் ஞாயிற்றுக் கிழமைகள் மூச்சற்று மயங்கிப் போகின்றன... தம் நாளால் நம் நாளுக்கு உயிர் கொடுக்கிறார்கள் மனைவிகள்... கவிதை சிறப்பு அண்ணா...
Name : Kavivalavan Date :4/1/2017 8:55:31 PM
அறிவினில் தேங்கும் தாக்கம், ஆசையின் பின்புலம் ஆகும்! குறியீடு இல்லா முயற்சி, கோள்வினை யென்றே கூறும்! அறிவியல் பார்வை கொண்டால், அகத்தினில் அழகு சேரும்! மாறிடும் உலகியல் தெளிந்தால், மருவிலா இன்பங்கள் கூடும்!