நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!

ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :17, செப்டம்பர் 2017(11:44 IST)
மாற்றம் செய்த நாள் :17, செப்டம்பர் 2017(11:47 IST)

ஒரு தடியின் சத்தம்!
                  - பாடலாசிரியர் வேல்முருகன்
----------------------------------
எல்லா கட்சிகளும்
உன் படத்தைப் போட்டுக்கொள்ளும்
எல்லா கட்சிகளும்
உன் கொள்கையை மறைத்துக்கொள்ளும்
ஆனாலும் நீ தெரிவாய்!

நீ இன்னும் இறக்கவே இல்லை
அப்படி இறந்திருந்தாலும்
உன்னை இன்னும் புதைக்கவேயில்லை!

பரமண்டலத்தை நோக்கி
கூப்பிட்டும் யாரும் வராத நிலைநிலைதான்
பகுத்தறிவு மண்டலத்திலிருந்து
உன்னைக் கூப்பிடுகின்றோம்!

சிலருக்கு ரத்தக்கொதிப்பை
ஏற்றி விடுகிறாய்
பலருக்கு 
ரத்த நாளங்களில்
சூடு வைக்கிறாய்!

துண்டை உதறி தோளில் போட்டார்
பெரியார்
துண்டைக் காணும் துணியைக் காணும் என்று ஓடினர்
சிறியார்!

தன்மானம் என்ற ஒலியில்
உன் தடியின் சத்தம்
சுயமரியாதை என்ற வார்த்தை சொரியும்
பூக்கள் நித்தம்!

ஈரோட்டுத் தடியும்
காஞ்சிபுர தறியும்
எம்மானத்தைக் காத்தது!

எல்லா வீட்டுக்கும்
ஒரு தகப்பன் உண்டு
எநதன் நாட்டுக்கு
ஒரே ஒரு தந்தை நீ!

எம்மதமும் சம்மதம்
பிழைப்பு வாதம்
எரியும் கொள்ளியில்
எந்தக்கொள்ளி 
நல்லக்கொள்ளி
பெரியார் வாதம்!

எல்லா மேடைகளும்
உன்னை எதிர்க்கின்றது
எல்லா வாய்களும்
உன்னை உதிர்க்கின்றது!

எல்லா சாமிகளும்
மனுசங்களை தண்டிக்க வந்தது
ஈரோடு ராமசாமி மட்டும்தான்
அந்த சாமிகளையே
தண்டிக்க வச்சது!

மடாலயங்களின் கூப்பாடு
உன் மதியாலயங்களில் கேட்காது
உன் அறிவாலய அர்ச்சனைகள்
எந்த ஐதீகத்தையும்
இங்கு நுழைக்காது!

எல்லா பாதையும்
ரோமை நோக்கி அல்ல
உன் தாடி ரோமத்தை நோக்கியே போகும்!

ஒரு தடியும்
நாலு முடியும்
என்ன செய்யும்?
மனிதனை மனிதனாக பார்க்கச் செய்யும்
கற்களை 
கற்களாக பார்க்கச்
செய்யும்!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :