நக்கீரன்-முதல்பக்கம்
படித்ததும் பிடித்ததும்

இருளானதா? ஒளிமயமா?
.....................................................................
வரலாற்றை புரட்டிப் போட்ட இயக்கம்!
.....................................................................
பெரியார் இல்லேன்னா நம்ம கதி என்னவாகியிருக்கும்னேன்!-சின்னகுத்தூசி
.....................................................................
இளைய தலைமுறைக்கு புரியவைப்போம்!
.....................................................................
திராவிட இயக்க சாதனைகளில் அ.தி.மு.க.வுக்குபங்குண்டா?
.....................................................................
அரைநூற்றாண்டும் அரசியல் நாகரிகமும்
.....................................................................
திராவிட ஆட்சி ஏன் தேவை?
.....................................................................
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...
.....................................................................
ஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல்!
.....................................................................
அனைவருக்கும் நீதி! சமத்துவ சகவாழ்வு!
.....................................................................
மாநில சுயாட்சியின் குரல் மானுட மேம்பாட்டுச் செயல்!
.....................................................................
திராவிடத்தின் சமூக -பொருளாதார சாதனை!
.....................................................................
திராவிட ஆட்சியில் பெண்கள் நிலை!
.....................................................................
திராவிட ஆட்சியில் ஒரு கிராமம்!
.....................................................................
திராவிடத்தால் எழுந்தோம் என்பது தீர்க்கமானகல்வெட்டு
.....................................................................
அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும்
.....................................................................
தமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும்
.....................................................................
ஐம்பதாண்டு கழக ஆட்சிகள் -சு.பொ.அகத்தியலிங்கம்
.....................................................................
இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! -பேராசிரியர்
.....................................................................
வறட்சி அரசியலும் வற்றாத கொள்ளையும்!
.....................................................................
திராவிட இயக்கத்தின் ""மைனாரிட்டி'' ஆட்சி
.....................................................................
பெரியாரின் இலக்கை திராவிட ஆட்சி எட்டியதா?
.....................................................................
காமராஜர் ஆட்சியே திராவிட ஆட்சிதான்!
.....................................................................
கொள்கைகளை மறைத்த சுயநலம் -பேராசை!-டாக்டர் செந்தில்
.....................................................................
திராவிட இனவுணர்வே காலத்தின் குரல்!-பழ.கருப்பையா
.....................................................................
திராவிட அரசியல் தமிழர்களுக்கு இனியும் தேவையா?
.....................................................................
தேர்தல் அரசியலில் மாயமான இலட்சியங்கள்!
.....................................................................
ஐரோம் ஷர்மிளாவுக்கு வழிகாட்டும் அண்ணா..!
.....................................................................
திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடருமா?-அருணன்
.....................................................................
திராவிடத்தால் வாழ்ந்தோம் -மனுஷ்ய புத்திரன்
.....................................................................
'களப்பிரர்' ஆட்சி: சில உண்மைகள்!
.....................................................................
அண்ணன் எங்கள் குடும்பத்தின் ஆலமரம் - ஆர். குருசாமி
.....................................................................
மாவலி பதில்கள்! - 98
.....................................................................
மாவலி பதில்கள்! - 97
.....................................................................
மாவலி பதில்கள்! - 96
.....................................................................
மாவலி பதில்கள்! - 95
.....................................................................
மாவலி பதில்கள்! - 94
.....................................................................
மாவலி பதில்கள்! - 93
.....................................................................
மாவலி பதில்கள்! - 92
.....................................................................
மாவலி பதில்கள்! - 91
.....................................................................
மாவலி பதில்கள்! - 90
.....................................................................
மாவலி பதில்கள்! - 89
.....................................................................
மாவலி பதில்கள்! - 88
.....................................................................
மாவலி பதில்கள்! - 87
.....................................................................
மாவலி பதில்கள்! - 86
.....................................................................
மாவலி பதில்கள்! - 85
.....................................................................
மாவலி பதில்கள்! - 84
.....................................................................
மாவலி பதில்கள்! - 83
.....................................................................
மாவலி பதில்கள்! - 82
.....................................................................
மாவலி பதில்கள்! - 81
.....................................................................
மாவலி பதில்கள்! - 80
.....................................................................
மாவலி பதில்கள்! - 79
.....................................................................
மாவலி பதில்கள்! - 78
.....................................................................
மாவலி பதில்கள்! - 76
.....................................................................
மாவலி பதில்கள்! - 75
.....................................................................
மாவலி பதில்கள்! - 74
.....................................................................
மாவலி பதில்கள்! - 73
.....................................................................
மாவலி பதில்கள்! - 72
.....................................................................
மாவலி பதில்கள்! - 71
.....................................................................
மாவலி பதில்கள்! - 70
.....................................................................
மாவலி பதில்கள்! - 69
.....................................................................
மாவலி பதில்கள்! - 68
.....................................................................
மாவலி பதில்கள்! - 67
.....................................................................
மாவலி பதில்கள்! - 66
.....................................................................
மாவலி பதில்கள்! - 65
.....................................................................
மாவலி பதில்கள்! - 64
.....................................................................
மாவலி பதில்கள்! - 63
.....................................................................
மாவலி பதில்கள்! - 62
.....................................................................
மாவலி பதில்கள்! - 61
.....................................................................
மாவலி பதில்கள்! - 60
.....................................................................
மாவலி பதில்கள்! - 59
.....................................................................
மாவலி பதில்கள் - 58!
.....................................................................
மாவலி பதில்கள்! - 57
.....................................................................
மாவலி பதில்கள்! - 56
.....................................................................
மாவலி பதில்கள்! - 55
.....................................................................
மாவலி பதில்கள்! - 54
.....................................................................
மாவலி பதில்கள்! - 53
.....................................................................
மாவலி பதில்கள்! - 52
.....................................................................
மாவலி பதில்கள்! - 51
.....................................................................
மாவலி பதில்கள்! - 50
.....................................................................
மாவலி பதில்கள்! - 49
.....................................................................
மாவலி பதில்கள்! - 48
.....................................................................
மாவலி பதில்கள்! - 47
.....................................................................
மாவலி பதில்கள்! - 46
.....................................................................
மாவலி பதில்கள்! - 45
.....................................................................
மாவலி பதில்கள்! - 44
.....................................................................
மாவலி பதில்கள்! - 43
.....................................................................
மாவலி பதில்கள்! - 42
.....................................................................
மாவலி பதில்கள்! - 41
.....................................................................
மாவலி பதில்கள்! - 40
.....................................................................
மாவலி பதில்கள்! - 39
.....................................................................
மாவலி பதில்கள்! - 38
.....................................................................
மாவலி பதில்கள்! - 37
.....................................................................
மாவலி பதில்கள்! - 36
.....................................................................
மாவலி பதில்கள்! - 35
.....................................................................
மாவலி பதில்கள்! - 34
.....................................................................
மாவலி பதில்கள்! - 33
.....................................................................
மாவலி பதில்கள்! - 32
.....................................................................
மாவலி பதில்கள்! - 31
.....................................................................
மாவலி பதில்கள்! - 29
.....................................................................
மாவலி பதில்கள்! - 28
.....................................................................
மாவலி பதில்கள்! - 27
.....................................................................
மாவலி பதில்கள்! - 26
.....................................................................
மாவலி பதில்கள்! - 25
.....................................................................
மாவலி பதில்கள்! - 24
.....................................................................
மாவலி பதில்கள்! - 23
.....................................................................
மாவலி பதில்கள்! - 22
.....................................................................
மாவலி பதில்கள்! - 21
.....................................................................
மாவலி பதில்கள்! - 20
.....................................................................
மாவலி பதில்கள்! - 19
.....................................................................
மாவலி பதில்கள்! - 18
.....................................................................
மாவலி பதில்கள்! - 17
.....................................................................
மாவலி பதில்கள்! - 16
.....................................................................
மாவலி பதில்கள்! - 15
.....................................................................
மாவலி பதில்கள்! - 14
.....................................................................
மாவலி பதில்கள்! - 13
.....................................................................
மாவலி பதில்கள்! - 12
.....................................................................
மாவலி பதில்கள்! - 11
.....................................................................
மாவலி பதில்கள்! - 10
.....................................................................
மாவலி பதில்கள்! - 9
.....................................................................
மாவலி பதில்கள்! - 8
.....................................................................
மாவலி பதில்கள்! - 7
.....................................................................
மாவலி பதில்கள்! - 6
.....................................................................
மாவலி பதில்கள்! - 5
.....................................................................
மாவலி பதில்கள்! - 4
.....................................................................
மாவலி பதில்கள்! - 3
.....................................................................
மாவலி பதில்கள்! -2
.....................................................................
மாவலி பதில்கள்!
.....................................................................
ஆசிரியர் நக்கீரன் கோபாலின் நையாண்டி பதில்கள்
.....................................................................
M.S.V. இசைக்கு வயதும் இல்லை, மரணமும் இல்லை
.....................................................................
ஹனீபாவிற்கான முக்கியத்துவம் குறைந்ததில்லை!
.....................................................................
கஸாலித்துவம்
.....................................................................
கண்ணகி வழிபாட்டை உலகமயமாக்கும் முயற்சி
.....................................................................
அண்ணன் காட்டிய வழியம்மா - பெ.கருணாகரன்
.....................................................................
ஒரு ரசிகனின் போராட்டம்
.....................................................................
வெரைட்டி ஹால் டாக்கீஸ்”ன் சோக வரலாறு
.....................................................................
வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா
.....................................................................
மலையாள திரைப்பட தந்தை - தமிழர்
.....................................................................
அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும்...
.....................................................................
திராவிடர் இயக்கம்- நோக்கம், தாக்கம், தேக்கம்
.....................................................................
கும்கி - இது ஒரு கண்மூடித்தனமான சினிமா!
.....................................................................
கல்வி போராளி மேரியம்மா!
.....................................................................
நடிகனின் பயணம்!
.....................................................................
புத்துலகின் திறவுகோலாய் ஒரு புத்தகம்
.....................................................................
எழுத்துலக ஹீரோ ஜெயகாந்தன்!
.....................................................................
இதுவல்லவா இலக்கியம்! இவரல்லவா எழுத்தாளர்!!
.....................................................................
தப்பை தப்பாக செய்யும் தனியார் பள்ளிகள்.
.....................................................................
அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை
.....................................................................
மீசைக்காரர்களின் கதை (இந்தியா டுடே )
.....................................................................
கண்ணீர் பட்டாசு
.....................................................................
புலனாய்வுப் புலி! - 'இந்தியா டுடே' புகழாரம்
.....................................................................
காதலாகிக், கசிந்துருகிப், பின் அட்டைப்பெட்டி...
.....................................................................
வெங்காய விலையும் , வெட்டி விவசாயமும்
.....................................................................
மொழி மானம் - ம.இலெ.தங்கப்பா
.....................................................................
கேட்காத தூரத்து எதிரொலி !
.....................................................................
இருளில் ‘இருளர்’ பழங்குடிகள் !
.....................................................................
தமிழ் இனி மெல்லச் சாகும்! விழித்திடு தமிழா !
.....................................................................
மானத்தி அவள்; தமிழச்சி!!
.....................................................................
நீ வந்த நாளும் நெஞ்சார்ந்த எதிர்பார்ப்பும்
.....................................................................
வலைப்பூ ,முகநூல் நண்பர்கள் நினைத்தால்...
.....................................................................
என் இனிய யாழ்ப்பாணமே! போய் வருகிறேன்
.....................................................................
எந்திரன் - அட்டகாசம்
.....................................................................
ரவிவர்மன் எழுதாத கலையோ சந்திரபோஸ் மரணம்
.....................................................................
மனதோடு பேசிய சொர்ணலதா
.....................................................................
ராக்கிங் சைத்தான்களும் & ஏழை மாணவியின்...
.....................................................................
23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்- வெறோனிக்கா
.....................................................................
போதுமா இந்த ஊதிய உயர்வு?
.....................................................................
தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா
.....................................................................
அரசியலில் ஈடுபடுங்கள்! - யுவகிருஷ்ணா
.....................................................................
’சர்வரோக நிவாரணி’ சுஜாதா
.....................................................................
நம்மள இன்னுமா இந்த ஊரு நம்புது ???
.....................................................................
இந்தி வெறியர்களின் மற்றுமொரு ஆட்டம்
.....................................................................
காதலுக்காக கம்யூனிசம் முழங்குவது கண்டிக்கத்தக்கது
.....................................................................
வரலாறு படைத்த செம்மொழி மாநாடு!
.....................................................................
சிவக்குமாரின் ஆதங்கமும் விடுதலை தலையங்கமும்
.....................................................................
மீசைக்காரரின் மறுபக்கம் பாசக்கார கூட்டம்
.....................................................................
சத்தீஷ்கரில் நடப்பது இனப்படுகொலை அல்லவா?- சென்
.....................................................................
செம்மொழி மாநாடு - ஏன் வரவேற்க வேண்டும்?
.....................................................................
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மைய பாடல் வீடியோ
.....................................................................
தமிழகத்தின் பலம் மிக்கவர் நக்கீரன்கோபால்
.....................................................................
நித்யானந்தம் என்கிற இளைஞன்: ச.தமிழ்ச்செல்வன்
.....................................................................
சாமியார்கள் பெரியார் தொண்டர்களின்....வே.மதிமாறன்
.....................................................................
மாட்டுத்தொழுவத்திலிருந்து... - அ.தமிழ்ச்செல்வன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :17, மே 2017(9:42 IST)
மாற்றம் செய்த நாள் :17, மே 2017(9:42 IST)
டந்த அரைநூற்றாண்டு காலத்தில் தமிழகம் இழந்தவற்றுள் மிகமுக்கியமானது அரசியல் நாகரிகம். அதற்கு முழுமுதல் காரணம், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்தான் என்ற விமரிசனத்தை பா.ஜ.க. தொடங்கி திராவிட இயக்க விமரிசகர்கள் பலரும் முன்வைக்கிறார்கள். குறிப்பாக, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவுக்கு பா.ஜ.க.வுக்கு அழைப்பில்லை என்ற அறிவிப்பைத் தொடர்ந்து திராவிட இயக்கத்துக்கு அதன் சித்தாந்த எதிரிகளால் அரசியல் நாகரிக வகுப்பு நடத்தப்படுகிறது.

உண்மையில், அரசியல் நனி நாகரிகத்தைப் பேணியதில் திராவிட இயக்கத்துக்கு மிகக் காத்திரமான பங்கு இருக்கிறது. ரொம்பவும் பின்னோக்கிப் போகவேண்டாம். கடந்த அரை நூற்றாண்டு அரசியல் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினாலே போதும்.

1967-ல் தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுகிறது தி.மு.க. அண்ணா முதல்வராகிறார். அப்போது இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்த ஏற்பாடாகிறது. அந்தக் காலகட்டத்தில் தி.மு.க.வும் காங்கிரஸும் எதிரெதிர் துருவங்கள். ஆனாலும் அந்த மாநாட்டில் முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் மூவருக்கும் தரப்பட்ட மரியாதையும் கௌரவமும் முக்கியமானவை. அந்த மாநாட்டுக்கு வரவேற்புரை நிகழ்த்தியவர் காமராஜர்; மாநாட்டுக்காகத் தயாரிக்கப்பட்ட கம்பர் சிலையைத் திறந்து வைத்தவர் பக்தவத்சலம்; கலைப்பொருட்காட்சியைத் திறந்து வைத்தவர் ராஜாஜி.அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல்வரான கலைஞர் கருணாநிதியும் அரசியல் நாகரிகம் கடைப்பிடிப்பதில் குறைவைத்து விடவில்லை. தனது மகன் ஸ்டாலினின் திருமணத்துக்கு வரவேண்டுமென காமராஜரை அழைத்தார். அப்போது காமராஜருக்கு உடல்நிலை சரியில்லை. மண்டபத்துக்குள் நடந்துவர இயலாததால், நேரில் வந்து வாழ்த்த வாய்ப்பில்லை என்றார் காமராஜர். ஆனால் தன் வீட்டு விழாவுக்குக் காமராஜரின் வருகை அவசியம் என்று கருதிய கருணாநிதி, அண்ணா சாலையில் உள்ள உம்மிடி பத்மாவதி திருமண அரங்கில் மணமேடை வரை கார் வருவதற்குத் தோதாகச் சிறப்புவழி உருவாக்கிக் கொடுத்தார். அதனை ஏற்று காரிலேயே மேடைவரை வந்து மணமக்களை வாழ்த்திப் பேசினார் காமராஜர்.

எழுபதுகளின் மத்தியில் நாடு முழுக்க நெருக்கடி நிலை அமலில் இருந்த காலகட்டத்தில் காமராஜர் மரணம் அடைந்து விட்டார். அரசியலில் எதிரெதிராகக் களமாடியவர்கள் என்றபோதும் எல்லாவற்றையும் தாண்டி காமராஜருக்கான இறுதி மரியாதைகள் அனைத்தையும் முதல்வர் கலைஞர் கருணாநிதியே முன்னின்று செய்தார் என்பதற்கு அசையாத சாட்சியாக காமராஜர் நினைவாலயம் இருக்கிறது என்றாலும், இன்றும் வாழும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அசையும் சாட்சியங்களாக இருக்கிறார்கள்.

அணுக்க நண்பர்களாக இருந்து அரசியல் எதிரிகளாக மாறிய எம்.ஜி.ஆரும் கலைஞர் கருணாநிதியும்கூட அரசியல் நாகரிகம் பேணுவதில் அக்கறை காட்டியவர்களே. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை நடத்திவந்தார் குமரி அனந்தன். அவருடைய மகள் டாக்டர் தமிழிசையின் திருமண விழாவில் பங்கேற்க வேண்டுமென எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி இருவருக்கும் அழைப்பு விடுத்தார் குமரி அனந்தன். எம்.ஜி.ஆரும் கலைஞர் கருணாநிதியும் ஒரே மேடையில் நின்று, மணமக்களை வாழ்த்திப் பேசியுள்ளனர்.சட்டமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்களுக்குப் பிறகும் எம்.ஜி.ஆரும் கலைஞர் கருணாநிதியும் அருகருகே அமர்ந்து பேசுவதும், பரஸ்பரம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதும் இயல்பான ஒன்றாகவே இருந்திருக்கின்றன. எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் காமராஜரின் படம் வைக்கப்பட்டது. அந்தப் படத்துக்குக் கீழே எந்தப் பொன்மொழி இடம்பெறவேண்டும் என்பதை கலைஞர் கருணாநிதியிடம் கேட்டார் எம்.ஜி.ஆர். அவரது ஆலோசனைக்கேற்ப “"உழைப்பே உயர்வு தரும்'’என்ற பொன்மொழியைப் பொறித்தார் முதல்வர் எம்.ஜி.ஆர். 

எண்பதுகளின் மத்தியில் எம்.ஜி.ஆர். உடல்நிலை பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த தருணத்தில், "நானும் பிரார்த்தனை செய்கிறேன்'’என்ற தலைப்பில் கலைஞர் கருணாநிதி எழுதிய உருக்கமான கடிதம் முக்கியமானது. மேடைகளில் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் அனல்கக்கும் வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டிருந்த காலகட்டத்தில், "எம்.ஜி.ஆரின் உடல்நிலை பற்றி தி.மு.க.வினர் யாரும் மேடைகளில் பேசக்கூடாது' என்று கலைஞர் கருணாநிதி இட்ட உத்தரவு வரலாற்றில் பதிவாகியுள்ளது.எம்.ஜி.ஆர். மரணம் அடைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகத் தனது சுற்றுப்பயணத்தைப் பாதியில் ரத்துசெய்துவிட்டு வந்தார் கலைஞர் கருணாநிதி. அப்போது தி.மு.க. சார்பில் நடக்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒருவார காலத்துக்கு ரத்து செய்யப்பட்டன.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் கலைஞர் கருணாநிதி யள் செல்வி ஜெயலலிதா என்று மாறிய பிறகு அரசியல் நாகரிகம் மெல்ல மெல்ல பொலிவிழக்கத் தொடங்கியது. தி.மு.க. மற்ற கட்சிகளுடனும் அ.தி.மு.க. மற்ற கட்சிகளுடனும் நாகரிகம் பேணியபோதும் இந்த இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் அரசியல் நாகரிகம் பேணவில்லை என்பது உண்மை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சுனாமி ஏற்பட்டபோது தி.மு.க. சார்பில் நிவாரண நிதி கொடுக்க முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்தார் மு.க.ஸ்டாலின். ஓ.பன்னீர்செல்வம் முதல்வரான சமயத்திலும் அவரை நேரில் சென்று சந்தித்தார் ஸ்டாலின்.

2011-ல் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது அந்த விழாவில் ஸ்டாலின் பங்கேற்றதும் இருக்கை தொடர்பான சிக்கல்கள் எழுந்தபோது அதை ஜெயலலிதா-ஸ்டாலின் என்ற இரண்டு தரப்புமே சரியாக அணுகியதும் குறிப்பிடத்தக்கவை. 2016-ல் நடந்த ஜெயலலிதா பதவியேற்பு விழாவிலும் ஸ்டாலின் பங்கேற்றார். சட்டமன்றத்தில் ஜெயலலிதாவும் ஸ்டாலினும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர்.

கடந்த ஆண்டு மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது, ’’"அவர்மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல்நலம் பெற்று, பணியினைத் தொடரவேண்டுமென்று வாழ்த்துகிறேன்'’என்று கலைஞர் கருணாநிதி வாழ்த்துச் செய்தி வெளியிட்டார். அதன் நீட்சியாக, மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து விசாரித்தார் மு.க.ஸ்டாலின். உச்சபட்சமாக, முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஸ்டாலின் பங்கேற்றார்.

பிறகு தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அ.தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களான  மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை, மாநில அமைச்சர் ஜெயக்குமார் இருவரும் நேரில் சென்று நலன் விசாரித்து வாழ்த்து சொன்னார்கள்.

இப்படியொரு சூழலில்தான் கலைஞர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா சர்ச்சையைத் தொடங்கிவைத்தார் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை. அந்த விழாவுக்குப் பா.ஜ.க.வை அழைக்காததன் மூலம் அரசியல் நாகரிகத்துக்கு எதிராகத் தி.மு.க. செயல்படுகிறதென்றும், மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் நாகரிகம் இல்லை என்றும் விமரிசித்திருக்கிறார் தமிழிசை.

எப்படிப் பார்த்தாலும், கலைஞர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா அரசு விழா அல்ல, அப்பட்டமான அரசியல் விழா. அந்த விழாவில் யாரெல்லாம் பங்கேற்கவேண்டும் என்று தி.மு.க. விரும்புகிறதோ அவர்களுக்கெல்லாம் அழைப்பு தரப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டியலில் பா.ஜ.க. இல்லை.

கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் தி.மு.க.வால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் இல்லை என்று சொல்லி தி.மு.க.வின் ஒட்டுமொத்த பங்களிப்பையும் நிராகரித்து, "தி.மு.க. அழிந்து கொண்டிருக்கிறது, திமுக ஒரு மூழ்கும்கப்பல்'’என்று விமரிசித்துக்கொண்டே கலைஞர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவில் பங்கேற்பது பா.ஜ.க.வுக்குத் தர்மசங்கடம் தரும் என்கிறது தி.மு.க. ஆனாலும் பா.ஜ.க. தரப்பிலிருந்து விமரிசனங்கள் நின்றபாடில்லை.

விமரிசனங்களும் விவாதங்களும் ஒருபக்கம் இருக்கட்டும், கலைஞர் கருணாநிதி சட்டமன்றத்துக்குத் தேர்வான அதே 1957-ல்தானே பா.ஜ.க.வின் நிறுவனத் தலைவர்களுள் முதன்மையானவரான அடல் பிஹாரி வாஜ்பாயும்  முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்வானார்... மதுரா, லக்னோ, பல்ராம்பூர் என்று மூன்று தொகுதியில் போட்டியிட்டு, பல்ராம்பூரில் மட்டும் வெற்றிபெற்று இந்திய நாடாளுமன்றத்துக்குள் முதன்முறையாக நுழைந்தார் வாஜ்பாய். அந்த வகையில் வாஜ்பாயின் நாடாளுமன்ற நுழைவுக்கு 2017 வைரவிழா ஆண்டு. அத்தகைய பெருமைமிகு விழாவை ஏன் பா.ஜ.க. கொண்டாடவில்லை?

வாஜ்பாயின் நாடாளுமன்ற நுழைவை மோடி உள்ளிட்ட எவரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை மறந்திருந்தால், இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. கலைஞர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா கொண்டாடப்படும் அதேவேளையில், வாஜ்பாயின் நாடாளுமன்ற வைரவிழா அறிவிப்பை வெளியிட்டு, தி.க., தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து திராவிட இயக்கத்தினருக்கும் அழைப்பு அனுப்பட்டும். திராவிட இயக்கம் இந்துத்துவ எதிர்ப்பு இயக்கம்தானே தவிர, இந்துத்துவ அழிப்பு இயக்கம் அல்ல. ஆகவே, வாஜ்பாயின் நாடாளுமன்ற வைரவிழாவில் திராவிட இயக்கத்தினர் நிச்சயம் சங்கடமின்றிப் பங்கேற்பார்கள்! அதுதான் திராவிட இயக்கம்!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [4]
Name : R.Vedeachalam. Date :5/19/2017 3:27:15 PM
1977 -ம் ஆண்டு அ.தி.மு.க முதல்முறையாக பதவி ஏற்றபோது, விழாவில் தி.மு.க. கலந்துகொள்ளவில்லை.
Name : முரளிதரன் Date :5/19/2017 1:53:34 PM
உங்கள் பதிவு கண்டேன். உங்களிடம் பிடித்ததே அந்த நடுநிலையான பார்வை. அருமை. மென்மேலும் உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.
Name : arasar Date :5/18/2017 9:51:57 PM
வெளியில் என்ன பேசினாலும் BJP தன் அரசியல் எதிரிகள் யாரும் இருப்பதையோ அல்லது வளர்வதையோ விரும்பவில்லை. இந்த நோக்கத்துடனேயே அவர்களுடைய பேச்சும் செயலும் இருக்கும். தமிழ், தமிழ் கலாச்சாரம் ஆகியவற்றை ஒழிப்பதில் அவர்களின் நிலையை தி மு க என்றும் ஒத்துக் கொள்ளாது. அ தி மு க ஏற்கெனவே மண்டியிடத் தொடங்கி விட்டது. ஆம் ஆத்மீக்கும் , பாண்டி அரசுக்கும் கொடுக்கக் கூடிய தொந்தரவுகள் உலகறிந்தது. இந்த நிலையில் தி மு க வை பலவீனப் படுத்துவதற்கு எல்லா வழி முறைகளையும் கையாள வாய்ப்புண்டு. அத்வானி, சின்ஹா இவர்களைப் படுத்தும் பாடு எல்லோருக்கும் தெரிந்ததே. எங்கும் பசு மாடு, எங்கும் ஹிந்தி, எங்கும் சமஸ்கிருதம், எல்லாம் பதஞ்சலி, எல்லாவற்றிற்கும் மேலாக எங்கும் எதிலும் மோடி - இது தான் இவர்கள் திட்டம். இதை தி மு க ஏற்கவே ஏற்காது. இவர்களை வைத்து பவள விழா வேண்டவே வேண்டாம். அரசியல் நாகரீகமும் வேண்டாம்.
Name : pulliyappan Date :5/18/2017 8:30:36 PM
அருமையான பதிவு.