நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :14, ஆகஸ்ட் 2017(19:10 IST)
மாற்றம் செய்த நாள் :14, ஆகஸ்ட் 2017(19:10 IST)சாலிகிராமமும்
21 கே கே சாலையும்
ப்ரஜ்வால் சாரதா அடுக்ககமும்
புத்தர் உன் இடப்பக்கமும் !

தூக்கம் தொலைத்த கண்ணும்
கவிதை வடிக்கும் பென்'னும்
ஒழுங்கு செய்யாத தாடியும்
ஒதுக்கிக் கொள்ளாத தலைமுடியும்!

கண்மூடி யோசனை செய்ததுவும்
கடகடவென வரிகளை சொன்னதுவும்
சிந்தனை தடை  ஏற்பட்டால்
எரிய வைத்து புகைத்ததுவும் !

பாடல்களில் எளிமையை புகுத்தியதும்
பலவருடங்கள் எழுதி குவித்ததும்
செய்யுள் போல் இல்லாமல்
செவிகளுக்கு புரிய வைத்ததும் !

அத்தனை காதலர்களுக்கும்
காதல் வரிகளை கொடுத்ததுவும்
இடையிலேயே பிரிந்தவர்களுக்கு
தன்னம்பிக்கை தந்ததுவும் !

ஆபாச பாட்டு வரிகளை
அடித்து துரத்தியதுவும்
ஆண்கள் படும் வெட்கத்தை
பதிவு செய்ததுவும் !

ஏழு பருவப்பெண்களுக்கும்
உன் எழுத்து பிடித்ததுவும்
ஏனைய குடும்ப உறவுகளை
உன்வரிகள் எட்டி இழுத்ததுவும் !

இலக்கிய வீதிகளில்
நீ நடை போட்டதுவும்
இலக்கணமாக உன்பாடுகள்
வீறு கொண்டதுவும் ! 

உதவி இயக்குநர்கள் உள்ளத்தில்
நீ உருக்கொண்டதுவும்
படம் இயக்குமுன்னே அவர்கள் 
உன் பெயரை டிசைன் செய்ததுவும் !
  
உதவி கேட்காதவர்களுக்கும் கொடுத்ததுவும்
உறங்காமல் இரவில் படித்ததுவும்
அதிகாலை நேரமே எழுந்ததுவும்
அன்றாட பாடல்களை முடித்ததுவும்!

உறவினர்களுக்கு காது கொடுத்ததுவும்
நண்பர்களுக்கு இதயம் திறந்ததுவும்
சினிமாவுக்கு வாழ்க்கை பட்டதுவும் 
பாடல்களுக்கு வாழ்க்கை தந்ததுவும்! 

யுவன்ஷங்கர் ராஜா ட்யூனா
உன் பேனா சலங்கை கட்டும்
ஜீ வி பிரகாஷ் இசையா
உன் வார்த்தைகளில் வெட்கம் சொட்டும்! 

வசந்தபாலன் படத்துக்கு
உன் கவிதைகளே காதலிக்கும்
பாலாஜி சக்திவேல் கதைக்கு
உன் வரிகளே தீக்குளிக்கும் !

ஏ ஆர் ரஹ்மான் சபையா
ஜுகல் பந்தி சுவை கொடுப்பாய்
ஹாரிஸ் ஜெயராஜ் இசையா
கருப்பு வெள்ளை பூக்கள் தொடுப்பாய் ! 

ஏ எல் விஜய் இயக்கத்திற்கு
உன் வார்த்தைகளில் அன்பு சுரக்கும் 
கற்றது தமிழ் ராம் கதைக்கு
உன் வாழ்க்கையே பிரதிபலிக்கும்! 

அறிமுக இயக்குநர்களுக்கு
அரவணைத்து எழுதிக்கொடுப்பாய்
அனுபவ இயக்குநர்களுக்கு
அளவெடுத்து பாடல் தைப்பாய் !

காரில் போய்க்கொண்டே
பாடல்கள் புனைந்ததுவும்
பல்லவி சரணங்களில்
படுத்து புரண்டதுவும் !

உப்புக்கறி வறுவலும்
ஓட்கா மிடறும்
எஸ்ஸே லைட்ஸ் சுடரும்
ஏனோ உன்னைத் தொடரும்! 

மதிய சாப்பாட்டுக்குப்பின்
தலையணைக்கு தலை கொடுப்பதுவும்
மாலை நேர தேனீருக்குப்பின்
மகனோடு ஊர் சுற்றியதுவும் ! 

ஐடியல் பீச்சும்
அழகிய பேச்சும்
சாம்பலாய் நீயங்கு
கரைந்திட்டக் காட்சியும் !

என்றும் என்னில்
மறக்காது
மறந்தால் இதயம்
துடிக்காது !⁠⁠⁠⁠

- பாடலாசிரியர் வேல்முருகன் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :