நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :8, ஆகஸ்ட் 2017(14:33 IST)
மாற்றம் செய்த நாள் :8, ஆகஸ்ட் 2017(15:4 IST)மழை துளிர்க்கும் பெருநதிஉனக்காகப் பொறந்திருக்கேன்

மனவாசல் வழியாக

மாமா நீ போகையில

மனசுகுள்ள பேசுறத

மறக்காம புரிஞ்சிக்குவேன்..

நான்வரையும் கோலத்தில

நடுவுலநீ தான்இருப்ப..

பூப்பூவா பூத்திருப்ப..

புன்னகையக் கோர்த்திருப்ப..

மனசுக்குள்ள பதமாக

உனைவெதச்சி வெச்சிருக்கேன்..

உசுருக்குள்ள சுகமுள்ளா

ஒன்னத்தான் தைச்சுருக்கேன்..

என் ஒத்த சொந்தமுன்னா

நீதான்னு சொல்லிருக்கேன்.

என்னயே உனக்குன்னுதான்

பட்டாபோட்டு வெச்சிருக்கேன்

மாமா உன் மனசெல்லாம்

நிறைகுடமா நானிருக்கேன்..

மறுக்கா நான் பூமியிலே

உனக்காத்தான் பொறந்திருக்கேன்..

மனசோரம் உனக்காக

பத்துபுள்ள பெத்திருக்கேன்

அதுலபாதி புள்ளைக்கு

புதுப்பேரு வெச்சிருக்கேன்..

அடுத்துவரும் சென்மத்திலும்

உன் ஆயி அப்பனோட

ஆசிவாங்கி அன்னம்மா

உங்கரத்தத் தான் புடிப்பேன்..

ஊருலகும் உறவுகளும்

விசமாவே போனாலும்

நீமட்டும் எனக்கான

நெசமுன்னு நம்பி நிக்கேன்..உன்னையே நினைச்சிருக்கும்  

என்னய நீ  மறந்துபுட்டா

உன் மனசில நான்வந்து

வாழுறது எக்காலம்...?

இதழ் கொத்தும் குருவி

நமக்குள் பேச வேண்டிய

வார்த்தைகளை

நீயும் நானும் பத்திரமாக

சேமிக்கிறோம்..

ஒருவேளை இது அடுத்த

ஜென்மத்திற்கான

ஆயத்தமாக இருக்கலாம்..

ரோஜாவின் கன்னத்தில்

பனித்துளியாய் வார்த்தைகள்

பூக்கும் போது புத்தனின்

இதழ் கொத்துகிறது குருவி ..

வனமாகிறேன் நானே...

காடொன்றை

வரைந்தபடி

உட்புகுந்தேன்..

கைகளெங்கும் கிளை

தழைத்து இலைகள்

நிறைக்க..

காகமொன்று

சுள்ளி எடுத்து

கூடு சமைக்க..

கண்களோடு

புலியொன்று

வேட்டைக்காய்

பதுங்கி நிற்க..

உடலோடு பூ பூத்து

கால்களோடு

வேர்விட்டு..

மரங்களில்

ஒன்றாகி

வனமாகிறேன்..

தூங்கிக் கிடக்கும் பேருண்மை!

ஒரு துளி மழைக்குள்

ஓராயிரம் பிரபஞ்சத்தின்

பேருண்மை தூங்கிக்

கிடக்கிறது..

அதன் ஒரு துளியை

கதகதக்கும்

உள்ளங்கையேந்தி

உற்றுப் பார்ப்பவன்

உழவனாயின்

இந்த தலைமுறையின்

விருக்ஷத்தின்

விதையென முளைவிடும்..

ஏற்காத சொற்கள்

எழுதாத கவிதைகள்

ஏராளம் உடனுண்டு

எடுத்தியம்ப ஏனோ

ஏற்பதேயில்லை சொற்கள்..

தள்ளிப்போ மழையே...

ஒரு மழை நனைதல்

அவனின் ஒட்டு

மொத்த காதலை

கரைத்துவிடக் கூடும்

மழையே கொஞ்சம்

தள்ளிப்போ...

தவிப்பு

ஒத்தையடி பாதையில

கைப்பிடிச்சு கடந்து வந்த

கவிதையை விட்டுவிட்டு

வீடு வந்து சேர்ந்த பின்னும்

தேடித் தவிக்குது நெஞ்சம்..

பெருமூச்சு

விற்றுக் கடந்த வீட்டின்

சாளரம் வழி நுழைந்து

சுவர் மோதி திரும்புகிறது..

விற்றவனின் கவலை

தோய்ந்த பெருமூச்சு ..

உலை ஏறும் விதை நெல்

கடைசியாய் மிஞ்சிய

விதை நெல்லும்

உலையேறி கொதித்த

கொடுமையின் தாக்கத்தில்

உழவன் நஞ்சையுண்டு

உயிர் துறக்கும் அந்நொடி

நம்மை சுற்றிலும் நமக்கான

நஞ்சு நம்மை

அருந்தக் காத்திருக்கிறது..

பெருநதி நீ

கடல் தொலைத்த

வானம் நான்..

மழை துளிர்க்கும்

பெருநதி நீ..

-  இன்போ. அம்பிகா

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [4]
Name : கார்த்திக் Date :8/10/2017 1:43:36 PM
அற்புத கவிதைகள்.தமிழ் இலக்கியத்தில் உங்களது படைப்புகள் உங்களது பெயர் சொல்லும் .உங்களது கவிதை தொகுப்பு எங்கே கிடைக்கும் தகவல் வேண்டும். வாழ்த்துகள்
Name : கவிஞர்.இன்போ.அம்பிகா Date :8/10/2017 1:05:45 PM
நன்றி..அருமையான வாய்ப்பிற்கு
Name : கார்த்திக் Date :8/9/2017 5:33:10 PM
அற்புத கவிதைகள்.தமிழ் இலக்கியத்தில் உங்களது படைப்புகள் உங்களது பெயர் சொல்லும் .உங்களது கவிதை தொகுப்பு எங்கே கிடைக்கும் தகவல் வேண்டும். வாழ்த்துகள்
Name : கார்த்திக் Date :8/8/2017 7:10:15 PM