நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :27, ஜூலை 2017(8:8 IST)
மாற்றம் செய்த நாள் :27, ஜூலை 2017(8:8 IST)அறிந்துக்கொள்வோம் தினம் ஒரு வரலாறு

ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்புதனக்கு பல பட்டங்கள் அளிக்கப்பட்டாலும் அந்த நாஞ்சில் நாட்டு தமிழ் புலவருக்கு பிடித்தமான பட்டம் குழந்தை கவிஞர் என்பதே. குழந்தைகளுக்கான பாடல்கள், தாலாட்டுகள், கவிதைகள் அவர் அத்தனை அழகியலுடன் எழுதியிருந்தார். அவர் எழுதிய ஒருப்பாடல் தான் இன்று வரை பாடப்புத்தகத்தில் உள்ளன. அவர் தேசிக விநாயகம் பிள்ளை.  அவரின் பிறந்த நாளில் அவரைப்பற்றி அறிவோம்.

தமிழக – ஆந்திரா எல்லையில் உள்ள நாஞ்சில் நாடு எனப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரூரில் 1876 ஜீலை 27ந்தேதி பிறந்தவர் தேசிய விநாயகம் பிள்ளை. சிவதாணு – ஆதிலட்சுமியின் மகன் விநாயகம். விநாயகத்துக்கு முன்பு இரண்டு பெண் குழந்தைகள் அவருக்கு பிறந்தனர். மிக மிக குறைந்த வருமானம் கொண்ட தெய்வ பக்தி மிகுந்த குடும்பம்.

தேரூர் ஆரம்ப பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தனர் குடும்பத்தார். பள்ளி படிப்பு முடிந்ததும் திருவனந்தபுரத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயிற்சி முடித்து பணியில் சேர்ந்தார். முதலில் தான் படித்த கோட்டார் ஆரம்பள்ளியில் பணியில் சேர்ந்து படித்தார். விநாயகத்துக்கு 14வயதாகும் போது அவரது அப்பா காலமானார். இருந்தும் அவரது தாயாரும், அக்காக்களும் படிக்க உதவி செய்ய எம்.ஏ படித்து முடித்தவர். பின்னர் ஆசிரியர் பயிற்சி பள்ளி, கல்லூரி பேராசிரியர் என பணியில் உயர்ந்துக்கொண்டே சென்றார். ஆனாலும், முதல் நாள் பாடம் எடுக்கும்போது, எந்தளவுக்கு மாணவர்களுக்கு புரியும்படி பாடம் நடத்த வேண்டும் என மனதில் நினைத்து சென்றாறோ அதே மனநிலையில் தான் பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை நினைத்து சென்றார்.

1901ல் உமையம்மை என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். பெண்களுக்கு நிரம்ப மரியாதை தருபவர். தனது மனைவியையே தாயீ என்று தான் அழைத்தார். குழந்தை பேறு இவர்களுக்குயில்லை. இதனால் தனது மூத்த அக்கா மகன் சிவதாணுவை தன் மகன் போல் வளர்த்தார். குழந்தையில்லாத ஏக்கம், அவருக்கு குழந்தை பாடல்களை எழுத வைத்தது. ஒரு கவிதை தொகுப்பில் 25 பாடல்கள் குழந்தைகள் பற்றி எழுதியிருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சிறந்த மொழிப்பெயர்ப்பாளராகவும் விளங்கினார். சில நூல்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார்.

1940 டிசம்பர் 24ந்தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் தான் விநாயகத்துக்கு கவிமணி என்கிற பட்டம் வழங்கப்பட்டது. அது முதல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என அழைக்கப்பட்டார். அதோடு, குழந்தை கவிஞர், விடுதலை கவிஞர், சமுதாய கவிஞர் என பல பட்ட பெயர்களை வைத்து அவர் வாழ்ந்த காலத்தில் அவரை அழைத்தாலும் அவருக்கு பிடித்தமான பட்டம் குழந்தை கவிஞர் என்பதே.

இந்திய சுதந்திரத்துக்கு பின்பும், மாநில எல்லை பிரிக்கப்பட்டபோது, கன்னியாகுமரியை கேரளா தங்களுக்கு வேண்டும்மென உரிமை கொண்டாடியது. இன்று தமிழகத்திலுள்ள கன்னியாகுமரி மாவட்டம், அன்று திருவிதாங்கூர்-கொச்சி ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அன்றைய நாஞ்சில் நாட்டு மக்கள், தாங்கள் தாய் தமிழகத்துடன் இணைவது தான் சரி என குரல் எழுப்பினர். அதற்கான ஆதாரங்களை ஏராளமாக வைத்திருந்தார் கவிமணி. ம.பொ.சி தலைமையிலான தமிழர்கள் தர முடியாது என போராடினார்கள். 1950 ஜனவரி 6ந்தேதி கன்னியாகுமரியில் தென்குமரி எல்லை மாநாடு நடந்தது. மண்ணின் மைந்தர் என்ற முறையில் அதை துவக்கி வைத்து கன்னியாகுமரி தமிழர்களின் மண் என்பதை தான் திரட்டி வைத்திருந்த ஆதாரங்களுடன் விரிவாக பேசினார். பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்தது.

பைத்தியக்காரன், வேலைக்காரன் உட்பட பல திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். தொடர்ந்து அவருக்கு பாடல்கள் எழுத விருப்பமில்லாததால் திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதை குறைத்துக்கொண்டார். உடல் நலக்குறைவால் 1954 செப்டம்பர் 26ந்தேதி மறைந்தார். அவருக்கு 2005ல் தபால் தலை வெளியிடப்பட்டுகவுரவிக்கப்பட்டது. அவருக்கு நினைவில்லாம் அமைத்துள்ளது தமிழகரசு.

- ராஜ்ப்ரியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :