நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :7, ஏப்ரல் 2017(13:47 IST)
மாற்றம் செய்த நாள் :7, ஏப்ரல் 2017(13:47 IST)


எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்பன்...


 
“துன்பத்திற்கு காரணம் ஆசையே” என்றார் புத்தர் பெருமான். இன்றைய இயற்கை சீரழிவிற்கு காரணம் மனிதனின் ஆடம்பரமே என்று கூறும் சாமியப்பன், மனிதனின் ஆடம்பர மோகமே பல நூற்றாண்டு காலம் பாதுகாக்கப்பட்ட பூமி இந்த நூற்றாண்டின் இறுதியில் மிகப்பெரிய சீரழிவிற்கு சென்றுவிட்டது. இனி இந்த பூமியை காப்பாற்றவேண்டும் என்றால் ஒவ்வொரு மனிதனும் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லும் இவர் அதற்கு எடுத்துக்காட்டாக தானே வாழ்ந்து வருகிறார்.
 
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகிலுள்ள வாரணவாசி பாளையத்தைச் சேர்ந்த இவர், படித்தது எல்லாமே திருப்பூரில்.  பி.யூ.சி படித்த காலத்தில், திருப்பூர் நகரின் நடுவில் ஓடிக்கொண்டிருந்த நொய்யல் ஆற்றில் இரு கரையும் தொட்டு ஓடிய தண்ணீரை குடித்தும், குளித்தும் வளர்ந்தவர் இந்த சாமியப்பன்.

இன்று, அந்த நதியே இல்லாமல் போய்விட்டது. மழை காலத்தில் சில நேரங்களில் தண்ணீர் வந்தாலும், அந்த தண்ணீர் சாயக்கழிவு நீராகத்தான் வருகிறது. இனி எக்காலத்திலும் மக்கள் பயன்படுத்த முடியாத நீராக நொய்யல் ஆற்றுநீர் மாறியதற்குக் காரணம், மனிதனின் ஆடம்பரம்தான் என்று குற்றம் சாட்டும் சாமியப்பன், ஊரை மாற்றுவதற்கு முன்பாக என்னை மாற்றிக்கொண்டேன் என்கிறார்.

“மாற்றத்திற்குரிய மாற்றமாய் இரு" என்ற கோட்பாட்டின் பேரில்,  1996-அக்டோபர் இரண்டாம் தேதி முதல், இவர் ஆடம்பரமான ஆடைகள் அணிவதைத் தவிர்த்து, ஒரு எட்டு முழ காடா துணியை வேட்டியாகவும், நான்கு முழ  காடா துணியை துண்டாகவும் அணிந்து கொண்டு தமிழகம் முழுவதும் இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை, மரம் வளர்ப்பு, காடுகள் வளர்ப்பு என பல்வேறு தலைப்புகளில் பேசியும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல் முறையில் பயிற்சியளித்தும் வருகிறார்.

சட்டைபோடாத சாமியப்பன் என்று இயற்கை ஆர்வலர்களால் அழைக்கப்படும் இவர், மண்ணின் மீதும், சமூகத்தின் மீதும் கொண்டிருக்கும் ஈடுபாடு காரணமாக இவருடைய நண்பர்கள் இவரை ‘எதிர்காலம் சாமியப்பன்’ என்றும் அழைக்கிறார்கள். ஒரு துணிப்பை, அதில் ஒரு மாற்று வேட்டியும், துண்டும் வைத்திருக்கும் இவருக்கு ஒரு நோட்டு, இரவு எட்டு மணிமுதல் ஒன்பது மணிவரை நண்பர்களுடன் பேசுவதற்கு ஒரு செல்பேசி இவைதான் சொத்து.

இயற்கை விவசாயம் செய்யவேண்டும், வயல்களில் மரம் நடவேண்டும், குளங்களை தூர்வாரவேண்டும், கரையை பலப்படுத்த என்ன செய்யலாம்? என்று யார் ஆலோசனை கேட்டாலும் உடனே அவர்கள் கூப்பிடும் இடத்துக்கு சென்றுவிடும், இந்த சட்டையில்லா சாமியப்பனுக்கு சாப்பிட உணவும், அடுத்த ஊருக்குப் போக பயணச்சீட்டு வாங்கிக்கொடுத்து பேருந்தில் ஏற்றி அனுப்பிவிடவேண்டும். இவ்வளவுதான் அவருக்கான கட்டணம்.

 “கேரளா அரசு சிறுவாணியிலும், பவானி ஆற்றிலும் தடுப்பணை கட்டுவது தவறுதான். ஆனால், தமிழக அரசு கொடைக்கானல் மலைச்சரிவிலும், ஏற்காடு மற்றும் கல்ராயன் மலைச்சரிவிலும் இருக்கும் சிற்றாறுகளில் தடுப்பணை கட்டுவது எந்த வகையில் நியாயம்? காடுகளில் மண்ணை கிளரிவிடலாம், சிறிய மண் தடுப்புகளை போட்டு மண் அரிப்பைத் தடுக்கலாம், மரங்களை நட்டு மழை நீரை சேமிக்கலாம். ஆனால், தடுப்பணை கட்டுவது என்பது ஒரு சிற்றோடையின் தண்ணீரை நம்பியிருக்கும், ஒரு காட்டையும், அதில் இருக்கும் மரங்களையும், பறவைகளையும், விலங்குகளையும் வஞ்சிக்கும் செயல். இந்தக் காரியத்தை கேரளாவும் செய்யக்கூடாது, தமிழகமும் செய்யக்கூடாது” என்கிறார்.

புவி வெப்பமாகிறது என்று உலக நாடுகளில் உள்ள அறிஞர்கள் எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். உண்மையில் புவி வெப்பமானால், கடல் நீர் ஆவியாகவேண்டும், நீரின் அளவு குறையவேண்டும். கடல் நீர் குறைந்தால், அடுத்த ஆண்டுகளில் மழைப்பொழிவு அதிகமாகவேண்டும். ஆனால், இங்கே எதிர்மறையாக நடக்கிறது. வெயில் அதிகரிக்கிறது, மழை பொய்த்துக் கொண்டே போகிறது. கடல்நீரும் அதிகமாகிக்கொண்டே இருக்கறது. போதிய அளவு நீர் ஆவியாகவில்லை. இதனால் வானிலையில் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது என்கிறார்.

சீமைக்கருவை மரத்தை வேரோடு அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உண்மையிலேயே இந்த மரம் தமிழகத்துக்கு கிடைத்த ஒரு அற்புதமான வரம். பனைமரம் எப்படி தண்ணீர் இல்லாத நிலத்தில் வளர்ந்து மக்களுக்கு பலன் தருகிறதோ அதுபோலவே சீமைக்கருவையும் தண்ணீர் இல்லாத நிலத்தில் அதிகம் வளர்கிறது.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் உள்ள இந்த மரத்தை பயன்படுத்தி நம் நாட்டு வேளாண்மை துறையினர் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்திருக்கவேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, சீமைக்கருவை மரத்தின் இலையை அரைத்து நூறு கிராம் சோளத்தில் கலந்து காயவைத்து பின்னர், அதை நிலத்தில் விதைத்தோம்.

இன்னொரு பகுதியில் அதே அளவு சோளத்தையும் வழக்கம் போலவே சாதாரணமாக விதைத்தோம். சீமைக்கருவை இலைச்சாற்றில் ஊறிய சோளம் குறைவான அளவு நீரைக்கொண்டு அதிக வேகத்தில் வளர்ந்து, சாதாரண சோளம் கொடுத்த விளைச்சலை விட கூடுதலாக இருந்தது. அதற்கான தண்ணீர் தேவை மிகக்குறைவாக இருந்தது.

அதேபோல, பத்து ஆண்டு வயதுடைய ஒரு சீமைக்கருவை மரத்தின் வேருக்கு பக்கத்தில் இருந்த மண்ணை எடுத்து, அதில் விதை பதியம் போட்டு உருவாக்கிய பழ மரங்கள் மற்ற மரங்களைக் காட்டிலும் மிகக்குறைவான தண்ணீரைக் கொண்டு வேகமாக வளர்கிறது. தவிர வேறு விதமான நோய்த் தாக்குதல் இல்லாமலும் செழித்து வளர்கிறது.


திரும்பிய பக்கமெல்லாம் முளைத்துக்கிடக்கும் இந்த சீமைக்கருவையை ஆய்வு செய்து, இந்த மரத்தில் உள்ள வறட்சியைத் தாங்கும் தன்மைக்கான செல்களைப் பிரித்தெடுத்து, அந்த செல்களை நம் நாட்டில் பாரம்பரியமாக வளர்ந்துவரும், மா, பலா போன்ற மரங்களுடனும், கத்திரி, தக்காளி, வெண்டை போன்ற காய்கறி செடிகளுடனும் கலந்து ஒரு புது இனத்தையே உருவாக்கியிருக்கலாம். வேளாண்துறையினர் அப்படி செய்திருந்தால், இந்த நாட்டில் உணவு பஞ்சம் என்பதே இல்லாமல் செய்திருக்கலாம். வறட்சியைப் பார்த்து நாம் பயப்படத்தேவையில்லை.

இதே சீமைக்கருவை மரம், இஸ்ரேல், சீனா, ஜப்பான், பிரேசில் போன்ற நாடுகளில் இருந்திருந்தால் அந்த நாட்டை ஒரு சோலையாக மாற்றியிருப்பார்கள். ஆனால், நம் அரசும், இங்குள்ள அதிகாரிகளும் சோலையாக இருந்த தமிழகத்தை பாலைவனமாக மாற்றி விட்டனர்.
பனைமரங்களை காக்கவேண்டும் என்ற எண்ணம் தற்காலத்தில் நம்முடைய இளைஞர்கள் மத்தியில் வேகமாக வளர்ந்துள்ளது. ஆனால், இன்னும் நம்முடைய அரசுக்கு இந்த எண்ணம் வரவில்லை. ஊர்களில் உள்ள ஏரிகளில், ஆற்று ஓரங்களில் பனை மரங்களை வளர்த்து அதை பெரிதாக்குவதைக் காட்டிலும், தற்போதுள்ள நிலையில் சமூக அக்கரையுள்ள இளைஞர்கள் பனை விதைகளை எடுத்துக் கொண்டுபோய் காடுகளிலும் மலைகளும் போட்டுவிட்டு வாருங்கள். மலைகளில் வளரும் பனைமரங்களால் தான் மழைக்காலங்களில் வரும் தண்ணீரை நிலத்தடி நீராக மாற்றமுடியும். அதேபோல, பனை தோப்பு வளர்ந்தால் மட்டுமே பறவைகளும், சிறு விலங்குகளும் வளரமுடியும். இப்போதுள்ள காடுகள், அங்குள்ள விலங்குகள் அழிவை தடுக்கவேண்டும் என்றால் பனை நடுவது அவசியமாகிறது. காடுகளின் ஓரங்களில் அடர்த்தியாக பனை மரங்கள் இருந்தால், யானைகள், காட்டெருமை போன்ற பெரு விலங்குகள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் ஊருக்குள் வருவது தடுக்கப்படும். மேலும், பனைமரங்களில் இருந்து விழும் காய்கள் மற்றும் கொட்டைகள் மழைகாலங்களில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மற்ற சமதளப்பகுதி நிலங்களிலும் பனைமரங்கள் உருவாகும்.

இயற்கை வேளாண்மை என்ற பெயரில் பல மோசடி கும்பல்கள் உற்பத்தி பொருளுக்கு கூடுதலான விலை வைத்து வியாபாரம் செய்கிறார்கள். எந்தவிதமான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் போடாமல் இயற்கையாக விளையும் பொருளுக்கு விலையும் குறைவாக இருக்கவேண்டும். ஆனால், மற்ற பொருளை விடவும் கூடுதலான விலைக்கு விற்பனை செய்கிறார்கள். இதுவும் ஒரு வகை ஏமாற்று வேலைதான்.

அரளி, எருக்கலை, கத்தாளை, ஊமத்தை, நந்தியாவட்டம், வேப்பிலை, புங்கன், தும்பை, ஆவாரை  என நம் நாட்டில் உள்ள ஏராளமான செடிவகைகள் எந்தக் காலத்திலும் நோய் இல்லாமல் செழித்து வளர்கின்றன. இதை எல்லாம் கொண்டு புதிய நோய் எதிர்ப்பு சக்தியுள்ள மூலிகைச் சாறுகளை ஒவ்வொருவரும் அவரவர் இடங்களிலேயே தயாரிக்கலாம். அதைக்கொண்டு எல்லாவகையான பூச்சிதாக்குதல்களையும் தடுக்கலாம். அவரை, புடலன், பூசணி, சுரைக்காய் போன்ற கொடிவகை காய்கறி பந்தல்களை ஒவ்வொரு வீடுகளிலும் அமைத்து சொந்தமாக காய்கறி உற்பத்தி செய்யலாம். ஒவ்வொரு வீட்டிலும், அத்தி, பலா, சப்போட்டா என ஒரு பால் மரங்களை வளர்த்தால் போதும். காடுகளில் உள்ளதைக் காட்டிலும் குளிர்ச்சியை நகரங்களில் உருவாக்கலாம்.. இதுபோன்று போகுமிடமெல்லாம் இயற்கை வேளாண்மை குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும் பரப்புரை செய்து வருகிறார் சட்டையில்லா சாமியப்பன்.

விஷத்தையும், பூச்சி மருந்துகளையும் கொண்டு எதையும் தடுக்கமுடியாது என்று கூறும் சாமியப்பன், அதற்கு பல எடுத்துக்காட்டுகளைக் காட்டுகிறார்.
தெருக்களில் வளர்ந்து திரியும் பெருச்சாளிகளை கொல்லப் பயன்படுத்திய எலி மருந்துகளால் பெருச்சாளிகளை அளிக்க முடியவில்லை. அதே நேரத்தில் செத்துக்கிடந்த பெருச்சாளிகளை தின்ற கழுகு இனத்தை முற்றிலும் அழித்துவிட்டது. இப்போது, காக்கை எண்ணிகையும் வேகமாக குறைந்து வருகிறது. காக்கையும், கழுகும் இல்லாமல் போனால், பெரு நகரங்களில் ஏற்படும் கழிவுகளை அப்புறப்படுத்த முடியாமல் போகும். நான்கே நாட்களில் நாடு முழுவதும் தொற்று நோய்கள் பெருகிவிடும்.

சுகாதாரம் என்ற பெயரில் மக்கள் கை கழுவவும், பாத்திரம் கழுவவும் பயன்படுதும் இரசாயன கழிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக நம் சாக்கடை குழிகளில் வாழ்ந்த தவளைகளை அழித்து விட்டது. இதனால், தவளைகள் உண்டு வாழ்ந்த கொசு முட்டைகளை இப்போது அழிக்க வழியிலாமல் போனதால் தான், டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் என புதுப்புது நோய்கள் மக்களுக்கு வருகிறது. தவளைகள் அழிந்ததால் தான், கொசு என்ற நச்சு பூச்சி எப்போது வேண்டுமானாலும் மனித இனத்தையே தாக்கும் வல்லமை பெற்றுவிட்டது.

பழந்தின்னி வௌவால் போலவே, கொசுக்களை உண்டுவாழும் ஒரு வகை சிறு வௌவால்கள் நம் ஊரில் பாழடைந்த கோயில்களிலும், மக்கள் நடமாட்டம் இல்லாத வீடுகளிலும் இருந்தது. காலப்போக்கில் அந்த இனம் அழிந்ததும் கொசுக்களின் எண்ணிக்கை பல மடங்கு கூடிவிட்டது. இனி கொசுக்களை எந்த மருந்தைக் கொண்டும் ஒழிக்க முடியாது.

 ஒவ்வொரு மனிதனும், ஆடம்பரத்துக்காக பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும், இந்த உலகில் உள்ள இயற்கையை பாதிக்கிறது. அதில் வாழும் உயிரினங்களைப் பாதிக்கிறது. கடைசியில் மனித சமூகத்தின் எதிர்காலத்தையே இல்லாமல் செய்துவிடும். தினமும் கலர்கலரான, சலவை செய்த ஆடைகள் போடுவது, நல்ல நிலையில் உள்ள உடைகளை வீணாக்குவது, உணவுப்பொருட்களை வீணாக்குவது, தேவையே இல்லாமல் பூக்களை வாங்குவது, ஒரு நாளுக்கு நான்கு உடைகள் உடுத்துவது என ஒவ்வொரு மனிதனும், தினமும் ஆயிரக்கணக்கான லிட்டார் நல்ல தண்ணீரை தங்களின் ஆடம்பர வாழ்வுக்காக தண்ணீரை செலவழித்து, நல்ல நீரை கழிவு நீராக மாற்றுகிறார்கள். உங்களால் இனி எந்தக்காலத்திலும் நல்ல தண்ணீரை உருவாக்க முடியாது.

“தயவு செய்து நல்ல நீரை கழிவு நீராக மாற்றாதீர்கள், நம்முடைய அடுத்த சந்ததியினர் வாழத்தேவையான தண்ணீரை எதிர்காலத்துக்கு விட்டுவையுங்கள்..” என்று ஒவ்வொருவரிடமும் கேட்டு வருகிறார். இவருடைய உரை வீச்சு தொடக்கப்பள்ளி முதல் அண்ணா பல்கலைகழகம் வரை மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
-பெ.சிவசுப்ரமணியம்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [3]
Name : S.v.rangarajan Date :4/22/2017 8:58:35 AM
Miga armayana கட்டுரை
Name : pamo Date :4/8/2017 4:30:12 PM
ஆடம்பரமே அழிவுக்கு அடிப்படை காரணம் ..அருமையான கருத்துக்கள் .
Name : M.Sivaraman Date :4/7/2017 10:35:49 PM
கடவுள் அனைத்தும் படைத்து நல்லதா கேட்டதா என்று ஆராய்ந்து பார்த்தார், மனிதன் படைத்து பணம் மட்டுமே பார்த்தான்...