நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :6, மே 2017(12:23 IST)
மாற்றம் செய்த நாள் :6, மே 2017(12:23 IST)

தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
ஆரூர் தமிழ்நாடன்

கவிக்கோ நூல்வெளியீட்டு விழாவை சிறப்பாகத் தொகுத்து வழங்கிய நண்பர் தஞ்சை இனியன், தஞ்சை பிரகாஷின் ‘என்றோ எழுதிய கனவு’என்ற கவிதை நூலை, கவிஞர் ரவிராஜின் கை வழியாக என்னிடம் கொடுத்தார். பிரகாஷின் நினைவுகள் மனதில் நெகிழ்வாய்ச் சுழன்றன.

*
80-களின் இறுதியில், தஞ்சை பெசன்ட் ஹாலில் கவிஞர் சுகனின் கவிதை நூல் வெளியிட்டு விழாவில்தான், அவரை முதன்முதலில் பார்த்தேன். உயர்ந்த ஆஜானுபாகுவான தோற்றம். காரல் மார்க்ஸைப் போன்ற தாடி. நேர்த்தியான நாசி. விரிந்து சுடர்விடும் கண்கள். அடர்ந்த புருவம். வழுக்கைத் தலை. சிவந்த நிறம். பட்டுவேட்டி, அதற்குப் பொருத்தமில்லா வண்ணத்தில் சட்டை. ஓசோவுக்கு சித்தப்பா பையன் மாதிரியான சாயல். ஒரு யோகியைப் போல் காணப்பட்டார். பார்த்த மாத்திரத்திலேயே பிரகாஷ் மீது அன்பு சுரந்தது. அது அவர் மைக்கைப் பிடிக்கும்வரைதான்.

*
சுகனை வாழ்த்திப் பேசவந்த பிரகாஷ்,

”இந்தத் தொகுப்பில் கவிதையே இல்லை. வைரமுத்து, மேத்தா, அப்துல்ரகுமான் போன்றவர்களைப் பார்த்துக் குப்பையாக எழுதியிருக்கிறார்” என்று தன் போக்கில் பேசிக்கொண்டே போனார்.

எனக்குக் கோபம் வந்தது. அடுத்து பேசிய நான், வைரமுத்து, மேத்தா, ரகுமான் போன்றோரின் கவிதைகளை எல்லாம் மேற்கோள்காட்டிவிட்டு, பிரகாஷின் பேச்சு உளறல் என்றேன். உடனே ஒரு ஏழெட்டுபேர் எழுந்து, எனக்கு எதிராகக் குரல்கொடுத்தனர். உடனே என்னோடு இருந்த என் நண்பர்கள் விஜயராகவன், பையூர் பாநலவேந்தன், புத்தகன், செல்லதுரை போன்றோர் எழுந்து, அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். எல்லோரையும் நானும் பிரகாஷும்தான் சமாதானப்படுத்தி அமரவைத்தோம். அந்தவிழா முடிந்ததும், நானும் பிரகாஷும் கைகுலுக்கிக்கொண்டோம். அவர் விடைபெறவில்லை. திருவாரூருக்குக் கடைசி பேருந்தில் நான் புறப்படும்வரை கூட இருந்து என்னை அன்போடு வழியனுப்பிவிட்டுத்தான் சென்றார்.

*
அடுத்த இரண்டாம் நாள் என்னைத் தேடி திருவாரூருக்கு வந்துவிட்டார் பிரகாஷ். இரண்டுநாள் என்னோடு தங்கிவிட்டார். நடந்தும் அமர்ந்தும் கிடந்தும் பேசிக்கொண்டே இருந்தோம். அவரோடு உரையாடுவது பேரின்ப அனுபவம். பின்னர் அவர் என்னைத்தேடி திருவாரூர் வருவதும், நான் அவரைத்தேடித் தஞ்சை செல்வதும் வழக்கமாகிவிட்டது. என்னைவிடவும் அவர் மீது உயிரையே வைத்து அவரது எழுத்தைக் கொண்டாடுபவர்கள் பலர். ஆனால் எனக்கும் பிரகாஷுக்குமான நட்பு வேறு மாதிரி. ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொண்டிருந்தோம். ஒருவர் எழுத்தை ஒருவர் கடைசிவரை அங்கீகரிக்காமலே, காதலர் போல் கட்டுண்டு கிடந்தோம்.

*
நான் சென்னைக்கு வந்தபின் சந்திப்பு குறைந்தது. எனினும் அவர் சென்னைக்கு வந்து சந்திப்பார். என்னையும் அழைத்துக்கொண்டு யூமாவாசுகி, ராஜமார்த்தாண்டன் போன்ற அவரது சென்னை இலக்கிய நண்பர்களைத் தேடிச்சென்று சந்திப்பார். வீட்டில் ஓய்வெடுத்துவிட்டுப் போய்விடுவார். குண்டு குண்டான அழகிய எழுத்தில், கடிதம் என்ற பெயரில் அடிக்கடி அவர் அன்பைப் பெய்வார். அவர் உடல்நலக் குறைவோடு சென்னை அரும்பாக்கம் இயற்கை மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று கேள்வியுற்றேன். அவரை சந்திக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், அவர் என்னைத் தேடி நக்கீரன் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது எங்கள் அலுவலகம், பச்சையப்பன் கல்லூரிஅருகே ஹாரிங்டன் சாலையில் இருந்தது. வேலையை அப்படியே போட்டுவிட்டு, மாடியிலிருந்து இறங்கிவந்தேன்.

*
பிரகாஷ், வழக்கமான வசியப் புன்னகையோடு காத்திருந்தார். ’பார்க்கனும் போல இருந்தது. வந்துட்டேன். இயற்கை மருத்துவம் போய்க்கிட்டிருக்கு. அங்க அடைச்சி வச்சிருந்தாங்க. தப்பிச்சிட்டேன்ல’ என்று சிரித்தார். ’ஏன் இப்படி செஞ்சீங்க. போன் பண்ணியிருந்தால் நான் வந்திருப்பேன்ல. உடல்நிலை எப்படிஇருக்கு?’ என்றேன். அதற்கும் சிரித்தபடியே ‘உடம்பு அது வேலையைக் காட்டுது. நாம் நம்ம வேலையை அதுக்கிட்ட காட்ட வேணாமா?’ என்றார். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அருகே இருந்த ஓட்டலுக்குச் சென்றோம். அவர் தம்ஸ் அப் பிரியர்.
என்ன சாப்பிடுகிறீர்கள் என்றேன். என்ன வேணும்னாலும் சாப்பிடலாம் என்று சிரித்தவர், ஸ்பெஷல் தோசை என்றார். சர்க்கரை போடலாம் என்றபடி காபியும் சுடச்சுட ரசித்துக் குடித்தார். பின்னர் அரும்பாக்கத்துக்கு ஆட்டோ பேசி அனுப்பிவைத்தேன். அன்பாகக் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு, கையசைத்தபடியே புறப்பட்டார்.

*
அடுத்த வாரம் திருவாரூர் சென்றிருந்தேன். அப்போதுதான் பிரகாஷ் மறைந்தார் என்ற தகவல் வந்தது. நம்பமுடியவில்லை. இளவல் திருவாரூர் ஜெயகாந்தனையும் என் தம்பி அண்ணாதுரையயும் அழைத்துக்கொண்டு கனத்த மனதோடு தஞ்சைக்குப் புறப்பட்டேன்.

அவரது இல்லத்தில் கண்ணாடிப் பேழையில் வழக்கமான பட்டுவேட்டி சட்டையில் சயனித்திருந்தார். அதே சாந்தம் அவர் முகத்தில். அதே புன்னகை அவர் உதட்டில். அவரது உடல் ஊர்வலமாக சர்ச்சுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிரார்த்தனைப் பாடல்கள் பாடினார்கள். தனது மரணம்பற்றி எழுதும் கலீல் கிப்ரான், ’மெளனமே நடந்துசெல்வது போல் என் இறுதி ஊர்வலம் செல்லவேண்டும்’ என்பான். அதேபோல்தான் இலக்கிய நண்பர்கள் அணிவகுக்க, பிரகாஷின் இறுதி ஊர்வலம் சென்றது. எவரும் யாரோடும் பேசிக் கொள்ளவில்லை. பிரகாஷின் நெருங்கிய சகாக்களான, ந.விச்வநாதன், தஞ்சாவூர் கோபாலி போன்றோர் துயரப் பதுமைகளாய்க் காட்சியளித்தனர்.

*
முன்னாள் அமைச்சர் உபயதுல்லா போன்றோரோடு நானும் அஞ்சலி உரைக்கு அழைக்கப்பட்டேன். அப்போது நான்...’கவலையே இல்லாமல் வாழ்க்கையை எதிர்கொண்ட பிரகாஷ், அதே மனோநிலையோடு தன் மரணத்தை எதிர்கொண்டிருக்கிறார். அவரது மரணமும், இறுதி ஊர்வலமும் என்னைப் பொறாமை கொள்ளச் செய்கிறது. இப்படியொரு மரணம்தான் எனக்கும் வேண்டும் ’ என்றேன். பிரகாஷ் என் நினைவில் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறார். ஏகாந்தமாய்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :