நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

கல்வீசும் ரோஜாக்களுக்கு...
............................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
............................................................................
காவியின் நாயகர்களே..!
............................................................................
மறத்தமிழன் மறப்பானா?
............................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
............................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
............................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
............................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
............................................................................
சபதங்கள்
............................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
............................................................................
மெரீனா - சில குறிப்புகள்
............................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
............................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
............................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
............................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
............................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
............................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
............................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
............................................................................
வெறுப்பறுப்போம்!
............................................................................
உறங்காத ராகம்...
............................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
............................................................................
விதைகள் உறங்குவதில்லை...
............................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
............................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
............................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
............................................................................
வாலியின்றி போவதெங்கே...
............................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
............................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
............................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
............................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
............................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
............................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
............................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
............................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்

செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
............................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
............................................................................
அண்ணாமலை கவிதைகள்
............................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
காடுகளோடு பேசித் திரிபவர்கள் மனநிலை பிசகியவர்களென

நகரங்கள் கழித்து விட்டுக் கொண்டிருக்கின்றன
 
வெகு பிரயாசையோடு.

காட்டின் மையத்துள் விலங்குகளோடும் பறவைகளோடும்

நெருக்கம் கொண்டிருந்தவர்களை

இடித்து மிரட்டும் இடியொன்றில்

பொத்தலான வானத்திலிருந்து விழும் மழைத் துளிகளை
 
கைகளிலேந்தி கரைந்து போய்க் கொண்டிருந்தார்கள்

காடுகளோடு பேசித் திரிபவர்கள்.

ஏந்த யாருமில்லா காட்டிற்கு வெளியே விழுந்த மழைத் துளிகளில்

நகரத்தார்களின் கட்டிடங்கள் முளைத்துக் கொண்டிருப்பதை

காட்டிலிருந்து திரும்பிய கணம் கண்டு அதிர்ச்சியுற்றார்கள்

காடுகளோடு பேசித் திரிபவர்கள்.

பெருங் கோபங்களை எழுத்தில் புதைத்து

நகரத்தார்களின் மீதான புகார் கடிதமொன்றை

கொடுக்கப் போனார்கள் நகரங்களை கட்டியாளும் அரசர்களிடத்து.

தங்கள் கிரீடங்களை சரி செய்து கொண்டவர்கள்

புன்முறுவலோடு வாங்கிக் கொண்டு நேரங்

கழிக்க

காடுகளைப் பற்றி வினவினார்கள்.

காடுகளின் நுட்பங்களையும் அபூர்வங்களையும்

நெக்குறுக சொல்லிக் கொண்டிருக்க

காட்டு மரங்களை விடவும் உயரமாகவும் அகலமாகவும்

வளர்ந்து விட்டிருந்தன நகரத்தார்கள் நட்டு வைத்த கட்டிடங்கள்.ஓடோடிப் போய் இம்முறையும் நகரங்களை கட்டியாளும்

அரசர்களிடம் பெருங் கோப புகார் கடிதமொன்றை கொடுக்க

கிரீடங்களை பொருத்திக் கொண்டு

புன்முறுவலோடு வாங்கிக் கொண்டவர்கள்

மீண்டும் காடுகளைப் பற்றி வினவ காடுகளைப்

போலவே உருகிக் கொண்டேயிருந்தார்கள் காடுகளோடு பேசித் திரிபவர்கள்.

காடுகளோ்டு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்களின்

புகார்கள் நகரத்துக்குள் ஓடும் தெரு நாய்களைப் போல விரட்டப்

படுவதற்கு

நகர அரசர்களைப் பொறுத்த வரை நகரத்தார்களைப் பொறுத்த வரை

காடுகள் ஓடியொளிந்து கொள்ளவும் விலங்குகளை வேட்டையாடவும்

ஏதுவான இடம் அவ்வளவே.

-அருள்குமார்
கோவை

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [5]
Name : suthan Date :4/23/2012 11:12:35 PM
nice sir
Name : riya Date :1/23/2012 3:50:42 PM
nice
Name : P.shankar Date :10/2/2010 10:32:03 AM
சூப்பர்......... கவிதை .............
Name : தங்கவேல் மாணிக்கம் Date :9/15/2010 4:22:06 PM
அருள்குமார், நிதர்சன உண்மையை வெளிக்கொணரும் கவிதையை எழுதிய உங்களுக்கு அன்புகளும், வாழ்த்துக்களும். வழியே இல்லை. மீண்டும் நகரங்கள் காடுகளாகி விடும். தங்கவேல் மாணிக்கம்
Name : ramesh Date :9/13/2010 3:13:44 PM
அருமையான கவிதை .