நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :1, ஜூலை 2010(18:18 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜூலை 2010(18:18 IST)

அடிமைச் சங்கிலி அறுப்போம்...! -கவிஞர் தணிகைச்செல்வன்

கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், காவியக் கவிஞர் வாலி தலைமையில் "தமிழுக்கும் அமுதென்று பேர்' என்கிற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.

கவியரங்கத்தை கவிஞர் மு.மேத்தா தொடங்கி வைத்தார். தொடர்ந்து கவிஞர்கள் பழனிபாரதி, பா.விஜய், தணிகைச் செல்வன், இளம்பிறை, உமாமகேஸ்வரி, தமிழ்தாசன் உள்ளிட்டோர் தங்கள் கவிதைகளை வாசித்தனர்.

ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு கோணத்தில் வாசித்த நிலையில், ஈழத்தைப் பற்றி அதிகம் பேசிய தணிகைச்செல்வனின் கவிதை வரிகள், திரண்டிருந்த மக்களிடம் உணர்வு தாக்கத்தை ஏற்படுத்தின.

அவரது கவிதையிலிருந்து...   

முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய

வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிமீறி

கள்ளக் கொலைசெய்த காட்டுவெறி காண்கிலையோ...! 

பிள்ளைக் கறிகேட்கும் பேயர்களின் பலிகளமாம்

முள்வேலிக்குள் கதறும் மரணஒலி கேட்கலையோ...!

கொள்ளையர்கள் கொடுங்கரத்தில் குமரியர்கள் குமுறுகின்ற

வல்லுறவின் வதைகண்டும் மனசாட்சி வேர்க்கலையோ...!

ஒரு குவளை நீருக்கும், ஒரு கவளம் சோறுக்கும்

இரவலரைப் போல் ஏங்கும் ஈழவரை காண்கிலையோ...!

அய்யோ உலகே ! அய்யகோ பேருலகே !

பொய்யோ உலகசபை ? புனைவுகளோ சபைவிதிகள் ?

கையேந்தி வந்தாரை கரமேந்தி காத்த இனம்

கையேந்துதல் காண்கிலையோ கஞ்சிக்கும் கருணைக்கும்.

எல்லாம் இழந்தோம் இழப்பதற்கு ஏதுமில்லை...

கணவனை இழந்ததாலே கண்ணகி சீற்றம் நியாயம்

துணியதனை இழந்ததாலே துரோபதி சபதம் நியாயம்

தனதுமண் இழந்ததாலே தருமனின் யுத்தம் நியாயம்

அனைத்தையும் இழந்த எங்கள் ஆவேசம் நியாயம் ! நியாயம் !

தாக்குண்டால் புழுக்கள்கூட தரைவிட்டுத் துள்ளும் , கழுகு

தூக்கிடும் குஞ்சிகாக்க துடித்தெழும் கோழி; சிங்கம்

மூர்க்கமாய் தாக்கும்போது முயல்கூட எதிர்த்து நிற்கும்...

சாக்கடைப் கொசுக்களா நாம் ? சரித்திர சக்கரங்கள் !

சரித்திரம் சுழலும்போதும் சமுத்திரம் குமுறும்போதும்

பொறுத்தவன் பொங்கும்போதும் புயல்காற்று சீறும்போதும்

பறித்தவன் ஆதிக்கத்தைப் பசித்தவன் எதிர்க்கும்போதும்

மறித்தவன் வென்றதுண்டா ? மறுத்தவன் நின்றதுண்டா?

புவியோடி படர்ந்திருக்கும் நவகோடி தமிழினமே ! 

நீ , இழக்கப்போவது அடிமைச் சங்கிலிகளைத்தான்-

பெறப்போவதோ ஒரு பேருலகம் ! ஒரு பொன்னுலகம் !

அதுதான் தமிழுலகம்...!

தொகுப்பு : இளைய செல்வன் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [45]
Name : வெற்றி Date :6/23/2017 6:48:34 PM
நெஞ்சு பொறுக்குதில்லையே நீதி மறுத்த கயவர்களை காணும் போது. சொல் விடுத்து வாழ் வீச உள்ளம் துடிப்பினும் இருவருக்கும் உள்ள வித்தியாசம் உணர்ந்து கை மறுக்கிறது. இன்னுயிர் துறந்தேனும் உன்னுயிர் காப்பவன் தமிழன். என்றும் அழிய மாட்டன். கொட்டும் வரையும் குனிந்து இருப்போம் என்றேனும் உணர்வாய் நாங்கள் மனிதர்கள் நீங்கள் மிருகங்கள் என்று...
Name : saravanan Date :1/11/2011 6:38:47 PM
ஈழத்து கவிஞன் தீபச்செல்வன் கவிதைகள் தமிழ் ஈழத்தில் என்ன நடக்கிறது என்பதை சொல்கிறது.
Name : E.Paramasivan Date :10/27/2010 12:06:55 AM
தணிகைச்செல்வனுக்குள் தணியாத தீ இது. ==================================செங்கீரன் தணிகைச்செல்வனுக்குள் தணியாத தீ இது! கணிப்பொறி ஆளும் தமிழனே! சூழ்ச்சியின் எலிப்பொறிக்குள்ளா நீ எரிந்து போவது? கணியன் பூங்குன்றன் சொன்ன பூவின் சொற்கள் தீயில் பொசுக்கப்படும் தீமைக்காட்சிக்கள் தினம் தினம் ஈழத்தில் நடந்த ஈனம் ஈரத்தமிழன் என்று பறை சாற்றிக்கொண்ட‌ "தமிழன்"களுக்குள் எதையும் உயிர்ப்பிக்க வில்லையே! கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே தோன்றிவிட்டதாக‌ கொட்டு முழக்கிக்கொண்டிருக்கும் ஓ!என்னருமைத் தமிழனே! உன் கூடவோ அல்லது அத‌ற்கு முந்தியோ முளைத்த‌ க‌ர‌ப்பான் பூச்சி கூட‌ த‌ன் அத்த‌னை மீசைக‌ளிலும் ஆவேச‌ம் பூசிக்கொண்டு எந்திர‌த்துப்பாக்கிக‌ளாய் அல்ல‌வா எழுந்து நிற்கும்? அடாவடித்தனங்களைக்கண்டு சிலிர்த்துக்கொள்ளாதவனுக்கு சரித்திரத்தில் வெறும் காலியான பக்கங்களே மிச்சமாக இருக்கும். "ஆமை" அவ‌தார‌ங்க‌ள் கூட‌ தேவ‌ர்க‌ளைக் காக்க அஸ்திர‌ங்க‌ளை ஏவும் போது த‌மிழா நீ ஏன் இப்ப‌டி அசிங்க‌மான‌ அர‌சிய‌லின் அங்க‌வ‌ஸ்திர‌த்துக்குள் ம‌ட‌ங்கிப்போனாய்? ஈழ‌ம் என்றைக்குமே
Name : manivannan Date :9/26/2010 11:20:49 PM
சினிமாவுக்கு கவி எழுதி மேடையில் படர்ந்த புழுதி பாடுவதுதான் தொழில் தமிழுக்கு ஏது எழில் இவர்கள் என்ன புதுவை இரத்தினதுரைய களம் கண்டு கவிபாட.... நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி உன் தமிழ் நாட்டில் .... வார்த்தை இல்லை திட்டுவதற்கு
Name : manivannan Date :9/26/2010 11:18:19 PM
சினிமாவுக்கு கவி எழுதி மேடையில் படர்ந்த புழுதி பாடுவதுதான் தொழில் தமிழுக்கு ஏது எழில் இவர்கள் என்ன புதுவை இரத்தினதுரைய களம் கண்டு கவிபாட.... நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி உன் தமிழ் நாட்டில் .... வார்த்தை இல்லை திட்டுவதற்கு எருமை மாடுகளின் முதுகில் மழை பெய்தது மழை எங்கோ பசுந்தரையிலும் பொழிந்தது விளைநிலங்கள் விலையாகி விளையாமல் தொலைகின்றது எங்கள் உயிர் தமிழுடன்
Name : mutharasu Date :9/25/2010 11:09:57 AM
tamilanai kolla thunai pona kalaignar natathiya maanattil ikkavithaiyai velippaduthiyathu vetkakedu.
Name : அல்லையூர் Date :7/30/2010 2:06:38 AM
தமிழ்நாட்டு தமிழனின் தன்மானம் இன்னும் தூங்கவில்லை என்று தணிகைச்செல்வன் தன் கவிதையில் மீண்டும் ஒருமுறை சொல்லியிருக்கின்றார்.
Name : eelavan Date :7/29/2010 7:20:11 PM
மற்ற கவிகளுக்கு ஈழத்தில் நடந்தது தெரியவில்லை.தணிகை செல்வத்துக்கு மனமார வாழ்த்துக்கள் எங்கள் நிநைப்புடன் வாழ்ந்து கொண்டு இருப்பதற்க்கு
Name : r.nadarajah Date :7/26/2010 3:01:51 AM
உங்கள் கவிதைக்கு என்னது பாராட்டுகள் சுவிஸ்
Name : siva Date :7/24/2010 6:10:17 AM
இன்னும் உறங்கிகொண்டிருக்கும் தமிழர்களையும் தட்டி எழுப்பி இருக்கிறது உன் கவிதை வாழ்க பல்லாண்டு
Name : paran Date :7/23/2010 3:22:11 PM
நன்றி திருவாளர் தணிகைச்செல்வன் அவர்களே. உங்களின் உணர்வுகளை தலை வணங்கி வாழ்த்துகிறேன் .
Name : PIRAPANCHAN Date :7/22/2010 2:39:12 PM
நல்ல உணட்சி கவிதை,.வாழ்த்துக்கள்.!
Name : para Date :7/21/2010 4:35:50 PM
தமிழகமே நீ உறங்கவில்லை என் நன்றி திரு இளையசெல்வன்
Name : prem Date :7/17/2010 12:25:00 PM
நன்றி திருவாளர் தணிகைச்செல்வன் அவர்களே. உங்களின் உணர்வுகளை தலை வணங்கி வாழ்த்துகிறேன் .
Name : aathavan Date :7/16/2010 4:24:01 PM
தீயில் கருகிய நாயகர்களுடன் தமிழகத்தின் மானமும் கருகியதோ என நினைத்தேன் அனால் இறக்கவில்லை மானம், மீண்டும் மீண்டும் உன் படைப்புக்கள் தேவை தமிழக தமிழனின் மானத்தை உயர்த்த - நன்றி
Name : ramesh Date :7/14/2010 10:47:44 PM
தணிகை செல்வன் அண்ணா ! உங்களை போல் மாவட்டத்திற்கு ஒருவர் இருந்திருந்தால் நாங்கள் எப்போதே தமிழ் ஈழம் கண்டிருப்போம் .
Name : sivakumar Date :7/12/2010 1:43:57 PM
ஜால்ராக்களுக்கு மாதியில் ஒரு போர் முரசு
Name : manickam Date :7/10/2010 10:42:36 PM
கவிதையோடு நிற்காமல் ஈழம் வெல்ல தயாராகுங்கள் .தாய்மொழி தமிழனை மட்டும் ஒன்ருனைந்தால் மட்டும் நல்லது .
Name : suganthy Date :7/10/2010 9:25:10 PM
மிக நல்ல சக்திவந்த கவிதை ..எமது உணர்வை கவிவடிவமக்கியுள்ளார் .ஒரு நல்ல முடிவிற்கு ஒன்ருசெருவோம் ....
Name : Valavan Date :7/10/2010 4:58:38 AM
வணக்கம், தமிழனின் பேரவலத்தை கவிதை வதில் வடித்து வாசித்த உங்களுக்கு எனது நன்றி ,கவிஞரே, இதை கருணாநிதி எதிர் பார்த்திருக்க மாட்டார்..வளவன்
Name : சுரேஸ் Date :7/10/2010 12:21:10 AM
அருமையான ஒரு ஆளமான கவிதை இது. இந்த கவிதையை வாசிக்கும்போது கவிவரிகளின் கருத்துக்களால் சில சில இடங்களில் உணர்ச்சியின் பெருக்கால் என் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள்... ஆ ...மிக அருமை அருமை. நன்றி அண்ணா நன்றி .....உணர்ச்சிக்கவிஞனே....நீ வாள்க !!
Name : Er.L.C.NATHAN Date :7/9/2010 7:01:03 PM
mika arumayaana kavithai, kanneeeeeeraaaal udal nanainthean.
Name : ranjana france Date :7/9/2010 4:01:12 AM
நன்றி திரு தணிகைசெல்வன் அவர்களே மாலையில் மறைந்த கதிரவன் மறுபடியும் வந்து உதிப்பான் .மறைந்த எம் உறவுகள் மறுபடியும் வந்து உதிப்பார்கள் . நாளை மலரும் பொன்னுலகில் .
Name : arul Date :7/8/2010 1:47:14 AM
நன்றி திருவாளர் தணிகைச்செல்வன் அவர்களே. உங்களின் உணர்வுகளை தலை வணங்கி வாழ்த்துகிறேன் .
Name : manoj Date :7/7/2010 5:14:57 PM
இலங்கயனாய் வாழும் எனக்கு புரிகிறது கவிஞ்சனின் வேட்கை. ஒரு போதும் வாசித்திராத ஒரு திருப்தி இகவியில் கிடைத்தது எனக்கு. நன்றி நக்கீரன்
Name : P.J.GOPI Date :7/7/2010 3:27:56 PM
நன்றி தமிழா தணிக்கைக்கு பயப்படாத தணிகை செல்வா, ஒரே ஒரு தமிழனாவது துணிச்சலா இருந்திருக்கிறான் என்பதற்கு தணிகை செல்வன் அண்ணன் ஒரு சாட்சி.மிக நல்ல கவிதை . கண்ணீரை வரவழைத்தது. நல்ல உணர்வாளர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு தமிழ்செல்வன் அண்ணன் ஒரு சாட்சி. வாழ்க உணர்வாளர்கள்.. நன்றி....சர்மாநகர்...
Name : thillesh Date :7/7/2010 2:14:45 PM
நன்றி தமிழா உன் பணி தொடரட்டும் உன் வரிகள் விளைமதிக்க முடியாதவைகள். (தென்தமிழீழம் )
Name : p.amu Date :7/7/2010 1:14:31 AM
மிக்க நன்றி .நிங்கள் இப்படி ஒரு கவிதையை தரப்போகிரிர்கள் என்று முதல்வருக்கு தெரியாதோ ?... விட்டிருக்கமாட்டரே ..அதுதான் ..ஈழத்தின் நினைவுகள் உங்களைப் போன்றோருக்கு இருப்பதை நினைத்து மிகமிக மகிழ்ச்சி நன்றிகள் ...
Name : Rajacon Date :7/5/2010 8:06:59 PM
தமிழா, தணிக்கைக்கு பயப்படாத தணிகை செல்வா, உன்னுடைய நேர்மைக்காக உன்னுடைய துணிச்சலுக்காக உன்னை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். கௌரவமான தமிழுலகம் வேண்டி அதற்காக உயிர்கொடுத்த ஆத்மாக்களும் உன்னை வாழ்த்தும் ஆசிர் வாதிக்கும். நன்றி, புலேந்திரன், ஆஸ்திரேலியா.
Name : R.RAJIVGANTHI Date :7/5/2010 7:15:48 PM
TAMIL
Name : jay Date :7/5/2010 9:57:34 AM
வெறும் ஜால்ரா அடித்த கூட்டத்திற்கு மத்தியிலும் துணிச்சலாய் இனத்திற்காய் குரல் கொடுத்த கவிஞருக்கு என் அன்பு கோடி நன்றிகள்
Name : PUSHPANATHAN Date :7/5/2010 3:09:54 AM
கோடி நன்றிகள் உங்கள் கவிதைக்கும் உங்கள் துணிச்சலுக்கும் . புஷ்பநாதன் பிரான்ஸ்
Name : Nageswaran -malaysia Date :7/4/2010 8:44:11 PM
ஒரே ஒரு தமிழனாவது துணிச்சலா இருந்திருக்கிறான் என்பதற்கு தணிகை செல்வன் அண்ணன் ஒரு சாட்சி. வெறும் ஜால்ரா அடித்த கூட்டத்திற்கு மத்தியிலும் துணிச்சலாய் இனத்திற்காய் குரல் கொடுத்த கவிஞருக்கு நன்றிகள் கோடி
Name : ganesh Date :7/4/2010 8:16:50 AM
தமிக நல்ல கவிதை . கண்ணீரை வரவழைத்தது தனிகை அண்ணனுக்கு கோடி நன்றிகள்
Name : Dharumi Date :7/4/2010 7:01:04 AM
சகோதரனே நீ உணர்ச்சி உள்ள தமிழ் தாயின் உண்மையான தமிழன்.உண் உணர்வு துடிக்கின்றது தமிழனாக அரசியல் செய்யும் அயோக்கின் அல்ல அதனால் உண் உணர்ச்சி கவிதையாக கொந்தழிப்பை கொட்டி இருக்கின்றது.நீ வாழ்க,உண் தமிழ் உணர்ச்சி வழர்க,
Name : ravi Date :7/4/2010 12:05:17 AM
தனிகைசெல்னுக்கு கோடி நன்றிகள்
Name : usanthan Date :7/4/2010 12:02:04 AM
வெறும் ஜால்ரா அடித்த கூட்டத்திற்கு மத்தியிலும் துணிச்சலாய் இனத்திற்காய் குரல் கொடுத்த கவிஞருக்கு என் அன்பு கோடி நன்றிகள்
Name : tamil Date :7/3/2010 6:28:15 AM
உண்மைஜின் தரிசனம் கூறும் கவி
Name : krishnaraj97 Date :7/2/2010 11:18:40 AM
அருமை அருமை ரத்தம் சூடாகுதே . தமிழர் நிலை கண்டு. தனிகைசெல்வனுக்கு கோடி nandri
Name : eelavelan Date :7/2/2010 10:01:31 AM
கவிகளும் கட்டுரைகளும் எமக்காக பரிதாபம் கொள்கையில் மனம் வெதும்புகின்றது,ஆனால் எல்லாம் விளங்கியும் ஒன்றுமே நடவாதது போல் இந்தியா கண்முடி மேலும் நம்மவர்களை காயப்படுத்துகின்றதே பலவழிகளிலும் இலங்கை அரசுக்கு கம்பளம் விரித்து கைலாகு கொடுக்கின்றதே.அதற்கு முதல்வரின் குழுக்களும் சென்று பல்லிளித்து திரும்புகின்றனவே.எங்கே எவரிடம் நான் சொல்லி அழுவது தெரியவில்லையே?
Name : VIJAY Date :7/2/2010 3:45:34 AM
ஒரே ஒரு தமிழனாவது துணிச்சலா இருந்திருக்கிறான் என்பதற்கு தணிகை செல்வன் அண்ணன் ஒரு சாட்சி. வெறும் ஜால்ரா அடித்த கூட்டத்திற்கு மத்தியிலும் துணிச்சலாய் இனத்திற்காய் குரல் கொடுத்த கவிஞருக்கு நன்றிகள் கோடி.
Name : Er.L.C.NATHAN Date :7/2/2010 12:34:48 AM
மிக நல்ல கவிதை . கண்ணீரை வரவழைத்தது .
Name : eelanila Date :7/1/2010 6:57:11 PM
உண்மையின் உணர்வுகள்
Name : Prabagaran.m Date :7/1/2010 5:39:24 PM
நல்ல உணர்வாளர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு தமிழ்செல்வன் ஒரு சாட்சி. வாழ்க உணர்வாளர்கள்.
Name : sasi Date :7/1/2010 4:36:41 PM
கோடோகோடி நன்றிகள் என் அன்பு அண்ணனுக்கு இந்த கவிதையைப்படிக்கும்போது கண்கள் கலங்குகின்றது .